Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமலிடம் சில கேள்விகள்

Featured Replies

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தில் விவாதங்கள் பல முனைகளில் நடைபெற்று வருகின்றன. படைப்பாளியின் சுதந்திரம் என்று சிலரும், இஸ்லாமியர்கள் எதிர்த்தால் உடனே தடை விதிக்கவேண்டுமா என்று சிலரும், முதலில் தடை என்ற செயலே தவறு என்று சிலரும் வாதிட்டு தடைக்கு எதிர்ப்பு காட்டுவதில் ஒன்றிணைகின்றனர்.

இது ஏதோ கருத்து/படைப்புச் சுதந்திரத்திற்கும்/ இஸ்லாமிய உணர்வுகளுக்குமான ஈரினை/எதிர்மறையாக (Binary Opposition) கட்டமைக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தி எடுக்கும் ஒரு படத்தையோ, எழுதப்படும் கதையையோ, கட்டுரையையோ அல்லது எந்த ஒரு அநீதியையும் நியாயப்படுத்தி செய்யப்படும் காரியத்தையோ நாம் கருத்துச் சுதந்திரம் என்ற அளவுகோலை வைத்து அணுக முடியாது. கருத்து முதலில் கருத்தாக இருக்கவேண்டும், அறவுணர்வுடன் இருக்கவேண்டும், பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும் அந்தக் கருத்தை அடக்குவதுதான் ஜனநாயக விரோதம் எனவே இது போன்ற விவாதத்தினால் எள்ளளவும் பயனில்லை.

ஆனால் கமல் என்ற நடிகர், குறிப்பாக வர்த்தக நடிகர் தனக்கு சினிமாவில் நடிகனாக மட்டுமல்லாது சினிமா தொழில் சார்ந்த முறையத் தவிரவும் பல்வேறு வகைகளிலும் ஒரு சிறப்பான இடத்தைத் தானே கோரிக்கொள்கிறார். அந்த இடத்திற்கு அவர் உரிமை கோரும் அளவுக்கு அவர் செயல்பாடுகள் இருக்கிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.

தடை குறித்த அவரது அறிக்கையில் உள்ள விஷமத் தனமான ஒரு வார்த்தையே இதற்குச் சான்று. தன் நல்லுணர்வு சிதைக்கப்படுகிறது என்றும், சிறு குழுவின் கலாச்சார பயங்கரவாதம் என்றும் கூறுகிறார் கமல். அரசியல் ஆதாயம் தேடும் சிறு குழு எப்படி கலாச்சார ஏகாதிபத்தியம் செய்யமுடியும்?

அது மட்டுமல்ல விஷயம். "தேசப்பற்றுள்ள எந்த முஸ்லிமும் தன் படத்தைக் கண்டு பெருமை கொள்வார்" என்று கூறுகிறார் கமல்!

தேசப்பற்று என்பதை தீர்மானிக்கும் அளவு கோல் என்னன்ன? யார் அதை தீர்மானிப்பது? கமலா, ரஜினியா? ஷேர் மார்கெட்டில் கொள்ளை கொள்ளையாக மோசடி செய்து லாபம் சம்பாதிக்கும் பண முதலைகளா? காங்கிரஸ் காரர்களா, பாஜகவினரா? யார் தீர்மானிப்பது கமல் சார்?

இந்துவாக இருப்பவன் இந்துவாக இருப்பதனாலேயே டீஃபால்டாக இந்தியனாகிவிடுகிறான் அவன் எவ்வளவு தேச விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஆனால் ஒரு முஸ்லிமின் தலையெழுத்து இந்த நாட்டில் தேசப்பற்றை நிரூபிக்க, இந்தியன் என்று கூப்பாடு போட தனது சொந்த அடையாளமான முஸ்லிம் அடையாளத்தையே துறக்கவும் வேண்டுமோ? முஸ்லிம் உணர்வுகளையும், குர் ஆனை ஒரு புனிதப்பிரதியாகவும் இந்துக்கள் ஏற்கிறார்களா, அல்லது இந்தியர்கள் ஏற்கிறார்களா?

