Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மண்டைக்காய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மண்டைக்காய்

“என்னட்ட இருக்கிற கெட்டித்தனத்துக்கு நானெல்லாம் அமெரிக்காவுல பிறந்திருந்தா நிலைமையே வேற.  போயும் போயும் யாழ்ப்பாணத்தில் போய் பிறந்தனே”

என்று அனேகமாக எங்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தருணத்தில் நினைத்திருக்கலாம். அதையெல்லாம் மீறி அடுத்தகணமே “தமிழனாய் பிறப்பது பெருமை” என்று உட்டலாக்கடி அடித்தாலும், இவ்வளவு காலத்தில் ஒரு கணம் கூட அந்தவகை சிந்தனை தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு வராமல் போயிருக்காது.

“முக்கி முக்கி தமிழில எழுதிறாய், ஏதாவது ரெஸ்போன்ஸ் இருக்கிறதா?” என்று நேற்று பீட்டர் லஞ்ச் டைமில் கேட்டபோதும் இதே அமெரிக்க ஸ்டேட்மெண்டை விரக்தியாய் விட்டேன். சத்தம் போடாமல் ஜோக்கட்டை வழிச்சு முடிச்சுவிட்டு அவன் சொன்னான், “உனக்கு அமெரிக்காவின் அதிபுத்திசாலி யாரு? அவன் என்ன செய்கிறான் என்று தெரியுமா?”…. “தெரியாது யாரு?”….. “அவர் ஒரு பவுண்ஸர்!” …. “வாட் த …”

புத்திசாலித்தனத்தை அளப்பதற்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே தியரி இந்த IQ தான். பலதரப்பட்ட aptitude சார்ந்த சாதுரிய கேள்விகள், வேறு சில அளவிடைகளை கொண்டு அளக்கிறார்கள். இல்லை இது செல்லாது என்று DRS ஐ நிராகரிக்கும் BCCI போல IQ வை ஏற்றுக்கொள்ளாத ஒரு கூட்டமும் இருக்கிறது. சரி விடுவோம்.

THE%252520SMARTEST%252520MAN%252520OF%25சராசரி மனிதனின் IQ(Intelligent Quotient) 100 என்று பரிசோதனைகள் மூலம் தெரியவந்திருக்கிறது. வகுப்பில் முதல் மாணவனுக்கு 120, 130 வரை போகலாம். என்னை மாதிரி கேஸ் என்றால் 70. அதுவே ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளுக்கு 150 என்கிறார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் லங்கனின் IQ புள்ளி 200ஐ தாண்டுகிறது. பிறந்தது சான் பிரான்சிஸ்கோவில், இருந்தும் லங்கனால் ஒரு சிறந்த விஞ்ஞானியாகவோ ஒரு கணிதமேதையாகவோ வரமுடியவில்லை. ஒரு சாதாரண பொறியியலாளராகவோ, வைத்தியராகவோ கூட வரமுடியவில்லை. ஏன் என்பதற்கு Malcom Gladwell தன்னுடைய Outliers, The story of Success என்ற நூலில் பல காரணங்களை விளக்குகிறார். லிங்கன் பிறந்து ஆறுமாதத்திலேயே பேச ஆரம்பித்திருக்கிறார். நான்கு வயதில் சிக்கலான புத்தகங்களை தானாகவே வாசிக்க பழகி, வகுப்புகளில் திறமை எல்லை மீறி பல வகுப்புகளை ஒரே வருடத்தில் கூட கடந்திருக்கிறார்.  இறுதியில் கல்லூரி பேராசிரியர்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்பதை புரிந்து கல்லூரிப்படிப்பை முடிக்காமல் .. அங்கே தான் சிக்கல்.

