Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டனர்
13 பெப்ரவரி 2013
 
– கார்டியன்
 
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.நாடு கடத்தப்பட்ட பதினைந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு யுத்த நிறைவு முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நாடு கடத்தப்பட்டவர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
நாடு கடத்தப்பட்ட 15 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தல்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர். தற்போது குறித்த இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, புகலிடம் பெற்றக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் நெவில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள், தமக்கு சித்திரவதை அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பது வழமையான ஓர் நிலைமை என குறிப்பிட்டுள்ளார்.
 
நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக பரித்தானிய மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மீது பாலியல் வல்லுறவு - கார்டியன்
பிப் 13, 2013
     
பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட எதிலிகளில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை.
 
பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்களில் சுமார் 15 பேர் மீண்டும் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்கள்.
 
இவர்களுக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்த அதிகாரிகள், இவர்களுக்கு புகலிடம் வழங்கியுள்ளார்கள் என்றும் அப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. அதில் குறிப்பாக 40 வயதுடைய தமிழ்ப் பெண்மணி ஒருவரை இலங்கை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்கள். அவரிடம் 2 மகன்களும் எங்கே எனக் கேட்டு அவரை சித்திரவதைப் படுத்தியுள்ளனர் இலங்கை இராணுவத்தினர்.
 
குறிப்பிட்ட பெண்ணின் பிள்ளைகள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கிறார்களா? இல்லையேல் தம்மை இணைத்துக்கொண்டார்களா என விசாரிக்க வந்தவர்களே தம்மை பலாத்காரம் செய்தார்கள் என்று மேற்படி அப் பெண் தெரிவித்துள்ளார்.
 
அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர், பலாத்காரத்தை உறுதிசெய்ததை அடுத்தே , பிரித்தானியா அவருக்கு புகலிடம் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணை முதலிலேயே நாடு கடத்தாமல் இருந்திருந்தால், இப் பெண் காப்பாற்றப்பட்டிருப்பார் என , சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் நிலைமை மாறும் வரை தமிழ் அகதிகளை பிரித்தானியா நாடுகடத்தக்கூடாது என்று, பிரித்தானியாவில் இருந்துவெளிவரும் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதனை சித்திரவதைக்கு எதிரான அமைப்பும் ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் குழு பாலியல் வல்லுறவு       பிரித்தானியாவில் இருந்து 2011 ஆம் ஆண்டு பலவந்தமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 15 இலங்கையர்களும் பாதுகாப்பு பிரிவினரால் குழு பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக சட்டத்தரணி ஒருவரை மேற்கோள்காட்டி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை லண்டனில் தற்போது வசிக்கும் 40 வயதான பெண் ஒருவர், தாம் இலங்கையின் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன தமது இரண்டு மகன்மாரின் விபரங்களை கோரியபோதே தமக்கு இந்த கதி நேர்ந்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே தாம் லண்டனுக்கு தப்பிவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாடு கடத்தப்படும் இலங்கையர்களின் விடயம் தொடர்பில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு உரிய கரிசனையை காட்ட வேண்டும் என்று தெ கார்டியன் கோரிக்கை விடுத்துள்ளது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3005

 

பிரித்தானியா வாழ் தமிழர்கள் தமது பாராளுமன்ற மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டுவரல் வேண்டும்.

Sri Lankans expelled from UK allege torture after deportation to Colombo
 
Freedom from Torture finds 15 failed asylum seekers later won refugee status but Tory minister says torture claims are unproven.
 
Fifteen Sri Lankan nationals have claimed they were tortured and subjected to inhuman and degrading treatment after they were forcibly removed to the country by the UK Border Agency, the Home Office has said.


In a freedom of information (FoI) request, the Home Office revealed that between the end of the island's civil war in 2009 and September 2012, 15 failed asylum seekers managed to escape back to Britain after being removed by the agency, the UKBA. They subsequently won refugee status after giving evidence to officials saying they were tortured in Sri Lanka.
 

Kulasegaram Geetharthanan, a solicitor in the UK, said that one of his clients, understood to be one of the 15 mentioned in the FoI statement, had been gang raped and tortured by Sri Lankan security services after being forcibly removed to the capital, Colombo, on a specially chartered UKBA flight in 2011.
 

The woman, in her late 40s, who now lives in London, told the Home Office that she was tortured and raped by security services who wanted her to reveal the whereabouts of her two sons, who had an affiliation to the Tamil Tigers (LTTE). After her ordeal she escaped the country a second time by bribing officials and re-returning to Britain on a false passport.
 

In the summer of 2012 her account of the attacks was accepted by immigration courts and she won
refugee status.
 

The stories of torture following UKBA deportation come a little over a week after the Foreign Office minister Alistair Burt told the island's BBC bureau that the UK had no direct evidence that people returned by the border agency were being tortured by Sri Lankan security services.
 
 http://www.guardian.co.uk/uk/2013/feb/12/sri-lanka-asylumseekers-torture-claims-uk-deportation
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.