Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேச விடுதலை: நாம் என்ன செய்யலாம்……? ??

Featured Replies

தமிழ் தேச விடுதலை:  நாம் என்ன செய்யலாம்……? ??

நம் முன் உள்ள தெரிவுகள் என்ன…??? ஒரு முன்மொழிவு!.


தமிழ் தேச விடுதலைக்கு  நாம் (புலம் பெயர்ந்த அல்லது பெயர்க்கப்பட்ட தமிழ் பேசும் மனிதர்கள்; ) என்ன செய்யலாம்…….


இன்றைய புலத்தின் அதாவது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு
பிரதேசங்களின் நிலைமை என்ன? அந்த மண்ணில் சகல இடங்களிலும் சிறிலங்கா
இராணுவத்தின் பிரசன்னம். தமது நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்காக
அரசாங்கத்திடமும் அதன் இராணுவத்திடமும் அரசியல்வாதிகளிடமும் அரசசார்பற்ற
நிறுவனங்களிடமும் கையேந்தி நிற்கின்ற மனிதர்களின் கையறுநிலை. தமது
வாழ்வுரிமைக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கமுடியாதää
போராட முடியாத இராணுவ மயப்பட்ட சுழல். ஜனநாயகமின்மை நிலவுகின்ற
அதிகாரமயப்பட்ட சூழல். இதையும் மீறி போராட்டங்களை முன்னெடுப்பவர்கள் மீதான
அச்சுறுத்தல் மற்றும்; அவர்களுக்கான பாதுகாப்பின்மை. மற்றும் இவ்வாறான பயம்
நிறைந்த சூழலில் வாழ்கின்ற குழந்தைகள் மற்றும் மாணவர்களின் அச்சம் கொண்ட
நிச்சயமற்ற வாழ்வு. இதைவிட புலிகள் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களைச்
சேர்ந்த முன்னால் அங்கத்தவர்கள்; (தமிழ் தேசத்தின் விடுதலைக்கான பங்களித்த
போராளிகள்)ää மற்றும் புலி ஆதரவாளர்கள் மட்டுமல்ல புலிகளின் பிரதேசத்தில்
வாழ்ந்தவர்கள் என்பதனாலையே தம் வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் ஒவ்வொரு
யுகங்களாக சிறிலங்காவின் சிறைகளிலும்ää வதை முகாம்களிலும் கழிக்கின்ற
பல்லாயிரக்கணக்கான மனிதர்கள். வடக்கு கிழக்கின் இன்றைய நிலை தொடருமாயின்ää
எவ்வாறு பாலஸ்தீனம் இஸ்ரேலினால் கொஞ்சம் கொஞ்சமாக துண்டாப்பட்டு
ஆக்கிரமிக்கப்பட்டதோ அவ்வாறுää தமிழ் தேசத்தின் நிலங்களும் துண்டாடப்பட்டு
முழுமையாக ஆக்கிரமிக்கப்படலாம். இதற்கான முனைப்புகளை ஏற்கனவே
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. மற்றும் அரசியல்
கைதிகளில் விடுதலை என்பது பகற்கனவாகவே இருக்கும். அவர்களது வாழ்வு
சிறைகளுக்குள்ளையே முடிய வேண்டியதுதான்.

ஆகவே இவர்கள் அனைவரின் விடிவிற்காகää விடுதலைக்காகää சுதந்திரத்திற்காக புலம் பெயர்ந்த மனிதர்களாகிய நாம்; என்ன செயயப்போகின்றோம்?


