Jump to content

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 4 (25-06-2006)


Recommended Posts

பதியப்பட்டது

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3

புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது.

இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன்.

புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழிகளில் முனைந்தாலும் ஈழப் போரட்டத்தின் தனித்துவத்தையோ, இந்தப் போராட்டத்தை தீர்மானிக்கும் உரிமையையோ அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுத்ததில்லை. ஈழப் போராட்டத்தின் எதிர்காலம், நிகழ்காலம் என்ற அனைத்தையும் தாங்கள் மட்டுமே தீர்மானிப்போம் என்பதை புலிகள் ஒவ்வொரு நிலையிலும் உறுதிச் செய்துள்ளார்கள். அது தவிர மாற்றுச் சக்திகள் இந்தப் போராட்டத்தின் போக்கினையோ, எதிர்காலத்தையோ தீர்மானிக்கும் ஒரு நிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் தங்களின் உத்தியை அதற்கேற்றவாறு மாற்றி மிகவும் dynamicஆக தங்களின் ராஜதந்திரங்களை அமைத்து தமிழ் ஈழப் போராட்டம் நீர்த்துப் போகாமல் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தாங்கள் கருதும் ஒரு முக்கியமான காலகட்டத்தையும் இன்று எட்டியும் இருக்கிறார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற வாசகத்தை எந்த நிலையிலும் புலிகள் சமரசம் செய்து கொண்டதில்லை. அதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். பிரபாகரனைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் ஜெ.என்.தீக்ஷ்த்தே கூறியதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

இந்த வரிகளில் வெளிப்படும் பிரபாகரனின் குணாதிசயங்கள் தான் இன்று ஈழப் போராட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் ஒவ்வெரு கட்டத்திலும் அதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு தான் தனது ராஜதந்திர உத்திகளை பிரபாகரன் அமைத்துக் கொண்டுள்ளார். இந்த ராஜதந்திர உத்திகளில் சில தேர்ந்த இராணுவ, அரசியல் நடவடிக்கைகள் உள்ளன. சில பயங்கரவாத படுகொலைகளும் உள்ளன.

1984ல் இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களையும், உதவிகளையும் கொடுத்து கொண்டிருக்கிற நேரத்தில் தன்னுடைய போராட்டத்திற்கான அடிப்படை தேவைகளுக்காக இந்தியாவின் உதவியை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில் இந்தியாவை மட்டுமே நம்பி இருக்காமல் இந்திய உளவு நிறுவனமான ராவுக்கு தெரியாமல் தன்னுடைய இயக்கத்தினரை பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமும் பயிற்சிக்கு அனுப்புகிறார். பின் இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவுடனும் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு அங்கும் தன்னுடைய அமைப்பினரை பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் பல தமிழ்ப் போராளிக் குழுக்கள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றனர். ஆனால் பிற போராளிக் குழுக்கள் இவற்றுடன் தங்களை குறுக்கி கொண்ட நிலையில் வெளிநாட்டு தமிழர்களிடம் தன் தொடர்புகளை பிரபாகரன் வளர்த்துக் கொள்கிறார்.

இந்தியாவிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே தன்னுடைய போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தேவையான அடித்தளத்தை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மூலமாக பிரபாகரன் அமைத்துக் கொள்கிறார். ஈழப் போராட்டம் இன்று ஒரு முக்கியமான நிலையை அடைந்ததற்கு காரணம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வழங்கும் பொருளுதவி தான் என்பது நமக்கு தெரியும். ஆனால் இதனை 1984லேயே திட்டமிட்ட பிரபாகரனின் உத்தி வியப்பிற்குரியதாக இருக்கிறது. அது தான் யாரையும் சாராமல் ஒரு நிலையான பொருளாதார வசதியை புலிகளுக்கு கொடுத்தது. ஈழப் போராட்டத்திலும் எந்த தேக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, 1985ல் சில கப்பல்களை பிரபாகரன் புலிகள் இயக்கத்திற்காக வாங்குகிறார். பல்வேறு நாடுகளில் வாங்கப்பட்ட இந்தக் கப்பல்கள் சரக்கு போக்குவரத்தில் பெரும்பாலான நேரங்களில் ஈடுபடுகின்றன. எஞ்சி இருக்கின்ற நேரத்தில் புலிகளுக்கான ஆயுதங்களை கடத்தும் வேளையில் இந்த கப்பல்கள் ஈடுபடுகின்றன. இதன் மூலம் ஆயுதங்களுக்காக யாரையும் நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை 1985லேயே திட்டமிட்டு தவிர்த்து விடுகிறார். இன்று கிட்டதட்ட 20கப்பல்கள் புலிகளுக்காக இயங்குவதாகவும், இந்தக் கப்பல்கள் மூலம் கடற்படை, விமானப்படை, பலமான ஆயுதங்களுடன் தரைப்படை போன்றவற்றை பிரபாகரன் உருவாக்கி கொண்டிருக்கிறார். இது அனைத்தும் இந்தியாவின் ஆதரவு இருந்த நிலையிலேயே அமைத்து கொண்டது தான் புலிகளின் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