தேசியவாத உணர்வை அவர்கள் மீது ஒரு சுமையாக ஏற்ற முடியாது. தேசப்பற்றுள்ள முஸ்லிம்க‌ள் என் படத்தைப் பார்த்து பெருமையே அடைவார்கள் என்பதை திருகலாக தகர்ப்பு ரீதியாக வாசித்தால் என்ன ஆகும்? என் படத்தைக் கண்டு பெருமைப்படும் முஸ்லிம்கள் தேசப்பற்றுள்ளவர்கள் என்று ஆகும். கமல் சொன்னதன் அர்த்தத்தை இப்படி புரிந்து கொள்வது தவறாகுமா? ஆசிரியர் கூறுவதன் பொருளை அவரின் நல்லுணர்வை முன் அனுமானித்துக் கொண்டு அதற்கு இணங்க புரிந்து கொள்ளும் வாசிப்பு முறை காலாவதியாகி பல பத்தாண்டுகள் கழிந்து விட்டது.

எனது படம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எப்படி பொருள் கொள்ளப்பட்டது? என்று திகைக்கிறார் கமல். ஒரு வாசிப்பு இன்னவாக இருக்குமென்று தீர்மானிக்கும் உரிமையை ஆசிரியன் இழந்தும் பல பல்லாண்டுகள் கழிந்து விட்டன.

முஸ்லிம் மக்களைப் பற்றிய, திரு குர் ஆனைப் பற்றிய, நபிகள் பற்றிய ஏகப்பட்ட எதிர்மறை, குப்பை ஸ்டீரியோ டைப்கள் மீடியாக்களிலும் வெகுஜன சினிமாக்களிலும் உலவுகின்றன. அது போன்ற பிம்பங்களை கமல் விஸ்வரூபத்தில் காட்சி ரீதியாக உடைத்திருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதுவரை அந்த ஸ்டீரியோ டைப்கள் பற்றிய இஸ்லாமியர்களின் உணர்வுகளை மதிக்கவேண்டியதுதான்! ஸ்டீரியோ டைப்களை உடைத்து, அதனை கீழறுப்பு செய்யும் உத்திகளுக்கெல்லாம் செல்லும் கறார் சினிமாக்காரர் அல்ல கமல், அவரும் முஸ்லிம்களை, இஸ்லாமியர்களை, மற்றும் பயங்கரவாதத்தை வைத்து பொறுப்பற்ற முறையில் காசு பண்ணும் ஒரு நபர்தான் என்பதில் ஐயமில்லை.

தான் பற்றிய தனது இந்த பிம்பத்தை ஓரளவுக்கு அறிந்திருப்பதால்தான் கமல் சினிமா என்ற கடமைக்கு அப்பாலும் சமூக விவகாரங்களில் குரல் கொடுத்துள்ளதாக கோருகிறார். ஆனால் அவர் எவ்வளவு பிரச்சனைகளில் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார்?

கருத்துச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்கு வாதாடும் இவர் குஷ்பு பாலியல் குறித்து கூறிய கருத்தினால் எழுந்த சர்ச்சையில் குஷ்புவின் கருத்துச் சுதந்திரத்தை எங்காவது ஆதரித்திருக்கிறாரா?

 

சரி குஷ்புவின் கருத்தை கமல் ஏற்கவேண்டிய தேவையில்லை. ஆனால் அந்த கருத்திற்காக அவர் கோர்ட் கோர்டாக இழுத்தடிக்கப்பட்டபோது இவர் அதற்கு ஏன் கண்டனம் எழுப்பவில்லை?

இரண்டாவது, மிக முக்கியமான விஷயம். இலங்கையில் தமிழின படுகொலை!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் அந்த சமயத்தில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடத்தப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியாகியது. இந்தியத் தொழில் மற்றும் வர்த்தக் கூட்டமைப்பு (FICCI) ஆதரவு அளித்தது. அதன் பொழுதுபோ‌க்கு தலைமைப்பொறுப்பில் இருந்தவர் சாட்சாத் கமல்ஹாசன்தான்!

எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு மே 17 இயக்கத்தினர் திரண்டு அவரிடம் மனு ஒன்றையும் அளித்தனர். தலைமைப்பொறுப்பேற்றிருந்த கமல் என்ன செய்து கொண்டிருந்தார்?

கமலின் சினிமா உணர்வுகளுக்கோ, கலைத் திறனுக்கோ விடுக்கப்பட்ட சவால் அல்ல இந்த கேள்விகள். மாறாக அவர் தனக்கென்று முன்னுரிமை கோரும் சமாச்சாரம் மேல்தான் நம் விமர்சனம்.

