Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷரியா; சவூதி: கனேடியர் மற்றும் 5 பிரித்தானியர்கள் விடுவிக்கப்பட்ட விடயம்

Featured Replies

revenge.png

மனிதர்களை நெறிப்படுத்துவதற்காகத்தான் அனைத்து மதங்களும் சட்டங்களை இயற்றின. அந்த சட்டங்கள் மனித சமூகத்தின் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் என்பதே ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும் கூட.

இஸ்லாமிய சமூகத்தை நெறிப்படுத்தும் ஷரீஆ சட்டதிட்டங்கள் மீதும் இவ்வாறான நம்பிக்கையே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் கூட இருக்கும். எனவே, ஷரீஆவைப் பின்பற்றுவதாகக் கூறும் நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப ‘மொழிபெயர்க்கப்படும்’ ஷரீஆ மற்றவர் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத விடயமாகும்.

 

அதையும் விட முக்கியமாக, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை எவ்வாறு ‘மொழிபெயர்க்கப்படுகின்றன’ , முன்னெடுக்கப்படுகின்றன போன்ற விடயங்கள் கூர்ந்து கவனிக்கப்படும்.

 

ஷரீஆவும் சவுதியும்

 

சவுதி அரேபியா எனும் நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் இரு பெரும் அடையாளங்களான கஃபதுல்லாஹ் (மக்கா) மற்றும் நபிகளரின் பள்ளிவவாசலான மஸ்ஜிதுன் நபவி (மதீனா) யும் அங்கே இருப்பதனால் இஸ்லாம் எனும் வார்த்தைக்கும் மார்க்கத்துக்கும் எடுத்த எடுப்பில் நோக்கப்படும் முதலாவது இடம் சவுதியாக இருக்கிறது. எனவே, அங்கே இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் அத்தனையும் மிக அவதானமாக கவனிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

 

இதனிடையில் வெளியுலகைப் பற்றியோ அல்லது இஸ்லாத்தின் பார்வையோ எவ்வாறு இருக்கப்போகிறது என்பதை விட சவுதியின் சட்டவல்லுனர்கள் தற்காலத்தில் தாம் விரும்பும் வழிமுறையிலேயே ஷரீயாவினை மொழிபெயர்க்கிறார்கள் செயற்படுத்துகிறார்கள் என்பது பரவலாக, உலகளாவிய ரீதியில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டாகும்.

 

எனினும், இது பற்றி எந்தக் கவலையுமில்லாத சவுதி அரசு நபிகளார் அறிமுகப்படுத்திய மார்க்கத்தின் அடிப்படையெனும் பெயரில் ‘பாரபட்சமற்ற’ சட்டங்களை உருவாக்கவும் மதிக்கவும் தவறியே வருகிறது.

 

ஷரீயாவின் அடிப்படையை நவீன காலத்திற்கேற்ப மொழிபெயர்க்கும் பல இஸ்லாமிய நாடுகள் அதிலும் குறிப்பாக அடிப்படைவாதத்தின் அடிப்படையில் அவ்வப்போது மாத்திரம் சட்டங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியும் தேவையேற்படின் அவற்றை மாற்றியும் அமுல் படுத்தும் போது அது சாதாரண முஸ்லிமை எந்த அளவு பாதிக்கும் என்பது குறித்து அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. எனினும், மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் அன்றாட வாழ்வியலையும் நன்குணர்ந்தே அன்றைய ஆட்சியாளர்கள் (கலீபாக்கள்) சட்டங்களை நிறைவேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

அதனடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடில்லாததாகவும் யாவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நியதி, ஒவ்வொரு முஸ்லிமினதும் எதிர்பார்ப்பும். அது தவறப்படுமிடத்து அவன் அதைக் கேள்வி கேட்பதுவும் விமர்சிப்பதும் கூட அவன் மீதான காலத்தின் திணிப்பாகும்.