புலிகள் இயக்கத்தை அழித்தன் பெயரில் நடைபெற்ற நிகழ்வுகளும்;ää இதன்
பின்பான நிகழ்வுகளும் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகின்றது என்பது நாம்
அனைவரும் அறிந்ததே. இவ்வாறான மோசமான சூழலில் தான் இலங்கை அரசாங்கம் பல
தேர்தல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன்மூலம் இலங்கை அரசாங்கமானது
வடக்கு கிழக்கில் நிலைமை சீரடைந்து விட்டது என்பதையும் தாம் ஜனநாயகபூர்வமாக
செயற்படுவதாகவும் சர்வதேசத்திற்கு காண்பிப்பதையே நோக்கமாகக் கொண்டு
செயற்படுகின்றது. விரைவில் வட மாகாண தேர்தலையும் நடாத்தப்போகின்றது. 
இதற்கு முன் நடைபெற்ற தேர்தலிகளில் இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில்
வாழும் (தமிழ் பேசும்) மனிதர்கள்ää சமூகங்கள் சிறிலங்கா இராணுவம் தம்மைச்
சுற்றி நிலைகொண்டிருந்தபோதும்ää எந்தவித தயக்கமுமின்றிää பயமுமின்றிää
துணிவுடன் தாம் விரும்புகின்ற கட்சிக்கு அல்லது சிறிலங்கா அரசுக்கு எதிரான
தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக தமது வாக்குகளை இந்தத் தேர்தல்களினுடாக
பயன்படுத்தியுள்ளனர். கடந்த காலங்களில் நடந்த தேர்தல்கள் வரைää இவர்கள்
தமது வாக்குகளை குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே பெரும்பான்மையாக
அளித்து அவர்களை வெற்றி பெற செய்துள்ளனர். மக்களின் இந்த செயற்பாடானது
முடக்கப்பட்ட அல்லது அடக்கப்பட்ட தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு 
மீளவும் நம்பிக்கை அளிக்கின்ற செயற்பாடு என்றால் மிகையல்ல. தமிழ் தேசிய
கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்தும் ஜனநாய
வழிகளில் நம்பிக்கை வைத்து செயற்படுவதும்ää குரலற்ற வடக்கு கிழக்கு
மனிதர்களை ஜனநாயக வழியில் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக
பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களின் குரலாக ஒலிப்பதும்(?) சர்வதேசளவில்
முக்கியமானதுடன் கவனிக்கவும்;படுகின்றது. மேலும் தமிழ் தேசிய
கூட்டமைப்புடன் பல்வேறு அரசியற் கட்சிகளும் மற்றும் இயக்கங்களின் அரசியல்
கட்சிகளும் இணைந்திருப்பது தமிழ் தேசிய உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்காக
செயற்படுவதற்கு பலம் சேர்ப்பதே என்றால் மிகையல்ல


2009ம் ஆண்டு மே மாதத்தின் பின் இலங்கை வாழ் தமிழ் பேசும் மனிதர்கள்
துணிவுடன் தேர்தலில் வாக்களிப்பது மட்டும் நடைபெறவில்லை. சிறிலங்காவின்
சிறைகளில் எந்தவிதமான விசாரணைகளும் இல்லாது வாடுகின்ற பல்லாயிரக்கணக்கான
தமிழ் அரசியல் கைதிகள்; தமது விடுதலைக்காக சிறைக்குள்ளையே உண்ணாவிரதப்
போராட்டங்களை பல முறை நடாத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் எல்லாம்
பல்வேறு வாக்குறுதிகளால் நிறுத்தப்பட்டன. அல்லது அரச அதிகாரத்தினால்
அடக்கப்பட்டன. ஆகவே தொடர்ந்து விடுதலைக்கான எந்த வாய்ப்புகளுமின்றி
சிறைக்கம்பிகளின் பின்னால்  தம் நிச்சயமில்லா எதிர்காலத்தை எண்ணி
ஏங்கிக்கொண்டு இவர்கள் இருக்கின்றனர்..