ஒரு சினிமா நடிகன் என்ற அளவில் கூட கலைப்புலி தாணுவின் கேள்விகளுக்கு இவர் என்ன எதிர்வினையாற்றினார்?

இஸ்லாமியர்களை இழிவு படுத்தும், பயங்கரவாதத்தை காசாக்கும் உலக ஆதிக்க போக்குகளின் மத்தியில் எதிர்-இஸ்லாமிய ஸ்டீரியோ டைப் காட்சிகள் ஏன் வைக்கப்படவேண்டும்?

தான் சிறப்புரிமை கோரும் அற நல்லுணர்வும் பொறுப்பும் இருக்கின்ற கமல் ஹாசன் ஏன் நாட்டின் பிற பிரச்சனைகள் பற்றி படம் எடுக்க முயற்சி செய்யவில்லை?

'சமூக மனசாட்சி'-யின் காரணமாக தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் அப்சல் குரு விவகாரத்தை வைத்து ஒரு 'ஸ்பை த்ரில்லர்' எடுக்க வேண்டியதுதானே? நியூயார்க் நகரம் அழிந்து விடும் அச்சுறுத்தல் என்ற ஒரு கற்பனையான கதைச்சூழலை ஏன் தேர்வு செய்யவேண்டும்?

அவ்வளவு திரைப்படங்கள் இருக்க வென்ஸ்டே என்ற படத்திற்கு அனுமதி வாங்கி உன்னைப்போல் ஒருவன் என்ற படத்தை ஏன் எடுக்கவேண்டும்? வியாபாரமும் வேண்டும், தனது உள்நோக்கத்தையும் உள்ளெண்ணத்தையும் திருப்தி செய்து கொள்ளவேண்டும், பழி ஏற்படும்போது பாதுகாப்பெய்த தன்னை ஒரு மனிதநேய வாதியாகவும், மத சகிப்புத் தன்மை மிக்கராகவும் காட்டிக் கொள்ளவேண்டும். பாவம் கமலுக்குத்தான் எவ்வளவு பொறுப்புகள்? இந்த சமூகம் ஒரு 'கலைஞன்' மீது எவ்வளவு பொறுப்புகளை சுமத்தி விடுகிறது பாவம்!

உன்னைப்போல் ஒருவன் போல் ஒரு மிடில் கிளா‌ஸ் இந்து படத்தை ஆர்.எஸ்.எஸ். காரர் கூட எடுக்க மாட்டார்! பயங்கரவாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட கூட தகுதியற்றவர்கள். அவர்கள் சுட்டுத் தள்ளப்படவேண்டும், அதை அரசாங்கம் செய்யவில்லை என்றால் 'நல்லுணர்வு'கொண்ட இந்து மத்தியதரவர்க்க நபர் செய்யவேண்டும்! இதுதான் அவரது ஐடியாலஜி அந்த படத்தில். ஹிந்தியிலிருந்து ரீமேக் என்றாலும் கமலின் சாய்ஸ் அவர் சார்ந்த ஐடியாலஜியைச் சார்ந்த விஷயமே.

விருமாண்டி என்ற படம் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் சடங்கு சம்பிரதாயங்களை புனிதமாக்கம் செய்யும் ஒரு படம், ஆனால் அதை ஏதோ தூக்குத் தண்டனைக்கு எதிரான படமாக திரித்து விட்டார் கமல். இதற்கு ஜப்பான் மேதை குரசொவாவின் கதை சொல் முறை. இதுதான் கமல்! மேதைகளின் உத்தியைக் கொண்டு தனது ஐடியாலஜியை சாமர்த்தியமாக மறைப்பது!

மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் நடிகராக கடமையின் குரல் அழைக்கும்போது இந்தியன் கொலைகாரத் தாத்தாவாகவும் மாறுவார்! இது என்ன முரண்பாடு?

ஹே ராம் படத்திலும் ஒரு இந்து தனது குடுபத்தின் அழிவுக்கு பழி வாங்க புறப்படுகிறான். அப்போதும் கூட இந்து அடிப்படைவாதிகளுக்கு ஒரு அடையாளம் தருகிறார், இவர்களுக்கு குடும்பம், பொறுப்பு இருக்கிறது. குறைந்தது இவர்கள் தாங்கள் சார்ந்த ஆதிக்கக் கருத்தியலுக்கு உண்மையானவர்களாக இருப்பதாக காட்டப்படுகிறது. அபயங்கர் என்ற காதாபாத்திரத்தின் மூலம் இந்து அடிப்படைவாதத்தின் கொலைவெறியை கமல் காண்பிக்கவில்லை மாறாக ஐடியாலஜிக்கு அவர் எவ்வளவு உணர்வு பூர்வமாக இருக்கிறார். மரணப்படுக்கையிலும் அவன் தன் கொலைக் கருத்தியலுக்கு எவ்வளவு உண்மையானவனாக இருக்கிறான் என்றே காண்பிக்கிறார்.

