Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 இல் இலங்கையில் அரபு வசந்தம்?

Featured Replies

'இலங்கையில் நீதித்துறைக்கும் சட்டவாக்கத் துறைக்கும் இடையிலான பிரச்சினைகள் உட்பட ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகளும் தொடர்ந்தால், அது ஒரு அரபு வசந்தத்துக்கு இட்டுச் செல்லலாம்' என்று ஆய்வாளர்கள் கூறுவதாக மூத்த பத்திரிகையாளரான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121231_anandaudio.shtml

  • தொடங்கியவர்

A call for popular outrage

 

Some people are angry that no real protest develops in the streets of Lanka. The incidents that have taken place thus far ought to have awakened the just wrath of the people, they say. Enough has taken place to rouse the masses to practical actions against tyranny. Some go to the edge of pessimism and say that Lankans have rulers of this nature at the helm, because they deserve them. Others, alienated from the suffering of the people, wait patiently, fiddling and smacking their lips: They could be waiting for their chance to do the same as the Rajapaksas.

 

It is also very common to blame the opposition for inaction. They ask whether any of the present representatives of the people will come out to join the public to protest. In the end, they blame Ranil for inaction.


Clearly these opinions are far from the truth. It is true that Lankan society was totally submerged in chauvinism and irrational faith in the Mahinda regime for the last three years. The government got away with many mistakes and corrupt practices due to this particular situation. People were tolerant of the man who claimed to have defeated evil and promised to drive the country towards prosperity and success. Even the urban, working class that usually mistrusts promises of the bourgeoisie was prepared to accept this version of the regime and to follow a non-confrontational policy towards the government.


It is true that if the public fails, there is no point in blaming this one and that one. Under the dopamine of chauvinism, almost all our parliamentarians (government and opposition) have become insincere, selfish, greedy and unsympathetic hypocrites. Continuous adherence to or tolerance of false stories have reduced these welfare workers to become complete hypocrites.

 

http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=article&id=402:a-call-for-popular-outrage&catid=53:vickramabahu-karunaratne-column&Itemid=79

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் என்றுமே தாமாகக் கூடுவதில்லை. ஒருங்கிணைப்பு அவசியம். அதைத் தடுப்பதில்தான் மகிந்த அரசு வெற்றிகண்டு வருகிறது.

  • தொடங்கியவர்

அதிகரித்து வரும் பொருளாதார சுமை ஒரு மக்கள் புரட்சிக்கு வழி சமைக்கலாம்.
இரணில் தலைமயிலான பலமில்லாத எதிர்க்கட்சியும் ஒரு மக்கள் எழுச்சிற்கு தடையாக உள்ளது.



POL-CARTOON2.jpg

  • தொடங்கியவர்

அரபு வசந்தத்தில் அமெரிக்கா – தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை

 

வறுமை, அரசுகளின் ஊழல், தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம், காவற்துறையினரின் முறைகேடுகள், தனிமனித சுதந்திரமின்மை ஆகியவை அரபு வசந்தம் எனப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. அமெரிக்க அரசும் இசுலாமியத் தீவிரவாதிகளும் வேறு முனையில் அரபு மக்களின் உண்மையான பிரச்சனையை அறியாமல் மோதிக்கொண்டிருந்தன. அமெரிக்க உளவுத் துறையோ இசுலாமியத் தீவிரவாதத் தலைமைகளோ அரபு வசந்தத்தை எதிர்பார்க்கவில்லை.

 

உலகில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் தனது பெருவிரலில் இருக்க வேண்டும் என்ற இறுமாப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ நிறுவனத்திற்கு அரபு வசந்தம் அதிலும் முக்கியமாக எகிப்தியப் புரட்சி பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

 

ஆட்சியாளர்களுக்கு எதிராக மனம் கொதித்துக் கொண்டிருந்த அரபு மக்களுக்கு துனிசியாவில் காவற்துறையைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காறி உமிழப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட மொஹமட் பௌஜிஜி தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்தமை பெரும் கிளர்ச்சி செய்யத் தூண்டியது. துனிசிய தனித்தன்னாட்சியாளர் பென் அலி பதிவியில் இருந்து விரட்டப்பட்டார்.

