Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விழ விழ நிமிர்தல்

Featured Replies

காட்டாற்றை தடுக்கவென அதன் குறுக்கே வீழ்ந்ததாம் ஒரு மரம். ஆனாலும் அதனையும் அடித்துதள்ளிக்கொண்டே எதுவுமே நிகழாதது போல தன் பாதையில் வேகமெடுத்துப் பாய்ந்துகொண்டேயிருந்தது


அந்தக்காட்டாறு. ஊடகங்களும் காட்டாறு போன்றவைதான்.

 

அவை சவால்களையும், தடைகளையும், வலிகளையும் சந்தித்தாலும் கூட தம் பயணத்தில் தடம் மாறுவதில்லை. (சூழ்நிலையின் மாறுதல்களுக்கேற்ப தம் குரல்களின் தொனியையும் மாற்றும் பச்சோந்திகளும் இருக்கத்தான் செய்கின்றன.


எனினும் அவற்றை ஊடகங்கள் என்று அடையாளப்படுத்துவது, நேர்மையான ஊடகங்களை அவமானப்படுத்துவது போலாகிவிடும். வேண்டுமானால் ஊது குழல்கள் என்று சொல்லலாம்.)

 

இலங்கையில் அதிக வன்முறைகளை எதிர்கொண்ட ஊடகமான உதயன் மீது இன்னொரு கோழைத்தனமான தாக்குதல் வடமராட்சியில் அரங்கேறியிருக்கிறது. வழமை போன்று உதயன் பிரதிகளை, பனிக்குளிரையும் ஊடறுத்துக்கொண்டு, முகவர் நிலையங்களுக்கு கொண்டு சென்ற விநியோகப்பிரிவுப் பணியாளர் மீது இரும்புக்கம்பியால் அடித்து அவரின் கையை முறித்திருக்கிறார்கள்.

தெய்வாதீனமாக அப்போது பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸில் ஓடிச்சென்று ஏறியதால் அவரின் உயிர் தப்பியது. இல்லாவிட்டால் முடிவு விபரீதமாக அமைந்திருக்கலாம்.

 

ஏனெனில் முள்ளுக்கம்பியால் சுற்றப்பட்ட இரும்புக்கம்பியால் குறித்த பணியாளரின் தலையை இலக்கு வைத்தே அடிக்க ஓங்கினர் மோட்டார் சைக்கிளில் வந்த அடாவடித்தனக்காரர்கள். ஆனால் நிலைமையை உணர்ந்துகொண்ட பணியாளர் தனது கையால் அந்த அடியை தடுக்க முனைந்தபோது அவரின் கை எலும்புகள் உடைந்தன.


பணியாளர் தப்பித்ததும், இனந்தெரியாக் கோழைகளின் கோபப்பார்வை அந்தப் பணியாளர் விட்டுச் சென்ற உதயன் பிரதிகள் மீதும், சரிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிளின் மீதும் படர்ந்தன. அடுத்தகணம் எழுந்தது பெருநெருப்பு. ஆசைதீர அந்த நெருப்பு மோட்டார் சைக்கிளையும், உதயன் பிரதிகளையும் விழுங்கத் தொடங்கியது.

 

இந்த வன்முறைக்கு யார் காரணம்? எதற்காக இப்படி அப்பாவிப் பணியாளரை அடித்தார்கள்? எதற்காக உதயன் பிரதிகளுக்கு கொள்ளிவைத்தார்கள்? இப்படி நிறையக்கேள்விகளுக்கு பகிரங்கமான விடைகளில்லை. ஆனாலும் எல்லோருக்கும் உள்ளூர இந்தக்கேள்விகள் அனைத்துக்குமான மிகச்சரியான விடைகள் நிச்சயம் தெரியும்.


தன்னுடைய தடத்தில் இருந்து விலக மறுப்பவர்கள் முள்ளந்தண்டுள்ளவர்கள் எப்போதுமே அதிகாரத்துக்கு பிடித்தமில்லாதவர்கள் தான். வடமராட்சியில் இந்த ஈனத்தனம் நடப்பதற்கு இருநாள் முன்னதாக லங்கா சீ நியூஸ் என்ற இணையத்தில் ஒரு செய்தி உலாவந்தது.