மாறாக முஸ்லிம்கள்களை ஏதோ கலவரக் கும்பலாகவும், ஏதோ கூட்டமாகவும் கொலை செய்வதே தொழில் கொண்ட வன்முறையாளர்கள் போலவும் சித்தரித்துள்ளார் இதனை சக்ரவர்த்தி என்ற விமர்சகர் தனது ஆங்கிலக் கட்டுரையில் எண்பித்துள்ளார்.

எந்த சாவு தேசிய வருத்ததிற்கும் துக்கத்திற்கும் உகந்தது, எந்த சாவு மதிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உலகம் முழுதும் அனைத்து ஊடகங்களும் தரம் பிரித்து வைத்துள்ளது. ஈராக்கிலும், ஆப்கானிலும் குண்டுகளை போட்டு மனித உயிர்கள பல அழிந்தாலும், ஒரு அமெரிக்கன் செத்தால் அது நாடே துக்கப்படவேண்டிய விஷயம்! நாடு மட்டுமல்ல உலகே துக்கப்படவேண்டிய மரணம். இது என்ன அநீதி?

அபுகிரைப் சித்தரவதைக் கூடம், குவா‌‌ண்டனாமோ பே, இந்தியாவிலும் சில மறைவிடங்களில் உள்ள சித்தரவதைக் கூடங்கள் பற்றி கமல் சார் ஒரு ஸ்பை த்ரில்லை எடுத்து விட்டு அதற்காக அது தடை செய்யப்படுமானால் அப்போது நிற்கிறோம் கமல் சார் உங்கள் பக்கம்! அது வரை எந்த ஒரு விஷயத்தையும் தடை செய்வது ஜனநாயகமல்ல என்ற ஒரு கண்டனத்தை தவிர வேறு எதையும் கூறிவிடமுடியாத நிலையில் இருக்கிறோம்

 

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1301/25/1130125046_1.htm

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்களை குற்றவாளியாக்கும் இஸ்லாமிய இயக்கங்கள்.
 
0monolithic_islam_81934656@N00_137887251

விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பாக நின்றதன் மூலம் ஒரு மாபெரும் வரலாற்று தவறை செய்துவிட்டார்கள் சில இஸ்லாமிய இயக்கத்தினர். பமலின் விஸ்வரூபம் படத்தின் கரு ஆப்கானிஸ்தான் - அமெரிக்கா இடையிலான மோதல் பற்றியது. அதாவது ஏகாத்தியபத்தியத்துக்கும் - தீவிரவாதத்துக்கும் நடக்கும் மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். ஆனால் இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து கமல் படம் எடுத்துள்ளார் என எதிர்ப்பு குரல் கொடுத்தனர். பெரும் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை வியாபாரம் செய்ய வேண்டும் என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து படத்தை திரையிட்டு காட்டினார். 

கதைக்கரு மட்டுமல்ல படமும் இந்தியாவில் எடுத்ததல்ல. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஏதோ கொஞ்சம் இந்தியாவில் எடுத்துள்ளதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது ஏற்கனவே படம் பார்த்தவர்களுக்கும் தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் விஸ்வரூபத்துக்கு எதிராக களம்மிறங்கினர். தமிழக உள்துறை செயலாளரிடம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என புகார் மனு தந்தனர். அரசாங்கமும் 15 நாட்கள் தடை விதித்துள்ளது. வரும் பாராளமன்ற தேர்தலை மனதில் கொண்டு முதல்வராக சிறுபான்மை இனத்தவர்களின் வாக்கை ஒட்டுமொத்தமாக பெற ஜெ இப்படி செய்துயிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். 

tamil1.jpg

ஆனால் இந்த தடை என்னை வேறு மாதிரியாக யோசிக்க வைக்கிறது. ஜெ தீவிரமான இந்துத்துவாவாதி. குஜராத்தில் இஸ்லாமியர்களின் ரத்தத்தை குடித்த அம்மாநில முதல்வர் நரேந்திரமோடியின் நண்பர். அவரை பிரதமராக்க துடிக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அப்படிப்பட்டவர் இஸ்லாமிய அமைப்பினர் தடை கேட்டு மனு தந்ததும் தடை விதித்துள்ளார். 