 

 



மனித உரிமைப் பிரச்சனை கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு

 

 

கடாஃபிக்கு எதிரான லிபிய மக்களின் கிளர்ச்சியின் போது லிபிய மக்களின் அவலத்தைக் கண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் நவி பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளை அவர்கள் சிரியாவில் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதால் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த அம்மையாரின் திருவாசகம் இப்படி இருந்தது:

“I believe the evidence points the commission of crimes against humanity.” She quoted several human rights violations that provide rationale for referral of Syria’s case to International Criminal Court, like arbitrary detention, attacks on hospitals, extreme use of artillery and killings of suspected government informants.

 

சிரியாவில் ஒரு நாளில் மட்டும் இருபத்தி ஐந்தாயிரம் பேர் கொல்லப்படவில்லை. மொத்தமாக மூன்று இலட்சம் பேர் கொல்லப்படவில்லை. எந்த ஒரு ஐநா விசாரணைக்குழுவும் சிரியாவில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் நடந்ததமைக்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. சிரியப் படையினர் பெண்களை மானபங்கப்படுத்தி மார்புகளை கத்திகளால் குதறிக் கொல்லவில்லை. சிரியாவில் காயப்பட்டவர்கள் உயிரோடு புதைக்கப்படவில்லை. சிரியாவில் சரணடையுங்கள் மறு வாழ்வு தருகிறோம் என்று சொல்லிவிட்டு சரணடைய வந்தவர்களைச் சுட்டுத் தள்ளவில்லை. ஆனாலும் சிரிய ஆட்சியாளர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் நவி பிள்ளை அம்மையார்.


அவரின் இத் துணிச்சலான கூற்றுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டு இலங்கையில் இவ்வளவு அட்டூளியங்கள் நடந்தும் அவற்றிற்கான காத்திரமான சாட்சியங்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவித்திருந்தும், டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது விசாரணை தேவை எனத் தெரிவித்திருந்த போதும், பல காணொளிப் பதிவுகள் வெளி வந்த போதும் இலங்கை ஆட்சியாளர்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நவி பிள்ளை அம்மையாரோ வேறு எந்த ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரிகளோ தெரிவிக்க வில்லை. கொலையாளிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நல்லிணக்கம் செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றாமல் ஏன் பன்னட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்? பன்னாட்டு நீதி என்பது தண்ணீருக்கு வேறு மசகு எண்ணெய்க்கு வேறு.

 



பன்னாட்டு நீதி கடாஃபிக்கு வேறு ராஜபக்சேக்களுக்கு வேறு

 

 

லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) 27-06-2011இலன்று பிறப்பித்தது. பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்றார். லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளை பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?

 

 

 

பாஹ்ரெய்னைப் பாருங்கள் தமிழர்களே.

 

அரபு வசந்தத்தை ஒட்டி 17-02-2011இல் பாஹ்ரெய்னில் மக்கள் புரட்சி ஆரம்பித்தது. அங்கும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையை இரும்புக்கரங்கள் கொண்டு மன்னர் ஹமாட் கட்டவிழ்த்து விட்டார். அங்கு படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அரபு நாட்டில் அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியாவின் படைகள் பஹ்ரெய்னுக்கு அனுப்பப்பட்டு கிளர்ச்சிக்காரர்கள் அடக்கப்படுகின்றனர். பஹ்ரெய்னில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி ஐக்கிய அமெரிக்காவோ மேற்கு ஐரோப்பிய நாடுகளோ கவலைப்படுவதில்லை. இதற்கான காரணம் பாஹ்ரெய்னில் அமெரிக்கக் கடற்படைத் தளம் இருக்கிறது.

