Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை நடந்த மண் சிறந்த சுற்றுலாத்தலமாம்! - பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவுக்கு தமிழர்கள் சீற்றம்

Featured Replies

2013ம் ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை காணப்படுவதாகப் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம் தெரிவு செய்துள்ளது. இலங்கையில் இயற்கை அழகுகள் மிகுந்த இடங்கள், வரலாற்றுத் தலங்கள் மற்றும் விருந்தோம்பலுக்கு ஏற்ற விதமான இடங்கள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இலங்கைக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

FreeVector-British-Airways-Vector-Logo.j

பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவு தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலை நடந்த மண்ணை சிறந்த சுற்றுலாத் தலமாக ‘பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனம்’ எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் ஏற்பாடு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த மாநாட்டில் பிரித்தானியா பங்குபற்றுவது தொடர்பில் தற்போதைக்கு கூறமுடியாது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய பொதுநலவாய உறுப்பு நாடுகளைப் போன்றே இலங்கை விவகாரத்திலும் பிரித்தானியா செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனித உரிமை, நல்லாட்சி, ஜனநாயகம் போன்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய பண்புகளை சிறீலங்கா அரசாங்கம் எவ்வாறு பின்பற்றுகின்றது என்பதனை பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு கண்காணிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்பாடு காணப்படாது விடின் பொது நலவாய நாடுகளின் அமர்வில் கலந்து கொள்வது குறித்து மீள் பரிசீலனை செய்ய நேரிடும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமருன் கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

http://www.sankathi24.com

Edited by யாழ்அன்பு

அதுக்கு காரணம் நாங்கள்தானே. நாங்கள்தானே அதிகளவிலை போய் முள்ளி வாய்க்கால் ஏதோ சுற்றுலாத்தலம் மாதிரி படம் எடுத்து படம் எடுத்து போட்டது மட்டுமில்லாமல். ஊர் அந்த மாதிரி அங்கை ஒரு பிரச்கனையும் இல்லையெண்டு நற்சான்றிதழ் குடுத்துப்போட்டு இப்ப வெள்ளைக்காரன் சொல்லுறான் எண்டு பிழை சொன்னா என்ன செய்யிறது,

 

செய்தியை தமிழாக்கம் செய்தவர்கள் அந்த கூற்றை மறைத்து விட்டனர்.

 

In a recent poll on the airline's Facebook page, over 2,660 users nominated the overseas destinations they most want to visit next year. New York topped the list (22 per cent), followed by Australia (eight per cent), Hong Kong (seven per cent), Rio de Janeiro (five per cent) and Dubai (three per cent).

Compiled by a panel of experts, and using company data, British Airways' top 13 for 2013 features new destinations and popular favourites.



http://www.femalefirst.co.uk/travel/British+Airways'Top+13+Destinations+to+Visit+in+2013-272342.html



பிரித்தானிய கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது முகநூலில், பங்கு பற்றியவர்கள் 3000 அளவில். அதில் இலங்கை முதலிடத்தில் வந்தது என்பது சிங்கள உல்லாசதுறையின் கை வண்ணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.