இந்தப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர் கெடும் என தடைக்கான காரணத்தை கூறியுள்ளது தமிழகரசு. இதன் உள்ளர்த்தம் படத்தை வெளியிட்டால் முஸ்லிம்கள் தாக்குவார்கள் இதனால் மாநிலத்தில் மக்களின் அமைதி கெடும் என்பதே. ஆக இந்த சொற்றொடர் மூலம் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை மறைமுகமாக மக்கள் மனதில் அதிமுக அரசு விதைத்துள்ளது. அது வெற்றியும் பெற்றுவிட்டது. 

தற்போது கமல் ரசிகர்கள் இஸ்லாமியர்கள் மீது வருத்தத்தில் உள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல சாதாரண பொது ஜனமும், படம்மே வெளியில வரல அதுக்குள்ள என்னப்பத்தி தான் சொல்றான்னு எதுக்குய்யா இவனுங்க தடுக்கனும்?, மைனாரிட்டின்னு சொல்லிக்கிட்டு இப்படி பண்ணா என்ன நியாயம் என பேச தொடங்கிவிட்டார்கள். இதனால் பிற சமூக மக்களிடம் இவனுங்களை ஒடுக்கனும்ப்பா என்ற கோபம் எழுகிறது. இந்த கோபம் எதிர்ப்பு காட்டிய சில இஸ்லாமிய இயக்கங்களை நோக்கிய கோபம்மல்ல. ஓட்டு மொத்த இஸ்லாமிய மக்களை நோக்கிய கோபம். 

RSS%252Bcadre1.jpg

இந்த கோபத்தை இந்துத்துவா வாதிகளும் பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். இஸ்லாமியனை ஒடுக்க வேண்டும் எனச்சொல்வது இதனால். தீவிரவாதம் பற்றி படம் எடுத்தால் இவர்களுக்கு என்ன யார் குண்டு வைக்கிறார்களோ அவர்களைப்பற்றி தானே படத்தில் காட்டப்படுகிறது அதில் என்ன தப்பு?, குண்டு வைக்கிறவன பத்தி சினிமா எடுக்றத தடுக்கிறான்னா முஸ்லிம்ங்க தீவிரவாதிகளை ஆதரிக்கிறான்னு தானே அர்த்தம்? அப்ப இவனுங்களும் தீவிரவாதிங்க தானே என்ற  நச்சு கருத்துக்களை இஸ்லாமியர் அல்லாத மக்களிடம் விதைக்க தொடங்கியுள்ளார்கள். இது எவ்வளவு ஆபத்தானது. 

இஸ்லாமிய இயக்கங்கள் அடுத்தடுத்து இப்படியே செயல்படும் போது பிரச்சனை மக்களின் கோபம் இன்னும் தீவிரமாகும். இதனால் இஸ்லாமியர்களை ஒரு விதமான வெறுப்பு பார்வையுடன் பார்க்க தொடங்குவார்கள், அவர்களை விட்டு விலக தொடங்கிவிடுவார்கள். காவி பயங்கரவாதிகளால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் எதிர்ப்புகள் மக்கள் மனதில் தேங்கிவிட்டால் நாளை ஒருநாள் காவி பயங்கரவாதிகள்  இஸ்லாமியர்களுக்கு எதிராக கிளம்பும் போது மற்ற சமூக மக்களின் பாதுகாப்பும், கருத்தாளர்களின் ஆதரவும் கிடைக்காமல் போய்விடும். 

இதனால் எதிர்ப்பு கோஷம் போடும் இயக்கங்கள் பாதிக்கப்பட போவதில்லை. பிற மத மக்களோடு நெருக்கமாக துவேஷம் இல்லாமல் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் தான் பாதிக்கப்படபோகிறார்கள். 

இன்று நீங்கள் நடந்துக்கொள்ளும் முறை தான் நாளை இஸ்லாமிய சமூகத்துக்கான ஆதரவும் - எதிர்ப்பும் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே. இல்லையேல் மாபெரும் இழப்பு நிச்சயம் இஸ்லாமிய சமூகத்துக்கும் மக்களுக்கும் தான்.

