Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிபர் ஒபாமா ஜோன் கெரியை அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளராக நியமித்தார்

Featured Replies

Obama Names Kerry to Follow Clinton as Secretary of State

 

President Obama nominated Senator John Kerry of Massachusetts as secretary of state on Friday, choosing an elder of the Democratic Party’s foreign policy establishment and a crucial political ally in the Senate to succeed Hillary Rodham Clinton.

 

KERRY-articleInline.jpg

 

அதிபர் ஒபாமா ஜோன் கெரியை அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளராக நியமித்தார்!

 

http://www.nytimes.com/2012/12/22/us/politics/kerry-is-pick-for-secretary-of-state-official-says.html?hp&_r=1&



24 ஆம் திகதி மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டு கேரி கூறிய கருத்து:

 

  • இலங்கையின் வடபகுதியில் யுத்தம் காரணமாக அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுnமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அமெரிக்காவின் முக்கிய செனட்டர்களில் ஒருவரான ஜோன் கெரி கோரிக்கை விடுத்துள்ளார்.
  • பாதுகாப்பு வலயங்களில் சிவிலியன்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவது மற்றும் கொல்லப்படுவது பெரும் கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • சிவிலியன் பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் கரிசனை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • அரசாங்கப் படையினர் சிவிலியன் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதாக வெளியாகும் செய்திகள் பெரும் வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • அரசாங்கம் யுத்த பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களையும், தொண்டு நிறுவன ஊழியர்களையும் அனுமதிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/28828/language/ta-IN/-----.aspx



http://www.yarl.com/forum3/index.php?showtopic=113048

  • கருத்துக்கள உறவுகள்
ஹிலாரி விலகல்... அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராகிறார் ஜான் கெர்ரி!
Posted by: Shankar      Published: Saturday, December 22, 2012, 10:51 [iST]
 