 

அது அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ஆதிக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்காவையும் மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் பொறுத்தவரை மனித உரிமைப் பிரச்சனை என்பது ஒரு துருப்புச் சீட்டு. அதை அவை தமக்குத் தேவையான இடங்களில் மட்டுமே பயன் படுத்தும். இலங்கை அரசிற்கு எதிராக ஐநா மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்பட்ட மற்றும் கொண்டு வரப்படவிருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் யாவற்றிக்கும் இரு நோக்கங்கள் மட்டுமே!

 

ஒன்றில் இலங்கையின் ஆட்சியாளர்கள் தமது சீனாவிற்குச் சாதகமான நிலைப்பாட்டை மேற்கு நாடுகளுக்குச் சாதகமாக மாற்ற வேண்டும் அல்லது அங்கு ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்படும். இதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை.

 

 

 

- வேல் தர்மா

http://www.eelamview.com/2012/12/27/srilanka-genocide-partners/

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா வரும்.. ஆப்கானிஸ்தான் வரும் என்று கனவுகாணக் கூடாது என்கிறது கட்டுரை.. :D

  • தொடங்கியவர்

ஏன் எம்மால் முடியாது? என்ற கேள்வி உள்ளது....

 

லிபியவில் போர்க் குற்றம் புரிந்தமைக்காக மும்மர் கடாஃபியையும் அவரது மகன் சயிஃப் அல் இஸ்லாம் கடாஃபியையும் கைது செய்யும் பிடியாணையை பன்னாட்டு நீதி மன்று(International Criminal Court) 27-06-2011இலன்று பிறப்பித்தது. பன்னாட்டு நீதிமன்ற நீதியாளர் Sanji Mmasenono Monageng அவர்கள் கடாஃபியைக் கைது செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளது என்றார். லிபியாவும் இலங்கையைப் போலவே ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. இருந்தும் கடாஃபி மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


4000 அப்பாவிகளைக் கொன்றவர் எனக் கருதப்படும் கடாஃபிமீது ஆறு மாதங்களுக்குள் குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 70,000இற்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றவர், மருத்துவ மனைகள் மீது குண்டு வீசியவர், பல இலட்சம் மக்களுக்கு உணவு மருத்துவ வசதி கிடைக்காமல் தடுத்தவர் எனக் கருதப்படும் மஹிந்த ராஜபக்ச தலை நிமிர்ந்து நிற்கிறார். மூன்று ஆண்டுகளாகியும் அவர் மீது நடவடிக்கைகளை பன்னாட்டு சமூகம் ஏன் எடுக்கவில்லை?

 

 

 

  • தொடங்கியவர்

28 Dec 2012
His Excellency
Mahinda Rajapaksa
President of Sri Lanka


Your Excellency,

 

YOU CAN STILL BE GREAT IN A LITTLE HOUSE CALLED SRI LANKA


All Sri Lankans hailed you as the greatest leader that citizens had witnessed when you brought a certain era of our land to a close in May 2009. When I say a certain era, it was no doubt an era of unnecessary violence and great unhappiness, a great period of stress and uncertainty, which was brought upon the people of this country especially those in the North and East who bore the brunt of a long drawn civil war.

 

Let me, without going into all the details, which are well espoused by people more learned than I say that WE HAVE NOT AS CITIZENS OF THIS COUNTRY ENJOYED MUCH BENEFITS OF THE END OF THE WAR AND ARE IN FACT SEEING BAD GOVERNANCE AT ITS PEAK, OF WHICH ONE OF THE SPILL OFFS IS ABJECT VIOLENCE REACHING ALL PARTS OF THE COUNTRY AT ALL LEVELS AND SPARING NO ONE. IT IS WELL KNOWN THAT MILITARISATION AND VIOLENCE ONCE STARTED HAS NO END.

 

http://www.colombotelegraph.com/index.php/from-a-springer-to-his-excellency-rajapaksa/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.