 

http://anbanavargal.blogspot.ca/

போராளி ? தீவிரவாதி ?.

 
hamas-soldiers.jpg ஹமாஸ் தீவிரவாதிகள்

 
விஸ்வரூபம் திரைப்படத்தில் காட்டப்படுபவர்கள் தீவிரவாதிகள்ள, அமெரிக்காவை எதிர்த்து போராடும் போராளிகள் அவர்களை எப்படி தீவிரவாதிகளாக காட்டலாம் என தொலைக்காட்சி நேர்காணலில் ஒரு இஸ்லாமிய இயக்க தோழர் கேள்வி எழுப்புகிறார். அதேபோன்றே அவரைப்போன்ற சில இஸ்லாமிய தோழர்கள் கேள்வி கேட்கிறார்கள். 
 
போராளிகள் என்பவர்கள் யார் ?. 
 
இலங்கையில் ஈழ பகுதியில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக, அரசப்படைகளை எதிர்த்து போராடியவர்கள் விடுதலைப்புலிகள். ஆரசாங்கத்துக்கு தங்களது எதிர்ப்புகளை காட்ட அவர்கள் இராணுவம், துணை இராணுவம், எல்லை பாதுகாப்பு படை வீரர்களை தான் கொன்றுள்ளார்கள். அதில் அவர்கள் கொல்லப்பட்டும் உள்ளார்கள். உலகில் உள்ள போராளிகள் இயக்கங்களின் குறி அரசப்படைகள் தான். மக்கள் உயிரல்ல. 99 சதவிதம் போராளி குழுக்கள் மக்களை கொன்றதில்லை. தீவிரவாதிகள் நோக்கம் அரசப்படைகளள்ள பொது மக்கள். உலகில் உள்ள எல்லா தீவிரவாதிகளின் குறியும் பொதுமக்கள் தான். மக்கள் பகுதியில் நடக்கும் எல்லா வெடிகுண்டுகளுக்கு பின்னாடி இருப்பது தீவிரவாதம். இது தான் தீவிரவாதத்துக்கும், போராளிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு. 
 
விஸ்வரூபம் பட விவகாரத்துக்கு வருவோம். விஸ்வரூபம் படத்தின் கதை மற்றும் பிற மொழிகளில் படத்தை பார்த்த நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில், படத்தில் காட்டப்படுவது இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் பற்றி தான். அதாவது படத்தில் காட்டப்படுவது தாலிபான்கள் பற்றி. 
 
தாலிபான்கள் யார்?
 
ஆயிலுக்காக, இயற்கை வளத்துக்காக ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்ரமித்தபோது, ரஷ்யாவின் இராணுவத்தை எதிர்க்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது முகாஜிதின்கள் இயக்கம். இந்த இயக்கத்துக்கு இளைஞர்களை இழுக்க சவுதிஅரேபியாவின் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிற்போக்குவதத்தை தூக்கி பிடிக்கும் இஸ்லாமிய பிரிவை சார்ந்தவர்களை அமெரிக்கா பயன்படுத்தியது. அவர்கள் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த பழங்குடி மக்களை மதத்தின் பெயரில் தங்கள் பக்கம் இழுத்து மூளை சலவை செய்து முஹாஜின்களாக்கினார்கள். 
 
பணம், ஆயுதம் தந்தது தந்தது கிருத்துவ அமெரிக்கா என்றால், ஆள் சேர்த்தது, மத பயிற்சி தந்தது இஸ்லாமிய அரச குடும்பத்தின் சவுதிஅரேபியா அரசு. அவர்களுக்கு பயிற்சி தந்து, பாதுகாப்பு தந்தது இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் அரசு.  ஆப்கானிஸ்தானில் மதத்தை முன்னிருத்தி இளைஞர்களை இழுத்து அவர்களுக்கு பயிற்சி தந்து தீவிரவாதிகளாக்கியது இஸ்லாமிய பிற்போக்குவாதிகள் என்பது உலகறிந்த உண்மை. ரஷ்ய படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டதும் அந்தயிடத்தில் அமெரிக்கா படைகள் உட்கார்ந்து சுரண்ட தொடங்கியது.  அரச அதிகாரத்தை பெற அமெரிக்கா ஆசிபெற்ற முகாஜிதின்கள் தங்களுக்குள் பிரதேசவாரியாக நான்கு குழுக்களாக பிரிந்து மோதிக்கொண்டதோடு தன் இன மக்களை குண்டு வைத்து கொன்றனர். 
 