இவ்வாறான செயற்பாடுகள் நமக்கு குறிப்பாக புலம் பெயர்ந்த மனிதர்களுக்கு
நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். இந்த செயற்பாடுகளிலிருந்து நாம்
கற்றிருக்க வேண்டும். இப் போராட்டங்கள் தொடர்வதற்கு நமது பூரண ஆதரவை
பங்களிப்பை நாம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறான ஒரு சூழலில் அவர்களால்
போராட முடியுமானால்ää ஒரளவு ஜனநாயகமும் சுதந்திரமும் கிடைக்கின்ற புலம்
பெயர்ந்த தேசங்களில் இருந்து அவர்களின் விடுதலைக்காக அந்த மக்களின்
சுதந்திரத்திற்காக போராட முடியாதா? செயற்பட முடியாதா?;


நாம் நமது வேறுபாடுகளை ஒதிக்கிவிட்டுää கடந்த கால போராட்ட இயக்கங்களின்
அடையாளங்களை தவிர்த்துää கொடிகளை தவிர்த்துää சில பொதுவான நியாயமான
முக்கியமான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்துää கூட்டாகää தொடர்ச்சியான
போராட்டங்களை புலம் பெயர் தேசங்களில் முன்னெடுக்கவேண்டியவர்களாக உள்ளோம்.
குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் 22ம் திகதி ஜெனிவாவில் நடைபெறப் போகின்ற
கூட்டத்தொடரை இலக்காக கொண்டு நாம் ஒரு போராட்டத்தை கூட்டாக முன்னெடுப்பது
பயனள்ளதாக இருக்கலாம். இவ்வாறன ஒரு செயற்பாடு அவசரமானதும் அவசியமானதும்
என்றால் தவறுமல்ல மிகையுமல்ல. மேலும் நாம் செயற்படப் போகின்றோம் எனின்
இவ்வாறன முயற்சிகளை இன்றைய சூழலில் கூட்டுழைப்பாக குறைந்தபட்ச பொதுவான
அடிப்படைக் கோரிக்கைகளுக்கான உடன்பாடுகளுடன் செய்யும் பொழுது மட்டுமே
குறிப்பிட்ட செயற்பாட்டிற்கான பலம் அதிகரிப்பதுடன் நமது நோக்கத்தை
அடைவதற்கு முயற்சிக்க முடியும்;.


இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மனிதர்கள் தொடர்பாக நம்முன் குறைந்தது நான்கு முக்கிய பொறுப்புகள் இருக்கின்றன. அவையாவன…


இலங்கையில் வாழ்கின்ற தமிழ் பேசும் மனிதர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சுழலை உருவாக்குவது.

இதற்கு முதல் அடிப்படையாக இருப்பது வடக்கு கிழக்கில் இருக்கின்ற
இராணுவமயமாக்கலை இல்லாதுசெய்வது. ஆகவே சிறிலங்கா இராணுவமானது இப்
பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும்.


இரண்டாவது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கனக்கான அரசியல் கைதிகள்.

இவர்களில் பலர் சந்தேகத்தின் பேரிலையே கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக
அரசியல் கைதிகளாக எந்தவிதமான விசாரணைகளும் இல்லாது வைக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்கள் நமது விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் பங்குபற்றியதால்
கைதானவர்கள். இவர்களின் வாழ்க்கை சிறைக்குள்ளையே முடிவடையக் கூடாது.
நம்மைப் போல (புலம் பெயர்ந்து வாழ்பவர்களைப்;போல) இவர்களும் சுந்திரமாக
வாழ்வதற்கான சகல உரிமைகளையும் உடையவர்கள். இவர்களின் விடுதலை நமது
பொறுப்பு. நாம் இவர்களை கைவிட்டுவிட கூடாது. ஆகவே இவர்களின் நிபந்தனையற்று
விடுதலை செய்யப்;படவேண்டும்.;.


