Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு நடந்தது என்ன? மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு நடந்தது என்ன? மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ்
27 டிசம்பர் 2012
 
 

மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில....

 

Sivathas_CI.jpg

 

மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ்

வவுனியா பொது வைத்தியசாலை

2012–12–12 காலை 9.00

விடுதி இல 12, வவுனியா பொது வைத்தியசாலை.

 

(மனநல மருத்துவர் எஸ். சிவதாஸின் இந்தக் கட்டுரை குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டது)

(இதன் கீழ் உள்ள மனநல மருத்துவர் எஸ். சிவதாஸிடம் பகிரங்கக் கேள்விகள் சில... என்ற பகுதி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இப்போ இணைக்கப்பட்டுள்ளது.)

 

வன்னியைச் சேர்ந்த 14 வயது பெண் ஒருத்தி மருத்துவவிடுதியிலிருந்து எனது கருத்திற்காக அனுப்பப்பட்டிருந்தாள். பாலியல் வன்புனர்விற்கு உட்பட்டதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸினால் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய தாயும் அங்கு கண்ணீருடன் வந்து இருந்தாள். பெண்ணிடம் (சிறுமி) நடந்த சம்பவத்தை கேட்டேன். 

 

தான் கோயில் திருவிழாவில் தாயுடன் கலந்து கொண்டதாகவும், தனது நண்பிகள் பலர் அங்கு வந்து இருந்ததனால் அவர்களுடன் சேர்ந்து கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மாலை 3.30 இலிருந்து தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தான் மாலைமாகும் நேரம் வரை இருந்த போது, தாயார் நண்பிகளுடன் வீடு சேர்ந்து வருவதாக எண்ணி முன்னே சென்றுவிட இந்த சிறுமி நண்பிகளுடன் வீடு திரும்ப ஆயத்தமானாள். நண்பிகள் முன்னே சென்றுவிட இவள் தனியே கோயிலில் நின்ற போது, ஒரு இளைஞனால் இவளிடம் வந்து தான் விரும்புவதாகவும் தன்னுடன் வருமாறும் கேட்டுள்ளான். அதற்கு அந்த சிறுமி மறுக்கவே அவளை கோயிலுக்குள் தூக்கிச் சென்று அங்கசேஷ்டைகளில் ஈடுபட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். தனது முழுப் பலத்தையும் திரட்டி வெளியே வந்த சிறுமி வீடு திரும்பினாள். அம்மாவிடம் நடந்ததை கூறுகையில் அம்மா ஒப்பாரி வைத்ததில் ஊர் திரண்டது. அம்மாவின் சகோதரி பொலிஸ் முறைப்பாடு செய்ததில் பெண்ணின் உதவியுடன் அந்த 'காமுகன்' கைது செய்யப்பட்டு பெண் பாலியல் வன்புணர்விற்கு உட்பட்டுள்ளாள என்பதை அறிந்து கொண்டுள்ளதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். பெண்ணியல் மருத்துவ நிபுணரின் (ஏழுபு) பரிசோதனையில் அவள் வன்புணர்விற்கு உட்படவில்லை என நிருபணமானது. அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டதனை அனுமானிக்கும்படி என்னிடம் அனுப்பப்பட்டாள். 

 

நான் அந்தப் பெண்ணை தனியே விசாரித்த போது இவற்றை கூறினாள். தன்னை தன்னுடைய அம்மாவே நம்பவில்லை. எனக்கு இங்கு வந்தது அவமானம். மீண்டும் பாடசாலையில் சென்று கற்பது கடினமானது என குறிப்பிட்டான். அந்த சிறுமியில் நிலை பரிதாபமானது. அம்மாவை அழைத்து விபரத்தை அறிகையில் நீங்கள் ஏன் ஒப்பாரி வைத்தீர்கள் எனக் கேட்டபோது என் பெண் கேட்டுப்போனாளோ என பயந்து செய்துவிட்டேன். எனது அக்கா தான் பொலிஸில் சொல்லிவிட்டாள். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை....

 

இந்தப் பெண் வன்புணர்விற்கு உட்பட்டதாக மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டது நியாயம் ஆனதே. காரணம் அந்தப் பெண்ணின் வயது 14, வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்படதே வன்புணர்விற்கு உட்பட்டதான சந்தேகத்தில் அதனை நிரூபித்துக் கொள்வதற்காகவே. பெண்ணின் அனுமதியின்றி தாயின் அனுமதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாள். இதுவே இந்த பெண் 18 வயதிற்கு மேற்பட்டிருந்தால் அவளது அனுமதியின்றி அவளைப் பரிசோதிக்க முடியாது. அதைவிடவும் வேறு மருத்துவ காரணம் ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டு தாயின் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு அவளை பெண் மருத்துவரிடம் அனுப்பத் தேவையுமில்லை.

 

இந்த உண்மைச் சம்பவத்தை விபரிப்பதன் நோக்கம் நான் கடந்த ஒருவாரமாக எதிர்கொண்ட பிரச்சனையில் நான் எடுத்த முடிவினை விளங்கப்படுத்வதற்கே. அந்த சம்பவத்திற்காக தீர்வினை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

 

நடந்தது என்ன?

 

13-12-2012 இல் கனபுரம் பகுதியில் உள்ள நண்பர்கள் விருந்தகம் பகுதியில் மாதர் சங்க அங்கத்தவர்களுக்கான பயிலரங்கனை நடத்துவதற்கு கிளிநொச்சி சென்றிருந்தேன். அந்த பயிலரங்கன் நடுவிலே எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஒன்று கிளிநொச்சி மருத்துவமனையில் மனநலமருத்துவரிடமிருந்தும் மற்றும் அத்தியேட்சகரிடம் இருந்தும் வந்திருந்தது. இராணுவத்திற்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப் பெண்கள் 15பேர் மனநல குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டுள்ளமை பற்றியும் அவர்களை கையாள்வதில் உங்களுடைய நிபுணத்துவ ஆலோசனைகள் பெற விரும்புவதாக கூறினார். நான் பயிலரங்கில் இருப்பதால் மதியபோசன இடைவேளையின் போது வந்து பார்ப்பதாக கூறியதையடுத்து மருத்துவமனை வாகனத்தில் மதியம் வைத்தியசாலைக்கு சென்றேன். அங்கு இந்த மருத்துவர்களுடன் இராணுவத்தை சேர்ந்த இரு மருத்துவர்களும் இருந்தனர். அவர்களிடம் நான் இரு வேண்டுகோளை விடுத்தேன். ஒன்று இவர்களை நான் தனியே சந்தித்து உரையாட வேண்டும் மற்றையது நான் எடுக்கும் முடிவினை நீங்கள் அமுல்படுத்த முடியுமானால் மட்டுமே நான் இதனை செய்யமுடியும் என்றேன். இதன் பின் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இராணுவத்தின் உளமருத்துவநிபுணர் இதனை உறுதிசெய்தார். மதியம் அந்த பெண்களுடன் உரையாடினேன். கூட்டாக ஒரு அறையினுள் இருந்த 13 பெண்களை தனியான மண்டபம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று பெண் வைத்தியசாலை உத்தியோகத்தரின் பிரசன்னத்தில் மட்டும் உரையாடினேன். அப்போது அவர்கள் தங்களுக்கு நடந்ததை விபரித்தார்கள். ஒரு பெண்ணிற்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதை கட்டுப்படுத்த வேறு சில பெண்கள் சாமி வந்திருப்பதாகவும் கூறினார். தங்களில் சிலர் இதனை பார்வையிட்டு மயக்கமுற்றனர் என்றும் அதனை தொடர்ந்து தங்களை இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறைபட்டுக் கொண்டனர். 

