Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி மன்னர் ரிஸானாவின் கழுத்தை வெட்டினார்! இலங்கை அரசன் அரசியலமைப்பின் கழுத்தை வெட்டினார்!! - ரணில் தாக்குதல்

Featured Replies

'சவூதி மன்னர் கடந்த புதன்கிழமை இலங்கையைச் சேர்ந்த ரிஸானாவை கழுத்தை வெட்டிக் கொலை செய்தார். வெள்ளிக்கிழமை எங்கள் இலங்கை நாட்டு அரசன் எங்கள் நாட்டு அரசியலமைப்பின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்.'

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையைக் கண்டித்து எதிரணிக் கூட்டமைப்பால் நேற்று முன்தினம் களுத்துறையில் நடாத்தப்பட்ட கண்டனக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், களுத்துறை மாவட்ட ஜ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா, அசாத்சாலி, சரத் மனேந்திரா மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது உரையாற்றும்போது ரணில் மேலும் தெரிவித்தவை வருமாறு:

 

இலங்கைப் பெண் ரிஸானா சவூதியில் தற்போது அடக்கம் செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய முறைப்படி அவருக்கு சுவர்க்கம் கிடைக்கவேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியும் பிரார்த்தனை செய்கிறது.

இலங்கையில் இந்த மஹிந்த அரசு அரசியலமைப்பின் கழுத்தை வெட்டிப் புதைத்தாலும் அதற்கு மீண்டும் புத்துயிரூட்டி இந்த நாட்டில் ஜனநாயகத்தை மலரச் செய்யும் சக்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு.

இப்போது இலங்கையில் காட்டுச் சட்டமே அமுலில் உள்ளது. ராஜபக்ஷ குடும்பம் எமது நாட்டின் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்திருப்பது இதன் மூலம எமக்குத் தெளிவாகப் புலப்படுகிறது.

நீதித்துறை, நாடாளுமன்றத்தின் உரிமைகளைப் பறிப்பதற்கு முயற்சிப்பதாக அரசு நாடாளுமன்றத்தில் கூறுகிறது. நாடாளுமன்ற இறையாண்மையைப் பற்றிக் கூறும் இவர்கள், நீதிமன்றத்தின் சிறப்புரிமையைப் புறக்கணித்தார்கள். ஆனால், நாடாளுமன்றத்தின் சட்டவாக்கத்தில் நான் சிறிதும் சந்தேகம் கொள்ளவில்லை. ஆனால், அரசு நாடாளுமன்றத்தில் நாட்டின் அரசியலமைப்புக்கும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்குமேற்ப செயற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அரசியலமைப்புக்கும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கேற்பவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கை பற்றி அறிவித்த பின்பே இதை அச்சிட வேண்டும். இத்தீர்மானம் சரியாக அமுலாக்கப்பட்டிருந்தால் இந்த அறிக்கை எமது மேசையில் இருக்கவேண்டும். ஆனால், அந்த தெரிவுக்குழுவின் அறிக்கை எமக்குக் கிடைக்கவில்லை.

தெரிவுக்குழுவின் அறிக்கை அரசியலமைப்புக்கும் நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கேற்பவும்  2013 ஜனவரி 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பித்து ஒரு மாதத்தின் பின்பே விவாதத்தக்கு எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கு முன்பே தெரிவுக்குழு  பற்றிய விவாதத்தை அரசு ஆரம்பித்தது. நேர காலத்துடன் விவாதிப்பதானால் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு திருத்தம் கொண்டுவர வேண்டுமென்று நாம் தெளிவாக சுட்டிக்காட்டினோம்.

குற்றப் பிரேரணையொன்றை எதிர்நோக்கியுள்ள நீதிபதியொருவர் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிப்பதற்கு அரசியலமைப்பில் உரிமை உள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நீதிமன்ற அதிகாரம் இல்லை. ஆனால், அந்த அதிகாரம் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்டு.

ஆனால், பிரதம நீதியரசருக்குத் தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை தெரிவுக்குழு அளிக்கவில்லை. இது நாட்டின் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் மீறும் செயலாகும்.

இந்த நிலைமையிலிருந்து ஜனநாயகத்தையும் மக்களையும் மீட்டெடுப்பதற்கு எம்மோடு ஒத்துழைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=53f4c9d5-d19d-4bb6-9ef0-37b14fb00954

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.