 

ரிஸானாவும் ஷரீயாவும்

 

இலங்கை முஸ்லிம்களும் அடிப்படையில் ஷரீயா மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், ஒரு சில கிராமங்களில் இன்றளவும் கூட தாம் செய்த தவறுகளுக்கு பள்ளி நிர்வாகத்தினை அணுகி இஸ்லாமிய சட்டப்படி தண்டனைகளைப் பெற்றுக்கொள்வோர் இருக்கத்தான் செய்கின்றனர். அதன் அடிப்படையில் ஆங்காங்கே ‘ஹத்’ அடிக்கும் செயற்பாடு கூட நடைபெறுகிறது என்பது உண்மை.

எனினும், பிரதானமாக இலங்கையின் பொதுவான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே முஸ்லிம் சமுதாயம் வாழ்கிறது.எனவே, நவீன மனித சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் அத்தனைமனிதநேயம் தொடர்பான எதிர்பார்ப்புகளும் அவர்களிடத்தில் இருக்கவே செய்யும்.

அண்மையில் சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட “ரிஸானா நபீக்” இன்று ஒரு பேசு பொருளாக மாறி, அது ஷரீயா தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் விமர்சிக்கப்படக்கூடாது எனும் எண்ணம் ஒரு சாராரிடம் இருப்பதால், ரிஸானாவின் விடயத்தில் நியாய அநியாயங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் மெளனம் காக்க விரும்புகின்றார்கள். அதே வேளை, இன்றைய நவீன சமூகத்தில் காணப்படும் மனிதநேய அடிப்படைகளைக் கொண்டு இன்னும் ஒரு சாரார் அவர் குற்றமிழைத்தபோது அவருடைய வயதையும், முறையற்ற விசாரணைக்குப் பேர் போன சவுதியையும் குற்றம் சாட்டித் தம் தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர்.

 

ஏன்?

 

இது ஷரீயாவிற்கு எதிரான கொந்தளிப்பன்று, ஷரீயாவை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அதன் பேரில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்படுத்தப்படும் இழுக்குக்கு எதிரான கொந்தளிப்பாகும் என்பதையும் இலங்கை இஸ்லாமிய சமூகம் உணராமல் இல்லை.

ரிஸானாவின் விடயத்தில் “மன்னிப்பு” என்கிற பேச்சே இல்லாமல் போனதற்கு ரிஸானாவின் ஏழ்மை காரணமா எனும் கேள்வி இங்கே தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் சவுதியில் இதற்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்ட “பணக்காரர்கள்” அதிலிருந்து இதற்கு முன் உலகறிய விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

ஆனாலும் இதற்கு முன்னர் விடுதலையான “பணக்காரர்கள்” கூட சவுதி காவல்துறையின் துன்புறுத்தலின் பேரிலேயே தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்ததைக் கொண்டு பார்க்கும் போது இந்த “ஏழை” ரிஸானாவிற்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது அப்பட்டமாகத் தெளிவாகும்.

 

எனினும், இங்கே சில விடயங்கள் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவையாகும். அதில் பிரதானமானது சம்பந்தப்பட்டவரின் சொந்த நாட்டிற்கும் சவுதி அரேபியாவிற்குமான ராஜதந்திரத் தொடர்பாகும். ஏனெனில், அதன் முக்கியத்துவம் இல்லாத போது சவுதி மண்ணில் தண்டைனை விதிக்கப்பட்ட ஒருவரின் எதிர்காலம் குறித்துப் பேசும் தகுதியை தண்டனை பெற்றவரின் நாடு இழக்கிறது.

 

இலங்கை – சவுதி அரேபிய உறவைப் பொறுத்தவரை இலங்கை ஒரு ஏழை நாடு மாத்திரமன்றி தங்கி வாழும் நாடாகும். என்னதான் ராஜதந்திர ரீதியில் சில தொடர்புகள் கையாளப்பட்டாலும் சவுதி மண்ணில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய சக்தியோ அல்லது சமமாக இருந்து பேசும் வல்லமையோ இல்லாத நாடு இலங்கை என்பதை யாரும் மறக்கலாகாது.

