Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யுத்தகால ரயில்

Featured Replies

ரயில் பயணத்தைக்  கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது,

இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று யோசிக்க முடியாது.

 

விறுவிறுப்பான திரைக்கதை என்பது இப்படத்திற்கே பொருத்தமானது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திருப்பங்கள், வெற்றி தோல்வி என்று மாறிமாறிச் சுழலும் விதியின் பகடையாட்டம், படம் பார்க்கின்ற பார்வையாளனுக்குப் பதைபதைப்பை உருவாக்கிவிடுகிறது, சாகசப்படங்களை விரும்பி பார்க்கின்றவர்களுக்கு இப்படம் ஒரு விருந்து

 

Money is a weapon. This paintings  are as negotiable as gold என்று  படத்தின் ஒரு காட்சியில் நாஜி ராணுவ கர்னல் வான் வால்ஹெம் சொல்கிறார், அது தான் படத்திற்கான ஆதாரத்திறவு கோல்

ஜெர்மனியின் நாஜி ராணுவம் பாரீஸ் நகரைக் கைப்பற்றுகிறது. அங்குள்ள ம்யூசியத்தில் இருந்த அரிய ஒவியங்களை ஜெர்மனிக்கு அள்ளிக் கொண்டு போகத் திட்டமிடுகிறார் கர்னல் வால்ஹெம். இவர் ஒரு கலை ரசிகர்,  பாரிஸ் ம்யூசியத்தில் உள்ள வான்கோ, பால்காகின், மெனே, ரெனுவா, ரூசோ என்று தனக்கு விருப்பமான ஒவியங்கள் அத்தனையும் தன்னோடு ஜெர்மனிக்கு கொள்ளையடித்து கொண்டுபோய்விட விரும்புகிறார், இதற்காக ராணுவத்தினரை அழைத்து ஒவியங்களை முறையாக  பேக்கிங் செய்து தனி ரயில் ஒன்றில் ஜெர்மனி கொண்டு போகத் திட்டமிடுகிறார்,

 

யுத்த நெருக்கடியின் நடுவில் ஒவியங்களை ஏற்றிப்போவதற்கு எல்லாம் தனி ரயில் விட முடியாது என்று மறுக்கும் ராணுவ உயர் அதிகாரியிடம் இந்த ஒவியங்கள் தங்கத்தை விட மதிப்பு மிகுந்தவை, இவற்றை வைத்து அதிக பேரம் பேசலாம் என்று நம்ப வைத்து தனி ரயில் ஒன்றினை பெற்றுவிடுகிறார்,

அந்த ரயிலில் ஒவியங்கள் அடங்கிய பெட்டிகள் ஏற்றப்படுகின்றன, அந்த ரயிலை எப்படியாவது தடுத்து நிறுத்தி பிரான்சின் கலைச்செல்வங்களை காப்பாற்ற வேண்டும் என்று விலாத் என்ற ம்யூசியப்பெண்மணி முயற்சிக்கிறார், இதற்காக அவர் பிரான்சின் ரயில்வே காவல்படையை சேர்ந்த லிபாசேயைத் தொடர்பு கொள்கிறார், அவரும் ரயில்வே துறையின் நண்பர்களும் ஒன்றினைந்து எப்படி ஜெர்மன் போக இருந்த ரயிலை தடுத்து நிறுத்தப்போகிறார்கள் என்பதே படத்தின் திரைக்கதை

 

படத்தின் முக்கிய கதாபாத்திரம் ரயில், நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட அந்த ரயில் ஒரு டினோசர் போல பிரம்மாண்டமாக வலிமையாக பயணிக்கிறது.  ரயில் பயணத்தை இத்தனை மாறுபட்ட கோணத்தில் யாரும் படமாக்கியதேயில்லை,காட்சிக்கோணங்களில் மட்டுமில்லாது ரயில் செல்லும் பாதைகள், எதிர்படும் தடைகள்,ரயில்நிலையங்களின் பெயர்களை மாற்றி செய்யும் தந்திரங்கள் என்று நாம் ரயிலை துரத்திக் கொண்டு கூடவே பயணம் செய்வது போல படமாக்கபட்டிருக்கிறது

நீராவி என்ஜின்களே நின்று போய்விட்ட இந்தக் காலத்தில் நீராவி என்ஜின்களின் உறுமலும், புகைவிட்டபடி ரயில் செல்லும் காட்சியும், ரயிலில் மணியோசை எழும்பும் விவரிக்க முடியாத உணர்ச்சிபீறிடலும் நம்மை வேறு உலகிற்கு அழைத்துப்போகின்றன

 

Jean Tournier.  Walter Wottitz ஆகிய இரண்டு ஒளிப்பதிவாளர்கள் படப்பிடிப்பு செய்திருக்கிறார், மிகத்தேர்ந்த ஒளிப்பதிவு, ரயில் என்ஜினின் அசைவுகளை இவ்வளவு துல்லியமாக யாரும் படம் எடுத்ததேயில்லை

கிளைமாக்ஸ் காட்சியில் தடுத்தபட்ட ரயிலின் முன்னால் நின்றபடியே வால்ஹெம் பேசும் வசனங்கள் குறிப்பிடத்தக்கவை, அவன் ஆத்திரத்தின் உச்சத்தில் கத்துகிறான்

Beauty belongs to the man who can appreciate it. They will always belong to me, or a man like me.

Now, this minute, you couldn’t tell me why you did what you did.

