Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.

Featured Replies

எல்லா தமிழ் ஊடகங்களும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஆதரவு அழிக்க வேண்டும்.ஊடகங்கள் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும், யாரால் நடத்தப்பட்டாலும் அவை தமிழ்தேசியத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தால் கட்டாயம் ஒளி,ஒலி பரப்ப வேண்டும்.யாழ்க் களத்தில் கூட இந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆகவே இங்கே நிகழ்வு நடை பெற்றது அறிவிக்கப்படவில்லை என்று கூறும் காரணம் வலுவற்றதாகவே இருக்கிறது.மேலும் இதற்குத் தடை காரணம் என்று கூறுவது வலு அற்றது.இந்த நிகழ்வுகள் தடை செய்யப் பட்ட எந்த ஒரு இயக்கதாலும் நடத்தப்படவில்லை, சகல ஜன நாயக உரிமைகளும் உடய பிரித்தானியப் பிரசைகளால் நடத்தப்பட்டது அதுவும் இங்கு பிறந்து வளர்ந்த இளயவர்களால்.இவர்களை நாங்கள் தான் ஊக்கப்படுத்த வேன்டும்.இதில் பெயருக்கு பதவிகளில் இருபோர் வெறும் நொண்டிச் சாக்குக்களைக் கூறுவதாகவே படுகிறது.குறிப்பாக இளயோர் அமைப்பே பிரித்தானியாவிலும் சரி உலகளாவிய ரீதியுலும் சரி முனைப்புடன் இயங்கி வருகிறது.

செயற்பாட்டு ரீதியாக முனைப்புடன் இயங்குபவர்களுக்கு வழி விட்டு , பொறுப்புக்கள் திறமையானவர்களுக்கு வழங்கப் பட்டாலயே இழந்து போன எமது பிரச்சாரத்தை மீளக் கட்டி அமைக்கலாம்.அதற்கு ஆரோக்கியமான சுய விமர்சனமும், இளயவர்களுக்கு வழி விடலும் அவசியம் ஆகும்.

நாரதரின் கருத்துடன் உடன்படுகின்றேன். ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்று ஊடகத்திற்கு அறிவிப்பது என்பது ஓர் கடமையாக இருப்பினும். இங்கு நடைபெற்றது போதிய காலஅவகாச முன்னறிவிற்பு இன்றி நடைபெற்ற ஓர் நிகழ்வாக இருக்கும் நிலையில் அது பற்றி தமக்கு அறிவிக்கவில்லை எனக் கூறுவது எவ்வகைளிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவ்வாறு அனைத்திற்கும் அழைப்பு வழங்க வேண்டுமெனின் செய்திப்பிரிவை இல்லாது செய்து விடலாமே. ஓர் ஊடகமாக தமிழரிடையே இருக்கும் ஓர் தொலைக்காட்சி தமிழரிடையே நடக்கும் தமிழர் நலன் சார்ந்த விடயங்களை மற்றைய தமிழரிடம் கொண்டு சேர்த்து அவர்கள் அறியச் செய்ய வேண்டியது கடமை அல்லவா. தமிழர் வாழும் சுற்றுப் புறச் சூழலில் என்ன நடைபெறுகின்றதை அறிவிக்க வேண்டியது கடமை இல்லையா. எமது தொலைக்காட்சிகளிற்கே இந் நிகழ்வு ஓர் முக்கியமில்லாத நிகழ்வாகுமிடத்து இதை பிறமொழி ஊடகங்கள் எவ்வாறு முக்கியமான ஓர் விடயமாக எண்ணுவார்கள். சுனாமி காலப்பகுதியில் ரிரிஎன் இல் ஒளிபரப்பப்பட்ட ஒளிச்சுவடுகளை ஏனைய ஊடகங்களும் தம்ஒளிப்பதிவுகளில் இணைத்திருந்தனர். ஆக இவ்வாறு இருக்கும் ஓர் ஊடகமானது இவ்வாறு நொண்டிச்சாட்டுக்கள் கூறுவது வரவேற்கத்தக்கதல்ல. :idea:

தவறைத் தவறென உணர்ந்து அதனைத் திருத்த முயலவேண்டும். இங்கு வேண்டுவன காரணங்களல்ல திருத்தங்கள் முன்னேற்றங்கள். :idea:

  • தொடங்கியவர்

மேலுள்ள கருத்து தொடர்பாக "தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்" என்று ஒருவர் அனுப்பி வைத்த கருத்து

தமிழ்த்தேசியத்தினைத் தமது வயிற்றுப்பிழைப்புக்காகப் பலர் பாவிக்கத்தொடங்கியுள்ளனர். தாம்தான் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் என்று மேடையேறித் தமிழர்களை நம்ப வைத்துக்கொண்டு திரைமறைவில் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்புகளை புலம்பெயர் நாடுகளில் சிதைப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றனர். இவர்கள் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரீரீஎன் இளையோருடைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்று "சுந்தரத்தாரின்" ஆதங்கங்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால்,

1. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்தி அதற்குரிய பதிலைப் பெற்றிருக்கலாம்.

2. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரீரீஎன் இற்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தி, அந்நிகழ்வை ஒளிபரப்புச் செய்யும்படி கேட்டார்களா என அறிந்திருக்கலாம்.

3. சந்தர்ப்பத்திற்கேற்ப "தமிழீழ" ஆதரவு பேசும் பல ஊடகங்கள் இலண்டனில் இயங்கிவருகின்றனவே. உங்கள் ஆதங்கமும், கோபமும் ஏன் அவர்கள் பால் எழவில்லை?

அடுத்தமுறை, உங்கள் கண்ணையே நீங்கள் குத்தமுன் இருமுறை யோசித்துச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்

முதலில் நடந்த போராட்டத்தின் பின்னனியை பார்த்துவிட்டு உந்த கட்டமைப்பு ஆதரவாளரின் கருத்துக்கு வருகிறேன் ....

.... கடந்த சனியன்று நடைபெற்ற இரு நிகழ்வுகளும் ஏற்கனவே யாழ், நிதர்சனம் உட்பட பல ஊடகங்களில் வந்தவையே!!! அந்தவகையில் அன்று காலை லோட்ஸ் கிறிக்கெட் மைதானத்துக்கு முன் நடைபெற்ற தமிழ்ப்பாடசாலைகளின் போராட்டத்தில் நானும் குடும்பத்தோடு கலந்து கொண்டேன். அந்நிகழ்வில் ரி.ரி.என் படப்பிடிப்புக்குழு மட்டுமல்ல, ரி.ரி.என் லண்டன் கலையக பிரதம நிர்வாகிகூட கலந்து கொண்டிருந்தார். அந்நிகழ்வு முடியும் தறுவாயில் சில இளையர்கள் தாங்கள் ரவால்கார் சதுக்கத்தில் சிறீலங்கா தூதரகத்தால் பெருமெடுப்பில் நடாத்தப்படும் நிகழ்வில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்க இருக்கிறோம் என்று எல்லோருக்கும் பகிரங்கமாக கூறி எம்முடம் யாராவது வந்து உதவுமாறு கூறி அணுகினார்கள். இதில் தாங்கள் தேசிய செயற்பாட்டாளர்கள் என கூறி வலம் வரும் சிலர் மெதுவாக கழண்டதை அவதாணிக்க கூடியதாக இருந்தது. ஆனால் இந்த துண்டுப்பிரசுரம் ரவால்கார் சதுக்கத்தில் விநியோகிக்குமாறு உரிய இடத்தின் வேண்டுதலாலேயே ஒழுங்கும் செய்யப்பட்டிருந்தது.

பின் ரவால்கார் சதுக்கத்துக்கு சென்ற இருபதுக்கு உட்பட்ட இளையர்கள் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் என்ன நடக்குமோ என்று கூடத் தெரியாத நிலையிக் கூட விநியோகிக்கத் தொடங்கினார்கள். அப்போது அங்கு வந்த தமிழ் இளையோர் அமைப்பைச் சார்ந்த எம் இளையவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். நடந்த எல்லா நிகழ்வுகளியும் ரி.ரி.என் முற்றாக படமும் பிடித்தது. ஆனால் பின் ஒளிபரப்பின் போது தவிர்த்தது ஏன்?????? எந்த ஒரு ஊடகமும் புலத்தில் சிங்களவர்களின் கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத நிலையிலும், ரி.ரி.என் மிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல ரவால்கார் சதுக்கத்தில் ரி.ரி.என்னில் பணிபுரியும் கோட்/சூட் புள்ளியொன்றும் வந்திருந்தார். ...