 

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தியாகி திலீபனின் துயிலுமில்லத்தின் படத்தை தன்னுடய நாள்காட்டியில் பொறித்து விநியோகம் செய்துள்ளது. இவ்வாறான செயல்கள் விடுதலைப் புலிகளின் மனோநிலையை ஸ்திரப்படுத்துவதாக அமைந்துள்ளது.


இது குறித்து படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதே அந்த செய்தி. கொழும்பிலிருந்து வெளியாகும் லங்கா சீ நியூஸ் இணையம் முன்னாள் சிவப்புக்கட்சிக்காரரான ஒருவருக்குச் சொந்தமானது அரசின் அதிமுக்கிய அடிவருடியான விமலின் இணையத்தளத்தின் கருத்துக்கள் கிட்டத்தட்ட அரசின் உத்தியோகபூர்வ கருத்துக்களாகவே கொள்ளத்தக்கவை.

 

எனவே அதிகாரத்தின் கழுகுப்பார்வை உதயனை வட்டமிடுகிறது என்பதை இந்த இணையத்தால்  ஈனத்தாக்குதல் இடம்பெறுவதற்கு இருநாள்களுக்கு முன்னரே உணர்த்தியுள்ளது. ஏனெனில் உதயனின் நாட்காட்டியில்தான் திலீபனின் நினைவுக்கல் (குறித்த இணையம் தெரிவித்தது போன்று திலீபனின் துயிலுமில்லம் அல்ல) பொறிக்கப்பட்டிருந்தது. அதுவும் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல.


கடந்த வருடம் தமிழர் தாயகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் புகைப்படங்கள் அந்த நாட்காட்டியில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் ஒன்றாகவே குறித்த நினைவுக்கல்லும் இடம்பெற்றிருந்தது.

 

ஒரு நினைவுக்கல் நாட்காட்டியில் பொறிக்கப்பட்டது புலிகளை ஸ்திரப்படுத்தும் என்று சொல்கின்ற அரச ஊதுகுழல்கள்தான், புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் முழங்கி வருகின்றன.

முற்றாக ஒழிக்கப்பட்ட புலிகளை எப்படி இந்த ஒரு புகைப்படம் ஸ்திரப்படுத்த முடியும்? அப்படி உண்மையிலேயே தம்மை எரித்த சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் போல புலிகளும் இந்தப் படத்தைப் பார்த்த கணத்திலேயே உயிர்த்தெழுவார்கள் என்றால் சனல்4 காணொலிகள் வெளிவந்த போதே புலிகள் உயிர் பெற்று, பொங்கியெழுந்து பாய்ந்திருக்க வேண்டுமே.

 

அது மட்டுமில்லாமல் புலிகளின் தலைவரின் இருப்பிடன், புலிகளின் ஆயுதங்கள், என்பவற்றை அரச ஊதுகுழல்கள் (ஊடகங்கள் என்று அவைற்றைச் சொல்ல கூச்சமாகவே இருக்கிறது) காண்பிக்கும் போது புலிகள் ஸ்திரமடையமாட்டார்களா?


குறித்த இணையத்தில் வெளிவந்த செய்தியில் திலீபனின் துயிலுமில்லம் பொறிக்கப்பட்ட நாட்காட்டி தொடர்பாக படையினர் விசாராணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் உண்மையானால், அந்த விசாரணைகளின் முடிவில் விதிக்கப்பட்ட தண்டனை தானா இந்தபிரதிகளி தீயிட்டு எரிப்பும், பணியாளர் மீதான தாக்குதலும்? என்ற சந்தேகம் முளைகொள்கிறது.

 

ஆயினும் அடி மேல் அடி விழத்தான் இரும்பு இன்னும் உறுதியாகும். குருதியில் குளித்த பின்னும் கூட வலிகளை வலிமையாக்கி உதித்த ஊடகம் உதயன். இன்னும் எத்தனை வன்முறைகள் பாய்ந்தாலும் அதே உறுதியோடு உண்மையின் குரல்கள் ஓங்கி ஒலிக்கும்:அதிகாரத்தின் செவிப்பறைகள் கிழியும் வரை.

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=1407545014605752

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.