chris-langan-iq-comparison_thumb%25255B1

திறமை இருந்தும் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று லங்கனுக்கு தெரியவில்லை. சின்னவயதில் அப்பாவை இழந்து, அம்மா மறுமணம் முடித்தவனின் அடி உதைகளில் துன்பப்பட்டு ஒரு கட்டத்தில் ஜிம்முக்கு போய் உடம்பை ஏற்றினால் தான் அந்த அப்பனை சமாளிக்கலாம் என்று உடம்பை தேற்றி அப்பன்காரனின் கொட்டத்தை அடக்கியிருக்கிறார். குடும்பத்தில் சீன் இப்படிப்போனால் படித்து விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற எண்ணம் எங்கிருந்து வரும்? இருபது வயதாகிவிட்டது. கல்லூரி படிப்பு கூட முடிக்கவில்லை. பணம் வேண்டும். உடம்பு கட்டுமஸ்தாக இருந்ததால் பாரிலே பவுண்ஸர் வேலை. அதாவது யாரை உள்ளே விடுவது, யாரே வெளியே தள்ளுவது, எவனாவது குடித்துவிட்டு ரவுடித்தனம் பண்ணினால் தூக்கிக்கொண்டுபோய் ரோட்டில் போடும் வேலை. அமெரிக்காவின் அதி புத்திசாலி செய்யும் வேலை.

 

ஆடுறகாலும் பாடுறவாயும் சும்மா இருக்காது என்பது போல, அதி புத்திசாலியான லங்கன் ஓய்வு நேரங்களில் தன்பாட்டில் ஒரு தியரியை கூட உருவாக்கி வருகிறார். பிரபஞ்சத்தை பற்றி அறிய வெளிப்புற கணித விஞ்ஞான அமைப்புக்கள் போதாது, பிரபஞ்சம் புறத்தையும் அகத்தையும் ஒருங்கமைக்கும் ஒரு அசாதாரணமான அமைப்பு, அதை கொஞ்சம் ட்ரை பண்ணினால் நிறுவலாம். நிறுவிக்காட்டுகிறேன் என்று அவர் தன் தியரிக்கு “Cognitive-Theoretic Model of the Universe” என பெயரிட்டிருக்கிறார். கந்தசாமியும் கலக்ஸியும் எழுத பயன்படுமே என்று வாசித்துப்பார்த்தேன். ஒன்றிரண்டு வரிகள் மாத்திரமே புரிந்தது. அந்த அளவில் எங்கள் உபநிடதங்களை எழுதியவர்களின் IQ கூட கிட்டத்தட்ட் 200 வந்தாலும் வரும் என்றும் தெரிந்தது. அவருடைய தியரியும் உபநிடதங்களில் சொல்லப்படும் ஏகாதசம், துவாதசம் மாட்டர்களும் அவ்வளவுக்கு பொருந்துகிறது.

 

IMG_1735_thumb%25255B13%25255D.jpg?imgmaலங்கன் போன்ற மண்டைக்காய்கள் எங்கள் ஊரிலும் இருக்கிறார்கள். வட்டக்கச்சியில் விக்கி மாமா என்று ஒருவர். “என்ன மண்ணுக்கடா உன்னையெல்லாம் கெட்டிக்காரன் எண்டு சொல்லுறாங்கள்” என்று நக்கல் அடிப்பார். அவரே டிசைன் பண்ணிய, மாட்டுவண்டில் மூலம் சூடு மிதிக்கும் ஒரு இயந்திரம் பற்றிய கட்டுரை, வெளிச்சம் சிறப்பு இதழில் “வட்டக்கச்சியில் ஒரு சிறப்பு விஞ்ஞானி” என்ற கவர் ஸ்டோரியுடன் வெளிவந்தது. தயிரை கடைந்து நெய் உருவாக்க என ஒரு மெஷினை அவர் டிசைன் பண்ணும்போது கூட இருந்து விஞ்ஞான விளக்கம் குடுத்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு காரணத்துக்காக என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டு இது சரிவருமா சரிவருமா என்று கேட்டுக்கொண்டிருப்பார். அதைப்பற்றி விரிவான சிறுகதை எழுதிவைத்திருந்தேன். சென்றவருடம் லப்டப் களவு போனபோது கூடவே போய்விட்டது. மீண்டும் எழுதவேண்டும்.

 

இன்னொரு மண்டைக்காய், கிட்டத்தட்ட 150, 160 வரை IQ வரக்கூடிய ஒருவர் என்னோடு படித்த தர்மினி என்ற நண்பி. அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடம். டியூஷன் ஒன்றுக்கும் பெரிதாக போகாமல் சாவகச்சேரியில் இருந்தே படித்து கலக்கிய பெண். மொறட்டுவவில் ஒரே பிரிவு என்பதால் அவளின் திறமையை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. கணக்கில் புலி என்பார்களே, அது தர்மினி தான். கோயில் கட்டி கும்பிடலாம். எந்த கணித பாடம் என்றாலும் 100 மார்க்குகள் சாதாரணமாக எடுப்பாள்.