 

தன்னை ஒரு பூசாரி கோழி ஒன்றினை வெட்டுவதற்கு அதனை பிடிக்கும்படி கூறியபோது தனக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறினாள். எங்களுக்கு பயமாக இருக்கிறது என்றனர். அவர்கள் 13 பேர்களும் ஒரு வித கூட்டுசேர் சிகிச்சைக்குள் (புசழரி வுhநசயில) உட்படுத்தினேன். அதில் முதலாவதாக (Pளலஉhழ நனரஉயவழைn) உளவிளக்கத்தை அளித்தேன். இத்தகைய நிலமைகள் உளவியல் பண்புகள் பற்றியும் ஆழ்மணம் மேல் மனம் போன்ற நிலைப்பாடுகளையும் இயம்பினேன். அப்ப உண்மை பேய் இல்லையா? சாமி என்பது பொய்யா? என்ற சிக்கலான கேள்விகளை கேட்டார்கள். அதனை எனது சாதுர்யமான பதில்களுக்கு ஊடாக தெளிவுபடுத்தினேன்.

 

அப்பொழுது அவர்கள் விடுதியில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்களையும்  தங்களுக்கு முன்பாக வைத்து பார்க்கமுடியுமா என்று கேட்டு கொண்டதற்கிணங்க அவர்களை அழைத்த வருமாறு பணித்தேன். இராணுவத்தினருடன் அழைத்துவரப்பட்ட பெண்களை உள்ளே அனுமதித்துவிட்டு இராணுவ பெண் சிப்பாய்களை வெளியேறச் சொன்னேன். திடீரென வந்த இரண்டு பெண்களும் சாமி வந்ததுபோல் உருவெடுத்து ஆடத் தொடங்கினார்கள்.  ஒருத்தி பாம்பு நடனம் போன்றதாகவும், அடுத்தவள் சுழன்று ஆடியநிலையிலும் உள்ளே வந்தனர் மற்றவர்கள்  எல்லோரும் பரபரப்பானார்கள் நான் மிக அமைதியாக அவர்களை கட்டுப்படுத்தினேன்.

 

அந்த இரு பெண்களின் கைகளிலும் பூசாரியினால் வழங்கப்பட்ட திருநீற்றுப் பைகள் இருந்தன. இந்தத் திருநீற்றுப் பைகளைத் தொட்டால் உங்களுக்கும் சாமி வந்துவிடும் என்றனர் மற்றைய பெண்கள். எந்தவிதத் தயக்கமுமின்றி அந்தத் திருநீற்றுப்பைகளை இரு பெண்களிடமும் இருந்து பெற்றுக் கொண்டு எனக்கு சாமிவரவில்லையே என்று கூறினேன். அவர்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்க்ள. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்தகைய நிலையின் உளவியல் விளக்கத்தினை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். இந்தச் சிகிச்சை முடிவின் பின் அவர்களிடம் உங்கள் 15 பேரையும் வீட்டிற்கு அனுப்ப முடியும் என்றேன். அதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டேன் என்றேன். எங்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டாம். நாங்கள் இராணுவத்தில் தொடர்ந்து பயிற்சி  பெறப்போகின்றோம் என்றார்கள். இது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. அவர்களிடம் துருவித்துருவி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் வீடு திரும்ப விருப்பமின்மையினை நான் உறுதி செய்து கொண்டேன்.

 

இரண்டு பெண்கள் மாத்திரமே 'உரு'வந்ததில் களைத்துப் போயிருந்ததால் அவர்களைத் தவிர்த்து மற்றைய 13 பேரையும் வைத்தியசாலையிலிருந்து விடுவித்து (னுளைஉhயசபந)இ அவர்களது மருந்துகளை நிறுத்தி வெளியேற்ற முடிவெடுத்தேன். அப்பொழுது சில பெண்கள் தங்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் நடந்துள்ளதாக பத்திரிகைகளில், மற்றும் பிற ஊடகங்களில் செய்தி வந்திருப்பதாகவும் கூறி, தங்களுடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று முறையிட்டனர். இது எனக்கு இன்னுமோர் பிரச்சனைக்கு முகங்கொடுக்க வேண்டியதாயிற்று. நேரடியாகவும், மறைமுகமாகவும் சில கேள்விகள் மூலம் அதனைத் தெளிவுபடுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தமையும், தாங்கள் அந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருந்தமையாலும், அவர்களை ஒரு பெண்ணியல் மருத்துவரிடம் அனுப்புவதென்பது சாத்தியமற்றதாயிற்று. அத்தகைய ஒரு நிலைப்பாட்டினை அவர்களிடம் நான் வெளிப்படுத்திய போது தாங்கள் பாதிக்கப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாது பரிசோதனை பற்றிக் கதைப்பது உங்களது நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் கூறினர். எனது நிலைமை மேலும் சிக்கலாயிற்று. .'நீங்கள் எங்களது களங்கம் சூட்டப்பட்ட தன்மையை நீக்கினால் மாத்திரமே உங்களை நம்புவோம்' என்று கூறினர். அதற்கு என்ன செய்யமுடியும் என்று அவர்களிடம் நான் வினவியபோது, 'எங்கள் பெற்றோர்களிடம், பொது மக்களிடமும், ஊடகங்களிடமும் எடுத்துரைக்குமாறு வினயமாகக் கேட்டனர். அவ்வாறு செய்வதாகக் கூறிக் கொண்டு அவர்களிடமிருந்து விடைபெற்று அந்த மண்டபத்தை விட்டு வெளியே வரும்போது அந்த இருபெண்களில் ஒருத்தி சுழன்று (உரு) வந்து பின்னர் விழுந்து அங்கப் பிரதட்சணை செய்தவண்ணம் எனது காலடியில் வந்து கிடந்தாள். பலரும் அதிர்ச்சியிலும் பயத்திலும் செய்வதறியாது திகைத்து நின்ற போது, நான் நிதானமாகவும், அமைதியாகவும் அந்தப் பெண்ணிடம் கலை முடிந்துவிட்டது. எழுந்து வாருங்கள் என்று கட்டளையிட்டேன். அவளும் என் ஆளுகைக்கு உட்பட்டவளாக பழைய நிலைக்குத் திரும்பினாள். அதன் பின் மற்றவர்கள் 'எங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற கழங்கத்தை நீக்குங்கள். மீண்டும் எங்களைச் சந்திக்கும் போது அதனை நீங்கள் செய்திருக்க வேண்டும்' என்றனர்.

 

இரண்டு பெண்களை வைத்தியசாலையில் பெற்றோர்களுடன் அனுமதிக்கும்படி கூறிவிட்டு மற்ற 13 பெண்களையும் அவர்களுடைய விருப்பத்திற்கேற்றவாறு முகாமிற்கு அனுப்பினேன். பின்னர் வைத்தியசாலை மருத்துவர்களுடனும் இராணுவத்தின் மருத்துவர்களுடனும் கலந்தாலோசித்து இராணுவத்தில் இணைக்கப்பட்ட மற்றைய பெண்களையும் சந்திக்க முடிவெடுத்தேன். உள மருத்துவத்தில் பயனாளியின் நேரடியான கருத்தினைவிட அவர்களோடு கூட இருக்கும். உறவினர்கள், நண்பர்களது கருத்துக்கள் (ஊழடடயவநசயட hளைவழசல) முக்கியமானது. அதனடிப்படையிலேயே அத்தகைய முடிவுக்கு நான் வந்தேன். மாலை அவர்களைச் சந்திப்பதாகக் கூறிவிடடு எனது பயிலரங்கிற்கு கனகவுரம் பகுதி நோக்கி திரும்பினேன். மாலைநேரப் பயிலரங்கினை முடித்துக் கொண்டு கிளிநொச்சி வைத்தியசாலையின் வாகனத்தில் வைத்தியர்களுடன் முகாம்கள் நோக்கி புறப்பட்டேன்.