1984ல் அளித்த ஒரு பேட்டியில் "நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம்" என்று பிரபாகரன் கூறியிருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் அந்தப் பேட்டியை எடுத்த இந்தியாவின் பிரபல செய்தியாளர் அனிதாவிற்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார். இந்த எண்ணம் அவருக்கு இருந்த காரணத்தால் தான் ஈழப் போரட்டத்திற்கு இந்தியாவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை மிக கவனமாக தவிர்த்துக் கொண்டார்.

அவர் எதிர்பார்த்தது போலவே 1987ம் ஆண்டிற்கு பிறகான சூழ்நிலை அமைகிறது. தன்னுடைய எதிர்கால பாதுகாப்பு, மொழியைச் சார்ந்த ஒரு நாடு உருவானால், தன்னுடைய இறையான்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போன்ற எண்ணங்கள் காரணமாக புலிகளின் போராட்டத்தை நசுக்க இந்திய நினைக்கிறது. புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே சண்டை மூளுகிறது. புலிகளை எளிதாக அடக்கி விடலாம் என்று எண்ணியதற்கு மாறாக புலிகள் இந்தியப்படைக்கு கடும் சவாலினை விடுக்கின்றனர். இதற்கு புலிகளின் போர்த்திறன், உயிரை துச்சமென மதித்து போரிடுதல் போன்றவற்றுடன் பல கப்பல்கள் மூலம் அவர்கள் சேர்த்திருந்த ஆயுதங்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

அந்தக் கால கட்டத்தில் ஈழப் போராட்டம் இந்தியாவின் நிர்பந்தம் காரணமாக கடுமையான சவாலினை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவின் எண்ணத்திற்கு ஏற்ப ஈழப் போராட்டம் மாறக்கூடிய சூழ்நிலை இருந்தது. இது தமிழ் ஈழம் நோக்கிய தனது பயணத்திற்கு தடைபோடும் என்று பிரபாகரன் நினைத்தார். இந்தியாவை இந்தப் போராட்டத்தை விட்டு முழுமையாக அகற்ற வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். இதற்கு முதல் படியாக பிரேமதாசேவுடன் கூட்டு அமைத்து இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றினார்.

இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டது தவறு என்பன போன்ற எண்ணங்கள் இந்தியாவில் அப்பொழுது நிலை பெற்று இருந்தன. ஆனால் இந்தியாவை மறுபடியும் இந்தப் போராட்டத்திற்கு கொண்டுச் செல்லக் கூடிய ஒருவர் ராஜீவ் காந்தி மட்டுமே. அவரைத் தவிர இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டக் கூடிய இந்திய தலைவர்கள் யாருமே இல்லை. அவரை அகற்றுவது மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்று பிரபாகரன் முடிவு செய்தார். அதன் விளைவு தான் ராஜீவ் காந்தியின் படுகொலை. 1991க்குப் பிறகு இன்று வரை இந்தியா இந்தப் பிரச்சனையில் நேரடியாக தலையிடவேயில்லை.

ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக இந்தியாவின் ஆதரவை நிரந்தரமாக புலிகள் இழக்க நேரிடும் என்று பிரபாகரனுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. 1984ல் இருந்து அவரது அரசியல் உத்திகளை ஆராய்பவர்களுக்கு இது தெளிவாக புரியும். இதன் காரணமாய் தமிழகத் தமிழர்களின் ஆதவை முழுவதும் இழக்க கூடும் என்றும் அவர் அறிந்திருக்க கூடும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியாவை இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்க நினைக்கும் அவரது எண்ணம் மட்டும் தான் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் பயங்கரவாதச் செயலை செய்ய தூண்டியிருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தின் ஆதரவை இழந்தது ஒரு முக்கிய இழப்பாக பலர் கூறினாலும், தமிழகத்தின் ஆதரவை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை என்பது கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நகழ்வுகளைக் கொண்டு நாம் அறியக் கூடியதாக இருக்கிறது.

