Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா – சிறிலங்கா: வலிகள் நிறைந்த உறவு

Featured Replies

இந்தியா – சிறிலங்கா: வலிகள் நிறைந்த உறவு [ புதன்கிழமை, 16 சனவரி 2013, 01:35 GMT ] [ கார்வண்ணன் ]

salman-khurshid1.jpgதேசிய நீரோட்டத்தில் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டு வருவதற்கான அரசியல், ஜனநாயக மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாக, livemint இணையத்தில், எலிசபெத் றொக்கி எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. 

சிறிலங்காவில், மிகப்பெரிய அயல் நாடான இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தவாரம் புதுடெல்லிக்கு வரும் போது, இருநாடுகளும் மீளாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, இருதரப்பிலும் இந்த விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

விஞ்ஞான, தொழில்நுட்ப, விவசாயத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளை ஒன்றிணைக்கும் அமைப்பான, இந்திய – சிறிலங்கா கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், புதுடெல்லி வரவுள்ளார். 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவுக்கு ஜி.எல்.பீரிசும், இந்தியக் குழுவுக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித்தும் தலைமை வகிக்கவுள்ளனர். 

எஸ்.எம்.கிருஸ்ணாவுக்குப் பதிலாக கடந்த ஒக்ரோபர் மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சராக சல்மான் குர்சித் நியமிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் மேற்கொள்ளவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும். 

2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் மீள்கட்டுமான, அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. 

தொடருந்துப் பாதைகளை அமைத்தல், தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்தல், பாடசாலைகள் மற்றும் வீடுகளை புனரமைத்தல், நிர்மாணித்தல், விவசாய உள்ளீடுகளை வழங்கல் போன்றவற்றில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அதேவேளை, தேசிய நீரோட்டத்தில் தமிழ்ச் சமூகத்தைக் கொண்டு வருவதற்கான அரசியல், ஜனநாயக மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. 

தாம் ஒதுக்கி வைக்கப்படுவதாக சிறுபான்மைத் தமிழ்ச் சமூகத்தில் தோன்றிய உணர்வே, 1980களில் இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு காரணமாக இருந்தது. 

தமிழரின் பாரம்பரியமான வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சிறிலங்காவில் இருந்து பிரித்து, தனிநாடு அமைக்குமாறு தமிழ்ப் பிரிவினைவாத அமைப்புகள் கோரின. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துடன், இந்தப் போர் 2009 இல் முடிவுக்கு வந்தது. 

ஆனால், அதன் பின்னர், குறிப்பாக, போரின் இறுதிக்கட்டத்தில், மனிதஉரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சிறிலங்கா அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டில் வாழும் 62 மில்லியன் மக்களுடன் நெருக்கமான கலாசார, மொழித் தொடர்புகளைக் கொண்டுள்ள, தமிழர்கள் சிறிலங்காவில் நடத்தப்படும் விதம் இந்தியாவில் உணர்ச்சிபூர்வமான விவகாரமாக உள்ளது. 

தீவு நாடான சிறிலங்காவுக்கும் அதன் மிகப்பெரிய அயல் நாடான இந்தியாவுக்கும் இடையிலான உறவு, பாரம்பரிய நெருக்கம் கொண்டதாகவே உள்ளது. 

ஆனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பின்னர், அண்மைக்காலமாக இந்த உறவில் வலிகள் தோன்றியுள்ளன. 

கடந்த ஆண்டில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

சிறிலங்காவின் நிலை குறித்து வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மீளாய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து இன்னமும் இந்தியாவுடன் கலந்துரையாடப்படவில்லை என்று சிறிலங்கா தரப்பில் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார். 

கடந்த ஆண்டில், இறக்குமதி கார்கள் மீதான சுங்கவரியை சிறிலங்கா அதிகரித்தது, பொருளாதார ரீதியிலும் உறவுகளில் வலிகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நடவடிக்கை, சிறிலங்காவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாளியான இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனென்றால், சிறிலங்காவின் வாகன சந்தையில் 95 வீதத்தை இந்திய நிறுவனங்கள் தம்வசம் வைத்துள்ளன. 

இந்தியாவின் மூலோபாய பொருளாதாரப் போட்டியாளரான சீனாவின் தலையீடு சிறிலங்காவில் அதிகரித்து வருவதும் இந்தியா கவலை கொள்ளும் மற்றொரு விவகாரமாகும். 

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா, சிறிலங்காவில் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களில் தொடர்புபட்டுள்ளது. 

இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான, அம்பாந்தோட்டை துறைமுகமாகும்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130116107607

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.