 

மாலை இருவேறு இராணுவமுகாம்களில் இருகுழுக்களாக இராணுவத்தில் சேர்ந்த பெண்களைச் சந்தித்தேன். அத்துடன் பெண் பயிற்றுவிப்பாளர்களுக்கும் இந்த நிலையை விளங்கப்படுத்த வேண்டிய தேவை இருந்ததனால் அவர்களையும் சந்தித்தேன்.

 

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுடன் உரையாடியபோது பல உண்மைகள் தெரியவந்தது.

 

1. அந்தக் குழுவில் ஒரு சிலரே முன்னாள் போராளிகள்

 

2. பலவந்தமாக இராணுவத்தில் சேர்க்கப்படவில்லை.

 

3. கவர்ச்சிகரமான விளம்பரங்களும் வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு உள்ளன. 

 

4. இதில் இணைந்த பின்பு அவர்களுக்கு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது.

 

5. பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை.

 

அவர்களது ஒட்டுமொத்த கோரிக்கையாக இருந்தது தங்கள் மீது ஏற்படுத்திய களங்கத்தை அகற்ற வேண்டும். இல்லையேல் தங்களுக்கு வாழ்க்கை இருள்மயமானது என்று கூறினார்கள். ஒருத்தி இந்த ஒருமாத கால பயிற்சிகாலத்தில்; ஒரு ஆண் கூட எங்கள் பயிற்சி மையத்திற்கு வந்தது இல்லை என்று கூறினாள். ஒரேயொரு பெண்ணைத்தவிர மற்றவர்கள் வீடுதிரும்ப விரும்பவில்லை. அத்துடன் அவர்கள் அடுத்தநாள் கோணேஸ்வர ஆலயம் செல்கின்ற சுற்றுலா பயணத்தில் மூழ்கியிருந்தார்கள். ஒரு பெண் மட்டும் தான் தாயை விட்டு இருந்ததில்லை என்றும் தன்னால் தாயை விட்டு இருக்க முடியாது என்று கூறியதனால் நான் அவளை வீட்டுக்கு அனுப்ப முடியுமா என இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியிடம் கூறிய போது 'ஆம்' உங்களுடைய சிபாரிசின் படி செய்கின்றேன் என்றார். அவளும் தான் சுற்றுலா பயணம் முடித்துவிடடு வீடுசெல்ல விரும்புவதாக கூறினாள். நான் காலையில் பார்த்த 13 பெண்களும் முகாம் திரும்பி இருந்தனர். அவர்களும் இரு குழுக்களுக்குள் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லமுடியுமா என இராணுவ பெண் வைத்தியர் கேட்டபோது எந்தவித பிரச்சனையுமின்றி அழைத்து செல்லலாம் என்றேன். அவர்களை விட்டுவிட்டு சென்றால் அது அவர்களுக்கு மனப் பாதிப்பினை தரும் என குறிப்பிட்டேன். 

 

அந்த பெண் வைத்தியர் அதுவும் ஒரு தேவாலயம் அங்கு இந்த உருவந்து ஆடினாள் என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போகுமே என்றாள் பயத்துடன். அப்படி பெரும்பாலும் நடக்காது என்றும், ஒரிருவரில் அது வந்தால் நான் காலையில் கையாண்ட முறையில் நீங்கள் அணுகவேண்டும் என்று கூறினேன். முழு சம்மதம் சற்று பயத்துடன் ஆம் என்றாள். இரு முகாம்களும் சென்று பார்வையிட்டு முடிய இரவு உணவு வழங்கப்பட்டது. என்னுடைய இந்த பணிக்கு கிடைத்த ஒரே ஊதியம் இரவு உணவு மாத்திரமே.

 

அங்கிருந்து திரும்பும் போது நான் இதைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என தீர்மானித்தேன். அதற்கு சரியான சந்தர்ப்பமாக யாழ்ப்பாணத்தில் அடுத்த நாள் உரையாற்ற இருப்பது அனுகூலமாக அமைந்திருந்தது.

 

அந்த பெண் பிள்ளைகளிடம் நான் அடுத்த கிழமை உங்களை சந்திக்கும் போது உங்களது களங்கத்தை அகற்றுவதற்கு என்னால் முடியமானளவு முயற்சிப்பேன் என உறுதிமொழி அளித்துவிட்டு வந்தேன். இவர்கள் சுற்றுலா செல்வதால் இரண்டு பெண்களை வைத்தியசாலையில் நான் முழுமையாக பரிசோதிக்கும் வரை வைத்திருக்கவும் என கூறிவிட்டு, பெற்றோர்களுடன் தான் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதனை  உறுதிசெய்துவிடடு யாழ்ப்பாணம் திரும்பினேன்.

 

எந்த பிரதான பத்திரிகைகளும் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதனால் நான் பொதுமேடையில் இது பற்றி அறிவிக்க வேண்டியவனானேன். அதன்பின் நான் இரவு கொழும்புக்கு திரும்பும் போது கைத்தொலைபேசியில் ஒரு இணைய ஊடகம் தொடர்புகொண்டது. பஸ்ஸினுள் வைத்து அவர்களுக்கு சில விளக்கங்களை அளித்தேன். அடுத்த நாள் 15ம் திகதி மாலை டீடீஊ தமிழ்ஓசை நிருபர் தொடர்புகொண்டு எனது பேட்டியை வெளியிட்டார். 

 

நான் மீண்டும் கிளிநொச்சிக்கு சென்று 17ம் திகதி அங்கு அனுமதிக்கப்பட்டவர்களை  பார்க்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் நாட்டில் ஏற்பட்ட கடும்மழை காரணமாக கொழும்பு – வவுனியா ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்ததால் நான் 19ம் திகதியே கிளிநொச்சி செல்ல முடிந்தது. 19ம் திகதி மதியம் நான் கிளிநொச்சி சென்று அந்த இரு பெண்களையும் பரிசோதித்து அவர்களையும் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க முகாமுக்கு அனுப்பினேன். அந்த பெண்களுக்கு அதன்பின்பு எந்த பாதிப்பும் வரவில்லை. அதில் ஒரு பெண் எனக்கு கடிதம் ஒன்றை எழுதித்தந்தாள். அடையாளப்படுத்தலை தவிர்ப்பதற்காக நான் இங்கு பிரசுரிக்கவிரும்பவில்லை. அதில் அவள் தனக்கு பேய் பிடித்திருப்பதாக இருந்த பிரமையை அகற்றி தனக்கு மீள்வாழ்வளித்ததற்காக எனக்கு நன்றி தெரிவித்திருந்தாள்.