பிராந்திய நிலையில் இருந்த இந்தப் போராட்டத்தை சர்வதேச நிலைக்கு கொண்டு செல்வது தான் பிரபாகரனின் அடுத்த திட்டம். சில முயற்சிகளுக்குப் பின் லியம் பார்க்ஸ் என்ற பிரிட்டிஷ் அமைச்சரின் மேற்ப்பார்வையில் ஒரு புதிய முயற்சி தொடங்கியது. அன்றைக்கு தொடங்கிய முயற்சி படிப்படியாக வளர்ந்து நார்வேயை முக்கிய அணுசரணையாளராகக் கொண்டு இன்று ஈழப் போராட்டம் சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. சர்வதேச அளவில் தமிழ் ஈழப் பிரச்சனை மீது பல நாடுகள் ஆர்வம் காட்ட தொடங்கின. பொருளாதாரக் காரணங்களால் இந்த ஆர்வம் எழுந்த அதே நேரத்தில் நிர்பந்தங்களும் எழுந்தன.

சமீபத்திய மிக முக்கிய நிர்பந்தம் ஐரோப்பிய யூனியனின் தடை. ஆனால் இந்த தடையை எந்தக் கோணத்தில் புலிகள் அணுகினர் என்பதை நோக்கும் பொழுது ஆச்சரியமே ஏற்படுகிறது.

ஐரோப்பிய யூனியனின் தடைக்குப் பிறகு ஓஸ்லோவில் பேச்சுவார்த்தைக்குச் செல்ல புலிகள் ஒப்புக் கொண்டனர். இதைத் தவிர வேறு எந்த வழியும் அவர்களுக்கு இல்லை என்பதான ஒரு கருத்தாக்கம் நிலவி வந்தது. இலங்கை அரசு வழக்கமாக அனுப்பும் அமைச்சர்கள் மட்டத்திலான தனது தூதுக்குழுவை தவிர்த்து அதிகாரிகள் மட்டத்திலான ஒரு தூதுக்குழுவை ஒஸ்லோவிற்கு அனுப்பியது. ஐரோப்பிய யூனியன் தடை, உலக நாடுகளின் நிர்பந்தம் இவற்றுக்கு மத்தியில் புலிகளுக்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை.

ஆனால் நடந்ததோ உலக நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், நார்வேயையும் வியப்பில் ஆழ்த்தியது.

தன்னிச்சையான "தமிழீழ விடுதலைக்கு" குறைவான ஒரு பிரகடனத்தை ஓஸ்லோவில் புலிகள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது.

The de facto State of Tamil Eelam exercising jurisdiction over 70 percent of the Tamil Homeland, with control over the seas appurtenant there, with its own laws, independent judiciary, police force and full administrative apparatus; the Liberation Tigers of Tamil Eelam (LTTE), being the authentic representative of the Tamil Nation and its sole interlocutor in the current peace process facilitated by the Royal Norwegian Government; the LTTE acting as the sole defender and protector of the Tamil Nation, its People and the State institutions with its modern defence forces;

இதன் மூலம் மற்றொரு முறை தங்கள் மீதான நிர்பந்தத்தை விடுவித்து கொண்டதோடு மட்டுமில்லாமல், தாங்கள் ஒரு நாட்டினை நடத்தி வருகிறோம் என்று ஓஸ்லோவில் சென்று அறிவித்துள்ளனர். இவை தவிர ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் SLMM குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். பிரச்சனையை தீர்ப்பதற்கான கோணத்தில் செல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைகுலுக்க வைக்கவே நார்வே ஆர்வம் காட்டுவதாக நார்வேயை சாடியிருக்கின்றனர்.

தங்களின் கோரிக்கையை நோக்கி உலக நாடுகள் வரவேண்டுமே அல்லாமல், உலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து தாங்கள் நகர வேண்டிய அவசியம் இல்லை என்று புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர

  • 2 weeks later...
Posted

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 4

இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு குறித்து பேசும் பொழுது இலங்கை அரசு ஆதரவு நாடுகள், பத்திரிக்கையாளர்கள், "ஒன்றுபட்ட சிறீலங்காவினுள் தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும்" என்று கூறுவார்கள். "the unity, sovereignty and territorial integrity of Sri Lanka", "undivided Srilanka" என்பன போன்ற பதங்களை இந்த நாடுகளின் அறிக்கையிலும், இந்தப் பத்திரிக்கைகளிலும் காண முடியும். மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது "தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதை" இந்த நாடுகள் ஆதரிப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால் இது சில உண்மைகளை மூடி மறைக்கும் உத்தி என்பது தான் யதார்த்தமான உண்மை.

undivided Srilanka என்பது தீர்வாக கூறப்படும் நிலையில் சிறீலங்காவின் இன்றைய நிலை என்ன ?

சிறீலங்கா ஏற்கனவே இரண்டு துண்டுகளாகி விட்டது.