அப்பு தாயக கட்டமைப்பு வளர்ச்சியில் அக்கறையுள்ளவனே!!

யார் வயிற்றுப் பிழைப்புக்காகவும், கதிரைகளுக்காகவும் புலத்தில் திரிகின்றவர்கள் என்பது உமக்குத் தெரியாதது அல்ல????? உங்கள் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் உங்களால் தாங்க முடியாது!!!! உங்களை விட நாங்கள் தேசியத்துக்கு என்றும் உரமாகத்தான் இருக்கிறோம்!!! நீங்கள் லண்டனில் ஓடி ஒழிந்த போது தேசியத்துக்காக தெருவுக்கு வந்தவர்கள் நாங்கள்!!!! எம்மை நோக்கி வசைபாட வெளிக்கிடாதீர்கள்!!! விரும்பின் கேட்க வேண்டிய இடம் சென்று கேளும், நாங்கள் தேசியத்தை சிதைக்க முற்படுபவர்களா என்று???? பின் விடை புரியும்!!!

இங்கு லண்டனில் அண்மைக்காலங்களாக பல தேசியத்திற்க்கான செயற்பாடுகள், போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றிற்கு உந்த தேசிய ஊடகங்களென கூறுபவை எவ்வாறு ஆதரவளித்தமை என்பது சம்பதாக முழு விபரமும் நான் வெளியிட விரும்பவில்லை!. எத்தனை நிகழ்வுகளை யார் யார் குழப்புவதற்கு முயன்றவர்களென்ற விபரமும் வெளியிட விரும்பவில்லை! நடைபெற்ற எந்தெந்த நிகழ்வுகளுக்கு யார் யார்யாரை போகவேண்டாம் என்று சொன்ன விபரங்களையும் வெளியிட விரும்பவில்லை! ஆனால் உரியவர்களுக்கு விபரங்கள் அனுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது!! காலம் ஒருநாள் பதில் சொல்லும்!!!!

எங்களுக்கும் ஒரே ஒரு விருப்பம்தான்! எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டுமென்பதே!!! ஒதுங்கியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் மீண்டும் அரவணைக்கப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்காப்பயல் அடிக்கடி உங்களுக்கு விளக்கம் இல்லை எண்டதை நீங்களும் உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். தடைசெய்யப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகள். அதுவும் அர்களது நிதிச் செயற்பாடுகளில் முடக்கம் அடையவைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏந்தியிருந்தது தமிழீழ தேசியக்கொடி இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதாஜஃஉழடழசஸ

----------------------------------------------------

ஆ... அப்படியா... நன்றி தகவலுக்கு.... தமிழீழத்தேசியக் கொடிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பில்லையா?... சரி நான் விளக்கமற்றவனாகவே இருந்துவிட்டுப்போகின்றேன்.... இதில் விவாதிக்கத்தொடங்கினால் மற்றவர்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ் துரோகிகளுக்கு நாங்களே அவலைக் கொடுத்துவிடுவோம். எனவே தமிழ் மக்களின் நன்மை கருதி இத்துடன் இதை முடிக்கிறேன். ஆனாலும் நீங்கள் எனக்கு முடிந்தால் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று தயவு செய்து எனக்கு விளங்கப்படுத்துங்கோ

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்சிறுவர் நடத்திய ஊர்வலத்தை ஒளிபரப்பாததற்காக நான் எழுதவில்லைஇ பொதுவாக எழுதினேன்.

உதாரணத்துக்கு இன்று அரசு சொல்கிறது விமானத்தாக்குதல் நடைபெறவில்லை என்றுஇ ஆனால் விடுதலைப்புலிகள் சொல்கிறார்கள் நடை பெற்றது என்றுஇ அதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தது ரீரீஎன். ஒது ஒரு உதாரணம் மட்டுமே. சமாதன காலத்திலேயே இப்படி சொல்லும்இ அரசு கூறும் பொய்புரட்டுகளை வெளிக்கொண்டுவர இருக்கும் ஒரு தொலைக்காட்சிஇ எமது தொலைக்காட்சிதான். அதுபல்வேறுபட்ட நிகழ்வுகளையும் ஒலிபரப்பி ஒருசாதரன தொலைக்காட்சி என்ற மாயையை உருவாக்கி வைத்திருப்பதுஇ நல்லதா? இல்லையா?