 

அதன் பின் என்னை சந்திப்பதற்கு இராணுவத்தின் உளநல மருத்துவ நிபுணர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு வந்திருந்தார். அவருடனும்  எனது வைத்தியர்களுடனும்  திரும்பவும் அந்த இரு முகாம்களுக்கும் விஜயம் செய்தேன். சில மணிநேர கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் தங்களது களங்கம் அகற்ற நீங்கள் எடுத்த முயற்சிகள் எவை என்று கேட்டார்கள்;. தங்களுக்கு அதை நிரூபிக்க வேண்டும் என்று வினையமாகக் கேட்டார்கள். நான் சொன்னேன் டீடீஊ தமிழ் ஓசை கேட்கவில்லையா... தாங்கள் சுற்றுலா சென்றிருந்ததாகவும் ஞாயிறு பெற்றோர்களுடன் சந்திப்பு நிகழ்த்துவதாகவும் கேட்கவில்லை என்றனர். ஒரு சிலர் தங்களது  பெற்றோர் அதனை கேட்டதாகவும் அதன் முழுவிபரத்தையும் அறியமுடிவில்லை என்றனர். இவை பத்திரிகைகளில் வந்தனவா என வினாவியபோது இராணுவ அதிகாரியுடன் தொடர்புகொண்டு திங்கட்கிழமை 'வீரகேசரி' வரவழைக்கப்பட்டு அதன் முன்பக்கத்தில் இருந்த செய்தி காட்டப்பட்டது. யாழ்ப்பாண பத்திரிகையில் இவை வந்துள்ளதா எனக் கேட்டார்கள். எனக்கு அது சரியாகத் தெரியவில்லை என்று கூறினேன்.  

 

இரண்டாவது சந்திப்பிலும் பாதிக்கப்பட்டதற்கான நிலைமை கண்டறிய பல கேள்விகளை கேட்டேன். அது அவர்களை காயப்படுத்திருக்கலாம். அவர்கள் என்னை ஒவ்வொரு கிழமையும் தங்களை வந்து சந்திக்கும் படி கூறியபோது நான் அதனை மறுத்து விளக்கமளிக்க வேண்டி ஏற்பட்டது. நான் இங்கு ஒரு மனநல மருத்துவ நிபுணராக நடந்து கொண்டுள்ளேன். உங்களுக்குரிய சிகிச்சையில் ஒரு பகுதியாகவே ஊடகங்களுக்கு நான் இதனை தெளிவுபடுத்தியுள்ளேன். இல்லாவிட்டால் எனக்கு பத்திரிகைகளுக்கு சொல்லவேண்டிய தேவையில்லை. ஆனாலும் உங்களை இராணுவத்தில் இணைத்து கொண்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதில் நான் கிரமமாக வரவேண்டிய தேவையுமில்லை, விருப்பமுமில்லை. அப்பொழுது ஒரு பெண் குறுக்கிட்டு எங்களுக்கு முதல் மாத சம்பளம் தருகின்ற 22ம் திகதி பெற்றோர்களும் வருவதால் அதற்கு மட்டுமாவது அதில் கலந்து கொள்ளும்படி கேட்டனர். இதுவும் எனது நிலப்பாட்டுக்கு எதிரானது என்பதால் என்னை தயவுசெய்து மன்னித்து கொள்ளுங்கள் என்றேன். தனிப்பட்ட ரீதியான உங்கள் வீட்டு நிகழ்வுகள், திருமண நிகழ்வுகளில் வேண்டுமென்றால் நான் எதிர்காலத்தில் கலந்துகொள்வேன் எனக் கூறிவிட்டு விடைபெற்றேன்.

 

இராணுவத்தின் மனநல மருத்துவ நிபுணரிடமும் எனது கருத்துக்களை எடுத்து கூறிவிட்டு அன்று மாலையே அவசரமாக வவுனியா திரும்ப வேண்டியிருப்பதால் வைத்தியசாலை வாகனத்தில் வவுனியா செல்ல முடிவெடுத்தேன். அன்று மேற்கொண்ட கடமைகள் இராணுவத்தின் மதியபோசன தந்தனர். அதுதான் அன்றைய ஊதியம். ஆனாலும் எனது பணி முழுமையாகவும் ஆரோக்கியமாகவும் மருத்துவ ரீதியில் சாதனையாகவும் முடிவுபெற்ற திருப்தியில் வவுனியா வைத்தியசாலை நோக்கி பயணமானேன். 

 

குறிப்பு : நான் இந்த விடயத்தை தொடர்ந்து பத்திரிகையில் விவாதிக்கின்ற விடயமாக எடுத்துக்கொள்ள விருப்பமிள்ளததால் என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை தருகின்றேன். (sivathas28@gmail.com அந்த பெண்களின் எதிர்கால வாழ்வு பாபதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலே இதை பத்திரிகையில் தொடர விரும்பவில்லை.

 

வைத்திய கலாநிதி எஸ் சிவதாஸிடம் சில கேள்விகள்

வழமைக்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாக இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்ட வறிய அப்பாவித் தமிழ்ப் பெண்களுக்கு பேய்பிடித்ததாகவும் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதாகவும் மன நலம் பாதிக்கப்பட்டதாகவும் சான்று  வழங்கிய வைத்திய தரப்பினர் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 
 
 
இது குறித்து பிரதானமாக பிரான்சின் பாரிஸ் பகுதியில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பாரிசில் ஒரு மன நல வைத்திய நிபுணர் வந்திருந்ததாகவும் அவரா இந்தப் பெண்கள் குறித்தும் கருத்து வெளியிட்டு இருந்தார் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். உண்மையில் அவரா? இவர?; என்பதனை எம்மால் உறுதிப்படுத்த முடியாது என்றாலும் இதனை வாசகர்களிடம் விட்டு விடலாம் என்பதனாலும் இந்தக் கேளிவிகளுக்கு அவரே பதில் வழங்க முடியும் என்பதனாலும் இந்த விடயம் ஒரு தகவலாக இங்கு வெளியிடப்படுகிறது. வைத்திய கலாநிதியின் பதில் கிடைக்குமிடத்து அவை எந்தவித தணிக்கையும் இன்றி பிரசுரிக்கப்படும்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன் 6ல் இருந்து 9 மாதம் இருக்கலாம் என தெரிவித்த அவர் பாரிசில்; சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாகவும் அந்த சந்திப்பை இலங்கை அரசாங்கத்தின் போருக்கு பின்னரான நல்லிணக்கத்தை ஆதரிக்கும் தரப்பினர் ஏற்பாடு செய்ததாகவும் அதில் போருக்கு பின்னரான இலங்கைச் சூழல் குறிது விளக்கிய பிரதான கருத்தாளராக மனநல மருத்துவ நிபுணர் வைத்தியகலாநிதி சிவதாஸ் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார். 
 
அந்தக் கலந்துரையாடலில் புலம்பெயர்ந்த மக்கள் போருக்கு பின்னரான வடகிழக்கை கட்டியெழுப்ப உதவவேண்டும் என்ற தொனிப்பொருளில் இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சாதகமான கருத்தை தெரிவித்ததாகவும் குறிப்பட்டார்.
 
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்விக்கு உள்ளாக்கும் எவருக்கும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த அவர் வேலனை நண்பர்கள் எனக் கூறப்பட்ட சிலரே இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கலந்துரையாடலை நடத்தியதாக கூறினார். 
 
இதன் பின் பகிரங்க கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்வதங்கு ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட போது அதற்கு அவர்கள் இணங்கவில்லை எனவும் பிரான்சின் பரிஸ் பகுதியைச் சேர்ந்த அவர் குறிப்பிட்டார்.
 
இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு வைத்திய கலாநிதி சிவதாஸிடம் அவர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
 
1) கடந்த சில மாதங்களுக்கு முன் பிரான்சின் பாரிஸ் நகருக்கு நீங்கள் விஜயம் செய்தீர்களா?
 
2) அவ்வாறாயின் இந்த விஜயம் தனிப்பட்ட விஜயமா? உத்தியோகபூர்வ விஜயமா?
 
3) உத்தியோகபூர்வ விஜயம் ஆயின் ஏற்பாடு செய்தவர்கள் யார்?
 
4) தனிப்பட்ட விஜயமாயின் இரகசியமாக இடம்பெற்ற கலந்துரையாடலின் நோக்கம் என்ன?
 
5) இது ஒரு இரகசிய கலந்துரையாடல் இல்லாவிடின் மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பிற்கு காரணம் என்ன? 
 
6) உங்களை அழைத்த மற்றய தரப்பினரது பகிரங்க கூட்டத்திற்கான அழைப்பை  உங்கள் ஏற்பாட்டாளர்கள் நிராகரித்தமைக்கு காரணம் என்ன?
 
7) இலங்கையின் வடக்கு கிழக்கில் உங்களைப் போல் புகழ் பெற்ற உங்களையும் விட வயது முதிர்ந்த அல்லது உங்களை வழிநடத்திய மன நல வைத்தியர்கள் பலர் இருக்கும் போது உங்களை மட்டும் படையினர் தொடர்பு கொள்ளக் காரணம் என்ன?
 
8) பெண்கள் குறித்த விடயமாக இருந்த போதும் சுயாதீனமான பெண் வைத்திய நிபுணர்கள் அழைக்கப்படாமைக்கு காரணம் என்ன? 
 
9) இந்தப் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களையே பார்வையிட அனுமதிக்காத போது? பெண்கள் நலம் பேணும் அமைப்புகளின் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படாதபோது? சமூகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் அனுமதிக்கப்படாத போது உங்களை மட்டும் படையினர் அனுமதித்ததன் காரணம் என்ன? 
 
10) இலங்கையின் இராணுவ வரலாற்றில் இத்தகைய பாரிய பிரச்சனைகள் ஏற்படும் போது அவர்களது உள நலன் கருதி குறிப்பிட்ட சில காலத்திற்கு அவர்களின் வீடுகளுக்கு விடுமுறையில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த நடைமுறை இவர்கள் விடயத்தில் செல்லுபடியற்றமைக்கு காரணம் என்ன?
 
11) உங்கள் மூலம் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வதனை விடுத்து அந்தப் பெண்களே தமது பெற்றோரிம் சென்று தமது உளப் பிரச்சனைகளை முறையிட்டு தாம் முழுமையான விருப்பத்திற்கு இணங்கவே படையில் இணைந்ததனை ஊடகங்களுக்கும் சொல்லி இருக்க முடியுமே அதற்கு படையினர் ஏன் அனுமதிக்கவில்லை?
 
12) தொட்டதெற்கெல்லாம் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹெகலிய றம்புக்வெல மூலம் ஊடக மகாநாட்டில் விளக்கம் கொடுக்கும் அரசாங்கம் உங்களின் மூலம் குறிப்பிட்ட ஊடகங்களை தெரிவு செய்து  கருத்துக் கூறாமல் அந்தப் பிள்ளைகளின் பெரோருடன் இணைந்து பொதுவான ஊடக மகாநாட்டை நடத்தியிருக்கலாமே?
 
என்ற பலகேள்விகளுக்கு வைத்திய நிபுணர் சிவதாஸிடம் இருந்து பாரிஸைச் சேர்ந்த அவர் பதிலை எதிர்பார்க்கின்றார்.
 
 
 

 

அந்த பரிசை சேர்ந்த அவர் யார்?

 

இளம் பெண்களுக்கு கூட்டாக  பே(பொ)ய் பிடிக்குமா?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
என்னுடைய கட்டுரை உங்கள் இணையத்தளம் மூலம் பிரசுரமானது கண்டு அதிர்ச்சியடைந்தேன் -
29 டிசம்பர் 2012
 
 

மனநல மருத்துவர் சிவதாஸின் பதில்-

 

Sivathas_CI.jpg

 

நான் வீரகேசரியின் வார இதழுக்கு (30.12.2012) எழுதிய திருத்தப்படாத என்னுடைய கட்டுரை உங்கள் இணையத்தளம் மூலம் பிரசுரமானது கண்டு அதிர்ச்சியடைந்தேன். எனது நண்பனொருவரிடம் பிழைதிருத்தத்திற்காக அனுப்பப்பட்ட மூலப்பிரதி எனது முன்னனுமதியின்றி உங்கள் இணைய தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிரான எனது கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மூத்த பத்திரிகையாளன் தலைமையில் இயங்குகின்ற இணையத்தளம் ஒன்றில் இத்தகைய செய்திகள் வெளிவந்தமை அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

 

அடுத்து உரிமை கோரப்படாது என்மீது பொய்யான அவதூறு செய்யும் கேள்விகளை பிரசுரித்தமை எனக்கு மிகவும் வருத்தத்தையளிக்கின்றது. எனது அனுமதியின்றி பிரசுரிக்கப்பட்ட கட்டுரையில் எனது மின்னஞ்சல் முகவரி இருந்ததை இங்கு சுட்டிக்காட்டி அதனூடு இவற்றை பிரசுரிக்கும் முன்பு நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை தவிர்த்து இவற்றை பிரசுரித்தது வேதனையளிப்பதுடன், அவர்களது நோக்கத்தினை கேள்விக்குறியாக்குகிறது. என்னுடன் பிரசுரிப்பதற்கு முன்பு நேரடியாக தொடர்பு கொண்டு கருத்து கேட்டிருந்தால் எனது கருத்துக்களும் ஏககாலத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் என்மீது வீசப்பட்ட களங்கத்தினையும் எனக்கு தனிப்பட்ட ரீதியிலேற்ப மன உளைச்சல்களையும் தவிர்த்திருக்க முடியும்.

 

சிலர் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கும் எவ்வித ஆதாரமற்ற அபாண்டமான கருத்துக்களுக்கு பதிலளிக்க தேவையில்லை. சமூகத்தில் எந்தவித களப்பணியுமாற்றமாமல் இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் 'சமூகச்சேவை' நடத்திக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் பதிலளித்து என்னை தாழ்மைபடுத்திக்கொள்ள தேவையில்லை. என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இம்முறை மட்டும் பதிலளிக்க முன்வருகிறேன். இதன் பின்பும் சந்தேகம் தீராதவர்கள் என்னுடைய மின்னஞ்சல் முகவரியினூடு தொடர்பு கொண்டு அதனை தீர்த்துக் கொள்ளலாம்.

