Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!

 
 

sampanthar_sumanththiran-300x191.jpg

 

வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு சம்பந்தன் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவருகின்றார். இராணுவப் பிரசன்னத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று கோரவில்லை எனக் கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டாகும். இது அவரின் உரையை திரிவுபடுத்தும் செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை இராணுவத்திற்கும் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கும் என்ன தொடர்பு என்பது சுமந்திரனுக்கு தெரியாத ஒன்றல்ல. ஒரு நாட்டின் குறித்த பகுதியை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு அங்கீகாரம் வழங்கும் சுமந்திரன், ஒரு நாட்டில் சிவில் நிர்வாகத்தை நடத்துவதற்கு இராணுவத்திற்கு அனுமதிவழங்கும் சுமந்திரன் உலக மக்களின் மீதான பயங்கரவாதத்தை ஆதரிக்கிறார். இந்த வகையில் காஷ்மிரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமரிக்க நேட்டோ இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், எண்ணை வளத்தைச் சுரண்டுவதற்காக மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் இராணுவப்படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய சியோனிசப் படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும் எதிரான சர்வதேச பயங்கரவாதியாகிறார் சுமந்திரன்.

இலங்கையின் வடகிழக்கை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்தை வெளியேறக் கோருவது மக்கள் பற்றுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

 

சம்பந்தரும் சுமந்திரனும் சர்வதேச அரச பயங்கரவாதிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கின்றனர். இந்த இருவருக்கும் வாக்குப் போட்டது சர்வதேச அரச பயங்கரவாதமா என்ன? இலங்கை அரசு கூட ஏற்றுக்கொள்ளாது என்று எதிர்வு கூறுகிறது சமபந்தர் குழு. இலங்கை அரசு இனச் சுத்திகரிப்பை நிறுத்துவதையும் ஏற்றுக்கொள்ளாது என்பதால் இனச்சுத்திகரிப்புக்கூட சம்பந்தரின் ஆசியோடு இனி நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

 

http://inioru.com/?p=32399

 

இதை எழுதிய ஆசிரியருக்கு சம்பந்தரின் பேச்சில் இருப்பது ஒன்றும் தெரியாது. தனது 30 நிமிடத்திற்கு மேற்பட்ட  அவரின் பேச்சு வடக்கு கிழக்கில் நடை பெறும் இராணுவ ஆட்சியை பற்றி அரைபங்கு நேரத்திற்கு மேலாக எடுத்து தெளிவாக பலவிடயங்களை சுட்டியிருக்கிறார்.

 

இதுவரையில் "வன்முறைக்கு வழி திறக்கும் அரசின் சதியில் சிக்காதீர்கள்; தமிழ் இளைஞர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை" என்ற தலைப்பை 150 பேருக்கு மேலும், இதை 20 பேரும் மட்டும் வாசித்திருப்பது, பிரசாரங்களில் யாழ் வாசகர்களுக்கு ஆர்வமில்லை என்பதும் செய்திகளில் மட்டும்தான் ஆர்வம் என்பதும் புரிகிறது

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதை எழுதிய ஆசிரியருக்கு சம்பந்தரின் பேச்சில் இருப்பது ஒன்றும் தெரியாது. தனது 30 நிமிடத்திற்கு மேற்பட்ட  அவரின் பேச்சு வடக்கு கிழக்கில் நடை பெறும் இராணுவ ஆட்சியை பற்றி அரைபங்கு நேரத்திற்கு மேலாக எடுத்து தெளிவாக பலவிடயங்களை சுட்டியிருக்கிறார்.

 

இதுவரையில் "வன்முறைக்கு வழி திறக்கும் அரசின் சதியில் சிக்காதீர்கள்; தமிழ் இளைஞர்களிடம் கூட்டமைப்பு கோரிக்கை" என்ற தலைப்பை 150 பேருக்கு மேலும், இதை 20 பேரும் மட்டும் வாசித்திருப்பது, பிரசாரங்களில் யாழ் வாசகர்களுக்கு ஆர்வமில்லை என்பதும் செய்திகளில் மட்டும்தான் ஆர்வம் என்பதும் புரிகிறது

 

நீங்கள் பதில் கருத்து இடாமல் இருந்திருந்தால் பலருக்கு ஆர்வம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் பதில் வைத்துப் பலரை வாசிக்கச் செய்துவிட்டீர்கள்..

