Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் செயற்பட தொடங்கியுள்ள முன்னாள் போரளிகளை கண்காணிக்கும் முகவர் மையம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் செயற்பட தொடங்கியுள்ள முன்னாள் போரளிகளை கண்காணிக்கும் முகவர் மையம்!
ஜன 25, 2013
 
புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களை கண்காணிக்கும் இணைப்பு காரியாலயம் யாழில் திறந்து வைக்கப்பட்டது.
 
யாழ். மாவட்டத்திற்கான இந்த புதிய அலுவலகம் திறந்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை அடுத்து கைது செய்யப்பட்ட சரணடைந்த முன்னாள் பேராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.அவ்வாறான இளைஞர் யுவதிகளின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்ய்பபட்ட முன்னாள் போராளிகள் 3000 பேருக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
 
இவர்களுக்கு வேண்டிய பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு அவர்களின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு வாழ்வாதாரத்தினை முன்னேற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.அதற்கமைய 4 வீத வட்டியுடன் இலகு கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி முதல் மாதம் வட்டியினை மட்டுமே செலுத்த வேண்டும். அவ்வாறு ஒரு நபருக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் கடனாக வழங்கப்படும்.முச்சக்கர வண்டிகள் மற்றும் சிறுதொழில் முயற்சியினை மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு கடனுதவிகள் வழங்கி அவர்களை சமூகத்தில் உயர்ந்தவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் விடுதலையான இவர்களுக்கு எந்தவகையிலாவது பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை குறித்த அலுவலகத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இந்த இணைப்பு நிலையங்கள் கொழும்பு வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இது முன்னாள் போராளிகளை கண்காணிக்கவும் அவர்களை புலனாய்வு முகவர்களாக செயற்படுத்தும் மையமாக இயங்கி வருகின்றமை குறிப்பபிடத்தக்கது இதன் ஊடாக சில முன்னாள் போராளிகளை ககையப்படுத்திய சிறீலங்கா படை புலனாய்வாளர்கள் அவர்களை ஆசிய உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி புலம் பெயர் தமிழர்களின் கட்டமைப்பினை சீர்குலைத்து உணர்வாளர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி புலனாய்வு பணியினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.