லிபசே ஒரு வார்த்தை கூட பதில் சொல்லவில்லை, வால்ஹெமை தனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறான், அது தான் அவனது பதில்,  ஒவியங்கள் தடம்புரண்ட ரயிலில் இருந்து  சிதறி வெளியே கிடக்கின்றன, லிபசே அவற்றை காப்பாற்றிவிட்டதுடன் தனது பெரும்பணி முடிந்துவிட்டதாக கடந்து செல்கிறான், படம் நிறைவு பெறுகிறது.

 

நாஜி ராணுவத்தினர் தான் கைப்பற்றிய நகரங்களில் இருந்து பல்லாயிரம் முக்கிய ஒவியங்களை திருடிக் கொண்டு போயிருக்கிறார்கள், பல அரிய ஒவியங்களை தீயிட்டு எரித்திருக்கிறார்கள்,  சில வேளைகளில்  முக்கிய ஒவியங்களை மிக குறைவான விலைக்கு கள்ளச்சந்தையில் விற்றிருக்கிறார்கள், இப்படி கள்ளதனமாக வாங்கப்பட்ட ஒவியங்கள் பின்னாளில் பல கோடி ரூபாய் விலை போயிருக்கிறது

இரண்டாம் உலகபோரின் போது களவாடப்பட்ட ஒவியங்களில் முக்கியமானது வான்கோவின் Painter on the Road to Tarascon. இந்த ஒவியத்தை நாஜி ராணுவம் எரித்துவிட்டதாக சொல்கிறார்கள், ஆனால் அது உண்மையில் யாரோ ஒருவரின் தனிப்பட்ட சேமிப்பில், உலகின் கண்படாமல் பாதுகாக்கபட்டு வருகிறது என்ற ஒரு எண்ணமும் இருந்து வருகிறது

 

Johannes Vermeer, Edgar Degas, Gustav Klimt, Michelangelo போன்ற முக்கியமான ஒவியர்களின் கலைப்படைப்புகள் நாஜிகளால் கொள்ளையடிக்கபட்டு  ஜெர்மனிக்கு கொண்டு போகப்பட்டிருக்கின்றன, ஆகவே இந்தக் கதையின் அடிநாதமாக இருப்பது வரலாற்று உண்மை,

ஒடும் ரயிலை படமாக்குவது ஒரு சவால், இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது, ரயிலோடு ரயில் மோதிக் கொள்வது கூட நிஜமாக எடுக்கப்பட்ட காட்சிகளே, இந்தக்காட்சியை படமாக்க ஏழு கேமிராக்கள் உபயோகப்படுத்தபட்டிருக்கின்றன,

 

ஒவியங்களை ஏற்றிச் செல்லும் ரயிலைப் படமாக்குவதற்காக இன்னொரு ரயிலை வாடகைக்கு எடுத்து அதற்கு இணையாக கூடவே பயணிக்க செய்து படமாக்கியிருக்கிறார்கள், ரயில் தண்டவாளத்தை வெடி வைத்து தகர்க்கும் காட்சியை படமாக்க ஐம்பது பேர் ஆறுவாரங்கள் வேலை செய்திருக்கிறார்கள்

படப்பிடிப்பின் போது பர்ட் லான்சர் நிஜமான சண்டையிட்டிருக்கிறார், இதில் காலில் அடிபட்டு காயமடைந்து சிகிட்சை பெற்றிருக்கிறார், பர்ட் லான்சரின் மிகச்சிறந்த நடிப்பு இப்படத்திற்கு முக்கிய பலம். அவர் நடித்துள்ள லிபசே கதாபாத்திரம் அதிகம் பேசுவதில்லை, அதே நேரம் ஜேம்ஸ் பாண்ட் போல துரித சாகசம் செய்கிற வீரனுமில்லை, ஆனால் உறுதியான போராளி, அதை பர்ட் லான்சர் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்

அது போலவே வில்ஹெமாக நடித்துள்ள Paul Scofield குறிப்பிடத்தக்க நடிகர், கலைகளை தீவிரமாக நேசிக்கும் அதே நேரம் தான் ஒரு ஜெர்மனிய ராணுவ அதிகாரி என்ற இரட்டை மனநிலை அவர் வெளிப்படுத்துகிறார், ஒவியங்கள் எங்கே தன் கையை விட்டு போய்விடுமோ என்று பதற்றமடையும் அவரது செயல்பாடுகள், முடிவில் சாலையில் செல்லும் ராணுவ வாகனங்களை நிறுத்தி உத்தரவிடும் கோபம், இயலாமை என்று பால் ஸ்கோபீல்ட் மிகசிறப்பாக நடித்திருக்கிறார்

 

வானில் இருந்து குண்டு பொழியும் விமானங்கள், அதன் ஊடாகக் கடந்து செல்லும் வேகமான ரயில், ராணுவத்தின் பிடியில் உள்ள ரயில் நிலையம், நிறுத்துவதற்காக முயற்சிக்கும் ரயில்வே பணியாளர்கள், தடுக்கும் ராணுவ வீரர்கள் என மிக யதார்த்தமாக படம் உருவாக்கபட்டிருப்பதே  வெற்றிக்கான முக்கிய காரணம்

தி டிரைன் படத்தினை magnificent film என்று வர்ணிக்கிறது டைம் இதழ், அது உண்மை என்பதைப் படம் பார்க்கும் நாமும் முழுமையாக உணர்கிறோம்

 

http://www.sramakrishnan.com/?p=3251

•••

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.