 

Signals & Systems மிட்செமிஸ்டர் பரீட்சை. முதல் நாள் இரவு கொன்கோர்டில் “ரன்” பார்த்துமுடித்து நானும் கஜனும் ரோலக்ஸில் கொத்துரோட்டி சாப்பிட்டுவிட்டு, வெள்ளைவத்தையில் ஊர் உலாத்திக்கொண்டு அடுத்தநாள் போனால் பரீட்சை என்றார்கள். எக்ஸாம் பேப்பரில் ஜிலேபியை பிச்சு போட்டது போல ஒரு தொகை x, y, z, சிக்மாக்கள். ஒன்றுமே புரியவில்லை. பத்து நிமிஷங்கள் விறைச்சுபோய் என்ன செய்யிறது எண்டு யோசித்தவன், சடாரென்று பின்னால் திரும்பினேன். தர்மினி விடைகளை எழுதிமுடித்துவிட்டு ஏதோ ஒரு பாட்டை ஹம்மிங் பண்ணிக்கொண்டிருந்தாள். அந்த இடத்திலேயே குனிந்து காலில விழுந்து “ப்ளீஸ் ஆன்சரை சொல்லும்” என்று கேட்டால், கையை எனக்கு பக்கத்தில் சுட்டிக்காட்டினாள். அங்கே என்னவென்றால் இந்த நாதாறி கஜன் முன்னமேயே காலில விழுந்து ஆன்சரை வெட்கம் மானம் இல்லாமல் அப்பிக்கொண்டிருந்தான். அப்புறம் நான் அவன் காலில் விழுந்து ஆன்சரை கொப்பி பண்ணி, மூவருக்குமே A+ வந்ததும் மிச்ச வகுப்பு வெறும் B களிலேயே நின்றதும் தர்மினியின் திறமைக்கு ஒரு சாம்பிள் தான். ஆனால் ஸ்ரோடிங்கர், ஐன்ஸ்டீன் பாதையில், தகுதியும் திறமையும் இருந்தும் தர்மினி பயணப்பட முயலவில்லை.

 

பார்த்தி என்று இன்னொருவன், இப்போது CEB இல் எஞ்சினியராக இருக்கிறான். செம இன்டெலிஜென்ட். “மச்சான் உங்கள் எல்லாரையும் விட நான் மண்டைக்காய்” என்று வேறு அடிக்கடி சொல்லி வெறுப்பேத்துவான். எப்படிப்பட்ட IQ கேள்வி என்றாலும் படார் படார் என்று பதில்வரும். அதிக திறமை. அதைவிட அதிகமாக அவனுக்கு தன் திறமை மீது நம்பிக்கை. இப்போதும் அவன் அப்படித்தான் என்று நண்பர்கள் சொல்வார்கள். அவனும் ஒரு அளவுக்கு மேலே உயரவில்லை. ஆராய்ச்சி, கணிதம் சார்ந்த துறைகளில் மிளிரக்கூடியவன் இப்போது பொறியியல், மேலதிகாரி என்று பியுரோகிராடிக் வட்டத்தில் இருக்கிறான். இப்படி லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கும்.

லங்கன் கதையை சொல்லிவிட்டு பீட்டர் கேட்டான்.

783b62c57a4d381087ad2b60deaa1258_ls_t_th

“இப்ப சொல்லு, அமெரிக்காவில பிறந்திருந்தா இன்னும் சாதிச்சிருப்பியா?”

“ஆணியே புடுங்கியிருக்க ஏலாது… ஒடம்பு கூட வெறும் சக்கை .. பவுன்சர் வேலை கூட கிடையாது”

இப்ப சொல்லு .. “நீ எழுதுற பதிவுகளுக்கு ரெஸ்போன்ஸ் கிடைக்குதா”

“ஓ கிடைக்குதே .. என் ரேஞ்சுக்கு குடுத்த காசுக்கு மேலாகவே கொண்டாடுறாங்க பாஸ்”

“அது!”

 

http://www.padalay.com/2013/01/24-01-2013.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.