 

அதுபோக கனடா நக்கீரன் சம்பந்தரின் பாராளுமன்ற உரையை மொழிபெயர்த்ததை நீங்கள் கட்டாயம் படித்திருப்பீர்கள்..

 

பொங்குதமிழ் இணையத்தில் இருக்கின்றது: http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=31942a5d-18d5-4715-a9cd-23fe0f5821e0

பொங்குதமிழ் இணையத்தில் இருக்கின்றது: http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=31942a5d-18d5-4715-a9cd-23fe0f5821e0

 

படிதேன். இதையே ஆரம்பத்தில் எல்லா ஊடகங்களும் செய்திருந்தால், புலத்து தமிழன் பேயன் அல்ல, குறைந்தது தமிழ் தன்னும் வாசிக்க தெரிந்தவன் என்று வந்திருக்கும். இதையே முதல் நாள் செய்திருந்தால் சம்பந்தர் சமாதான பேச்சுவார்த்தைகளில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும் .

 

 

அனால் இந்த வகையில் காஷ்மிரை ஆக்கிரமித்திருக்கும் இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமரிக்க நேட்டோ இராணுவத்திற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், எண்ணை வளத்தைச் சுரண்டுவதற்காக மத்திய கிழக்கை ஆக்கிரமிக்கும் இராணுவப்படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய சியோனிசப் படைகளுக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும் எதிரான சர்வதேச பயங்கரவாதியாகிறார் சுமந்திரன்.

 

மந்திரவாதி தனது குல்லாய் தொப்பிக்கிலிருந்து பல குருவிகளை, முயல்களை, ஏன் மேரி பொப்பின் செய்தது மாதிரி 6 அடி உயர நிலை விளக்கை கூட அடிக்கடி எடுத்து விட்டுவிடுவார்.  தான் கூடாரத்தின் ஒருகாலில் கட்டும் உதவியை தனது கோலை உயர்த்தி கணப்பொழுதில் மற்றைய நான்கு கால்களுக்கும் மாற்றிக்காட்டுவார்.

 

மேலே உள்ள பந்தி அப்படி சம்பந்தரின் பேசுக்குள்ளால் எடுத்து வெளிவிடப்பட்ட வனவிலங்குகள். மேலும் இந்த மந்திரவாதி கூடாரக்காலுக்குள் மாற்றுவதற்கு தனது உதவியை பாவிக்காமல், சம்பந்தரின் உதவியான சுமந்திரனை பாவித்து தனது மெயிக்கை இன்னும் உண்மையானதாக உணரவைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஏவல்ப் பேய்களான கூத்தமைப்பும் சம்பந்தனும் சுமந்திரனும். வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுவினம். பிறகு அதுதான் இராஜதந்திரம் என்பினம். எல்லோரும் அவர்கள் சொல்ல்கிறபடி கேளுங்கோ. தமிழர்மீதான இராணுவ நெருக்கடியும் அதன் பின்புவந்த சுமந்திரனின் அறைகூவலும்(?) அதற்குமுன்னான சம்பந்தனின் உரையும் மிகவும் திட்டமிட்டவை. அவர்கள் தங்கள் இந்திய எஜமானன் ஏவியதை சரியான வகையில் நடைமுறைப்படுத்துகிறார்கள். பல்கலை மாணவர்களில் செயற்திறன் மிக்கவர்களை உள்ளுக்குப அனுப்பிவிட்டு, தங்களது பொம்மைகளை பல்கலைக்குள் உருவாக்குவதே இந்திய விசுவாசிகளது திட்டம். கூத்தமைப்பு எனும் திருட்டுப் பயலகளை தமிழினம் தூக்கி எறியும் காலம் எப்போ வருகின்றதோ அப்போதெ தமிழ்தேசியத்தின் சையான திசைநோக்கிய அரசியல் பயணம் தொடங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.