Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த திறந்து வைத்த வாசல் ஊடாக மீண்டும் உள்நுழையப்போகும் சந்திரிகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்த திறந்து வைத்த வாசல் ஊடாக மீண்டும் உள்நுழையப்போகும் சந்திரிகா!
பிப் 13, 2013
     
இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இரகசிய உள்ளக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியவருகின்றது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கையை பெறமுடியும் என்று எதிர்பார்த்த இந்தியா உட்பட மேற்குலக சக்திகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
 

chandrika-mahida.JPG

போர் நிறைவு பெற்றதன் பின்னர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்காதது மட்டுமல்ல, மேற்குலகிற்கு எதிராக சீன சார்புக்கொள்கையை அதிகளவில் முன்னெடுத்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக்கொண்டுவந்து, மகிந்த அரசை இறுக்க முனைந்தது. ஆனாலும், அத்தீர்மானத்தைப் புறந்தள்ளிவிட்டு மகிந்த ஆட்சியாளர்கள் தமது வழியிலேயே நகரத்தொடங்கிய நிலையில், இவ் ஆண்டு மீண்டும் ஒரு கடுமையான தீர்மானத்தை மகிந்த அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் மீண்டும் கொண்டுவர அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன் பின்னர் கண்காணிப்புச் சிறப்புக் குழுவொன்றை அமைப்பதுடன், சிறீலங்கா மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

எனினும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஊடாகக் கொண்டுவரப்படுத் தடைகளை சீனா, ரஷ்யா போன்ற தமக்கு ஆதரவான நாடுகளின் வீட்டோ அதிகாரத்தின் மூலம் முறியடித்தவிடலாம் என்று சிறீலங்கா நம்புவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கிடையே, ஜெனீவாத் தீர்மானத்தின் பின்னர் சிறீலங்காவில் ஒரு அதிரடியான ஆட்சி மாற்றத்தை மேற்கொள்வதற்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இந்த ஆட்சி மாற்றத்தின்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை மீண்டும் அதிகாரத்திற்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

சிங்கள மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவரும், தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்கக்கூடியவர் எனவும் எதிர்பார்க்கும் சர்வதேசத்திற்கு, இப்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவே உடனடியான ஒரேயரு தெரிவாக இருக்கின்றார். சிறீலங்காவின் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே ஆட்சியில் இருக்கமுடியும் என்பது சட்டமாக இருந்தது. இரண்டுமுறை ஆட்சியில் இருந்ததால் சந்திரிகா மூன்றாவது முறை போட்டியிடாது ஒதுங்கிக்கொண்டார். ஆனால், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர், தனது மூன்றில் இரண்டு நாடாளுமன்றப்பெரும்பான்மையைப் பயன்படுத்தி அந்தச் சட்டத்தை நீக்கினார். இதனால் சிறீலங்காவின் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்கமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மகிந்த ஏற்படுத்திக்கொடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதிகாரத்தில் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை அமர்த்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான நகர்வுகள் சந்திரிகாவின் நண்பரும், மகிந்தவின் ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியவருமான மங்கள சமரவீர தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் மங்கள சமரவீர, நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்ட வேண்டுமாயின் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்.

இந்த ஆட்சி மாற்றத்திற்காக பல்வேறு கட்சியினரையும் ஒருங்கிணைக்க முயன்றுவரும் மங்கள சமரவீர, இதில் தமிழ்க் கட்சிகளை மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களையும் இணைப்பதற்கு முயன்றுவருகின்றார். இதன் ஒரு கட்டமாகவே கடந்த மாதம் பிரித்தானியாவில் உள்ள தமிழர் அமைப்பொன்றுடன் இவர் பேச்சுக்களை நடத்தியிருந்ததாக தெரியவருகின்றது. மகிந்தவின் ஆட்சியையும் அகற்றி, தமிழர்களுக்கு உப்புச்சப்பற்ற தீர்வொன்றை வழங்கியதன் பின்னர், புலம்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் நடத்தவேண்டிய தேவை ஒன்று எழாது என எதிர்பார்க்கின்றனர். ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி தமிழர்களுக்கு ஒரு எலும்புத்துண்டுக்கு ஒப்பான தீர்வைத் திணித்துவிட்டு, தமிழர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் போராட்டம் எதனையும் முன்னெடுக்க முடியாதவாறு முடக்குவதே இவர்களது திட்டம் என்பதும் தெரியவருகின்றது.

இதேவேளை, அண்மையில் இந்தியாவுக்கு இரகசியமாகப் பயணம் மேற்கொண்டிருந்த சந்திரிக்கா குமாரதுங்க அங்கு உயர் மட்ட தலைவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணத்தை அடுத்து, சந்திரிகாவும் டில்லியில் சந்திப்புகளை நடத்தியுள்ளார். டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான அதிகாரமட்டத்தினர் பலரையும் சந்திரிகா சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளபோதும், சந்திரிகாவின் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகாமல் இரகசியம் காக்கப்பட்டுள்ளன.

