Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸ் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கும்

Featured Replies

காஸ் நிறுவனங்கள் காஸ் விலையை 650 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் காஸ் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கும். என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

 

 

தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.


எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


எரிபொருட்கள் மீதான வரியை குறைத்தால் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துக்கொள்ள முடியும்.

 

ரூபாவின் பெறுமதியை குறைத்தமையினால் 2005 ஆம் ஆண்டு கடன் சுமை 27,800 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது.


2005 ஆம் ஆண்டில் 91 ஆயிரம் ரூபாவாக இருந்த தனிநபர் கடன் 2012 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56152--500-.html

  • தொடங்கியவர்

எரிவாயு விலை நள்ளிரவுமுதல் அதிகரிப்பு

 

12.5 கிலோகிராம் நிறையுடைய லிற்றோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 150 ரூபாவினால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இத்தகவலை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56268-2013-01-05-15-21-46.html

  • தொடங்கியவர்

arroe600.jpg

  • தொடங்கியவர்

'பிறக்கும் குழந்தைக்கும் சுமந்த தாய்க்கும் வரி அறவிடுவர்'

 

திருமணம் முடிப்பதற்கான கட்டணமும் மரணச்சடங்கிற்கான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடுத்தவருடத்திலிருந்து பிறக்கும் குழந்தைக்கும் அக்குழந்தையை சுமந்த தாய்க்கும் வரி அறவிடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்று புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத்மனமேந்திரா தெரிவித்தார்.

 

 

நாட்டில் வாழமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. காஸ் விலை அதிகரித்துள்ளது. மின்சார,தொலைப்பேசி,தண்ணீர் மட்டுமன்றி எரிப்பொருள் கட்டணமும் மீண்டும் அதிகரிக்கும். என்றும் அவர் சொன்னார்.


எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் 'எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


தரமில்லாத அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. விலகுகள் கூட உண்ணமுடியாத பொருட்கள் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன. யுத்தக்காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வடக்கிலும் தெற்கிலும் பலியானார்கள்.

 

ஆனால், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் நாளொன்றுக்கு 10 பேர் அமைதியாகவே இன்று மரணிக்கின்றனர். ஆசனிக் அமிலத்தின் பயன்பாட்டினால் இவ்வாறான மரணங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


நாட்டில் சிவப்பு,மஞ்சள்,மீன் மழை பெய்துள்ளன. அவ்வப்போது பச்சை மழையும் பெய்துள்ளது. இது நல்ல சமிக்ஞையாகும் என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56326-2013-01-06-15-09-14.html

  • தொடங்கியவர்

07012013-md-hr-2.jpg

'பிறக்கும் குழந்தைக்கும் சுமந்த தாய்க்கும் வரி அறவிடுவர்'

 

இதை சீனாவுடன் சேரும் போது தெரிந்திருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.