Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் அத்து மீறலை கண்டித்து மன்னார் தொடக்கம் கொக்கிளாய் வரை நடைபயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய மீனவர்களின் அத்து மீறலை கண்டித்து மன்னார் தொடக்கம் கொக்கிளாய் வரை நடைபயணம்!
ஜன 27, 2013
     
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து இன்று மன்னார் முள்ளிக்குளத்தில் இருந்து முல்லைத்தீவு கொக்கிளாய் வரைக்கும் நடைபயணம் ஒன்றை நடத்த வடபகுதியில் உள்ள மீனவர்கள் தீர்மானித்துள்னர்.
 
mannar%20menavar.jpg
பேரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் இந் நிகழ்வில் வடபகுதியில் உள்ள கடற்றொழில் சங்கங்கள் அனைத்தும் கலந்துகொள்ளவுள்ளது. சுமார் 300 மீனவர்கள் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
மேற்படி அமைப்பினால் இதற்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நடத்ததியிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்றும் மேற்படி நடைபயணப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் உள்ள மீனவர்கள் தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறல்களால் மிக நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்விடையம் தொடர்பாக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஏற்கனவே அனைத்து அதிகாரிகளிதத்தில் அறிவிப்புச் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் பல போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.
குறிப்பாக யாழ்ப்பாணம் வருகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் மேற்படிப் பிரச்சினை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதவிர வடபகுதி மீனவர் அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்திய மீனவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.
ஆயினும் இதுவரைக்கும் அவர்களுடைய பிரச்சினைக்கு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
வடமாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களிலும் அதாவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் 225 மீனவர் சங்கங்கள் உள்ளது. இச் சங்கங்களில் 60000 அங்கத்தவர்கள் உள்ளனர்.
இதுதவிர வேறு பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மேற்படி நடைபயணத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.