வாஷிங்டன் : அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக (அமைச்சர்) ஜான் கெர்ரியை, அதிபர் ஒபாமா அறிவித்தார். ஹிலாரி க்ளிண்டன் பதவி விலகுவதை தொடர்ந்து, ஜான் கெர்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒபாமாவின் முதல் நான்காண்டு ஆட்சியில் ஹிலாரி க்ளிண்டன் வெளியுறவுத் துறைச் செயலாளராக பணியாற்றி, உலக அளவில் பெரும் புகழ் பெற்றார்.
ஒபாமாவின் வலது கரமாக இருந்து உலக நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வலுப்படுத்தினார். 2016 ம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்க்கு வசதியாக இரண்டாவது முறையாக ஹிலாரி பதவியில் தொடர விரும்பவில்லை என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சரவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு ஒபாமாவுக்கு ஏற்பட்டது. தன்னை தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய 'குரு' ஜான் கெர்ரியை ஜான் அவர் இன்று முறைப்படி அறிவித்தார்.
சாதனையாளார் கெர்ரி - ஒபாமா புகழாரம்
வெளியுறவுத் துறை அதிகாரியின் மகனாக பிறந்த ஜான் கெர்ரி, துறை ஊழியர்கள் குடும்பத்தில் ஒருவராக அவர்களது கஷ்ட நஷ்டங்களை நன்றாக புரிந்து கொள்பவர். உலகம் முழுவதும் தொடர்புகள் கொண்ட, வெளியுறவுத் துறைக்காக பல்வேறு பணிகளை ஏற்கனவே சிறப்பாக செய்து முடித்தவர்.
சிறந்த செனட்டராகவும், வெளியுறவுத்துறை செனட்டர் குழுவின் தலைவராகவும் அரும் பணியாற்றியுள்ளார்.முப்பது வருடங்களாக, வெளியுறவுத்துறை விவாதங்களில் அவருடைய பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த புதிய பதவியில் அவர் கற்றுக்கொள்ள வேண்டியது ஏதுமில்லை, மாறாக அவருடைய நீண்ட அனுபவம் இந்த பணிக்கு உறுதுணையாக இருக்கும். வியட்நாம் போரின் முக்கிய தளபதியாக பணியாற்றிய ஜான், படைகளை சரியாக கையாள வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுகட்சிகளில், அரசியலுக்கு அப்பாற்பட்டு நண்பர்களை கொண்டவர். அவருடைய தேர்வுக்கு செனட் சபையின் ஒப்புதல் எளிதாக கிடைக்கும் என நம்புகிறேன் என்று ஒபாமா தெரிவித்தார்.
ஹிலாரி மற்றும் தலைவர்கள் வாழ்த்து
பதவியிலிருந்து விலகும் ஹிலாரி, ஜான் கெர்ரி மிகச்சரியான தேர்வு என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறைப் பணிகளில் என்னுடன் ஒன்றிணைந்து பணியாற்றிய ஜான் கெர்ரி, துறை அலுவலர்களுடனும் நல்லுறவு கொண்டவர். மிகவும் நம்பிக்கைக்குரியவர். ஈராக் போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும், போர் முடிந்த பிறகு ஆஃப்கானிஸ்தானில் அரசு அமைவதற்கும் கெர்ரி உறுதுணையாக இருந்தார். பெங்காஸி துயரச் சம்பவத்தின் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை எனது குழுவினரிடம் அறிந்து. குறித்தான அனைத்து அரசியல், அரசாங்கம், ராணுவம் என பன்முனை அனுபவம் கொண்டவர் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஹிலாரி கூறியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கொலோராடோ மாநிலம் டென்வர் நகரில், 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தார் ஜான் கெர்ரி. தந்தை வெளியுறவுத்துறை அதிகாரி என்பதால், தனது குழந்தைப் பருவம் முழுவதும் வெளிநாடுகளிலேயே வளர்ந்தார். பெர்லின் மற்றும் சுவிஸ் பள்ளிகளில் பயின்றார்.
1966 ஆம் ஆண்டு யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு வியட்நாம் போரில் லெஃப்டினன்டாக சேர்ந்தார். போரில் சிறப்பாக பணியாற்றி வெள்ளி, வெங்கல பதக்கங்களை பெற்றார்.
1982 ஆம் ஆண்டு மசசூசெட்ஸ் மாநில லெஃப்டினன்ட் கவர்னராக அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து செனட் பதவிக்கு போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து ஐந்து தடவை செனட்டராக வெற்றி பெற்றுள்ளார்.
2004ல் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். அந்த தேர்தல் நேரத்தில்தான் ஜனநாயகக் கட்சி மாநாட்டில், ஒபாமாவுக்கு சிறப்புரை ஆற்றும் வாய்ப்பை வழங்கி தேசிய மேடை அமைத்துக் கொடுத்தார். அடுத்த தேர்தலிலேயே ஒபாமா அதிபர் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்நோக்கியுள்ள சவால்கள்
சிரியா பிரச்சனை தான் ஜான் கெர்ரி முன் உள்ள மிகப்பெரிய விஷயமாக கருத்தப்படுகிறது. மேலும் ஈரான் அணுகுண்டு தயாரிப்பது, வட கொரியா உள்ளிட்ட பிரச்சனைகளையும் அவர் கையாள வேண்டியுள்ளது. மத்திய ஆசிய நாடுகள் தலைவர்களுடன் செல்வாக்கு பெற்றவராகவும், சிறந்த முறையில் பேரங்களை கையாள்வதில் அனுபவமும் கொண்ட கெர்ரியின் செயல்பாடுகளை அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமே எதிர்ப்பார்க்கிறது.
அதற்கு முன்னதாக, கெர்ரியின் தேர்வுக்கு அமெரிக்க செனட் சபையில் ஒப்புதல் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இரு கட்சியிலும் நண்பர்களைக் கொண்ட ஜான் கெர்ரி இந்த முதல் பரீட்சையில் எளிதாக வெற்றி பெறுவார் என்று பெரும்பாலோனர் கருதுகின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

1(2022).jpg

அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக அமைச்சர் ஜோன் கெரியை அதிபர் ஒபாமா தெரிவு செய்துள்ளார். ஹிலாரி கிளிண்டன் பதவி விலகுவதை தொடர்ந்தே ஜோன் கெரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஒபாமாவின் முதல் நான்கு ஆண்டு ஆட்சியில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறைச் செயலாளராக பணியாற்றினார்.