மூன்றாவது இன முரண்பாட்டிற்கு அடிப்படையாக இருக்கின்ற தமிழ் பேசும்
மனிதர்களின் அரசியல் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுகின்றமை அல்லது
அதற்கான தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றமை என்பவற்றுக்கு எதிராகவும்ää தீர்வு
ஒன்று ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய சர்வதே அழுத்தங்களை
ஏற்படுத்துவதற்கான போராட்டங்களை நடாத்துவது. குறிப்பாக வடக்குää கிழக்கு
பிரதேசங்களுக்கான பாதுகாப்பு போன்ற முக்கியமான அதிகாரங்களை அந்த
மனிதர்களுக்கே வழங்கவேண்டும்.


நான்காவது மலையக மற்றும் முஸ்லிம் மக்களின்; அரசியல் உரிமைகளையும் வழங்க வேண்டும்.


•    இலங்கையின் இன் முரண்பாட்டிற்கான அரசியல் தீர்வு உடனடியாக முன்வைக்கப்படவேண்டும்.

•    அனைத்து அரசியல் கைதிகளையும் எந்த நிபந்தனையுமின்றி விடுதலை செய்யவேண்டும்.

•    வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறவேண்டும்;.

•    மலையக மற்றும் முஸ்லிம் மக்கள்; அரசியல் உரிமைகளையும் வழங்க வேண்டும்.


இந்த நான்கு கோரிக்கைகளும் மிகவும் அடிப்படையானவை. முக்கியமானவை. அவசரமானவை.

இவற்றை முன்வைத்து நாம் தொடர்;ச்சியான செற்பாடுகளை போராட்டங்களை புலம்
பெயர்ந்த தேசங்களில் ஐ.நாவின் கூட்டத் தொடர் நடைபெறவிருக்கின்ற மார்ச் 22ம்
திகதிவரை முன்னெடுப்பது. இதன் மூலம் சர்வதேச சமூகத்திற்கு ஒர அழுத்தத்தை
வழங்குவது.


பலவகைகளிலும் அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலை தொடர்பாக அக்கறையும்
எவ்வாறு அதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது என்கின்ற கேள்வி நீண்ட காலமாக
எனக்குள் இருந்து வருகின்றது. ஆனால் சரியான மாற்று வழி என்ன என்பதை இதுவரை
நான் அறியேன். அதேவேளை அடக்குமுறைகளுக்கு எதிரானதும் விடுதலைக்கானதுமான
வழிமுறை என்பது நிச்சயமாக பிரக்ஞையற்ற ஆனால் தன்முனைப்பான மனிதர்களின்
ஆயுதப் போராட்டமல்ல என்பதில் மட்டும் உறுதியாக இருக்கின்றேன். ஆகவே
நம்மிடம் இருக்கின்ற அதி உயர்  அறவழிப் போராட்டவழிமுறை உண்ணாவிரதம்
மட்டுமே. இதையே நாம் ஐனநாயக வழியின் அதி ஊச்சமாகää (பிறர் மீது)
வன்முறையற்ற ஒரு போராட்டமாக அமைதியான முறையில் பயன்படுத்தலாம். இந்த வழி
சரியானதா அல்லது தவறான என்பதையோ காத்த்pரமானதாக தாக்கம் நிறைந்ததா
என்பதையும் நான் அறியேன். ஆனால் இன்று நம்மால் சாத்தியமான ஒரு செயற்பாடு
இது மட்டுமே.

இவ்வாறான ஒரு போராட்டத்தில் எந்த பயனையும் எதிர்பாரதுää புகழ் மற்றும் பணம்ää பட்டங்களை எதிர்பாராது செயற்பட யார் முன்வருவார்கள்?


நாடுகடந்த அரசாங்கத்தின் தலைவர்களே முன்வருவீர்களா?

மற்றும் பல்வேறு தமிழ் அவைகளினதும் அமைப்புகளினதும் போரங்களினதும் காங்கிரஸினதும் தலைவர்கள் முன்வருவீர்களா?

கல்விமான்கள் முன்வருவீர்களா?