 

நான் பரிஸ் இற்கு 2011 சித்திரை மாதம் விஜயம் செய்திருந்தேன். பிரான்சில் இயங்குகின்ற வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கிளை ஒழுங்கு செய்திருந்த அச்சங்கத்தின் 19வது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். இக்கூட்டத்திற்கு வேலணையைச் சேர்ந்த மூன்று அதிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர் ளு.P.சாமி, வித்துவான் வேந்தனாரின் கடைசி மகனும் என்னுடன் அழைக்கப்பட்டிருந்தனர். நான் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்காத போதிலும் எனது தகப்பனாரின் ஊரானதால் எனக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 04.04.2011 நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நான் சிறப்புரையை ஆற்றியிருந்தேன். தனது நெருங்கிய உறவினர் சுகயீனமுற்றமையினால் ளு.P சாமி அவர்கள் இதில் கலந்துகொள்ள முடியவில்லை. பரிசில் தங்கியிருந்த இரு வாரங்களிலும், வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், எனது நெருங்கிய உறவினருமான திரு.மகேந்திரன் அவர்களது வீட்டிலே தங்கியிருந்தேன். எனது பயண ஒழுங்கினையும், இரு சந்திப்புக் கூட்டங்களையும், இரண்டு ஆலயங்களின் ஆத்மீக சொற்பொழிவினையும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளையே மேற்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கான அழைப்பு, இடம், உணவு என்பவற்றையும் அவர்களே ஒழுங்கு செய்திருந்தனர். அதில் கலந்துகொண்ட எவருமே எனக்கு முன்பின் அறிமுகமாகாதவர்கள். எனது நூல் பற்றியும், மற்றைய இலக்கிய முயற்சி பற்றியும், வன்னிப் பெரு நிலப்பரப்பில் செய்கின்ற உளச்சமூகப் பணிகள் பற்றியும் மட்டுமே கலந்துரையாடப்பட்டது.

 

போருக்குப் பிந்திய அரசியல் நிலைமை பற்றியோ மீள் நல்லிணக்கம் பற்றியோ எதுவுமே கலந்துரையாடப்படவில்லை. இது பற்றிய முழுவிபரத்தையும் இன்னமும் பிரான்ஸில் இயங்கிக் கொண்டிருக்கின்ற வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம்.

 

நான் 2009 மே 25 தொடக்கம் வவுனியா பொதுவைத்தியசாலையில் மனநல மருத்துவ நிபுணராக கடமையாற்றி வருகின்றேன். இன்று வரை வன்னிப் பெருநிலப்பரப்பில் கடமையாற்றுவதற்கு எந்த ஒரு மனநல மருத்துவ நிபுணரும் முன்வரவில்லை. இதனால் செட்டிகுளம் நலம்புரி முகாம்களிலும், வவுனியாவின் புனர்வாழ்வு முகாம்களிலும் கடமையாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் எந்த ஒரு மனநல மருத்துவ நிபுணரும் தங்கியருந்து வேலை செய்வதற்கு முன்வராததால் அப்பிரதேசங்களிலும் உளச்சமூகப்பணியை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டது. எத்தனையோ தடவை உயரதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் யாருமே முன்வராத காரணத்தினால் இந்தப் பணிகளை மிகுந்த சிரமத்துடன் மேற்கொண்டு வருகின்றேன். இதன் போது நான் பல நெருக்கடிகைள எதிர்நோக்க வேண்டிய ஏற்பட்டது. இதில் முக்கியமாக புனர்வாழ்வு முகாம்களில் இருந்து வந்த சில நூறு முன்னாள் போராளிகளிற்கும் எமது வவுனியா மனநலப்பிரிவு சேவையை வழங்கியது. இதில் பலரிற்கு நான் வழங்கிய மருத்துவச் சான்றிதழ்கள் நீதிமன்றத்தினூடாக விடுதலைக்கு உதவியதால் எம் நிறுவனத்தின் மீது இராணுவத்தினர் சந்தேகம் கொண்டனர். நான் பணம் வாங்கிக் கொண்டு இத்தகைய சான்றிதழ்களை வழங்கியதாக இராணுவ அதிகாரிகள் குற்றஞ்சாட்டியதை அறிந்து வேதனையுற்றேன். பல முன்னாள் போராளிகளின் உறவினர்கள் வைத்தியசாலை வருவதற்குரிய போக்குவரத்துச் செலவினையும் எமது நிறுவனமே பொறுப்பேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய அச்சமான சூழ்நிலையினையும் எதிர்கொண்டு இன்னமும் அந்தச் சேவையை செய்து வருகின்றோம்.

 

என்னால் அனுமதிகோரி முன்மொழியப்பட்ட வன்னிக்கான உளச்சமூகப் பணித்திட்டம் வடமாகாண ஆளுனரால் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வன்னி உளச்சமூக இணையம் 2010இல் கலைக்கப்பட்டது. உளச்சமூகப் பணிக்கான வெளி மிகக்குறைந்தளவிலேயே எமக்கு வழங்கப்பட்டது.

 

இப்பொழுது என்மீது அரசாங்கத்தின் சார்பாகவும், இராணுவத்தின் சார்பாகவும் நடந்துகொள்வதாகவும் சிலர் ஆதாரமற்றுக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் சிலரைப் பரிசோதித்த பின்பு நான் வெளியிட்ட அறிக்கையே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. நான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிடவேண்டி ஏற்பட்டது அந்த அப்பாவிப்பெண்களின் பொய்யான களங்கத்தை அகற்றவேண்டிய தார்மீகப் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலையோ, இராணுவமோ இவ்வாறு அறிக்கை விடும்படி கோரவில்லை. இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்களே தங்களது உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

 

அவர்களது களங்கத்தை நீக்குவதற்காகவே அவசரமாக அந்த அறிக்கையை வெளியிட்டேன். அதற்குமுன் அவர்களிடம் நேரடியாகவும் மற்றைய வழிகளிலும் நிலைமையின் தாற்பரியத்தை அறிந்து கொண்டேன். இந்தப் பெண்கள் தாங்கள் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பதை மறுத்துரைக்கும் நிலையில் அவர்களை ஒரு பெண்ணியல் மருத்துவரிடம் அனுப்பவேண்டிய தேவை எழுவில்லை. அத்துடன் எல்Nலூரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்த காரணத்தினால் அவர்களது அனுமதியின்றி அவர்களை பரிசோதிக்க முடியாது என்பது மருத்துவ விதியாகும். அதையும் மீறி அவர்கள் பரிசோதிக்கப்பட்டிருந்தால் அது அவர்களது உரிமையை மீறுவதாகவே அமையும் என்பது பொது மருத்துவ விதியாகும். வெறும் முகங்களுக்காக அவர்களின் அனுமதியின்றி இதைச் செயற்படுத்த முடியாது என்பதை பல மருத்துவர்களுக்கும் புரியாமல் போனது கவலையளிக்கின்றது. 

 

