Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலை மாணவரின் விவரம் திரட்டுகிறது இராணுவம்

Featured Replies

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை உடனடியாகக் கிராம சேவையாளர்கள் மூலம் தமக்குச் சமர்ப்பிக்குமாறு இராணுவத்தினர் பிரதேச செயலகங்களைக் கேட்டுள்ளனர்.

ஒரு சில பிரதேச செயலகங்களுக்கு நேற்றுச் சென்ற இராணுவ அதிகாரிகள் மாணவர்களின் விவரங்களை இன்று காலை தமக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மாவீரர் தினத்தையொட்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து 4 பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அந்த மாணவர்களை விடுவிக்க கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்கள் காரணமாக நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் பல்கலைக்கழகத்துக்கு குறைவான மாணவர்களே சென்றனர். இதனால் யாழ்.பால்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலை இருந்து வருகின்றது.

இந்த நிலையில், தீவகத்தின் ஒருசில பிரதேச செயலகங்கள் மற்றும் வலிகாமத்தில் ஒரு சில பிரதேச செயலகங்கள் ஆகியவற்றிற்கு நேற்றுச் சென்ற இராணுவ அதிகாரிகள், இன்று கிராம சேவையாளர்கள் தமது பகுதியிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் பெயர்விவரங்கள், தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை திரட்டித்தர வேண்டும் என்று கோரியுள்ளனர் எனத் தெரிய வந்தது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=253211756210435646

  • தொடங்கியவர்

மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டும் சிங்கள பயங்கரவாத அரசு

 

யாழ்.பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் மாணவர்கள் எவரும் சமுகமளித்திராத நிலையில் பல்கலைக்கழகம் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.


உயர்கல்வியமைச்சின் உத்தரவுக்கமைவாக குறித்த பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இன்று ஆரம்பிப்பதெனவும், இதற்கமைய பொங்கல் தினத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் நேற்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
 

மேலும் பத்திரிகைகளில் இன்று பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என்ற செய்திகளும், விளம்பரங்களும் கூட அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையிலும் மாணவர்கள் எவரும் இன்று பல்கலைக்கழகத்திற்குச் சமுகமளித்திருக்கவில்லை.
 

இதேவேளை கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டாலேயே கற்றல் செயற்பாடுகளுக்குத் திரும்புவோம் என மாணவர்கள் முன்னரே தெரிவித்திருந்தனர்.
 

இந்நிலையில் இன்று காலை முதல் பல்கலைக்கழக சுற்றாடல் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. ஒரு சில மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று விட்டு வாசலோடு திரும்பிச் சென்றிருக்கின்றனர்.
 

இதற்கிடையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் சில பகுதிகளில் சிங்கள பயங்கரவாத அரசு படையினர் பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பல்கலைக்கழகத்திற்குச் செல்லுமாறு மிரட்டியிருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 

இதற்குள் மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்திற்குச் சமுகமளிக்காவிட்டால் பதவியை துறப்பேன் என ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்த பல்கலைக்கழக துணை வேந்தர் அடுத்து என்ன செய்யவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகின்றது

 

http://rste.org/2013/01/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

  • தொடங்கியவர்

மாணவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது படிப்பைக் கவனிக்க வேண்டும் .

உவைக்கு அரசியல் எண்ணுற மகிந்த கொம்பனி வாலுகளுக்கு

உலகில் நடப்பது தெரியாவிடாலும் கொழும்பில் நடப்பதும் தெரியாதாமே !!!!

 

பிரதம நீதியரசர் விவகாரத்தில்

கொழும்பு பல்கலைக்கழக மாணவர் 368 பேர்

கையெழுத்து போட்டு அறிக்கை விட்டிருக்கினம்

. அவர்கள் கைது செய்யப்படவும் இல்லை . துன்புறுத்த படவும் இல்லை . 

 

 

அந்த மாணவர் பெயர் பட்டியல் இதுதான் .

அவர்களது அறிக்கையும் பெயர்பட்டியலும் இதுதான் . 

From http://dbsjeyaraj.com/dbsj/archives/14595

 

 

 

 யாழ் மாணவர்கள் பிரதம நீதியரசருக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருந்தால் கைதாகி " புனர்வாழ்வு " அளிக்ப்பட்டு இருப்பார்கள்  <_<

 

தமிழ் மாணவர்களுக்கு சிங்கள ஆட்சியாளர்களினால் எந்த உரிமையும் கிடையாது :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.