Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தக் கொலையாளியைவிட, அந்த மலையாளி எவ்வளவோ மேல். பொங்கியெழுந்த சீமான்

Featured Replies

னைத்து நாடாளுமன்றத் தொகுதி​களிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்து​விட்டது. தி.மு.க-வினரோ திறந்தவெளி அரங்கில் மாநாடுபோல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். பா.ம.க. சாதிச் சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து​வருகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூரத்தில் இருக்க... அதைஅடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. இதற்காக பம்பரமாய் தமிழகம் முழுவதும் சுழல்கிறார் சீமான். 

'இனத்துக்காக உழைத்திட்ட தந்தை பெரியாருக்கும், ஈழத்துக்காக உழைத்திட்ட டாக்டர் எம்.ஜி.ஆருக்கும் வீர வணக்கப் பொதுக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரமாண்டக் கூட்டத்தை நடத்தினார்கள் நாம் தமிழர்கள்.

 

 

தந்தை பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் தியாகங்களை எல்லாம் பட்டியல்போட்டுக் காட்டிய சீமான், ''நாங்கள் ஏதோ பெரியாரின் கொள்கை​களுக்கு எதிரானவர்கள் என்பதுபோல் பேசுகிறார்கள். உண்மையில் பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது நாங்கள் மட்டும்​தான். சாதி அடையாள மறுப்பு என்பதையெல்லாம் நாங்கள்தான் இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். எம்.ஜி.ஆரை மலையாளி என்று சொல்லியே எங்களை வளர்த்தார்கள். கருணாநிதி எங்கேயாவது வருகிறார் என்றால், அடித்துப்பிடித்து ஓடிப்போய் முன்னால் நின்றவன்தான் நானும். கருணாநிதி என்று எவனாவது பெயரைச் சொல்லிவிட்டால், அவனிடம் சண்டை போட்டு கலைஞர் என்று சொல்லவைப்பேன். ஆனால் ஈழத்தில் நடந்த இன அழிப்புக்குச் சாட்சியாய் மாறிய இந்தக் கொலையாளியைவிட அந்த மலையாளி எவ்வளவோ மேல் என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது'' என்று பொங்கியவர், தாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வோம் என்பதையும் சொன்னார்.

 

 

 

''இப்போது சமச்சீர் பாடத் திட்டம்தான் அமலில் இருக்கிறது. சமச்சீர்க் கல்வி இல்லை. ஒரே பாடத் திட்டத்தை தனியார் கல்வி நிலையங்​களில் வேறு மாதிரி சூழ்​நிலையிலும், அரசு பள்ளிகளில் வேறு மாதிரிசூழ்நிலை​​யிலும்தான் மாணவர்​கள் படிக்கிறார்கள். அங்கே ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியர், காற்றோட்​டமான வகுப்பறை, போதிய கழிவறை என்று அனைத்து வசதிகளோடும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளில், எல்லாப் பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர், பள்ளிக்கு வெளியே திறந்தவெளிக் கழிவறை, வசதி இல்லாத வகுப்பறை என்றுதான் இன்னமும் இருக்கிறது. இந்த வேறுபாடுகளைக் களைந்து எங்கும் ஒரே மாதிரியான சமச்சீர்க் கல்விமுறையைக் கொண்டுவரப்போவது மாற்று அரசியல் சக்தியான நாம் தமிழர் இயக்கம்தான். அதே​போல் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும் என்ற சட்டம் இப்போது பெயரளவில்​தான் இருக்கிறது. அதாவது தமிழ் உச்சரிப்பு மட்டும் இருக்கிறது; தமிழ் வார்த்தைகள் இல்லை. ஃபாஸ்ட்ஃபுட் என்பதை, அப்படியே தமிழில் எழுதுகிறார்கள். விரைவு உணவகம் என்று தூய தமிழில் எழுதுவது இல்லை. அதையும் கட்டாய​மாகச் செய்துமுடிக்கப்போவது இந்த இயக்கம்தான்.

 

சாதிவாரிப் பிரதிநிதித்துவம் கட்டாயம் வேண்​டும். ஒரு விவசாயிக்குத்தான் எந்தப் பயிருக்கு உரம் வேண்டும், எந்தப் பயிருக்குத் தண்ணீர் வேண்டும் என்பது புரியும். அப்படித்தான் எந்தச் சாதிக்கு உடனடியாக சலுகை தேவையோ, அதற்குத்​தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று முழங்கியவர் இறுதியாக அடித்தார் ஒரு பஞ்ச்... அது ''வந்தாரை வாழவைப்போம், நம்மவரை ஆளவைப்போம்!''

 

 

நன்றி ஜூனியர் விகடன்.

 

 

வீரவணக்க பொதுக்கூட்டத்தில் பேசும் சீமானின் படம் பார்க்க....

சாதிவாரிப் பிரதிநிதித்துவம் கட்டாயம் வேண்​டும். ஒரு விவசாயிக்குத்தான் எந்தப் பயிருக்கு உரம் வேண்டும், எந்தப் பயிருக்குத் தண்ணீர் வேண்டும் என்பது புரியும். அப்படித்தான் எந்தச் சாதிக்கு உடனடியாக சலுகை தேவையோ, அதற்குத்​தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்''.

It seems he is talking the same language as Dr.Ramdoss. Leaders like Seeman, Ramdoss etc joining hands is not a bad idea for Tamils.

 

தமிழகத்தில் அதிகமான மக்கள் பாமர மக்கள்.

எனவே ஆட்சியை கைப்பற்றி மக்களுக்கு நேர்மையாக சேவை செய்ய விரும்புவர்கள் இவர்களின் மனத்தை வெல்லவேண்டும். எனவே அதை இலக்கு வைத்து சீமான் போன்றவர்கள் காய்களை நகர்த்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜீ. ஆர். மலையாளி, கருணாநிதி ஆந்திரத் தெலுங்கு, ஜெயலலிதா கன்னடம் என்றால்... பிழையாரிடம் உள்ளது.
முதலில்... சினிமாவை, மூட்டை கட்டி வைத்துவிட்டு... தமிழ்நாட்டுக்கு, ஒரு தமிழனை முதலமைச்சராகத் தெரிவு செய்யுங்கப்பா...

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

தமிழன்,தெலுங்கன்,மலையாளி,கன்னடன் என முதலமைச்சரை தேர்ந்தெடுக்க ஜாதி,மதம்,இனம், மொழி முதலியவற்றை விட மக்களுக்கு சேவை செய்யும் நல்ல உள்ளம் கொண்டவனை தேர்ந்தெடுத்தால் போதும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுக் கோடி தமிழர் வாழும், தமிழகத்தில்... நல்ல தமிழ் முதலமைச்சரை கண்டுபிடிக்க.. முடியாலுமள்ளது தான், கஸ்ரமாய் இருக்கு. ஹ்ம்ம்.... எல்லாம்.... தலைவிதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.