Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கோணமலை படுகொலை: ஏழாண்டுகளாகியும் நீதிக்கான போராட்டம் தொடர்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Trinco-five%20youths.jpg

கடந்த புதன்கிழமையிலிருந்து சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், திருகோணமலையின் கரையோரம் அருகில் ஐந்து இளைஞர்கள் கலந்துரையாடுவதற்காக கூடியிருந்தனர். 

இந்த இளைய மாணவர்கள் இருந்த இடத்தில் வெடிகுண்டொன்று வெடித்தது. இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மக்கள் சிலர் காயமடைந்தனர். காயமடைந்து பின்னர் இறந்த இந்த ஐந்து இளைஞர்களின் உடலங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன. 

இந்தச் சம்பவமானது திருகோணமலையை மட்டுமல்லாது முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்தது. இந்த மாணவர்களின் உடலங்களில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொண்டது. 

ஐந்து மாணவர்களின் படுகொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களைத் தொடர்ந்து இது தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கான ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த விசாரணையின் இறுதி அறிக்கையானது ஒருபோதும் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படவில்லை. 

எதுஎவ்வாறிருப்பினும், திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதி எட்டப்படும் என்ற கோரிக்கையானது ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் இந்த மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

லண்டனில் தலைமையகத்தைக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபையானது, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் சார்பாக இது தொடர்பான நீதி கோரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. 

கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மாணவர்களின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொறுப்பளிப்பதுடன், படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த போதிலும் சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்காவின் சிறிலங்கா தொடர்பான வல்லுனர் ஜிம் மக்டொனால்ட் சுட்டிக்காட்டியுள்ளார். 

"2006ல் நியமிக்கப்பட்ட அதிபர் செயலக விசாரணை ஆணைக்குழுவாலும் பின்னர் 2011ல் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் இது வரை இது தொடர்பான உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையானது சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறானதொரு விசாரணையை மேற்கொள்ள முடியாதுள்ளதை அல்லது நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் விருப்பங்கொண்டிருக்கவில்லை என்பதையே தெளிவாக சுட்டிக்காட்டுகிறது" என மக்டொனால்ட் மேலும் தெரிவித்துள்ளார். 

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிவேண்டி அமெரிக்காவின் வீதிகளில் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேவேளையில், அனைத்துலக மன்னிப்புச் சபையானது இது தொடர்பில் இணையம் மூலம் மனுக்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

இதில் படுகொலை செய்யப்பட்ட ரஜிகர் மனோகரனின் தந்தையார் தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டு வந்ததாகவும் இவரது மகனின் படுகொலையுடன் தொடர்புடைய சாட்சியங்களை கையளிக்குமாறும் கோரியே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து காசிப்பிள்ளை மனோகரனும் அவரது குடும்பத்தவர்களும் சிறிலங்காவை விட்டு வெளியேறி வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் தமது மகனைப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றனர். 

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகள் ஆகின்ற நிலையிலும், சிறிலங்காவில் இயல்பு வாழ்வு மீண்டும் உருவாகும் நிலையிலும் பாதிக்கப்பட்ட மனோகரன் போன்றவர்களால் முன்வைக்கப்படும் நீதிக் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று பயனற்றுக் காணப்படுகிறது. 

சிறிலங்கா அரசாங்கம் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் பொறுப்பளிப்பதை உறுதிப்படுத்தும் போது இதில் நம்பிக்கை கொள்வதில் நியாயம் உள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 

"திருகோணமலைக் கரையோரத்தில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகோலை செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறிலங்கா அரசாங்கம் இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை பாதுகாப்புப் படையினரே மேற்கொண்டதற்கான வலுவான சாட்சியங்கள் காணப்படுகின்ற போதிலும் கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான எந்தவொரு உரிய நடவடிக்கையையும் இந்நாட்டு அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. 

மறக்கப்பட்ட அதிபர் செயலக விசாரணை ஆணைக்குழு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபை என்பன உள்ளடங்கலான பலவற்றில் திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் முதன்மை இடத்தில் உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் கெட்டவாய்ப்பாக இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. 

திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் 17 உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை போன்ற பிரபலமான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இனங்கண்டு நீதிமுன் நிறுத்தினால் சிறிலங்கா அரசாங்கத்தை நம்புவதில் சிறிது நியாயம் உள்ளது. ஆனால் இது எதுவும் நடக்கவில்லை என்பது கவலை தருகிறது" என மனி உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குனர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். 

2006ல் இடம்பெற்ற இவ்விரு படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது புதிய விசாரணைகளை மேற்கொள்வதாக கடந்த ஆண்டில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அதிபரின் சட்ட ஆலோசகரும் முன்னாள் பிரதம வழக்கறிஞருமான மோகன் பீரிஸ் தெரிவித்திருந்தார். 

இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதற்காக இவ்வாறான வழக்கு விசாரணைகளை மீளவும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபடுவதாகவும் மோகன் பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார். 

திருகோணமலையின் காந்தி சிலைக்கு அருகில் உரையாடிக் கொண்டிருந்த இந்த மாணவர்களின் படுகொலையுடன் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்ததாக சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதரான றொபேற் பிளேக்கிடம் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இரகசியக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டிக்காட்டியுள்ளது. 

இதேவேளையில், தனது மகனின் படுகொலையுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்கான அனைத்து நீதிசார் கருவிகளையும் பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்காவில் சிவில் வழக்கு ஒன்றைப் பதிவு செய்த மனோகரன் தெரிவித்துள்ளார். 

2010ல், மனோகரனிடம் எடுக்கப்பட்ட தனிப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் ஏனைய இரு அறிக்கைகளை அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பானது டப்ளின் யுத்தக் குற்ற விசாரணையின் போது சமர்ப்பித்தது. 

மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை, உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை உள்ளடங்கலாக குறிப்பிட்ட சில மனிதாபிமானத்திற்கு எதிரான மீறல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நாவுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் டப்ளின் ஆணைக்குழு அழுத்தம் கொடுத்தது. 

ஏப்ரல் 2013ல் திருகோலைமலை படுகொலை உள்ளடங்கலாக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக வல்லுனர் குழு ஒன்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவில் நோபல் பரிசை வென்ற அடல்போ பெரஸ், சீன் மக்பிறைட் மற்றும் ஜோர்ஸ் வால்ட் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். 

வழிமூலம் : The Sunday Leader By Easwaran Rutnam 
மொழிமாற்றம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130108107564

Trinco Killings: Calls for Accountability Seven Years On
 
Exactly seven years ago as of last Wednesday, five young boys had gathered for a chat in Trincomalee close to the beach.
A grenade was lobbed towards the area where the students were seated and the ensuing explosion injured several people.

The five young boys, who were among those injured, were later found dead with gunshot wounds. The incident sent shockwaves not only in Trincomalee, but around the country.

While the incident occurred when the war was at its peak, the shooting drew the attention of human rights groups and the international community at large, with fingers being pointed at various elements over the murder.

Subsequently amidst growing pressure, a Commission of Inquiry was set up to investigate the incident but the final report was never made public.

However demands for justice over the murder have not ceased seven years on and human rights groups as well as the family members of at least one victim continue to seek answers.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114428

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.