தென்னிலங்கையில் இருக்கும் சிங்களப் பகுதி, தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை நகரங்கள், மன்னார், தமிழர் மற்றும் முஸ்லீம்களின் பகுதியான அம்பாறை போன்ற பகுதிகள் தான் சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வடகிழக்கு மாகாண தமிழர் பகுதிகளில் சுமார் 30%-40% மட்டுமே சிறீலங்கா அரசு வசம் உள்ளது.

கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, போன்ற பகுதிகளும், மட்டகளப்பு, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதிகளில் சில இடங்களிலும் என சுமார் 60-70% வடகிழக்கு மாகாண தமிழ்ப் பகுதிகள் இன்று புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அதாவது "தமிழீழம்" என்று கருதக்கூடிய தமிழர் பகுதிகளில் ஏற்கனவே 60% முதல் 70% புலிகள் வசம் உள்ளது.

இந் நிலையில் "undivided Srilanka", "Sovereignty and territorial integrity of Sri Lanka" என்பது புலிகள் தங்கள் வசம் உள்ள பகுதிகளை சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்களை கைவிட்டு "விட்டுக் கொடுத்தால்" கிடைக்கும். அல்லது சிறீலங்கா இராணுவம் புலிகளை தோற்கடித்து கைப்பற்றினால் undivided Srilanka கிடைக்கும். ஆனால் இது இரண்டுமே சாத்தியம் அற்றது என்பது இந்தப் பிரச்சனையை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு கூட புரியும்.

யானையிறவு இராணுவ முகாமை கைப்பற்றி புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையில் இருந்த பொழுது அமெரிக்க, இந்திய அரசுகள் புலிகளுக்கு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதனாலேயே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் தங்கள் திட்டத்தை நிறுத்திக் கொண்டதாகவும் ஒரு கருத்து உண்டு. யாழ்ப்பாணம் புலிகளின் கைகளுக்கு எளிதாக சென்று விடும் என்ற நிலையில் உலக நாடுகளை நோக்கி தன் நாட்டை காப்பாற்றுமாறு சந்திரிகா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் யாழ்ப்பாணத்தைச் சுற்றியப் பகுதிகளில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது அமெரிக்க, இந்திய அரசுகளின் எச்சரிக்கையால் ஏற்பட்டது என்று என்னால் நினைக்க முடியவில்லை.புலிகளின் எண்ணிக்கை ஒரு பரந்து பட்ட தமிழீழத்தை தக்க வைக்க கூடிய நிலையில் அன்றைக்கு இல்லை. நிலங்களை கைப்பற்றுவதை விட கைப்பற்றிய இடங்களில் நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படும் பலம் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மரபுரீதியான போரில் புலிகள் தோல்வி அடைந்து பின்வாங்கிய நிலையும் ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை கைப்பற்றியப் பின் அதனை இராணுவத்திடம் இழப்பதை விட இருக்கின்ற நிலைகளை தக்க வைத்துக் கொள்வது புலிகளின் நோக்கமாக அன்றைக்கு இருந்தது.

இராணுவம் எப்படி "undivided Srilanka"வை அடையவேண்டுமென்றால் புலிகளின் பகுதிகளை முழுமையாக கைப்பற்ற வேண்டுமோ அதே போல புலிகள் தமிழீழத்தை அடைய வேண்டுமானால் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை ஆகிய இரண்டு பகுதிகளை கைப்பற்ற வேண்டும். யாழ்ப்பாணம் ஈழத் தமிழர்களின் கலாச்சார அடையாளம் என்றும், திரிகோணமலை நகரம் தமிழீழத்தின் தலைநகரம் என்றும் புலிகள் கூறியுள்ள நிலையில் போர் தொடங்கினால் இந்த இரண்டு நகரங்களை கைப்பற்ற புலிகள் தங்களுடைய முழுபலத்தையும் பிரயோகிப்பார்கள்.

ஆனால் இந்த நகரங்களை கைப்பற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் ? சிறீலங்கா இராணுவத்தின் அத்தனை இராணுவ பலமும் இந்த இரு நகரங்களைச் சூழ்ந்திருக்கிற நிலையில் புலிகளின் இராணுவ பலம் மூலம் இந்த இரண்டு பகுதிகளை கைப்பற்ற முடியுமா ?

யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய இரண்டு பகுதிகளை கைப்பற்றும் அவர்களின் நோக்கமே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தை செண்ட்டிமெண்ட்டாக புலிகள் கருதினாலும், அவர்களின் முக்கியமான இலக்காக திரிகோணமலை இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் திரிகோணமலையின் இராணுவ மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவம். திரிகோணமலையின் இராணுவ முக்கியத்துவம் ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். இயற்கையான துறைமுகம், பாதுகாப்பான துறைமுகம் என்பதால் இந்த துறைமுகத்தை தங்கள் வசம் கொண்டு வர இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் என ஒரு நீண்ட வரலாறு இந்த துறைமுகத்திற்கு உண்டு.