கிளிநொச்சி வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேண்டுகோளிற்கமைய அப்பிரதேசத்தின் மனநல மருத்துவ நிபுணராக எந்த நிபந்தனையோ, நிர்ப்பந்தங்களோ இன்றி அந்தப் பெண்களைப் பார்வையிட்டு அவர்களுக்குரிய சிகிச்சையினை மனநல மருத்துவ வரம்புகளுக்குட்பட்டு செய்துள்ளேன். நான் இதற்கு மறுத்துரைத்திருந்தால் அவர்கள் அங்கொடை வைத்தியசாலைக்கு அல்லது வேறு மனநல வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு மனநோயாளர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். உண்மையில் இவர்களுக்கு தீவிரமான மனநோய் எதுவும் இல்லை என்பதும், எமது கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த இசிப்பு நோய் (ர்லளவநசயை) எனப்படும் மனநலப் பாதிப்பால் ஏற்படுகின்ற ஒரு வித பிரஞ்சை மாற்றநிலைமையே இதற்குக் காரணமாகும். எனது முந்தைய அனுபவங்களுடாக இதனை இலகுவாகக் கண்டறிந்து எளிய முறையில் சிகிச்சை அளித்துள்ளேன். நான் எனது மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செய்த ஒரு உன்னதமான பணி கொச்சைப்படுத்தப்பட்டள்ளது. இதனால் நான் மிகவும் மனவேதனை அடைகின்றேன். இது என்னால் வன்னிப்பெருநிலப் பரப்பினுள் மேற்காள்ளப்படுகின்ற பல உளச்சமூகப் பணிகளின் நம்பகத்தன்மையைப் பெருமளவில் பாதிக்கக்கூடியது. இதனால் இனிவரும் காலங்களில் மருத்துவமனையை மையப்படுத்திய மனநல மருத்துவச் சேவையுடன் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இனிவரும் காலங்களில் வன்னிக்கான உளநல சமூகப் பணிகளை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளேன் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஏலவே உளச்சமூகப் பணிக்கான வெளி குறைந்துள்ள நிலையில் பலமான ஒரு ஆதரவுமற்ற நிலையில் இதைவிட வேறுஎந்த முடிவுக்கும் செல்லமுடியாமல் உள்ளது. யாருக்கும் பயந்து நான் இந்தப் பணியிலிருந்து விலக யோசிக்கவில்லை. ஆனாலும் நம்பகத்தன்மை இழக்கப்படுகின்ற ஒரு சூழலில் ஆரோக்கியமாக உளச்சமூகப் பணியினை மேற்கொள்ள முடியாது என்ற உண்மையை உணர்ந்து எனது தற்போதைய பதவிக்காலம் முடியும்வரை வவுனியா வைத்தியசாலையை மையப்படுத்திய மனநல மருத்துவ சேவையை மட்டுமே வழங்குவதென முடிவெடுத்துள்ளேன்.

 

நலமுடன்

எஸ்.சிவதாஸ்

29.12.2012

 

 வாசகர்கள் நலன் கருதி உங்களை நோக்கி எழுப்பப்பட்ட பகிரங்க கேள்விகள் தொடர்பான கட்டுரை இணைப்பும் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது. கேள்விகளையும் பதில்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் வைத்தியர் சிவதாஸ் ...

29 டிசம்பர் 2012
 
 

 

pen_CI.jpg

 

அன்புடன் வைத்தியர் சிவதாஸ் 

 

நான் கூற நினைத்ததை சொலமன் சொல்லி இருக்கிறார்.  

 

உண்மையில் நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டை அங்கீகரித்தால் விக்கிலீக்ஸ் மீது அமரிக்கா வைக்கும் குற்றச்சாட்டு நியாயமானது.  இலங்கை அரசாங்கம் ஊடகங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானது.  காரணம் விடயம் சரியாக இருந்தாலும் ஊடகங்களின் கெட்டித்தனங்களால் வெளிவருவதும்போது அவை அனுமதியில்லாமல் பிரசுரித்து விட்டார்கள். திருடிவிட்டார்கள் எனக் குற்றம் சுமத்துவது.

 

இங்கே நீங்கள் கட்டுரை எழுதியது உண்மை. அதனை பிரசுரிக்க அனுப்ப இருந்தது உண்மை. வீரகேசரிக்கு அனுப்ப இருந்த கட்டுரை குளோபலில் பிரசுரமானது தான் உங்கள் பிரச்சனையா?

 

இல்லை பகிரங்க கேள்விகளை கேட்காமல் கட்டுரையை தனியே பிரசுரித்திருந்தால் என்னை நோக்கி இந்தக் கண்டனத்தை எழுப்பி இருப்பபீர்களா? 

 

காரணம் முன்னர் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண்கள்  குறித்து ஊடகங்களுக்கு நீங்கள் வழங்கிய செவ்வியை நீங்கள் எமக்கு அனுப்பாத போதும் நான் குளோபல் தமிழ்ச் செய்திகளில் பிரசுரித்திருந்தேனே  அப்போது ஏன் குளோபலில் பிரசுரித்தீர்கள் என நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ உங்களை ஆதரிப்பவர்களோ கண்டிக்கவில்லையே? 

 

பகிரங்க கேள்விகளை இணைத்திருக்கா விட்டால் இப்போதும் கண்டித்திருக்க மாட்டீர்கள்.

அடுத்து நான் ஏற்கனவே கட்டுரையின் மேல் குறிப்பிட்டு இருக்கிறேன். இது மின் அஞ்சலில் எனக்கு அனுப்பப்பட்ட கட்டுரை என. நீங்கள் அனுப்பியதாக எங்கும் குறிப்பிடவில்லை. ஏற்கனவே எமக்கு செய்திகள் கட்டுரைகள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் அனுப்பாமல் போவேட்(FWD) பண்ணுவது வழக்கம். இன்று கூட உங்கள் கட்டுரை குளோபல் கிராபிக்ஸ் என்ற ஒரு முகவரியின் ஊடாக வந்து பின் நீங்கள் எனக்கு அனுப்பியுள்ளீர்கள். அவ்வாறு வருகின்ற மூலம் எமக்கு நம்பிக்கை தரும் மூலமாகவும் விடயம் உண்மையாகவும் இருந்தால் அவற்றை பிரசுரிக்கிறோம். 

 

மூலத்தை குறிப்பிட்டு அனுப்பினால் உதாரணமாக வீரகேசரி என வந்தால் அதனை அடிக்குறிப்பிட்டு பிரசுரிப்போம்.

 

உண்மையில் இந்தக் கட்டுரைத் தலைப்பை கூகுள் சேச்சில் போட்டு தேடினேன் இணையங்களில் பிரசுரமாகத கட்டுரை என ஓரளவு உறுதிப்படுத்திய பின்பு அதனை பிரசுரித்தேன். ஆனால் அதில் ஒரு எழுத்தையாகினும் மாற்றி இருக்கிறேனா என்பதுதான் முக்கியம். அப்படியே பிரசுரித்திருக்கிறேன். கட்டுரையில் திருத்தம் செய்ததாக மாற்றியதாக நீங்கள் குறிப்பிடவில்லையே? 

 

பிரச்சனை உங்களிடம் கேட்கவில்லை என்பதே? 

 

உண்மையில் நீங்கள் பிரசுரத்திற்கென வீரகேசரிக்கு அனுப்பியபின் நன்றி வீரகேசரி என்று போட்டு பிரசுரித்திருந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? 

 

பிரசுரிப்பதற்கு என ஒரு ஆக்கத்தை தயார் செய்து விட்டால் அது மக்களை சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்திருந்தால் அது வாசகர்களுக்கு சொந்தமானது. 

 

எமது ஊடகம் இன்று மக்களின் பங்களிப்புடனான ஊடகமாக மாறிவிட்டது. அதன் வலைப்பின்னல் பலமானது. அந்த வலைப்பின்னல் பல விடயங்களை எம்மிடம் சேர்கின்றன. அவை பிரசுரிக்க தகுதியானவை என்றால் பிரசுரிக்கிறோம்.

 

இவ்வளவுக்கு பின்பும் இந்தக் கட்டுரை உங்களின் அனுமதியின்றி வெளியானது தவறு என்றால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்பதற்கு எனக்கு எந்த வெட்கமும் இல்லை. காரணம் நான் நடந்து வந்த பாதையை வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

 

ஒருகாலத்தில் தமிழ்த் தேசியத்தை புலிகள் முன்னிலைப்படுத்தியதனால் புலிகளை விமர்சித்தால் அது தமிழ்த்தேசியத்தை விமர்சிப்பதாகவும் துரோகத்தனம் எனவும் துரோகப்பட்டம் சூட்டப்பட்டது. 