இன்று புலிகளின் இயக்கமும் தலைமையும் இல்லாதபோதும் புலி எதிர்ப்பாளர்கள் போராட முன்வருவீர்களா?

புலம் பெயர்ந்த நாடுகளில் வீடுகளில் சும்மா இருக்கின்ற மனிதர்கள் முன்வருவீர்களா?

இவர்களுடன் இலங்கையில் செயற்படுகின்ற தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்றப் பிரதிநிதிகளும் பங்குபற்ற முன்வருவார்களா?

தமிழகத்திலிருக்கின்ற ஈழத் தமிழர்களும் அவர்களின் ஈழத் தமிழ் தலைவர்களும் முன்வருவார்களா?

(தமிழக தலைவர்களும் செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களாக பின்னனியில் இருப்பதே
நல்லது. இவர்கள் நமக்காக போராடுவது என்பது நமது தேசிய விடுதலைப்
போராட்டத்திற்கு தொடர்ந்தும் எதிர்மறையான பாதிப்பையே ஏற்படுத்தும். இது
தொடர்பாக விரிவான ஒரு கட்டுரை எழுதவேண்டும்)


இலங்கையில் சிறிலங்காவின் சிறையில் இருப்பவர்களே தமது விடுதலைக்கான உண்ணாவிரதப்போராட்டம் நடாத்தும் போது…

எந்தவிதமான பயமுமின்றி தயக்கமுமின்றி அரசாங்கத்திற்கு எதிராக புலம் வாழ் மனிதர்கள் வாக்களிக்கும் போது….

தமிழர்களின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும்ää அவர்களது
உரிமைகளுக்காகவும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் சிங்கள இளைஞர்களே
இலங்கையின் தலைநகரில் குரல் கொடுக்கும் பொழுது…போராடும் பொழுது….

புலம் வாழ் மனிதர்களின் விடுதiலாக்காகவும் மற்றும் இராணுவத்தின்
கண்காணிப்பின் கீழ் வாழும் வடக்கு கிழக்கு மனிதர்களின்
சுதந்திரத்திற்காகவும்ää….

குறைந்த பட்ச ஐனநாயக உரிமைகளுடன் சுதந்திரமாக வாழும் புலம் பெயர்ந்த நாம் போராடா முடியாதா?


மீண்டும் ஒருமுறை இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் சர்வதேச
நாடுகள் எங்கும் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களின் சமூகங்களின்
உரிமைகளுக்கான சுதந்திரத்திற்கான விடுதலைக்கான குரல்கள் அமைதியான
போராட்டமொன்றினுடாக ஒலிக்கப்பட வேண்;டும்.


இதுவே தமிழ் பேசும் மனிதர்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக
சுதந்திரத்திற்காக இதுவரை மரணித்த ஒவ்வொருவருக்கும் நாம் செய்யும்
அஞ்சலியாகும். ஏனனில் இந்த மரணங்கள் மதிப்பற்றவையாக அர்த்தமற்றவையாக
வரலாற்றில் போய்விடக்கூடாது…..


தேச விடுதலை – நம்முன் உள்ள தெரிவுகள் என்ன….