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பொழுது இராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே நடந்த கடித உறையாடல்களின் மூலம் இந்த துறைமுகத்தை இந்தியாவின் நலன்களுக்கு எதிராக பிற நாடுகளுக்கு இலங்கை கொடுப்பது தடுக்கப்பட்டு விட்டது.

அந்தக் கடிதங்களின் சாராம்சம்

Trincomalee or any other port of Sri Lanka, will not be made available for military use by any country in a manner prejudicial to India’s interests.

The work of restoring and operating the Trincomalee oil tank farm will be undertaken as a joint venture between India and Sri Lanka.

இது தவிர மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க-இந்திய கடற்ப்படைகளுக்கு இடையே இந்தப் பிரச்சனையில் போட்டி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவே. ஆனால் நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புகள், Globalization போன்றவை இலங்கையின் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் இந்தப் பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.

2000ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த ஜப்பான் போன்ற நாடுகள் கூட தற்பொழுது இந்தப் பிரச்சனையில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை கவனிக்க வேண்டும். இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை டோக்கியோவில் நடத்தியது, தன்னிச்சையான சமாதான முயற்சிகள் என ஜப்பான் இந்தப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆர்வத்தை செலுத்த தொடங்கியதன் பிண்ணனி சுவாரசியமானது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வரலாற்று காலம் தொடங்கி இன்றைய நிலை வரை கடல் மீதான ஆளுமையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. தமிழக வரலாற்றை சோழர் காலம் முதல் ஆராயும் பொழுது கூட ( என்னுடைய முந்தையப் பதிவு - சோழர்களின் பொருளாதாரப் போர்கள்) இந்த உண்மை நமக்கு தெளிவாகும். கடல் மீது இருந்த மிகப் பலமான ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகெங்கும் நிறுவப்பட்டது. சோழர் காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை.

இன்றைய இலங்கை இனப் பிரச்சனையில் கூட உலக நாடுகளை இந்த வர்த்தக எண்ணமே செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு தீவாக ஆசியாவின் மையப் பகுதியில் மத்திய கிழக்கு, கிழக்காசியா இடையேயான கடல் பாதையில் இருப்பதே இந்தப் பிரச்சனையில் பல நாடுகளை ஆர்வம் கொள்ளச் செய்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மலாக்கா நீரிணைவு இடையேயான கடல் பாதை உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து இடம் பெறக் கூடிய பொருளாதார வல்லரசு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவற்றின் எரிபொருள் தேவை இந்தக் கடற்பகுதி வழியாகத் தான் நடைபெறும் என்பதால் தங்களின் தேவைகளுக்கு எந்தப் பிரச்சனையும் எதிர்காலத்தில் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு உண்டு. ஆசியாவின் பிற பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்றவையும் இந்தப் பகுதியில் இருப்பதை கவனிக்க வேண்டும். இவை தவிர எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் இந்தப் பகுதியில் தன்னுடைய எண்ணெய் வளத்துடன், இராணுவ ரீதியிலான பலத்தை பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் உலகின் முக்கியமான பொருளாதார கேந்திரமாக உருவாகக்கூடிய இந்தக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது.

கச்சா எண்ணெய் தவிர அணுமின் நிலையங்களுக்கும், அணுஆயுத உற்பத்திக்கும் தேவைப்படும் புளூட்டோனியம் போன்றவையும் கடல்வழியாகத் தான் கொண்டுச் செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் உலகின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கப் போவது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தேவைகள் தான். தங்களுடைய எரிபொருள் தேவைகளுக்கு தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொள்ள சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந் நிலையில் தான் கடல் மீதான ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுடைய எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பு, பிரச்சனையில்லாத போக்குவரத்தை கப்பல்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களை கண்டறிவது போன்றவற்றுடன் இந்த கடல்வெளியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் தான் உலக நாடுகளின் நிலை அமைந்து இருக்கிறது.

இந்தக் கடற்பரப்பில் தங்களின் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதும், எதிர்காலங்களில் பிரச்சனை நேரும் சமயங்களில் தங்களின் இருப்பை இந்த வர்த்தக முக்கியத்துவம் மிக்க பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முனைந்தன.