 

எனவே இலங்கைக் குடிமகன் ஒருவர் சவுதி மண்ணில் தண்டனை பெற்றால், அதன் இறுதி முடிவில் எந்த மாற்றத்தைச் செய்யும் ஆளுமையும் இலங்கைக்கு இல்லை என்பது ஆகக்குறைந்தது ரிஸானாவிலிருந்தாவது தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். இதை எதிர்காலத்தில் சவுதிக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்வோர் நன்கு புரிந்து கொள்வது மாத்திரமன்றி இலங்கையர் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்வதை நெறிப்படுத்தி அதற்காகக் கட்டணமும் அறவிடும் இலங்கை வெளிநாட்டுப் பணியகம் இது தொடர்பில் மேலதிக கவனம் எடுத்து, பணியாளர்கள் செல்லும் நாடுகள், அதன் சட்ட திட்டங்கள் குறித்து ஏலவே இலங்கையரை எச்சரித்து அனுப்புவதும் எதிர்காலத் தேவையாகிறது.

அந்த வகையிலே, இந்தக் கோணத்தை நன்குணர்ந்த இலங்கை முஸ்லிம்கள் ரிஸானாவின் விடயத்தை அரசியலாக்கி இலாபம் பார்க்க முனைந்த முஸ்லிம் அரசியல் வாதிகளை நொந்து கொள்வதில் எந்தத் தவறுமில்லை, அது மாத்திரமன்றி இலங்கையின் ராஜதந்திர நகர்வுகள் சவுதி அரசின் செவிகளில் ஆழமாகப் பதியாமையைக் கவனத்திலெடுத்து அரசை நொந்து கொள்வதும் தவறாகப் பார்க்க முடியாத விடயமாகும்.

எனினும், உணர்ச்சிவசப்படுவதை விட ஆழமாகச் சில உண்மைகளை உணர்ந்து கொள்வது எதிர்காலத்திற்கு நல்லதாகும். ராஜதந்திர உறவுகளால் தம் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய நாடுகளால் தம் நாட்டுக் குடிமக்களை சவுதி மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கிறது. இதே ஷரீயாவின் அடிப்படையில் அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஆயினும், மனித சமூகத்தை நெறிப்படுத்த அமைக்கப்பட்ட ஷரீயா சட்டதிட்டங்கள் தண்டனையை விட மன்னிப்பை வலியுறுத்துகிறது எனும் உண்மையை வெளிக் கொண்டு வர முடியாத வண்ணம் கொடூரம் வெளியில் வருவதனால் உலக மக்கள் பார்வையில் ஷரீயாவே ஒரு காட்டுமிராண்டித்தனமாகத் தெரிகிறது.

 

இது பார்ப்பவர்களின் தவறன்றிக் காட்டுபவர்களின் தவறாகும், ஆனாலும் உலகைப் பற்றிக் கவலைப்படும் நிலையில், குறிப்பாக இலங்கை போன்ற தங்கி வாழும் நாடுகளைப்பற்றிக் கவலைப்படும் நிலையில் சவுதி அரேபியா எப்போதும் இருந்ததில்லை எனவே அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு முக்கியத்துவமற்ற விடயமாகும்.

 

ஆயினும், உண்மைகளை மறைக்க முடியாது, எனவே ஒரு ஏழை நாட்டின் ஏழைப் பெண்ணின் மரண தண்டணையைத் தவிர்க்க அக்குற்றத்தை அவள் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியாதபடி சந்தர்ப்ப சூழ்நிலையும், அவள் தான் செய்தாள் என்று ஏற்றுக்கொள்ள வைத்த காட்டுமிராண்டித்தனமும், மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்த இறந்த குழந்தையொன்றின் தாயும் இங்கே ஒன்றரக் கலந்தே ரிஸானாவைப் புதை குழிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

 