நாம் வன்முறையின் மீது நாட்டம் கொண்டவர்கள் இல்லை. ஆனால் அதன் மீது ஒரு
ஈர்ப்பு இருக்கின்றமை பொய்யல்ல. அதனால்தான் பெரும்பாலான ஐனரஞ்சக
திரைப்படங்கள் ஆயுதங்களையும் வன்முறையையும் பிரதானப்படுத்தி எடுப்பதுடன்
அவை பெரும் வெற்றியையும் பெருகின்றன. மேலும் கடந்த கால வரலாறுகளின்
அடிப்படையில் விடுதலைக்காக போராடுவது என்றால் அது ஆயுதப் போராட்டம் மட்டுமே
என்ற எண்ணம் நமக்குள் ஆழமாக பதிந்துள்ளது. அதாவது நாம் உண்மையிலையே அயுதப்
போராட்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களாயின் எங்களுக்கு இப்பொழுது
இருக்கின்றது ஒரே வழிதான். அது மீளவும் ஆயுதக் குழுக்களை உருவாக்கிää
பயிற்சி எடுத்துää கப்பல்களில் சென்று வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இறங்கி
அங்குள்ள சிறிலங்கா இராணுவ முகாம்களைத் தாக்கி இராணுவத்தை அழித்து ஒட ஓட
விரட்டுவதன் மூலம் அகற்றுவதே. இவ்வாறு செய்வது சாத்தியமா என்ற கேள்வி
இருப்பினும் எழுதுவதற்கு நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் இவ்வாறான
வழிமுறையில் எனக்கு நம்பிக்கையுமில்லை. இது சரியான பாதை என நான்
நம்பவுமில்லை. மீண்டும் ஒரு மனித அழிவை ஏற்படுத்துவதற்கு நான் தயாராக
இல்லை. ஆனால் நம்மில் பலர் இந்தப் பாதையை நம்புகின்றனர். அவ்வாறு
நம்புகின்ற புலம் பெயர்ந்தவர்களின் எத்தனைபேர் இவ்வாறான ஒரு செயற்பாட்ற்கு
தம்மை முழுமையாக பங்களிக்க தயாராக இருக்கின்றனர்? இது சந்தேகத்திற்குரியதே.
அகவே இதை சிபார்சு செய்ய முடியாது.


இரண்டாவது புலம் பெயர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இலங்கைக்கு சென்று
தொடர்ச்சியான ஐனநாயக வழிப் போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம்
அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலையை உருவாக்குவது. இவ்வாறன செயற்பாட்டினுடாக
சிறை நிறைப்பு போராட்டத்தை முன்னெடுப்பது. அதாவது கைது செய்து
சிறையிலடைக்கும் வரை தொடர்ச்சியானதும் உறுதியானதுமான ஐனநாயக வழி
போராட்டங்களை முன்னெடுப்பது. இவ்வாறு செயற்படுவதற்கு கூட எத்தனை புலம்
பெயர்ந்த மனிதர்கள் இலங்கையை நோக்கி வருவதற்கு தயாராக இருக்கின்றார்கள்?
ஆகவே இதுவும் சாத்தியமற்றது.


மூன்றாவது கட்சி ஒன்றைக் கட்டி நீண்ட கால நோக்கில் செயற்படுவதாகும்.
இதுவே சரியான பாதை. இதன் மூலம் தேசிய விடுதலையை மட்டுமல்ல சமூகத்தில்
காணப்படும் பல்வேறுவிதமாக அடக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு இதுவே
வழிவகுக்கும். இதற்கு முதலில் நாம் கோட்பாட்டு ரீதியாக தெளிவுள்ளவர்களாக
இருக்கவேண்டும். புதிய சிந்தனைகளை உள்வாங்கத் தயாரானவர்களாக
இருக்கவேண்டும். மரபார்ந்த கட்சி கட்டும் முறைää அதன் அமைப்பு வடிவங்கள்
மற்றும் செயற்படும் வழிவகைகள் தொடர்பான புதிய சிந்தனைகள் இதற்கு
அவசியமானவை. இவ்வாறன செயற்பாடுகளை சமூக விடுதலையில் அக்கறையுள்ளவர்கள்
எதாவது ஒரு புள்ளியில் ஆரம்பிக்கத்தான் வேண்டும். ஆனால் தமிழ் தேசத்தின்
இன்றைய சூழலில் இச் செயற்பாடு எந்தவிதமான உடனடித்தாக்கத்தையும்
ஏற்படுத்தாது. ஆகவே இது சரியான செயற்பாடாக இருந்தபோதும் நீண்ட கால நோக்கினை
மட்டும் அடிப்படையாகக் கொண்டே இதில் பங்கு பற்றலாம். அகவே உடனடியான
நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு பின்வரும் வழிமுறையே சரியானதும்
சாத்தியமானதுமாகும்.


