Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கறவை மாடுகள் இறக்குமதியில்: 7500 இலட்சம் ரூபா மோசடி'

Featured Replies

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவிலிருந்து 1500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதில் 7500 இலட்சம் ரூபாய் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. என்று தேசிய சங்க சபையின் நிதிச்செயலாளர் தின்னியாவல பாலித தேரர் தெரிவித்தார்.

 

 

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் பால் கறக்காது. ஏனென்றால் அந்த மாடுகள் சினை மாடுகளாகவே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


அதிலும் பல மாடுகள் நோய்வாய்பட்டுள்ளன. நாட்டில் இருந்த மாடுகளை கொன்று குவித்துவிட்டு இறக்குமதி செய்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. 1500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் மாடுகளை இறக்குமதி செய்ததன் மூலமாக 7500 இலட்சம் ரூபா ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.

 

பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் 259 நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56866--7500-.html

  • தொடங்கியவர்

சுமார் 5000 மில்லியன் ரூபாய்களை திருப்பிச் செலுத்தாமல் நாட்டில் இருந்து வெளியேறிவிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள்

 

வெளிநாட்டு நிறுவனங்கள் கடன்களை செலுத்தாமல் வெளியேறி விட்டன; தொழில் அமைச்சர்

இலங்கையில் கடனைப் பெற்று முதலீடு செய்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பல கடனைச் செலுத்தாது நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கையில் உள்ள முதலீட்டு சபையின் அனுமதியுடன் வர்த்தக முயற்சிகளை மேற்கொண்ட சுமார் 10ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கையின் அரச வங்கிகளில் பெற்ற சுமார் 5000 மில்லியன் ரூபாய்களை திருப்பிச் செலுத்தாமல் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் உள்ள அரச வங்கிகளில் கடன்களை பெறும் நடைமுறையில், கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன.

ஆனாலும் அதற்குப்  பின்னர் வந்த ஜனாதிபதிகள் காலப்பகுதியில் அவை தளர்த்தப்பட்டன.

இதன்காரணாமாக, வெளிநாட்டு நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான கடன்களை பெற்றுள்ளன.


இதனையடுத்து பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் வரிகள் என்பவற்றை செலுத்தாமலேயே பல நிறுவனங்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலானவை ஆசிய நிறுவனங்கள் எனவும் தொழில் அமைச்சர் மேலும்

குறிப்பிட்டுள்ளது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114026

  • கருத்துக்கள உறவுகள்

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் பால் கறக்காது. ஏனென்றால் அந்த மாடுகள் சினை மாடுகளாகவே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.//

 

இதென்ன பிரம்மாதம்..இந்தியாவில் என்றால்  செத்தமாடுகளையே கறவை மாடுகள் என்று இறக்குமதி செய்திருப்பார்கள்... :D 

 

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்

இலங்கை பிரசை ஒருவரின் கடன் கிட்டத்தட்ட 300,000.
இது கிட்டத்தட்ட 25% அதிகரிப்பை 2012இல் கண்டது.

 

 

உண்மைக்கடன் யாருக்கும் தெரியாது :wub:

 

#1: கறவை மாடுகள் இறக்குமதியில்: 7500 இலட்சம் ரூபா மோசடி

#2: சுமார் 5000 மில்லியன் ரூபாய்களை திருப்பிச் செலுத்தாமல் நாட்டில் இருந்து வெளியேறிவிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள்

 

#1 : 7500    000 000 SLR --> ~    50,000,000 USD

#2 : 5000 0 000 000 SLR --> ~  333,333,333  USD

 

மொத்த மோசடி: 57, 000 000 000 SLR 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.