Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் நம்பியாருக்கும் பான்கீ மூனுக்குமான உறவும், ஐநா அறிக்கைகளின் மறைப்பும் - போல் நியூமன்

Featured Replies

விஜய் நம்பியாருக்கும் பான்கீ மூனுக்குமான உறவும், ஐநா அறிக்கைகளின் மறைப்பும் - போல் நியூமன் [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 12:42 GMT ] [ நித்தியபாரதி ]

Paul%20-Newman.jpgபுதுடில்லியில் 23 வயதான யுவதி ஒருவர், கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதை எதிர்த்து கடந்த இரு வாரங்களாக பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில், பெண்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாக உலக நாடுகள் சிலவற்றின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், புதுடில்லியில் இடம்பெற்ற பாலியல் வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதிக்கு ஆதரவாக சிறிலங்காவில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் இது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் திரு.பான்கீ மூன் விடுத்துள்ள அறிக்கை தொடர்பான இவ்விரு செய்திகளும் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. 

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் நாள்தோறும் பல்வேறு வன்புணர்வுச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும் அவை ஊடகங்களில் வெளிவருவதில்லை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். ஆனால் சிறிலங்காவில், புதுடில்லி யுவதி மீதான வன்புணர்வுச் சம்பவத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது சொந்தநாட்டில் வாழும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் மீறல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்பில் பாராமுகம் காண்பிக்காது இந்திய மாக்கடலின் மறுபுறத்தே உள்ள நாடான இந்தியாவில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வை எதிர்த்து இதில் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்துள்ளமை என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இந்தியா தனது பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என பான்கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்தியாவுக்கு அயலிலுள்ள சிறிலங்காவில் வாழும் தமிழ்ப் பெண்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் இவ்வாறான பாலியல் சித்திரவதைகள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் தனது கவனத்தைச் செலுத்த மறந்துவிட்டார். 

சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் வாழும் 140,000 வரையான கணவன்மாரை இழந்த பெண்களில் 90,000 பேர் போரின் போது தமது கணவன்மாரை இழந்தவர்களாவர். இவர்களுள் அரைவாசி எண்ணிக்கையான பெண்கள் 40 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். 

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள், யுத்தம் முடிவுற்ற போதிலும் தொடர்ந்தும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு பாலியல் சித்திரவதைகளுக்கு அனுபவிக்கிறார்கள் என்பதையும், வடக்கு கிழக்கானது சிறிலங்கா இராணுவத்தால் ஆளப்படுவதால் இந்தப் பெண்கள் நாளாந்தம் எவ்வாறான துன்பங்களை அனுபவிக்கின்றனர் என்பதையும் இந்த உலகம் நன்கறியும். 

பாதிக்கப்பட்ட பெண்கள் இது தொடர்பில் வெளியில் தெரியப்படுத்துவதில் அச்சமடைகிறார்கள். மாறாக இது தொடர்பாக முறையீடு செய்தால் தாம் குற்றமிழைத்தவர்களால் தாக்குதலுக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே சிறிலங்கா வடக்கு கிழக்கில் நாளாந்தம் இடம்பெறும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்பான செய்திகள் வெளியில் வருவதில்லை. இவ்வாறு பாதிக்கப்படும் இந்த தமிழ்ப் பெண்களுக்காக குரல் கொடுக்க யார் முன்வருகிறார்கள்? 

கடந்த ஆண்டில் கிறீஸ் பூதம் போன்ற சில வடிவங்களில் தமிழ்ப் பெண்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் மீதும் இவ்வாறான பல்வேறு தாக்குதல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவப் படைகள் மேற்கொண்டன. ஆனால் இவை தொடர்பான செய்திகளை இந்த உலகம் நன்கறிந்த போதிலும் கூட, இந்தப் பெண்களுக்காக குரல் கொடுக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை, அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. 

