Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2013 : வெளிவரவுள்ள புதிய ஹாலிவூட் திரைப்படங்கள் : ஒரு பார்வை

Featured Replies

2013.jpg

2012 இல் அதிக வசூல் குவித்த ஆங்கிலத் திரைப்படங்களில் டிஸ்னி தயாரித்த 'The Avengers', லயன்ஸ்கேட் தயாரித்த 'The Hunger Games' என்பன முக்கியமானவை.

சுமார் 220 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட The Avangers 607.2 மில்லியன் அமெரிக்க டாலர் குவித்தது.  152.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட The Hunger Games 403.8 மில்லியன் டாலருக்கு வசூல் குவித்தது.

இவற்றை விட The Lorax, 21 Jump Street, Journey 2: The Mysterious Island, Chronicle என்பனவும் நல்ல படங்களாக பெயர் வாங்கின. 2013ம் ஆண்டுக்கான ஹாலிவூட் திரையுலகம் என்ன மாதிரியான திரைப்படங்களுக்காக காத்திருக்கிறது என தற்போது பார்ப்போம்.

கடந்த 80 வருடங்களாக நாம் பார்த்து வரும் அனைத்துவகையான திரைப்படங்களும் செக்கனுக்கு 24 Frames மாறக்கூடிய கமெரா தொழில்நுட்பத்தில் உருவானவை தான்.   வளர்ந்து வரும் மிக வேகமான புதிய சினிமா தொழில்நுட்பம், 2D, 3D,  IMAX என்பவற்றை கடந்து இப்போது செக்கனுக்கு 48 Frames எனும் அளவுக்கு முன்னேறியுள்ளது. அண்மையில் வெளிவந்த The Lord of The Rings திரைப்பட தொடரின் புதிய தொடர்ச்சியான Hobbit : An Unexpected Journey இப்படி செக்கனுக்கு 48 Frames எனும் தொழில்நுட்பத்தில் Crystal-Clear என சொல்லப்படுகின்றன மிகத்தெளிவான காட்சி அமைப்புக்களுடன் உருவானது. 

இதே போன்ற திரைப்படங்கள் இனி 2013 இலும் தொடரலாம் என்கிறார்கள். இதை விட, ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சூப்பர் கதாநாயகர்கள், இம்முறை ஆகஸ்ட் கோடை காலத்தில் மீண்டும் திரைக்கு வருகிறார்கள். சூப்பர் மேன், அயர்ன் மேன், Katniss Everdeen மற்றும் S.E.A.L Team Six ஆகியோர் அவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள். 

அவை எல்லாவற்றிற்கு முதல், இம்மாதம் ஜனவரி 11ம் திகதி வெளிவரும் Zero Dark Thity மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இது, அல் கைதா தலைவர் ஒசாமா பின் லாடனை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளை பின்னணியாக கொண்ட கதைக்களம். 

 

 

அமெரிக்காவின் முன்னாள் மாநில ஆளுனரும் நடிகருமான ஆர்னல்ர்ட் ஸ்வாஷெனேகர் நீண்ட நாட்களுக்கு பின்னர் நடித்திருந்த The Last Stand ஜனவரி 18ம் திகதி திரைக்கு வருகிறது.

 

 

இவ்வருடம் மே 3ம் திகதி Iron Man திரைக்கு வருகிறது.

 

 

மே.24ம் திகதி  The Hangover பாகம் 3 திரைக்கு வருகிறது.  அதே தினத்தில் Fast and Furious 6 உம் திரைக்கு வருகிறது. ஜூன் 14ம் திகதி Man of Steel (சூப்பர் மேனை மையமாக கொண்ட திரைப்படம்) திரைக்கு வருகிறது.

 

 

எதிர்வரும் ஜூன் 21ம் திகதி பிராட் பிட் நடிப்பில் Word War Z திரைக்கு வருகிறது.

நவ.22ம் திகதி The Hunger Games பகுதி 2 திரைக்கு வருகிறது. நீங்கள் ஹாலிவூட் திரைப்படங்களை ரசித்துப்பார்ப்பவர்கள் எனில் நிச்சயம் 2013 உங்கள் ஆண்டாக இருக்க முடியும். 

 
 

Edited by வண்டுமுருகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.