நான்காவது மார்ச் மாதம் 22ம் திகதி நடைபெறவிருக்கும் ஜெனிவா கூட்டத்தை
இலக்காகவும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முதன்மையாகவும் வைத்து எந்தவிதமான
அமைப்புகளையும் இயக்கங்களையும் முதன்மைப்படுத்தாது கொடிகளையும்
முக்கியத்துவப்படுத்தாது உண்ணாவிரப்போராட்டத்தில் ஈடுபடுவதே இன்றைய சூழலில்
தாக்கம் நிறைந்தாக இருக்கும். இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டமானது ஆகக்
குறைந்தது மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகின் ஜெனிவா கூட்டத்தொடர்
நடைபெறும் பொழுது அதன் உச்ச நிலையை அடைந்திருக்கும். இவ்வாறன ஒரு செயற்பாடு
தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்த காலங்களைப் போல் ஒருவர் மட்டும்
உண்ணாவிரதம் இருக்காது தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற புலம் பெயர்ந்த
நகரங்கள் ஒவ்வொன்றிலும் மற்றும் இலங்கையிலும் எத்தனை போர் இருக்க முடியுமோ
அத்தனை பேர் உண்ணாவிரதம் இருப்பது. குறிப்பாக அமைப்புகளின் தலைவர்கள்ää
பிரபல்யமானவர்கள்ää புலமைசார் துறையினர் மற்றும் தமிழ் கட்சிகளின்
தலைவர்கள் பங்கு பற்றுவது பயனள்ளது. இவ்வாறு இருக்கும் பொழுது அது ஒரு
தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விரைவில் பலரது கவனங்களையும் பெறலாம். இவ்வாறு
கூறுவதால் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதல்ல
அர்த்தம். நான் கலந்து கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அது பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தாதது மட்டுமல்ல பலரது கவனத்தையும் ஈர்க்காது. ஆகவேதான்
தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரபல்யாமானவர்களை அதிகாரத்திலுள்ளவர்களை
அழைக்கின்றேன். அவர்களுடன் இணைந்து பங்குபற்ற தயாராகவே இருக்கின்றேன்.


இவ்வாறு முன்னெடுப்படுகின்ற செயற்பாடானதுää எந்த அமைப்பு சார்ந்த
போராட்டமோ அல்லது ஒரு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் போராட்டமோ அல்லது
ஒரு கொடியின் கீழ் நடைபெறும் போராட்டமோ அல்ல என்பதில் தெளிவாக
இருக்கவேண்டும்.

இப் போராட்டமானது புலத்தில் வாழும் தமிழ் பேசும் மனிதர்களின் விடுதலைக்காக
உரிமைகளுக்காக சுதந்திரத்திற்காக புலம்பெயர்ந்த மனிதர்களின் ஒன்றனைந்த
செயற்பாடாக இருக்கவேண்டும்;.


இவ்வாறான ஒரு போராட்டத்தில் பங்கு பற்றவும் ஒழுங்கு படுத்தவும் யார் முன்வருவார்கள்?


மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காக இன்று நாம் போராடாது விடுவோமாயின்
எவ்வாறு பாலஸ்தீனம் இஸ்ரேலினால் கொஞ்சம் கொஞ்சமாக துண்டாப்பட்டு
ஆக்கிரமிக்கப்பட்டதோ அவ்வாறு தமிழ் தேசத்தின் நிலங்களும் துண்டாடப்பட்டு
ஆக்கிரமிக்கப்படலாம். இதற்கான முனைப்புகளை ஏற்கனவே
நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. மற்றும் அரசியல்
கைதிகளில் விடுதலை என்பது பகற்கனவாகவே இருக்கும். அவர்களது வாழ்வு
சிறைகளுக்குள்ளையே முடிய வேண்டியதுதான். இவற்றின் விளைவாக தேச விடுதலையை
நாம் வானத்திலிருந்து கூட ஒருபோதும் பார்க்க முடியாததாகவிடும். ஆகவே காலம்
தாழ்த்தி போராடுவது என்பது மேலும் பல பின்னடைவுகளையே நமக்குத் தரும்.