இடம்பெயர்ந்து முகாங்களில் வாழும் தமிழ்ப் பெண்கள் மற்றும் சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் சென்றுள்ள பெண்களுக்கான வீடமைப்பு, சுகாதார வசதிகள், நீர் வசதிகள், பொருத்தமான வேலை வாய்ப்புக்கள், கல்வி வசதிகள் போன்றன நிறைவுசெய்யப்படவில்லை. 

இவ்வாறு பாதிக்கப்பட்ட, குரல் கொடுக்க முடியாத தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக சிறிலங்காவின் ஆளுங்கட்சியிடம் திரு.பான்கீ மூன் ஏன் எந்தவொரு கேள்வியையும் எழுப்பவில்லை? 

மே 2009ல் அதாவது சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் இறுதிக் கட்டத்தை அடைந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய முன்வந்த போதும் கூட, ஐ.நா மற்றும் இதன் செயலாளர் நாயகம் புலிகளைப் பாதுகாப்பாக சரணடைய வைப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காது அமைதி காத்ததற்கான காரணம் என்ன? 

இறுதி யுத்தத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்திடம் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் சரணடைவதை தனிப்பட்ட ரீதியாக கண்காணித்துக் கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதரான திரு.விஜய் நம்பியார் இதில் தவறிழைத்ததை ஐ.நா வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலோ அல்லது ஐ.நாவின் சாள்ஸ் பெற்றியால் தயாரிக்கப்பட்ட அறிக்கையிலோ சுட்டிக்காட்டப்படவில்லை. 

ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதராகக் கடமையாற்றிய விஜய் நம்பியார், புலிகள் அமைப்பின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளரிடம் சிறிலங்கா அரசாங்கப் படைகளிடம் சரணடைவதற்கு முன்னர் வெள்ளைக் கொடியை ஏந்திவருமாறு தனிப்பட்ட ரீதியாக அறிவுரை வழங்கியிருந்தார். இவ்வாறு சரணடைய முன்வந்த புலிகள் மற்றும் இவர்களுடன் பயணித்த பெண்கள், சிறார்கள் ஆகியோர் இறுதியில் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை காலம்சென்ற பிரபல ஊடகவியலாளரான மேரி கொல்வின் பதிவு செய்திருந்தார். 

இவ்வாறான ஒரு மிகப் பெரிய தவறிழைத்த பின்னரும் கூட இவர் தொடர்ந்தும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதராகக் கடமையாற்றுகிறார். இவர் ஒருபோதும் சிறிலங்காவின் யுத்த வலயத்திற்கு செல்லவில்லை. விஜய் நம்பியாருக்கும் பான்கீ மூனுக்கும் இடையில் 40 ஆண்டு கால உறவு காணப்படுவதாக கூறப்படுகிறது. 

விஜய் நம்பியாரின் மூத்த சகோதரரான ஓய்வு பெற்ற லெப்.ஜெனரல் சற்றீஸ் நம்பியார் சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றியிருந்தார். இந்தக் காரணத்தைக் கொண்டு இந்தியாவின் செல்வாக்குடன் புலிகள் சரணடைவதில் விஜய் நம்பியார் தனிப்பட்ட ரீதியாக பங்களித்திருக்க முடியும். எதுஎவ்வாறிருப்பினும், இது தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டிய தேவையுள்ளது. 

ஐ.நா செயலாளர் நாயகமாக பான் கீ மூன் நியமிக்கப்படுவதற்கு சிறிலங்கா தனது ஆதரவை வழங்கியிருந்தது. அத்துடன் ஐ.நா செயலாளர் நாயகத்தின் மருமகன் தமிழர் எதிர்ப்புக் கொள்கையை உடையவர். இந்திய அமைதி காக்கும் படை சிறிலங்காவில் பணியில் ஈடுபட்ட போது பான் கீ மூனின் மருமகன் பெற்றுக் கொண்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் இவரது கடந்த கால ஆக்கங்கள் போன்றவற்றின் மூலம் இவர் தமிழர் எதிர்ப்புக் கொள்கையை உடையவர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 

இந்நிலையில், பான் கீ மூன், தமிழ் மக்கள் தொடர்பான சில தீர்வுகளை எட்டுவதில் இவரது மருமகனின் கருத்துக்களும் பெருமளவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. 