ஜனாதிபதி ஒபாமாவின் வலது கரமாக இருந்து உலக நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை வலுப்படுத்தியது மட்டுமன்றி உலக அளவில் கிளின்டன் பெரும் புகழ் பெற்றிருந்தார். 

2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்;கு வசதியாக இரண்டாவது முறையாக ஹிலாரி பதவியை தொடர விரும்பவில்லை என்று கருதப்படுகிறது. 

இந்நிலையில், தன்னை தேசிய அரசியலில் அறிமுகப்படுத்திய 'குரு' என்று கருதும்  ஜோன் கெரியை அமெரிக்கா புதிய வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி ஒபாமா வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/55313-2012-12-22-08-11-23.html

 

போரும் சமாதனமும் என்ற நாவலில் ஓபாமாவும் ஜோன் கெரியும் ஒன்றாக பயணிக்கும் சகோதர கதாநயகர்கள். கில்லரி கிளின்ரனுக்கு எதிராக ஒபாமாவுக்காக ஜனநாயக கட்சி ஆதரவை திரட்டி ஒபாமாவை அதிபர் வேட்பாளர் தேர்தலில் வெல்ல செய்தவர்தா ஜோன் கெரி. இதனால் இருவரின் உறவும் வெளிப்படையானது. சில முக்கியமான நாடுகளின் விடையங்களில் (ரஸ்சியா, கொரியா போன்றவற்றில்) கெரி அமெரிக்காவுக்கு  பல கொள்கை வெற்றிகள் ஈட்டக்கூடியவர். அந்த நாடுகள் நிச்சயமாக கெரியுடன் ஒத்துவந்து ஒபந்தங்கள் கைச்சாதிடக்கூடியவை. சிரியாவின் முடிவு இனி அசாத் பக்கம் திரும்புவது கடினம். அதில் அமெரிக்கா தனது  நேரடி தலையிடு இல்லாமல் முடித்து வைக்கும். ஈரானில், ஸ்ரேலின் அழுத்தத்தை கடந்து, அமெரிக்கா தனது சுயாதீன முடிவெடுக்க கெரி நிச்சயம் ஒபாமாவுக்கு உதவுவார். கெரியின் வரவு அமெரிக்காவுக்கு நல்லது.   

 

ஆனால் சுசான் ரைசின் தோல்வி சில சந்தேகங்களை எழுப்புகிறது. ஈழத்தமிழர் ஆராய வேண்டியது சுசான் ரைசின் விழுச்சியே. கெரியின் ராசாங்க அமைச்சுப் பதவி அல்ல. சுசான் ரைஸ் பேசிய பேச்சுக்கும் அவரின் செய்ய இருந்த ராஜாங்க மந்திரி பதவிக்கும் தொடர்பு காட்டுவது மொட்டைக்கும் முழந்தாளுக்கும் போட்ட முடிச்சு. அது மட்டுமல்ல பெங்காசி தூதுவர் கொலை விவகாரமானது ரோமினியை தேர்தல் விவாதங்களில்  கடுமையாக தோற்க காரணமாக இருந்து முடிய, தேர்தலில் வென்ற ஒபாமா அரசு சில செனட்டர்களிடம் அந்த விடையத்தால் சுசான் ரைசின் தெரிவில் தோல்வி காண்டிருப்பது நிச்சயமாக சந்தேகிக்கப்படவேண்டிய அரசியல்.   இதை செய்து முடித்தவர்கள் சில குடியரசுக்கட்சி செனெட்டர்கள். இவர்கள் லொபி கமபனிகளால் விலைக்கு வாங்கபட்டார்களா என்பது தான் இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி. 