உலக கடல் போக்குவரத்தில் chokepoint என்று சொல்லக்கூடிய பகுதிகள் நிறைய உண்டு. அதாவது மிகக் குறுகலான பாதை உடையப் பகுதிகளை chokepoint என்று கூறுவார்கள். இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினம். அவ்வாறான ஒரு chokepoint உள்ள இடம் தான் மலாக்கா நிரிணைவு ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்ட பல குறுகலான பாதைகள் உள்ளன. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்ப்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனை தடுக்கும் பொருட்டு தான் இந்தப் பகுதியில் பல நாடுகளின் கடற்ப்படை தளங்கள் உருவாக தொடங்கின. அமெரிக்கா இந்தப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்திய அமெரிக்க கடற்ப்படை இடையே இராணுவ ஒத்துழைப்பு, மலாக்கா நிரிணைவுகளில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. சுனாமியை முன்னிட்டு அமெரிக்கா தனது கடற்படையை இப் பகுதியின் பலப் பகுதிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடாக கருதப்படும் சீனா இந்தப் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முனைந்தது. இப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா மூலம் எதிர்காலத்தில் தன் வர்த்தகத்திற்கு அச்சறுத்தல் நேராமல் தடுக்கவும், தன் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மியன்மார் (பர்மா), மாலத்தீவுகள் போன்ற பகுதிகளில் தன் கடற்ப்படை மற்றும் தொலைத்தொடர்பு தளங்களை சீனா அமைத்துக் கொண்டது. அது தவிர மியன்மார் அரசுடன் எண்ணெய் கிடங்குகளை பராமரிக்கும் வசதிகளையும் பெற்று இருக்கிறது.

இந்தியாவிற்கு ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. இது மலாக்கா நிரிணைவு பகுதியின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் எண்ணெய்க் கிடங்குகளையும் இந்தியா அமைத்துள்ளது. திரிகோணமலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காப்ரேஷன் எண்ணெய் கிடங்குகளை பராமரித்து வருகிறது.

இவை தவிர இந்தக் கடற்பரப்பில் தேவைப்படும் கண்காணிப்பிற்கு தொலைத்தொடர்பும் மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு முதல் மலாக்கா நிரிணைவு வரையிலான பகுதியில் இருக்கும் வர்த்தக கப்பல்கள் மற்றும் இராணுவ நிலைகளிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தேவையும் உள்ளது. இலங்கை இந்தக் கடற்ப்பாதையின் மையப் பகுதியில் இருப்பதால் இத்தகைய தொலைத்தொடர்புக்கு உகந்த இடமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற நிலைகளை 1980களிலேயே இங்கு அமைக்க அமெரிக்கா முனைந்தது. இன்று தொலைத்தொடர்பு அசுர வளர்ச்சிப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இது ஒரு பெரிய பலம் என்று சொல்ல முடியாது. என்றாலும் இதுவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான பலம் தான் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு இந்தப் பகுதி மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக இருப்பதால் தான் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்ட தொடங்கின. இயல்பாகவே இந்த நாடுகள் இப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவது தான் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக இருக்ககூடும் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டினை எடுத்தன. அதனால் புலிகளுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க தொடங்கின. இவ்வாறு நெருக்கடி கொடுப்பதன் மூலம் புலிகளை போர் நோக்கி செல்லாமல் தடுக்க முடியும் என நினைத்தன. அதன் விளைவு தான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை நிர்பந்தம் செய்து புலிகள் மீதான தடையினை கொண்டு வந்தது.

ஆனால் புலிகளின் போக்கு உலக நாடுகளை தங்களின் வழிக்கு கொண்டு வருவது என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நாடும் விடுக்கும் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் பொழுது தமிழீழம் என்ற தீர்வினை விட்டுக்கொடுக்க நேரும். அது மட்டுமில்லாமல் ஈழப்போராட்டம் ஒரு தன்னிச்சையான பாதையில் செல்லாமல் உலகநாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப வளைந்து செல்லக்கூடிய நிலை நேர்ந்து விடும்.

இன்று இராணுவ ரீதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிறையப் பின்னடைவுகளை எதிர்கொண்டு இருக்கும் அமெரிக்கா, இலங்கைப் பிரச்சனையில் இராணுவ ரீதியில் "நேரடியாக" உள்ளே நுழையாது. வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சனையில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற நிலையில் உலக நாடுகளின் நிர்பந்தம் வெறும் அச்சறுத்தல், அங்கீகாரம் மறுப்பு என்ற அளவில் தான் இருக்கும்.

இந் நிலையில் இந்தக் கடற்ப்பரப்பில் தங்களது ஆளுமையை நிலை நிறுத்துவது தான் உலக நாடுகளை தங்களின் நிலை நோக்கி கொண்டு வரும் ஒரே வழி என புலிகள் முடிவு செய்தனர். இந்தப் பிராந்திய கடற்பகுதியில் தாங்களும் ஒரு முக்கியமான சக்தி என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் திரிகோணமலை புலிகளின் முக்கிய இலக்காக எதிர்வரும் காலங்களில் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

புலிகளின் கடற்படை இப் பிராந்தியத்தின் கடற்ப்பரப்பில் ஒரு முக்கியமான சக்தி என்பதை நிலை நிறுத்தும் வகையில் தான் கடந்த ஆறு மாத நிகழ்வுகள் இருந்தன.