அதுபோல் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்களின் பிரச்சனையின் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியல் தொடர்பில் பகிரங்கக் கேள்வி கேட்டால் அது நம்குலப் பெண்களைத் துகிலுரிவது என்கிறார்கள் சிலர், தமிழ்பெண்களை மானபங்கப்படுத்துகிறார்கள் என நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் சிலர். 

 

இவர்கள் எல்லோரும் - எத்தனை ஆயிரம் பெண்கள் துடிதுடிக்க பதைபதைக்க மானபங்கப்படுத்தப்பட்டபோது மௌனித்திருந்தார்கள். இப்போ கூட உங்களை வைத்து அரசியல் செய்யும் இவர்களால், புலிப் பூச்சாண்டி காட்டிய இவர்களால், புலிபோய் 3 வருடங்களின் பின்னும் இபோதும் புலி பற்றிப் பேசியே தமது அரசியல் செய்யும் இவர்களால் அரச படையினரும் அரசாங்கமும் செய்யும் அக்கிரமங்களை ஒரு சொல்லில் ஆவது மென்மையாகக் கண்டிக்கத் துணிவிருக்கிறதா?

 

இங்கு குளோபல் தமிழ்ச் செய்திகளின் அனைத்து விடயங்களையும் பின்னோக்கிச் சென்று பாருங்கள். இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் குறித்தோ அல்லது அது தமிழ்ப் பெண்களா? சிங்களப் பெண்களா? இஸ்லாமியப் பெண்களா என்பதற்கு அப்பால் பாலியல் பலாத்காரம் தொடர்பாக பெண்களின் பிரச்சனைகள் தொடர்பாக செய்திகள் கட்டுரைகளைப் பிரசுரிக்கும் போது நாம் எவ்வளவு அவதானமாக இருந்திருக்கிறோம் என்பதனை? இங்கு குளோபல் பகிரங்க கேள்விகளாக முன்வைத்தவை இராணுவத்தில் இணைக்கப்பட்ட  இந்தப் பெண்களின் பின்னால் தொழிற்படும் அரசியல் என்ன என்பதனை கேளிவிக்கு உள்ளாக்குவதே தவிர அவர்களை துகிலுரிவது அல்ல. இந்தப் பெண்கள் எந்தவிதமான அவப்பெயருக்கும் பலியாகக் கூடாது என்பதுவே எமது முழுமனதான பிரார்த்தனை. அதற்காக இந்த அப்பாவிப் பெண்களின் பின்னால் தொழிற்படும் அரசியலை கேள்விக்கு உள்ளாக்குவதனை  தவிர்க்க வேண்டும் என ஊடகங்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது சாத்தியமற்றது.

 

இதேவேளை பாரிஸில் இருந்து எழுதியவர் யார் என சிலர் கேட்கிறார்கள்  அவ்வாறு கேட்ட ஒருவர் தனது தொலைபேசி இலக்கத்தை மறைத்து தொலைபேசியில் அழைத்து புனைபெயரைக் கூறி என்னிடம் கேட்கிறார். ஆனால் எனது தொலைபேசி, பெயர், மின் அஞ்சல் முகவரிகள் வெளிப்படையானவை. தொலைபெசி இலக்கத்தை மறைத்து உங்களுக்காக நியாயத்தை கேட்க முனையும் ஒருவருக்கு தனது பாதுகாப்பு எப்படி முக்கியமோ? கட்டுரையை எனக்கு அனுப்பியவர் எனக்கு தமது அபிப்பிராயங்களை அனுப்புபவர்களது பாதுகாப்பும் அவ்வாறே முக்கியமானது. இங்கு கேளிவிகள் கேட்பவர்கள் யார் என்பது முக்கியம் அல்ல கேள்விகள் சரியா? அந்தக் கேள்விகளுக்கான பதில் என்ன என்பதுதான் முக்கயம்.

 

பொதுத் தளம், சமூக சேவை, ஊடகம் என வந்தால் விமர்சனங்களை - கேள்விகளை - விவாதங்களை சகிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் மற்றும் எவரும் கேள்வி கேட்கக் கூடாது அது மனசை காயப்படுத்தி விட்டது என்றால் இதைத் தானே புலிகளும் சொன்னார்கள். இதைத்தானே மகிந்தவும் அவர் சகோதரர் கோத்தாபயவும் சொல்கிறார்கள். 'எனக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக ஊடகங்கள் சேறடிக்கின்றன சேறு பூசுகின்றன" என அண்மையில் கோத்தாபய சொன்னார்.

 

இறுதியாக இந்தப் பாரிஸ் கூட்டம் தொடர்பில் நீங்களே உங்கள் வாக்குமூலத்தை முன்வைதிருக்கிறீர்கள். அதற்கு முகநூலில் எனக்குத் தெரயாத விடயங்களுடன் சூடுபறக்கும் விவாதம் போகிறது. அதுபற்றி நான் மேலும் எதனையும் கூறவிரும்பவில்லை. பாரிஸில் இருந்து மேலதிக தகவல்களை உரியவர் எழுதினால் பிரசுரிக்கிறேன்.

 

உண்மையுடன்

குருபரன்

 

 

பாலன் என்பவர் உங்கள் கூட்டம் தொடர்பில் தனது அபிப்பிராயத்தை தெரிவித்திருக்கிறார். அதனை இங்கு இணைத்திருக்கிறேன்.

 

 

வாசகர்கள் நலன் கருதி உங்களை நோக்கி எழுப்பப்பட்ட பகிரங்க கேள்விகள் தொடர்பான கட்டுரை இணைப்பும் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது. கேள்விகளையும் பதில்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

 

 //எனது பயண ஒழுங்கினையும், இரு சந்திப்புக் கூட்டங்களையும், இரண்டு ஆலயங்களின் ஆத்மீக சொற்பொழிவினையும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பிரான்ஸ் கிளையே மேற்கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கான அழைப்பு, இடம், உணவு என்பவற்றையும் அவர்களே ஒழுங்கு செய்திருந்தனர். அதில் கலந்துகொண்ட எவருமே எனக்கு முன்பின் அறிமுகமாகாதவர்கள் // 


எஸ்.சிவதாஸ் அவர்களுக்கு , வேலனை மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் பற்றிய உங்கள் தெரிவிப்பு உங்களை ஒரு பரிதாபத்திற்குரியவராக காட்டுகின்றது. உங்களுடைய இக் கட்டான இலங்கை சூழலை புரிந்துகொள்ள முடிகின்றது. இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் பற்றிய உங்கள் சமூக அக்கறை பாராட்டப்படவேண்டியது. அதே நேரம் இந்த சமூக அக்கறை கொண்ட உங்களை இலங்கை அரசு தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொண்டது. இதுதான் உண்மை. இதைப்பற்றி தொடர்ந்து பேசுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

சிவதாஸ் அவர்களே பரிசில் நீங்கள் இரண்டாவதாக கலந்துகொண்ட ‘’குறிப்பிட்ட ஆட்கள்’’ மாத்திரம் கலந்துகொண்ட கூட்டம் பற்றியே உங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இக் கூட்டத்தில் கலந்கொண்ட அனைவருமே இலங்கை அரசின் ஆதரவாளர்கள்.அவர்களாலேயே இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது. இலங்கை அரச எதிர்பாளர்கள் எவருமே இங்கு அழைக்கப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

BALAN

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87072/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.