இவர்களை அடக்க தாலிபான்கள் என்ற அணியை அமெரிக்கா ஊக்குவித்தது. அவர்களின் வளர்ச்சி வேகவேகமாக இருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் அமெரிக்கா தாலிபான்களை ஒடுக்க எவ்வளவோ முயன்றது. அது முடியவில்லை. தாலிபான் ஆட்சியும் ஆப்கானில் சில ஆண்டுகள் நடந்தன. இவர்களுக்கு பண உதவி செய்தன பல இஸ்லாமிய நாடுகள். மற்றொரு தீவிரவாத குழுவான அல்கயிதா தலைவர் பின்லேடன் திட்டப்படி அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டது. ஒசாமாவை அமெரிக்கா கொல்ல முயன்றது ஒசாமா தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானில் அடைக்கலம் புகுந்தார். தாலிபான்கள் அவரை பாதுகாத்தனர். அமெரிக்கா தாலிபான்களை வேட்டையாட ஆப்கானிஸ்தான் மீது அதிகாரபூர்வமாக படை எடுத்தது. தாலிபான்கள் அரசை கவிழ்த்துவிட்டு அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையரசு உருவாக்கப்பட்டது. 
 
பின்லேடன் கொல்லப்பட்ட பின்பும் தாலிபான் தீவிரவாதிகளுக்கும் - அமெரிக்காவுக்கும் தினம் தினம் மோதல் நடக்கிறது. இதில் தாலிபான் - அமெரிக்காவின் மோதலை மையமாக கொண்டு விஸ்வரூபம் படம் எடுக்கப்பட்டது. 
 
படத்தில் குரான் ஓதுவது போல காட்டியுள்ளார் என்கிறார்கள் படத்தை எதிர்க்கும் இஸ்லாமிய தலைவர்கள். தாலிபான்கள் என்ன கிருத்துவர்களா பைபிள் படிப்பது போல் காட்டுவதற்க்கு. இல்லை பகவத்கீதையை காட்ட அவர்கள் என்ன இந்துவா. தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்களாக இருப்பதால் குரானை காட்டியுள்ளார். தொழுகை நடத்திவிட்டு ஒருவன் குண்டு வைக்க போகிறான் என காட்டியுள்ளதில் என்ன தவறு. கடவுள் நம்பிக்கையுள்ளவன் நல்லது செய்ய போனாலும், தவறு செய்ய போனாலும் கடவுளை வேண்டுவான் அதைத்தான் காட்டியுள்ளார். இதை எவ்வாறு தவறு என கூறமுடியும். இதில் எங்கே மதத்தை புன்படுத்துவது போல் கருத்துள்ளது என்பதை காட்ட முடியும்மா ?. 
 
இந்து மதத்தில் எப்படி தீவிர இந்துத்துவா மனம் கொண்டவர்கள் இருக்கறிhர்களோ அப்படித்தான் இஸ்லாமிய, கிருத்துவ, சீக்கிய, பௌத்த மதத்திலும் உள்ளார்கள். அவர்கள் தீவிரவாத பாதையை நாடுகிறார்கள். அவர்கள் அரசப்படைகளை எதிர்த்து போராடும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. மக்களை கொல்லும் போது அவர்கள் தீவிரவாதிகளாகிறார்கள். 
 
அதேபோல் தாலிபான் தலைவனை கதாநாயகன் சந்திக்கும் போது, தலைவன் தமிழ் பேசுகிறான் அவனிடம் கதாநாயகன் அதுப்பற்றி கேட்கும் போது, கோவை, மதுரையில் ஓராண்டு இருந்தேன் என்கிறானாம். சரி சொல்லிவிட்டு போகட்டும். இதனால் முஸ்லிம்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். தீவிரவாதி எங்குயிருந்தால் என்ன?. படத்தில் என்ன அங்குள்ள முஸ்லிம்கள் உதவி செய்தார்கள் என்ற சொல்கிறார்?. 
 
மக்களுக்கு எதிரானவர்களை அடையாளப்படுத்தும் போது அதை எதிர்ப்பவர்கள் மக்களின் எதிரிகளாகிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள் தோழர்களே.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.