சிந்திப்போமா? வுpரைந்து முடிவெடுத்து செயற்படுவோமா?

உங்கள் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பங்களிப்புகளையும் எதிர்பார்த்து….

மீராபாரதி

 நான்காவது மார்ச் மாதம் 22ம் திகதி நடைபெறவிருக்கும் ஜெனிவா கூட்டத்தை இலக்காகவும் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முதன்மையாகவும் வைத்து எந்தவிதமான அமைப்புகளையும் இயக்கங்களையும் முதன்மைப்படுத்தாது கொடிகளையும்

முக்கியத்துவப்படுத்தாது உண்ணாவிரப்போராட்டத்தில் ஈடுபடுவதே இன்றைய சூழலில் தாக்கம் நிறைந்தாக இருக்கும். இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டமானது ஆகக் குறைந்தது மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகின் ஜெனிவா கூட்டத்தொடர்
நடைபெறும் பொழுது அதன் உச்ச நிலையை அடைந்திருக்கும்.

 

இவ்வாறன ஒரு செயற்பாடு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்த காலங்களைப் போல் ஒருவர் மட்டும் உண்ணாவிரதம் இருக்காது தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற புலம் பெயர்ந்த நகரங்கள் ஒவ்வொன்றிலும் மற்றும் இலங்கையிலும் எத்தனை போர் இருக்க முடியுமோ
அத்தனை பேர் உண்ணாவிரதம் இருப்பது. குறிப்பாக அமைப்புகளின் தலைவர்கள்ää பிரபல்யமானவர்கள்ää புலமைசார் துறையினர் மற்றும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பங்கு பற்றுவது பயனள்ளது. இவ்வாறு இருக்கும் பொழுது அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் விரைவில் பலரது கவனங்களையும் பெறலாம். இவ்வாறு கூறுவதால் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதல்ல அர்த்தம். நான் கலந்து கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன். ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது மட்டுமல்ல பலரது கவனத்தையும் ஈர்க்காது. ஆகவேதான் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரபல்யாமானவர்களை அதிகாரத்திலுள்ளவர்களை
அழைக்கின்றேன். அவர்களுடன் இணைந்து பங்குபற்ற தயாராகவே இருக்கின்றேன்.

 

 

உங்கள் கருத்திற்கு முதலில் நன்றிகள்.

 

இந்த மனித உரிமை பேரவையில் உலகம் மீண்டும் போற்குற்றத்தை முன்வைப்பது ஏன்?
நிச்சயமாக எமது கொலையுண்ட சிறுவர்கள், பெண்கள், மக்கள் மீதான அக்கறையா? இல்லை. உண்மையான அக்கறை இருந்தால் இவ்வளவு காலம் எடுக்காது.

 

அப்படியானால் ஏன் இந்த அக்கறை?
சர்வதேசத்தை, குறிப்பாக மேற்குலகத்தை பொறுத்தவரையில், இலங்கையில் சரிந்துவரும் ஜனநாயக பண்புகளே காரணம். அதாவது இலங்கை ஒரு மியான்மார் ஆகி விட கூடாது என்பதே. சீனாவின் ஆதிக்கத்திற்குள் ஒரு இராணுவ ஆட்சிக்கு சனநாயக முகம் கொண்ட அரசாகி விடக்கூடாது என்பதே காரணம்.

 

எனவே இதை புரிந்து கொண்டே தமிழர் தரப்பு தமது வியூகங்களை வகுக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.