ஐயா பிருந்தன்...

உந்த குண்டுத்தாக்குதலை ரி.ரி.என் ஆதாரத்துடன் போட்டு என்ன பிரயோசனம். அது தமிழ் மக்களைத்தானே சென்றடைகின்றது. உண்மையில் நாங்கள் இப்படி எத்தனையோ குண்டுத்தாக்குல்களை கண்டுள்ளோம். எனவே வன்னயிலிருந்து வார்த்தையாக வந்தாலே அதை நம்பக்கூடிய மனப்பக்குவும் எமக்கு இருக்கிறது.

மற்றும் சாதாரண தொலைக்காட்சி எனும் மாயையை எப்படி உருவாக்க முடியும். தமிழ் மக்கள் அனைவருக்கும் இது யாருடையது எப்படி இயங்குகிறது இத் தொலைக்காட்சியின் பின்புலம், முன்புலம் எல்லாம் தெரியும்பொழுது. மற்றவர்களுக்குத் தெரியாமலா போய்விடும். கனடாவில் தடைசெய்யேக்கை சில தனியார் பெயரில் இயங்கி வந்த கடைகளையும் கனடியப்பொலிசார் மூடியிருந்தமை உமக்குத் தெரியாதா?. எமக்குள்ளேயே எத்தனையோ புல்லுருவிகள் ஆதாரத்துடன் எதிர்க்குக் காட்டிக்கொடுப்பதற்குத் தயாராக உள்ளார்கள். ரி.ரி.என் இல் வேலைசெய்யும் ஒருவர் இக்காரியத்தைச் செய்யதாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அய்யா எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன், பிற்காலத்தின் தேவைகருதி தற்போது ரிரிஎன் ஜ அடக்கிவாசிக்கச்சொல்லியே செய்திகள் சொல்கின்றன அது எங்கிருந்து வந்தது, எதற்காக சொல்லப்பட்டது என்று நான் சொலத்தேவை இல்லை என்று நினைக்கிறேன்.நான் கூறுவது தமிழ்சிறுவர்களின் நிகழ்வுகள் ஒலிபரப்பாதது பற்றி அல்ல. அதற்கான காரனத்தை நிர்வாகத்திடம்தான் கேட்க வேண்டும். :wink:

பிருந்தன் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பிய காட்சிகளையே ரி.ரி.ன் ஒளிபரப்புகிறது.

சற்று சிந்தியுங்கள் ஒரு வேளை சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் இற்கு எப்படி அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்?

ஏனப்பு இப்படி யோசிக்கிறீர், நீர் இன்னமும் வீடியோவைபதிந்து, பொச்சுமட்டை லொறிக்குள் வைத்து கொழும்புக்கு கடத்தி, கப்பல்மூலம் அல்லது விமானம்மூலம் இங்கு வந்து ஒளிபரப்புகிறார்கள் என்று பழைய சித்தனையிலேயே இன்னமும் இருக்கிறீரா?

ஒரு ரீரீஎன் முகவர் இருந்தால் போதாதா? விடியோவில் பதிந்து அப்லோட் பண்ணினால் அடுத்த நிமிடம் இங்கு வந்துவிடும். தேள்வையானவர்களுக்கு தேள்வையானபோது இணைய இனைப்பு வன்னியில் கிடைக்கும். :wink:

தெற்காசிய அமரிக்க வெளிவிவகார அதிகாரி கொண்டலிசா வன்னி செல்கிறார் என்று செய்தி வாசத்திவர்கள் இந்த ரி.ரி.என். இல்.

சிவராம் கடத்தபட்டு அது தமிழ்நெட்டில் வந்த பிறகும் சும்மார் 3 மணி நேரம் களத்து ரி.ரி.என் தனது 8மணி இரவுச் செய்தியில் அதை சொல்ல இல்லை.

ஜோசப் பரறாஜசிங்கம் கொல்லபட்டு 1 மணித்தியாலத்திலை உலகம் முழுக்க இணையத்திலை வந்தும் அந்த செய்தி 8 மணி இரவுச் செய்தியில் சொல்லப்படல்லை.