இந்த சந்தர்ப்பத்தில் பல விடயங்கள் உற்று நோக்கப்பட வேண்டும், அதில் பிரதானமானது தான் ஐந்து வருடங்கள் கழித்தும் அந்தத் தாய் மன்னிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு (அப்படிக் கூறியதனாலேயே அவருக்கு மரண தண்டனை கொடுக்கும் நிர்ப்பந்தம் அமைந்ததாக சவுதி அரசு கூறுகிறது) மன்னிப்பின் மகிமை இஸ்லாம் பிறந்த மண்ணில் பிறந்து வளர்ந்து இஸ்லாம் ஊட்டப்பெற்ற ஒரு தாய்க்கு இல்லாமல் போனதை நினைத்து வெட்கப்படவும் வேண்டும் அதே வேளை அந்தத் தாயின் வேதனையைப் புறக்கணிக்காது உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.

 

திருமறை அல்-குர்ஆன் மன்னிப்பை எந்த அளவு தூரம் எடுத்தியம்புகிறது எனும் முக்கியம் சமூகத்திற்கு ஊட்டப்பட வேண்டிய தேவையும் இங்கு தொக்கு நிற்கிறது என்பது அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

 

சவுதி மண்ணில் ரிஸானா போன்றே மரண தண்டனை விதிக்கப்பட்ட கனேடியர் William Sampson (2001-2003) மற்றும் 5 பிரித்தானியர்கள் இறுதியில் இரண்டு வருட கொடுமையான சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுதலையான போது இந்த “மன்னிப்பு” எனும் வாசகமே முன்நிலைப்படுத்தப்பட்டது.

அப்படியானால் அந்த மன்னிக்கும் பக்குவம் இங்கே இல்லாமல் போனதற்கு யார் பொறுப்பெடுப்பது? அந்த மன்னிப்பின் மகத்துவம் இஸ்லாமிய சமூகத்தில் எடுத்துச் சொல்லப்படுவதற்கும் அவை ஆழமாகப் பதிவதற்கும் யார் பொறுப்பெடுப்பது? ஏழை மக்களால் இந்த மன்னிப்பைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது ஆனால் பணக்காரர்கள் ஆகக்குறைந்தது ரா’ஜதந்திர அழுத்தங்கள் மூலமாவது ‘மன்னிப்பை’ பெற்றுக்கொள்ள முடிகிறது எனும் இரு வேறு வரலாற்று நிகழ்வுகள் எமக்கு சொல்லித்தரும் சங்கதிகள் நிறையவே இருக்கின்றன. ஆனாலும் சிந்தித்தாலன்றி ஈடேற்றம் கிடையாது!

 

- மானா

 

 

கனேடியர் William Sampson விவகாரத்தின் தொகுப்பு:

- Feb. 4, 2001: Saudi Interior Minister Prince Nayef issues a statement

on state-run Saudi television that a Canadian and two European men

are in custody in connection with two explosions – a Nov. 17 car

combing that killed a British man and injured his wife, and a Nov. 22 car

bomb that injured two men and a woman, all Britons.

- Following Nayef’s announcement, three men appear on Saudi

television and confess to the bombings. The Canadian is identified as

William Sampson, 42, an employee of a Saudi government agency that

provides loans to industrial ventures.

 

- Canadian Embassy officials in Riyadh say they weren’t allowed to see

Sampson until Jan. 27. He was arrested in mid-December 2000.

 

- Feb. 6: Foreign Affairs Minister John Manley says Canada has asked

Saudi Arabia for additional consular contact with Sampson.

 

- Feb. 11: Canadian ambassador in Riyadh meets with Prince Nayef to

discuss case against Sampson. Told the Canadian cannot have legal

representation while investigation continues.

 

- March 16: Sampson, complaining of chest pains, is taken from jail to

hospital for angioplasty to clear a blocked artery.

 

- April 23: Sampson admitted to hospital again for a blocked artery.

