Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியக் குடிவரவு அமைச்சர் கொழும்பு விஜயம்

Featured Replies

கனடாவின் குடிவரவு அமைச்சரும் கனடியக் குடிவரவுக் கொள்கைகளில் பல கடுமையான மாறுதல்களை மேற்கொண்டவருமான கனடியக் குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி கொழும்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

அண்மைக்காலங்களில் கனடாவிற்கு வந்து அகதிக்கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கும் பலரும் திருப்பியனுப்பப்படுகின்ற போதும் சிறீலங்கா அப்படித் திருப்பியனுப்பப்படும் அகதிகளை எந்தவிதத் தொந்தரவுமின்றி அவர்களை மீள்வாழ்க்கைக்கு திரும்ப சிறீலங்கா அனுமதிக்கும் நிலையில் அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறுகிறது.

நாளை 2ம் திகதி இந்தியாவிற்குப் புறப்பட்டுச் செல்லும் அமைச்சர் ஜேசன் கெனியும் அவரது பாராளுமன்றச் செயலரும் எதிர்வரும் சனிக்கிழமை 5ம் திகதி இந்தியப் பயண நிரலை முடித்து அன்றைய தினமே கொழும்பைச் சென்றடைவர்.

கொழும்பில் 7ம் திகதி திங்கட்கிழமை வரை தங்கியிருக்கும் அமைச்சரின் குழு இலங்கை அரசின் அமைச்சர்களையும், தமிழ் அரசியல்தலைவர்கள் சிலரையும் சந்திக்கும் என நம்பகமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த அமைச்சரின் பொறுப்பேற்றத்தின் பின்னரே கனடாவிற்கு இரண்டு கப்பல்களில் தமிழ் அகதிகள் வந்தடைந்தனர் என்பதும், அதையே காரணமாக வைத்து அகதிகள் மற்றும் குடிவரவு முறைகளில் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளையொத்த கடுமையான சட்டங்களை அமுல்ப்படுத்தியுள்ளதுடன்,

அகதிக்கோரிக்கையாளர்கள் பலரும் திருப்பியணுப்படும் விவகாரத்தில் வேகமான செயற்பாட்டையும் தற்போதைய அரசு மேற்கொண்டு வருகிறது. இப்படியானதொரு நேரத்தில் இலங்கை செல்லவுள்ள அமைச்சரின் நோக்கம் குறித்த செய்தியறிவிப்புக்கள் ஏதும் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்விற்காக அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற இரண்டு தரப்புக்களும் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பதும், தமிழர்கள் ஒன்றாக வாழ்வதற்கான வழிவகைகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதுமே தற்போதைய அரசின் கோரிக்கையாகவுள்ளது.

அத்தோடு 2009ம் ஆண்டுப் போர் குறித்த சர்வதேச விசாரணை ஒன்றிற்கான அழுத்தத்தையும் கனடிய வெளிவிவகார அமைச்சர் தனது அறிக்கைகளில் வெளிப்படுத்தி வந்தார் என்பதும் கனடியப் பிரதமரே ஈழத்தமிழர் விவகாரத்திற்காக அதிகம் குரல்கொடுத்த தலைவர் என்பதையும் தெரிவித்து வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
jason_kenney_1-600x336.jpg

 
 

ஜேசன் கெனி தன்னை கனடாவின் அடுத்த பிரதம  மந்திரிகளில் ஒருவராக நிலையெடுத்து வருகின்றார். இவர் வரவு அகதிகள் மற்றும் பொதுநலவாய நாடுகளின் மாநாடு பாற்றிய நாடி பிடிப்பாயும் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.