Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது; நீதித்துறையின் சுயாதீனம் பேணப்பட வேண்டும்: ஐக்கிய நாடுகள் சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
UN-session-seithy-150.jpg

இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல பிரேரணை நடைமுறைகள் மற்றும் சட்டத்தரணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கெப்ரில்லா நோல் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சுயாதீன தகவல்களின்படி இலங்கையில் கடந்த காலங்களில் சட்டத்துறையினர் மீது அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் அவர்களின் பணிகளில் அரசியல்வாதிகள் தலையிடும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இலங்கையின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது களையப்பட்டு நீதித்துறை சுயாதீனப்படுத்தப்பட வேண்டும்.

  

பிரதம நீதியரசருக்கு எதிரான விசாரணையை மேற்கொண்டு வந்த நாடாளுமன்ற தெரிவுக்குழு, கடந்த டிசம்பர் 8ம் திகதியன்று அவரை ஐந்து குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் கண்டது. எனினும் அந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில், நம்பிக்கைத் தன்மை பேணப்படவில்லை. 2003ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இணங்கிக்கொண்டபடி இலங்கையின் நாடாளுமன்ற நிலையியற் கட்டளை முரண்பாட்டை கொண்டிருக்கிறது.

 

எனவே பிரதம நீதியரசர் ஒருவர் மீது விசாரணை நடத்துவதற்கு ஒரு சுயாதீனமான குழு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் கடைப்பிடித்து, நீதித்துறை யாரினதும் தலையீடின்றி செயற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கெப்ரில்லா நோல் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=73063&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.