ஜெனீவா தொடர்பாகவே இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றதாக தற்போது தகவல்கள் கசிகின்றபோதும், ஆட்சிமாற்றம் குறித்தான சந்திப்பாகவே இது இருந்திருக்கும் என்பது அரசியல் அவதானிகள் பலரது ஊகங்களாக இருக்கின்றது. ஏனெனில் அண்மைக்காலமாக மகிந்தவின் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்பதை சந்திரிகா வெளிப்படையாகவே வலியுறுத்தி வருகின்றார். அண்மையில், சிறீமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த உரையன்றை நிகழ்த்திய சந்திரிகா, போதைவஸ்து வியாபாரிகளையும் கொடுஞ்செயல் புரிவோரையும் முன்னுக்கு கொண்டுவரும் தலைவர்கள் காணப்படும் அளவுக்கு இந்த நாடு தாழ்ந்து போயுள்ளதால் மாற்றம் அவசியமாகின்றது எனவும், நாட்டின் நிலைமையைக் கண்டு தான் மனமொடிந்து விட்டதாகவும் இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்க தனக்கு வழி தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.  

முன்னதாக, மகிந்தவின் ஆட்சியைக் கடுமையாகச்சாடி நைஜீரியாவின் தலைநகர் லாகோசில் இருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார்.  அந்தப் போட்டியில், தமிழ்மக்கள் நீண்டகாலமாகவே பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள் என்றும் அவர்கள் தமது உரிமைகளைக் கோரினார்கள். அவர்களின் உரிமைகளை வழங்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற தனது அரசு முதன்முதலாக இணங்கியது. முழு உரிமைகளையும் கொண்ட ஒரு சமஷ்டி ஆட்சியை நிறுவ இணங்கப்பட்டது. ஆனால், ராஜபக்ச சிறுபான்மையினரின் உரிமைகளில் நம்பிக்கை கொண்டவரல்லர். அவர் ஒருவரே எனது அமைச்சரவையில் பேச்சுகளுக்கு எதிராக இருந்தார். அவரது தேவை அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது. இப்போது ஒட்டுமொத்த உலகமுமே, இராணுவத் தாக்குதலுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறது. புலம்பெயர் தமிழர்கள் மீள இணைகிறார்கள். தாக்குதல்களைக் கண்டிக்கிறார்கள். சிறீலங்கா அரசு தனது மூலோபாயத்தின் படியே தொடர்ந்து நடக்குமானால், இன்னும் சில ஆண்டுகளில் இன்னொரு போராளிக்குழு உருவாகும் என்று கூறியிருந்தார்.

தனது பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் ஏராளமான தமிழினப் படுகொலைகளை நடத்தியவர் சந்திரிகா. விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு போரை முன்னெடுத்தவர் சந்திரிகா. வெற்றுப் பொதியை வைத்துக்கொண்டு, தீர்வுப்பொதி என நடகமாடி உலகை ஏமாற்றியவர் சந்திரிகா, ஆனால், தான் நியாயவாதி போலவும், தமிழர்களுக்கு தீர்வை வழங்குவதற்கு தான் முன்னிற்பவர் போலவும், மகிந்த போன்றவர்களை அதனைத் தடுத்து நிறுத்தியதாக இந்தப்பேட்டியை அவர் வழங்கியிருந்தது சர்வதேசத்தை ஏமாற்றி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் நுழைவதற்கே என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதிகாரத்தை இழந்த சந்திரிகா, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும் மகிந்தவினால் தூக்கியெறியப்பட்டு, அவமானமும்படுத்தப்பட்டார். அதற்குப் பழிவாங்கவே ஆட்சியில் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தும் மகிந்த ராஜபக்ச ஆட்சியாளர்களை வெளியேற்ற, மகிந்த ராஜபக்ச திறந்து வைத்துள்ள வாசல் ஊடாக உள்நுழைய முனைந்துள்ளார்.

இதேவேளை, மகிந்த அரசை 2014ம் ஆண்டுக்கு முன்பாக கவிழ்த்து, நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காலியில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்ததுடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கான தீர்வாக அது அமையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மகிந்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு 10 அரசியற் கட்சிகள் மற்றும் மக்கள் அமைப்புக்களின் ஒன்றியங்கள் உள்ளடங்கலாக எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மங்கள சமரவீரவே முக்கிய பங்காற்றியதாக தெரியவருகின்றது. இப் புதிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான பொது உடன்படிக்கை ஒன்று நேற்று திங்கட்கிழமை கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பில், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய சோசலிசக் கட்சி, புதிய சமசமாஜக் கட்சி, புதிய இடதுசாரி முன்னணி, மவ்பிம தேசிய முன்னணி, ருஹ§னு மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முஸ்லிம் தேசிய பேரவை உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க, ஆர்.சம்பந்தன், மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரமபாகு கருணாரத்ன, சரத் மனமேந்திர, ஹேமகுமார நாணயக்கார, அருணா சொய்சா, சிறிமா சிறி பெரேரா, அசாத்  சாலி மற்றும் சட்டத்தரணி  சுதர்சன குணவர்த்தன ஆகியோர் இந்தப் பொதுவான உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகின்றபோதும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

மேலும் ஏதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் அரசிற்கு எதிரான பல்வேறு ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். 
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள சிங்கள மக்களிடையே மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக குமைந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை விஸ்வரூபமாக்கி போராட்டங்களை அதிகரித்து, அரபுலகப் புரட்சிகளைப் போல் ஆட்சி மாற்றமொன்றுக்கு தள்ளுவதே இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் முக்கியநோக்கம் என்றும் கருதப்படுகின்றது.