அதனால் புலிகள் பெறப் போகும் பலன் என்ன ?

பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதியில், ஒரு முக்கியமான சக்தியை எந்த நாடும் புறக்கணித்து விட முடியாது.

(தொடரும்)

Tags

Strategic Analysis

தமிழ்ப்பதிவுகள்

ஈழம்

http://thamizhsasi.blogspot.com/2006/06/4.html

Posted

generally a good write up. One correction though. முஸ்லீம்களின் பகுதிகளான அம்பாறை, மன்னார் போன்ற

mannar is not with a muslim majority. There are muslim enclaves, but it is dominated by Saivaites inland, and catholics along the coast.

ஜூலியன், at 7:59 PM

தமிழ் சசி,

வழக்கம் போல் ஆழமாக அலசியுள்ளீர்கள். நீங்கள் சொல்வதுபோல் புலிகள் திருகோணமலைய தம் கட்டுப்பாடுக்குள் கொணர்வது நல் விரகே (strategy்!?). ஆனால் அதேநேரம் இந்நாடுகளுக்கு தாம் திறந்த பொரூண்மியக் கொள்கையுடையவர்களென்றும், தங்கு தடையின்றி எந்நாட்டுக் கலன்களும் கோணிமலைத் துறைக்கு வந்துபோகலாம் என்பதை தெளிவுறுத்த வேண்டும். அது வீணண பகைமை வருதலைத் தடுக்கும்.

பி.கு.: இரணில் ஆட்சியில் இருக்கும்பொழுது சீனாவுக்கு தமிழீழ வடகடலில் மீன்பிடி உரிமை வழங்க்கபட்டு, இனத்தெரியாதவர்களால் (வி.பு. :D விரட்டியடிக்கப்பட்டது நினைவில் வந்து போகிறது.

யாழ்த்தமிழன், at 8:00 PM

மன்னார் முஸ்லிம்களின் பகுதியல்ல என்பது தெரியும். எழுதும் பொழுது சரியான எழுத்துத் தொடர் கொண்டு அமைக்க வில்லை.

திருத்தி விட்டேன்

சுட்டி காட்டியமைக்கு நன்றி

தமிழ் சசி, at 8:06 PM

புலிகளின் கடற்படை வலுவையும், அதை முதன்மைப்படுத்தும் புலிகளின் வேட்கையையும் புதிய கோணத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்.

யாழ்ப்பாணம், திருகோணமலை கைப்பற்றல் தொடர்பாக ஒன்று சொல்லலாம். ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவது புலிகளுக்கு இலகுவானதுதான். அங்கிருக்கும் இராணுவத்தின் எண்ணிக்கை மிரட்டுவதாக இருக்கும். ஆனால் அப்படியில்லை. ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைவரும் ஓடத்தான் முடிவெடுப்பர். 2000 ஆம் ஆண்டிலும் 35 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கத்தக்கதாகத்தான் அங்கிருந்து பத்திரமாக வெளியேறுவது பற்றி யோசிக்கப்பட்டது. அதற்கு வலுவான காரணம் நிலப்பரப்புத்தான். மிகமிக குறுகிய நிலப்பரப்புத்தான் யாழ்ப்பாணம். சிலபகுதிகளை இழந்தபின் இராணுவம் முடங்கப்போவது வலிகாமத்துள் மட்டும்தான். அங்கு அதிகரிக்கும் இராணுவச் செறிவு ஒருபோதும் அவர்களுக்குச் சாதகமானதல்ல. மாறாக அதிகரித்திருக்கும் புலிகளின் எறிகணைவீச்சு வலு, இராணுவத்துக்கு மிகஉயரிய சேதத்தைத் தரும். ஒருகட்டத்தில் வெறும் எறிகணைத் தாக்குதலால் மட்டுமே நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் கொல்லப்படும் நிலைக்கு வந்துவிடும். அதைவிட கடலையும் வான்வழியையும மட்டுமே நம்பியிருக்கும் யாழ்ப்பாண இராணுவத்துக்கு கடற்புலிகள் பாரிய அச்சுறுத்தல்தான்.

