Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமும் புலமும் இணைந்து அடிப்படை உரிமைகளை வெல்லும் ஆண்டே 2013! - கனடிய மனிதவுரிமை மையம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
chrv-logo-150-news.jpg

2013ம் ஆண்டாணது ஈழத்தில் வாழும் எமது இனத்தின் ஒரு நிரந்தர தீர்விற்கான ஆண்டாகவும், இதுவரை உயிரிழந்த உறவுகளின் ஆத்ம விருப்பிற்கு விடை தேடும் ஆண்டாகவும் அமைய அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டுமெனக் கனடிய மனிதவுரிமை மையம் உளப்பூர்வமாகக் கேட்டுள்ளது.

  

2012ம் ஆண்டு எங்களிற்கு கற்றுத்தந்த பாடமாக அமைந்ததே, உலக ஓட்டத்தின் இன்றைய போக்கின் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் ஐக்கியநாடுகள் அவையின் உள்ளக அறிக்கை 2009ம் ஆண்டைய முள்ளிவாய்க்கால் அவலத்தில் அதன் அசமந்தப் போக்கினைச் சுட்டிக் காட்டிச் சென்றது என்பதைச் சுட்டிக் காட்டிய கனடிய மனிதவுரிமை மையம்,

 

இந்தக் குற்றச் செயலிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் ஐக்கிய நாடுகள் அவையோ அல்லது சர்வதேசமோ தங்களது பார்வையை உலகப்பந்தின் வேறு பக்கமாக திசை திருப்ப முன்னர் நாங்கள் யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு எங்களிற்குள் உள்ள பேதங்களை மறந்து ஒரேயணியாக செயற்பட தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்துச் செயற்படும் என அதன் சமூகச் செயற்பாட்டிற்கான ஆலோசகர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.

 

ஐக்கிய நாடுகளவையையும், உலக ஒழுக்கின் முக்கிய பலமாகத் திகழும் நாடுகளையும் இந்த விவகாரத்திலிந்து விலகாமல் வைத்திருப்பதற்கான ஒரேயொரு வழி தமிழ் அமைப்புக்களிடையே ஏற்படக்கூடிய ஒரு பொது வேலைத் திட்டத்தின் மூலமே சாத்தியம் என்பதை மேலும் தெரிவித்த அவர்,

 

சிறீலங்கா அரசே தமிழர்கள் இணைந்து வாழ்வதற்கான தடையாக இருக்கிறது என்பதையும், அதன் நடவடிக்கைகள் தொடர்ந்தும் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருக்கிறது என்பதையும் புரிய வைப்பதற்கான தேவை புலம்பெயர்ந்த அமைப்புக்களிடையேயான ஒற்றுமையை இன்றியமையாததாக்குகிறது எனவும் தெரிவித்ததோடு,

 

இவ்வாறான பொதுவேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அதற்கான பலாபலன்களை காலதாமதமின்றிப் பெறுவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே 2013ம் ஆண்டிற்கான சபதமாக கனடிய மனிதவுரிமை மையம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=73108&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.