ஆசிரியர் தலையங்கம்
நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/26933/64//d,fullart.aspx

 

தனது பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் ஏராளமான தமிழினப் படுகொலைகளை நடத்தியவர் சந்திரிகா. விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு போரை முன்னெடுத்தவர் சந்திரிகா. வெற்றுப் பொதியை வைத்துக்கொண்டு, தீர்வுப்பொதி என நடகமாடி உலகை ஏமாற்றியவர் சந்திரிகா, ஆனால், தான் நியாயவாதி போலவும், தமிழர்களுக்கு தீர்வை வழங்குவதற்கு தான் முன்னிற்பவர் போலவும், மகிந்த போன்றவர்களை அதனைத் தடுத்து நிறுத்தியதாக இந்தப்பேட்டியை அவர் வழங்கியிருந்தது சர்வதேசத்தை ஏமாற்றி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் நுழைவதற்கே என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உணர்ச்சி வசப்படுகிறோம் என்றே நினைக்கிறேன்!

 

சமாதான தேவதை வேடம் போட்டவர் சந்திரிகா என்று தலைவர் தனது மாவீரர் உரையொன்றிலும் குறிப்பிட்டுள்ளார். பின்வரும் காரணங்களால், மகிந்தவை வெளியேற்றுவதற்கு வேறு வழி, ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

இலங்கையில் பலமான ஒரு எதிர்க்கட்சி இப்பொழுது இல்லை.

 

மகிந்த பதவியிழந்தால், அவரது குடியுரிமை சந்திரிகாவால் பறிக்கப்படும்.( ஏனெனில் சந்திரிகா பழிவாங்கும் குணத்தை இயற்கையாகவே கொண்டவர்)! இது மகிந்த மீதும், அவரது சகாக்கள் மீதும் போர்க்குற்றச்சாட்டுகளை முன்னெடுத்துச் செல்லும் வழியைத் திறந்துவிடும்.  

 

இந்த வழி மட்டுமே இப்போதைக்கு, இந்தியாவுக்குத் திறக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால், போர்க்குற்றம் என்று வரும்போது, இந்தியாவும் நாறிப்போகும் சாத்தியங்கள் அதிகம் உண்டு. ஏனெனில், இந்தியா செய்த அவ்வளவும், மகிந்தவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் தெரியும். ஒரு வேளை மகிந்த தூக்கப்பட்டால், அவரதும், அவரது சகாக்களினதும் தலைவிதியை, இந்தியா பார்த்துக்கொள்ளும். ஒரு சோனியாவுக்காக, இந்தியா தனது நாட்டின் நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பாது.

 

மற்றது தமிழர்களின் காய் நகர்த்துதலில் தான்,எமது தலைவிதி தங்கியுள்ளது.

 

இல்லாவிட்டால், இலங்கை வெகுவிரைவில், இராணுவ ஆட்சியின் கீழ் வரக்கூடிய சாத்தியங்கள் தான் அதிகமுண்டு! இது எந்த வகையில்,எமது உறவுகளுக்கு உதவும் என்று, என்னால் எதுவும் கூற முடியவில்லை.

 

ஏதோ, எனது சின்ன மூளைக்கு, இப்படித்தான் விளங்குகின்றது!

Edited by புங்கையூரன்

 தமிழர்களின் காய் நகர்த்துதலில் தான்,எமது தலைவிதி தங்கியுள்ளது.

 

உண்மைதான்! இதொன்றுதான் அவசியம்!!!

தமிழர் போர்குற்ற விசாரணை, யாழ் மாணவர் விடுதலை, நில அபகரிப்பு எதிர்ப்பு, கைதிகள் விடுதலை போன்றவற்றில் முழுமையான அக்கறை காட்டும் அதே நேரத்தில் தம்மைத் தாமே ஆளும் முழுமையான சுயாட்சி / தனியாட்சி உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சிகளையும் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும்!

 

அதே நேரம் இவரைவிட அவர் பரவாயில்லை என்ற பிற்போக்குச் சிந்தனைகளின் உந்துதலால் தமிழின அழிப்புக்கு துணை போன எந்தவொரு சிங்களப் பயங்கரவாதிக்கும், இந்திய அரச பயங்கரவாதிக்கும் வெள்ளையடிக்கும் முயற்சிக்கு துணை போகக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.