 

சீனாவுக்கும் இலங்கைக்கும் இருக்கும் உறவின் மிகப்பெரிய சிறப்பம்சம் அம்சம் உற்பத்தி, உறவு, நிலம், ஆகாயம், காதல், சாதல், காமம், புத்த துறவறம் வரைக்கும் எதையுமே பணம் கொடுத்து வாங்குவதே. அதாவது இலங்கை  சர்வதேச அரசியலை சீனாவுக்கு வாங்கி கொடுக்கும் புறோக்கர் மட்டும் அல்ல சீனவுக்காக அதன் சிறிய கைதொழில் உற்பத்திகளான ஆடைகள், பைசிக்கிள்கள் தொடக்கம் விண்ணில் ஏவப்படும் செய்மதிகள் வரைக்கும் இலங்கை தனது பெயரை அவற்றின் மீது பொறித்து சீனாவுக்கு அதன் பாதையை வெளிக்கப்பண்ணி வருவது ஒன்றும் இரகசியமல்ல. சர்வதேசம் முழுவதும் கடன் கொடுத்திருக்கும் சீனா அவர்களின் அரசியலில் தனது நேரடி தொடர்பை காணவிடாமல் இருக்க இலங்கையை வைத்து அவர்களின் அரசியலை கையாள்வதுதான் புதுக்க ஆரம்பித்திருக்கும் இந்த இரு நாடுகளினதும் கூட்டு முயற்சி.

 

 1963ல் சீனா இந்தியாவுக்கு அடித்து தான் வளர்ந்து வரும் ஒருநாளைய வல்லரசு என்பதை காட்டியது. ஆனால் இந்திரா காந்தி அடிக்கு அடிகொடுக்க முடியும் என்பதை தொடர்ந்து வந்த நாட்களில் நிரூபித்திருந்தார். அப்போது நடந்தது உள் நாட்டு சதியோ அல்லது வெளிநாட்டு சதியோ தெரியாது, அன்றிலிருந்து இந்தியாவின் பாதுகாப்புக்கொள்கைகள் சுக்குநூறாக்கபட்டுவிட்டன.

 

பதவி விலகிப் போன இந்தியாவின் தளபதி இந்தியாவில் சுடுவதற்கு, துவக்குகளுக்கு குண்டுகள் கூட பொக்கிசத்தில் இல்லை என்று அங்கலாய்த்திருந்தார். இதனால் அவர் பதவி துறக்க வைக்கபட்டு ஆயுதக்குறைப்பை முன்னெடுக்க விகிரம் சிங் பதவிக்கு வந்தார். (இந்தியா மன சுத்தியுடன் பாஞ்ச சீல கொள்கைகளை கடைப்பிடித்து ஆயுத குறைப்பை செய்து வருகிறதோ இல்லையோ, சீனாமட்டும் தனது ஆயுத உற்பத்தியால் அமெரிக்கவையே பனிப்போருக்கு இழுத்து வந்துவிட்டது என்பதும் இரகசியமில்லை. ஒருவேளை, சீனாவின் இந்த ஆயுத குவிப்பு அமெரிக்காவுக்கு எதிரானது மட்டுமாகவே என்றும், எவ்வளவு தொகை ஆயுதத்தை சீனா செய்தாலும், எந்த சந்தர்ப்பத்திலும் அவற்றை இந்தியாமீது ஏவாது என்றும் இந்திய பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்களுக்கு சீனா உத்தரவாதம் கொடுத்திருக்கலாம். மேலும் எப்படி கனிமொழி ராசபக்சாக்களுக்கு எதிராக தூக்கிய போர்க்கொடிக்கு இலங்கை போய் இராசபக்சாக்களிடம் மன்னிப்பு கேட்டாரோ அதே போல் இந்திய பாதுகாப்புகள் இதுவரை விட்ட தவறுகளுக்கு விக்கிரம் சிங் இலங்கை வந்து முறையாக ராசபக்சாக்களிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமல்ல இலங்கைக்கான தனது சேவைகளுக்கும் உதரவாதம் வழங்கியிருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன).  இவை சீனாவல் இந்திய பாதுகாப்பு கொள்கைக்குள் ஆளமாக ஊடுருவத்தக்கதான வலிமையைத்தான் காட்டுகிறது. இதை சீனா, லஞ்ச கலாச்சாரத்தில் சீனாவுக்கு எதையும் வாங்கிகொடுக்கும் புரோக்கராக தொழில்ப்படும் இலங்கை மூலம் தான் செய்விக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையில் ஓட்டை விழுந்து, இந்தியாவை சீனா முத்து மாலை வடிவில் சூழ்ந்து, வருங்காலத்தில் அது அமைக்க தயாராகிக்கொண்டிருக்கும்  அதன் பாரிய கடல் படைக்கு, சென்ற காலத்தில் சீனா துறைமுகங்கள் அமைத்துவிட்டதை, அமெரிக்காதான் இந்தியாவுக்கு தெளிவு படுத்தியது. ஆனால் இந்தியாவும், இலங்கையும்  எப்படி இந்திரா காந்தியின் முன்னெடுப்புக்களை நிலை குலைய செய்து இந்தியாவை முற்று முழுதாக தமது காலில் கொண்டு வந்தனவோ அதே சாதுரியத்துடன் இந்தியாவை இந்த முறை காப்பற்ற வந்த அமெரிக்காவை, சீனாவும் இலங்கையும் சேர்ந்து விழுத்தி மீண்டும் இந்தியாவை தமது காலுக்குள் போட்டிருக்கின்றன.

