Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு உதயம்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு உதயம்:-
01 பெப்ரவரி 2013
 
காணாமல் போனோர் சரணடைந்தோரைக் கண்டு பிடிப்பதற்கான அமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது. இந்த அமைப்பின் அங்குராபர்ணக் கூட்டம் கிளிநொச்சியில் இன்று (01.02.13)  இலங்கைநேரம் 10.30ற்கு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் இருந்து தெரிவித்துள்ளார்.
 
இந்த வேளையில்  கூட்டம் நடைபெற இருந்த பகுதியை அடைந்த படையினர் மிரட்டும்பாணியில் அங்கு ஏற்பாட்டு முயற்சியில் ஈடுபட்ட பலரது ஆள் அடையாள அட்டை விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கலந்து கொண்ட 200 வரையிலான காணாமல் போனோரின் உறவினர்களில் சிலர் சற்று பயந்து கலங்கிய போதும் பெரும்பாளானவர்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் எதற்கும் தயார் என தம்முள் பேசிக்கொண்டனர். 
 
இதேவேளை தெற்கின் மனித உரிமை ஆர்வலரின் பேருதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு எந்த அரசியல் பின்னணிகளும் இன்றி சுயமாக இயங்கும் என இதன் முக்கியஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எல்லோருடமும் அலைந்து தாம் விட்ட கண்ணீருக்கு உரிய தீர்வுகள் கிடைக்காத நிலையில் தெற்கின் மனித உரிமை பாதுகாவலர்களில் ஒருவர் தமது துயர்துடைக்க உதவிகளை புரிந்திருக்கிறார் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கிளிநொச்சியில் கூட்டத்தை நடத்த இடம் கொடுப்பதற்கு எல்லோருமே அஞ்சிய நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தனது அலுவலகத்தை நிபந்தனையின்றி வழங்கியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 
இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ இலங்கையின் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என கூறியது குறித்து கடுமையான விசனங்களைக் கொண்டுள்ள சரணடைந்த மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சொந்தங்களை தேடிக் கண்டு பிடிக்கப் போராடப் போவதாக உறுதி எடுத்துள்ளனர். 
 
4 பிள்ளைகள் காணாமல் போன நிலையில் தனியே வாடும் ஒருதாய், 3 பிள்ளைகளைகள் காணாமல் போய் தனியே தேடி அலையும் தாய் என சுமக்க முடியாத சோகங்களை சுமந்த பலர் அங்கே கண்ணீரை விட்டு தமது துயர்களைக் கூறியபடி இருந்தனர். 
 
முல்லைத் தீவு கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட உறவினர்களை தேடி அலையும் 200 வரையிலானவர்களில் அந்தந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இந்தத் தெரிவிலே தாமாக முன்வந்து தமது பெயர்களை கொடுத்த கானாமல் போனோரின் உறவினர்களில் ஒரு தாய் கூறினார் எல்லோரும் சேர்ந்து தேடுவோம் எனது பிள்ளை கிடைக்காவிடினும் மற்றயவர்களின் பிள்ளைகள் கிடைத்தாலும் அவர்களும் எங்கள் பிள்ளைகள் தானே எனக் கூறியது பலரையும் துயரங்களுக்கு உள்ளாக்கியது. 
 
இன்றய (01.02.13)  ஒன்று கூடலில் கலந்து கொண்டவர்களில் 22 பேர் தமது கண்முன்னே படையினரிடம் சரணடைந்த தமது உறவினர்களின் விபரங்களை ஒப்படைத்துள்ளனர்.
 
இன்று (01.02.13) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு  பிரதி மாதம்தோறும் ஒன்று கூடுவதாகவும் சரணடைந்து மற்றும் காணாமல் போனோரை தேடுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும், சர்வதேசத்திற்கு தமது பிரச்சனைகளை கொண்டு செல்ல உள்ளதாகவும் உறுதியெடுத்துள்ளது.
 
வடக்கின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி செயற்பட உள்ள இந்த அமைப்பிடம் காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தபின் காணாமல் போனோர் தொடர்பான விபரங்களை ஒப்படைக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.