லிபியா, எகிப்து மற்றும் சிரியா போன்றவற்றுடன் ஒப்பிடும் போது, சிறிலங்கா விடயத்தில் ஐ.நாவால் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இரட்டை நிலைப்பாடு காணப்படுவதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள முடியும். 

சிறிலங்கா இராணுவத்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு சில மாணவர்கள் இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அனைத்துலக நாடுகள் தமது விசனங்களை முன்வைத்த போது, இது தொடர்பில் ஐ.நா எவ்வித அறிக்கையையும் வெளியிடாதது ஏன்? 

தமிழ் மக்களின் விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் பான் கீ மூன் அமைதி காப்பதானது இது தொடர்பில் ஐ.நா மற்றும் பான் கீ மூன் நடவடிக்கைகளை எடுக்க முன்வரவில்லை என்பதைக் காட்டுகின்றது. 

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் யுத்த கால மீறல்கள் தொடர்பாக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா வல்லுனர் குழு, அனைத்துலக சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் கோரிய போதிலும் கூட, தனியொரு குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் சிறிலங்காவின் ராஜபக்ச அரசாங்கமானது இதனை முற்றாக மறுத்திருந்தது. 

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையானது சிங்கள மயமாக்கல், இராணுவ மயமாக்கல், பொருளாதார புறக்கணிப்புக்கள் போன்ற பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை சீர்ப்படுத்தி சிறிலங்காவில் பயனுள்ள பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக அனைத்துலக சமூகத்தால் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றுள்ளன. தற்போதைய சிறிலங்கா ஆளும் அரசாங்கத்தை ஒருவழிக்கு கொண்டு வருவதில் அனைத்துலக சமூகம் தோல்வியுற்றுள்ளது. யுத்தம் முடிவடைந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் யுத்தக் குற்றவாளிகள் சுதந்திரமாக திரிகின்றனர். 

21ம் நூற்றாண்டில் இடம்பெற்ற மிக மோசமான இனப்படுகொலையை சிங்கள இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். இந்த இனப்படுகொலையில் 146,679 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

தமிழ் மக்களின் உரிமைக்கு ஆதரவாக மனித உரிமை அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஐ.நாவின் 99வது சாசனத்தைப் பயன்படுத்தி பான்கீ மூன், அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான கட்டளையை வழங்கமுடியும். அத்துடன் சிறிலங்கா மீதான சுயாதீன விசாரணை அறிக்கையை பாதுகாப்பு சபை மற்றும் பொதுச் சபை ஆகியவற்றின் பார்வைக்காக வழங்குவதற்கான கட்டளையை பான் கீ மூன் வழங்க முடியும். 

இதன்மூலம் யார் குற்றவாளிகள் என்பதை இந்த உலகம் தீர்மானிக்க முடியும். இதன்மூலம், தான் விட்ட எல்லாத் தவறுகளுக்கும் ஐ.நா தானாகவே பரிகாரம் தேடமுடியும். ஐ.நா மற்றும் பான்கீ மூன் போன்றோர் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டியவர்களேயன்றி, இவர்கள் இரங்க வேண்டியவர்கள் அல்ல என்பதை வரலாறு நினைவுபடுத்துகிறது. 

*The author holds a Doctorate of Philosophy on ‘Internal Displacement and Human Rights situation in Northern Sri Lanka from Bangalore University. He was one of the four public speakers at the Permanent People’s Tribunal on War Crimes against Sri Lanka. 

செய்தி வழிமூலம்: Colombo Telegraph 

மொழிமாற்றம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20130115107604

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.