புலிகளின் முன்னணித் தளபதியொருவர் கதைக்கும்போது, யாழ்ப்பாணத்தை முற்றாகக் கைப்பற்றுவதென்பது கிட்டத்தட்ட போராட்டத்தின் இறுதிக்கால நடவடிக்கையாக இருக்கும் என்று சொன்னார். ஏனென்றால் குறைந்தது அரைவாசி இராணுவமாவது (ஏறக்குறைய இருபதாயிரம்) யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கு நோக்கிப் போய்விடும். அது மறுபோர்முனைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அதைவிட நாற்பதாயிரம் பேரை இந்தச் சிறுபகுதிக்குள் முடக்கி வைப்பதே சிறந்தது என்பதே அவர் சொன்ன காரணம்.

உண்மைதான். இன்று யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவம் முன்னேறினால் அவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலப்பகுதியின் அகலம் வெறும் ஒன்பது கிலோமீடடர்கள்தான். அதாவது யாழ்ப்பாணத்தில் முன்னணிக் காவலரண் வரிசையின் நீளம் ஒன்பது கிலோமீடடர்கள். இது புலிகளுக்குச் சாதகமான நிலைதான். இந்த ஒன்பது கிலோமீட்டர்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொண்டு நாற்பதாயிரம் பேரை முடக்கி வைப்பது புலிகளுக்கு உவப்பானதுதான்.

ஆனால் திருகோணமலை நிலைமை வேறு. அது தொடர்ச்சியாக தென்னிலங்கையோடு நிலத்தொடர்புள்ள நகரம். நகரத்தைக் காக்க கடலுட்பட நாலு புறத்தாலும் படையினர் முயற்சிக்க ஏதுவான நிலப்பரப்பு

. கொண்டோடி, at 8:18 PM

போர் அதிகாரபூர்வமாகத் தொடங்கினால் திருகோணமலை முதல் இலக்காக இராது. முதலில் மணலாற்றுப் பகுதியை விடுவித்து திருகோணமலையுடன் வன்னியிலிருந்து நேரடி தரைத் தொடர்பை ஏற்படுத்தவே புலிகள் முயற்சிப்பர். அதில்லாத பட்சத்தில் முழு அளவில் திருகோணமலை மீட்பை புலிகள் தொடங்கார். நேரடித் தரைத்தொடர்பு விசயத்தில் புலிகள் இனிமேல் தவறிழைக்கப் போவதில்லை. ஆனால் அதுவரை சிறுசிறு தாக்குதல்கள், முகாம் அழிப்புக்கள் என்று கரந்தடித் தாக்குதல்கள் பரந்தளவில் நடக்கும்.

அதேபோல் யாழ்பாணப் பக்கத்தில் கிளாலி, நாகர்கோவில் என்பன தாக்கப்பட்டு தென்மராட்சியைக் கட்டுப்பாட்டுள் கொண்டு வர முயற்சிப்பர். அத்தோடு இராணுவக் கட்டுப்பாடுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கிளைமோர்கள் தாராளமாக வெடிக்கும்.

கொண்டோடி, at 8:23 PM

/கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மரபுரீதியான போரில் புலிகள் தோல்வி அடைந்து பின்வாங்கிய நிலையும் ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை கைப்பற்றியப் பின் அதனை இராணுவத்திடம் இழப்பதை விட இருக்கின்ற நிலைகளை தக்க வைத்துக் கொள்வது புலிகளின் நோக்கமாக அன்றைக்கு இருந்தது./

கொஞ்சம் சரி. கொஞ்சம் தவறு.

யாழ்ப்பாணத்தை முற்றாக கைப்பற்றி விட்டால் தாங்கள் தக்கவைப்பது இயன்றிருக்கும் ஏனெனில் புலிகள் புதிய அனுபவங்கள் பலவற்றை பெற்றிருந்தார்கள். கடற்புலிகள் முன்னிலும் பலமாக இருந்தார்கள். இந்நிலையில் தளங்கள் ஏதுமற்ற நிலையில் (கவனிக்க 'முற்றாக கைப்பற்றி விட்டால்') சிங்கள இராணுவம் மீளக்கைப்பற்றுவது கடினமே. ஆனால் தற்போதைய நிலையில் உள்ளமாதிரி அரைகுறையாக வைத்திருந்தால் ஆனையிறவை மீளக்கைப்பற்ற முயற்சிப்பார்கள். ஏற்கனவே முயற்சித்தார்கள். யாழ்ப்பாணத்தில் அதிகமான மக்கள் அடைபட்டிருப்பதனால் கைப்பற்றும்போது உயிரிழப்புகள் ஏற்படும். அதனால்தான் புலிகள் முன்னேற்றத்தைக் கைவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அத்துடன் தொடர்ச்சியாக யுத்தம்புரிந்தமையால் புலிகளுக்கும் ஒரு ஆசுவாசம் தேவைப்பட்டிருக்கும். வன்னியிலுள்ள மக்களும் (இடப்பெயர்வு மற்றும் பொருளாதாரத்தடை)நொடித்துப்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.