 

நமது எதிர்வு கூறல்கள் "இனி அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கெரி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா மாதிரி இலங்கைக்கு மாட்டுப்பொங்கள் தேடி பயணமாவார்" என்பதோ அல்லது "அமெரிக்க தூதுவர் பிளேக் மாதிரி அமெரிக்க ராஜாங்க அமைச்சரும் JVP வீடுகளுக்கு ஆதரவு தேடி அலையபோகிறார்" என்பதோ அல்ல. 

 

இந்தியாவில் சீனாவின் பணத்தை இலங்கை கொடுத்து செய்வித்ததின் பெயர் இலஞ்சம்.  ஆனால் அமெரிக்க அரசியல் PR கம்பனிகளை வைத்து இலங்கை செய்விப்பது "லொபியிங்". இந்த லொபியிங்கில் அமெரிக்கா தாக்கப்படாமல் சுசான் ரைஸ் தனிக்கப்பிடிக்கபட்டு தாக்கப்பட்டதுதான் வழமையான சீனா-இலங்கை ராசதந்திரத்தின் கூட்டின் வெற்றியின் இரகசியம். 

 

கெரி நிச்சயமாக ரஸ்சியா, வட கொறியா, இலங்கை போன்ற நாடுகளுடன் பல ஒப்பந்தங்கள் செய்வார்.  ரஸ்சியா, வட கொரியா போன்றவற்றுடன் செய்யப்படும் ஒப்பந்தங்கள் பழைய ABM, அணுஆயுத ஒப்பந்தங்கள் மாதிரி சர்வதேச கண்களுக்கு முன் நடைமுறையில் போடப்பட வேண்டியவை. ஆனால் இலங்கையுடன் செய்யும் ஒப்பந்தங்கள் மட்டும் பிளேக்- ராசபக்சா வாக்குறுதிகள்,  ரஜிவ்-JR இன் 13ம் திருத்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம், பண்டா- செல்வா ஒப்பந்தம் போன்றவை போன புத்துக்கு போகவேண்டியவையே.  

  • கருத்துக்கள உறவுகள்
நா.க.அரசின் பாராளுமன்ற உறுப்பினர் சுபா சுந்தரலிங்கத்தின் மகள் 2009ம் ஆண்டு உண்ணா நேன்பு இருந்த போது செனட்டராக இருந்த ஜேன் கெரி சந்தித்ததாக ஞாபகம்.இதைப் பற்றி சுபா சுந்தரலிங்கம் விபரமாக எழுதினால் நல்லது.யாராவது இது பற்றிய செய்திகள் இருந்தால் இணைத்துவிடுங்கள்.

 

அந்த உண்ணாவிரதமே வீண் எண்டு அப்ப யாராவது சொல்லியிருப்பினமே?!! :D

  • தொடங்கியவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.