Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையேறிய ஜனாதிபதியின் புத்திரர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மலையேறிய ஜனாதிபதியின் புத்திரர்கள்
 
By Farhan 
2013-01-08 11:58:01
 
சிவனொளிபாத மலைக்கு ஜனாதிபதியின் இரு மகன்களான நாமல் மற்றும் யோசித்த ஆகியோர் யாத்திரையை மேற்கொண்டனர்.
 
கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தின்; இளம் உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ எம்.பி.யின் யோசனைக்கு இணங்க சிவனொளிபாத மலைக்கு யாத்திரை ஒன்றை மேற்கொண்டனர்.
 
இதேவேளை இவர்கள் அனைவரும் ஒருவார காலம் மாமிச உணவுகள் எதனையும் உட்கொள்ளாது துறவிகளாக இருந்த பின்னரே யாத்திரையில் பங்கேற்றனர்.
 
கடந்த திங்களன்று சகல இளம் உறுப்பினர்களும் இரவு 11 மணியளவில் நல்லதண்ணியில் இருந்து தமது யாத்திரையை மேற்கொள்ளவிருந்தனர். இருந்தும் அவ்விடத்திற்கு யோசித்த வர தமதமாகியதால் அதிகாலை 1.20 மணிக்கே யாத்திரையை மேற்கொள்ள நேரிட்டது.

சாதாரண குழுவினரைப் போன்று இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதாரண மக்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரையை ஆரம்பித்தனர். 
மதப் பாரம்பரிய நிகழ்வுகளுடன் யாத்திரையில் 20-25 வயதுக்குட்பட்ட இளம் உறுப்பினர்கள் கவந்து கொண்டனர்.
இதேவேளை, தமது முத்த சகோதரர்கள் சிவனொளிபாதமலை செல்வதை அறிந்து கொண்ட ரோகித்த தன் நண்பர்களுடன் இவ்விடத்திற்கு வந்திருந்தார்.
namal-yoshida-and-rohitha2.jpg
இறுதியாகப் பயணித்த ரோகித்த குழுவினர் நாமல் குழுவினர் மஹகிரி தம்பய பகுதியில் யாத்திரையை மேற்கொண்டிருந்தபோது அவர்களுடன் இணைந்து கொண்டனர்.

சிவனொளிபாதமலை மண்டபத்துக்கு சென்ற இந்த மூன்று சகோதரர்கள் உட்பட இளம் உறுப்பினர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். சிவனொளிபாத மலையின் வரலாறு அதன் மகத்துவம் தொடர்பாக இதுவரை தெரியாத பல விடயங்களை பெரிய மதகுருவானவர் எடுத்துக் கூறினார்.
namal-yoshida-and-rohitha3.jpg
சுற்றாடலை நன்கு ரசித்து நீண்ட நேரம் செலவிட்ட இவர்கள் சாதாரண மக்களை ஆச்சரியப்படுத்தி மக்களுடன் பேசி உறவாடி பரிகாசங்களை பரிமாறி கவிபாடியவாறு மீண்டும் கீழ் நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்
கடந்த திங்களன்று சகல இளம் உறுப்பினர்களும் இரவு 11 மணியளவில் நல்லதண்ணியில் இருந்து தமது யாத்திரையை மேற்கொள்ளவிருந்தனர்.
நல்ல தண்ணி என்று ஒரு ஊர் இருக்குது போல .....நான் பிழையா வாசிச்சுப்போட்டன்....நல்ல தண்ணியில என்று....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.