கேணல் றமணன் கொல்லபட்டும் 2 மணித்தியாலம் சென்றும் எல்லா ஊடகத்திலும் வந்தபோதும் அந்த செய்தி ரி.ரி.என் 8மணி செய்தியிலை சொல்ல இல்லை.

இவை நடந்த போதெல்லாம் நான் தொலைபேசி எடுத்து இப்படி சம்பவம் எண்டு சொல்ல அங்கிருந்து கிடைக்கும் பதில் எங்களுக்கு செய்திகள் உரிய இடத்தில் இருந்து கிடைக்க வேண்டும். அங்கிருந்து பக்சிலை வரவேணும் எண்டுதான் சொல்கிறார்கள். இப்படி இவர்கள் சொன்ன பதிலையும் நான் பதிவு செய்து வைத்திரக்கிறன்.

மொத்ததிலை இந்த செய்திகள் மட்டகளப்பு ஈழநாதம் தமிழ் நெட் உட்பட பரவலாக இணையங்களிலும் உடனுக்குடன் வந்தது.

ஆனால் ரி.ரி.என் என்ன தவறு விட்டாலும் அதை மூடிமறைக்க ஒரு குண்டு போடுவார்கள் இந்த விடயத்தில் அங்கு வேலை செய்பவர்கள் புத்திசாலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் தடைசெய்யேக்கை சில தனியார் பெயரில் இயங்கி வந்த கடைகளையும் கனடியப்பொலிசார் மூடியிருந்தமை உமக்குத் தெரியாதா?. எமக்குள்ளேயே எத்தனையோ புல்லுருவிகள் ஆதாரத்துடன் எதிர்க்குக் காட்டிக்கொடுப்பதற்குத் தயாராக உள்ளார்கள்.

கனடாவில் எந்தவொரு கடையும் விடுதலைப்புலிகளின் தடை காரணமாக காவற்றுறையினரால் மூடப்படவில்லை. என்ன விளங்காப்பயல் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் மூடியது போல் கதை அளக்கிறீர்கள். :wink: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.....

ம்ம்ம்ம்ம்ம்..... உந்த ததேஊகளில் வேலை செய்யும் கனக்க வயித்துப் பிழைப்புக்கும், சிலதுகள் கதிரைகளுக்கும், சிலதுகள் ஷோக்காட்டவும் போக ஒன்று இரண்டுதான் உண்மையாக உழைப்பதுகள் மிஞ்சும்!!! இப்படியிருந்தால் என்னதான்/எப்படித்தான் அவுட்புட் வரப்போகிறது.

ஆனால் ஒன்று மட்டும் உந்தப் புலத்திலை நடக்குதாம் .... உந்த ததேஊவில் இருக்கும் கனக்க கோட்/சூட் போடாமலும், கழுத்தை இறுக்கிற வெள்ளைக்காரன்ரை கொடியும் கட்டாமலும் வெளியில் வர மாட்டார்களாம்!!!!

... வேண்டாம் ....

அரோகரா.....

கருத்துக்கள் திசைமாறியதாலும், இங்கு குறிப்பிடப்படும் கருத்துக்கள் எதிரிகளுக்கு தீனி போடுபவவையாக அமையலாம் என்று கருதப்படுவதாலும் இத்துடன் இக்கருத்து மூடப்படுகின்றது.

சிவராம் கடத்தபட்டு அது தமிழ்நெட்டில் வந்த பிறகும் சும்மார் 3 மணி நேரம் களத்து ரி.ரி.என் தனது 8மணி இரவுச் செய்தியில் அதை சொல்ல இல்லை.

TTN தொலைக்காட்சியிலேயே முதன்முதலாக திரு.சிவராம் கடத்தப்பட்டார் என்று செய்தியின் இடையிலேயே அறிவிக்கப்பட்டது. அதை உடனடியாக யாழிலும் கருத்துக்களத்தில் எழுதியிருந்தேன். ஆக முதன் முதலாக TTN மூலமும், இரண்டாவதாக யாழ் களம் மூலமும் :P :P எனக்குத் தெரிந்தவகையில் செய்தி தெரிவிக்கப்பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.