- May 10: Sampson’s father James, 70, of White Rock, B.C., allowed

45-minute visit with his son in Saudi prison.

 

- May 28: Family members and Canadian diplomats say they believe

Sampson is being tortured in jail because of visible injuries. Saudi

authorities tell the family injuries resulted from a suicide attempt.

Ottawa investigated whether Sampson was tortured.

 

- May 31: Saudi Crown Prince Abdullah cancels trip to Ottawa to protest

Canadian “meddling” in security operations after inquiries made into

Sampson’s injuries.

2002

 

- Jan 30: British newspaper, the Guardian, says Sampson was part of a

group of western pub drinkers falsely accused, imprisoned and in some

cases tortured in an official campaign to blame the bombings on

feuding bootleggers rather than on Saudi religious extremists.

 

- Feb. 4: Sampson refuses to leave his cell, where he has been in

solitary confinement since his arrest, to meet Canadian diplomats. No

reason given.

 

- Feb. 28: Saudi newspaper reports that Sampson and six other

foreigners have been brought to trial.

 

- April: Ottawa receives report that Sampson has been secretly

convicted and sentenced to death in Saudi Arabia and two subsequent

appeals were unsuccessful.

 

- Saudi lawyer representing Sampson and other defendants says no

trial or conviction have occurred.

 

- May 3: Saudi ambassador to Canada says Sampson has recanted his

confession, which will not be used against him by the Supreme Judicial

Council, a panel of five judges that will decide his fate.

 

- July 26: Canadian officials say they’ve received confirmation that

Sampson was found guilty and sentenced to death during a secret trial

earlier in the year. Ottawa was not told at the time. Saudi lawyers file a

final appeal to the country’s Supreme Court

.

- Sept. 23: Mohammed Al-Hussaini, Saudi ambassador to Canada, says

a verdict could come “any time … Soon, I think, you will hear about it.

The final verdict.”

 

- Sept. 26: Sampson’s lawyers release appeal document saying he was

deprived of sleep for up to 10 days, punched, tied up, hung upside

down and beaten; also threatened that his family would be harmed

unless he confessed. Document signed by defence lawyers Ahmed

al-Tuwaijiri and Salah al-Hujailan.

 

- Dec. 2: Amnesty International launches campaign to commute

Sampson’s death sentence.

2003

- Jan 7: Sampson’s future in doubt after one of seven westerners

imprisoned in Saudi Arabia on bombing charges dramatically changes

his testimony and confesses to the crime.

- March 4: Sampson, in prison for more than two years, mostly in

solitary confinement, reacts violently to visit from his father, punching

him and telling him to leave.

- May 17: Eldest son of Christopher Rodway, the Briton killed in car

bombing in Riyadh in 2000, officially forgives Sampson and other

westerners convicted of the crime. This is an important factor for

clemency appeal under Saudi law.

- May 18: A lawyer for Sampson and his co-accused files appeal for

clemency.

- May 22: Saudi Arabia’s ambassador to Britain Prince, Turki al-Faisal,

suggests Sampson and five Britons could be given some form of

clemency.

- Aug. 8: Saudi Arabia releases Sampson and five Britons.

 

http://www.sonakar.com/2013/01/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%80%e0%ae%9f%e0%af%87-%e0%ae%87/

முக்காடு போட்டுக்கிட்டு  Shopping Centre வரை வீட்டு றைவருடன் போய்,  Shopping Centre க்குள் உள் நுளைந்து பின் வேறு ஆண்களுடன் செல்லும் இவர்களை இந்த சட்டம் எப்படி தண்டிக்கின்றது. எல்லாம் வெளியுலகுக்கு தங்கள் மதத்தை பீற்றிக்கொள்ளமட்டுமே. உள் வீடோ நாறுகின்றது.

 

வார விடுதியில் பக்ரைனில் உல்லாசம்

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி அராபியர் பற்றிய நல்ல அறிவூட்டும் இணைப்பை தந்ததற்கு நீல பறவைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.