Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாண்புமிகு மனிதர்

Featured Replies

மாண்புமிகு மனிதர்

விமானப்படை விமானியாக வேண்டும் என்பது அவரது கனவு; மகன் கலெக்டராக வேண்டும் என்பது தந்தையின் கனவு; ஆனால், இறைவனின் எண்ணம் வேறாக இருந்தது. இவன் நல்லவன்; அறிவுத்திறன் நிறைந்த வல்லவன்! என்றுணர்ந்த வல்லான் இறைவன், அந்த மனிதரை ராக்கெட் பொறிஞராக அருள்புரிந்தான். இதோ, அந்த மாண்புமிகு மனிதர் _ இந்தியத் தலைக்குடிமகனாகி, இந்திய இளைய தலைமுறை இதயங்களில் க்ரியா ஊக்கியாக நிறைந்து கிடக்கிறார்.

இளைய தலைமுறையே... கனவு காணுங்கள் என்று மேடைக்கு மேடை முழங்கும் அப்துல்கலாம், சிறுவயதில் மிகப் பெரும் கனவு ரசிகன். பறவைகளைப் பார்க்கும்போது, தன்னால் அப்படிப் பறக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் சிறகுகளற்ற தோள்பட்டை வெறுமையைத் தொட்டுப்பார்த்துக் கொள்வான். சிறகுகள் இல்லாவிட்டால் என்ன... நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன் என்ற வைராக்கியம் அந்தப் பிஞ்சு நெஞ்சுக்குள் பீறிடும்.

அந்த வைராக்கியம் பலித்தது. கனவுச் சிறகுகள் மூலம் வானவீதியில் உலாவந்த அந்தச் சிறுவன், பெரியவனானபோது, ராக்கெட்டுகள் மூலம் வானத்தை ரகளை செய்தான்.

மாதா... பிதா!

அப்துல்கலாமின் தந்தை : ஜைனுல்லாபுதீன். தாய்: ஆஷியம்மா. இருவருமே நல்ல உயரம்; அழகு. நெறிமுறைகளைப் பின்பற்றும் ஜைனுல்லாபுதீனுக்கு தேவையற்ற வசதிகளும் ஆடம்பரமும் பிடிக்காது. ராமேஸ்வரம் மசூதித் தெருவில் அமைந்த அவர்களது வீடு, சுண்ணாம்பு, செங்கற்களால் கட்டப்பட்டதல்ல; அன்பு, பாசம் என்ற ஆழ்ந்த உணர்ச்சிகளால் கட்டப்பட்டிருந்தது.

ராமேஸ்வரத்தில் ஆரம்பக்கல்வியை முடித்த கலாம், மாவட்டத் தலைநகரான ராமநாதபுரத்துக்குச் சென்று உயர்நிலைக் கல்வி கற்றார்.

ராமநாதபுரம் _ ஸ்வார்ட்ஜ் உயர்நிலைப்பள்ளியில் படிப்பு. புதிய சூழல் கலாமுக்குச் சரிப்படவில்லை.

வீட்டு ஞாபகம் துன்புறுத்தியபோதும், அவற்றைத் தூக்கி எறிந்தார் கலாம். தான் கலெக்டராக வேண்டும் என்ற அப்பாவின் கனவை நனவாக்க வேண்டும் என்பதே அவர் மனதில் வேள்வித் தீயாய் எரிந்து கொண்டிருந்தது.

அங்கு படிப்பு முடிந்தபிறகு, 1950ல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பு. இங்கு நான்காமாண்டு படிப்பின்போதுதான் கலாமுக்கு இலக்கியம் மீது ஆர்வம் பிறந்தது. டால்ஸ்டாய், ஸ்காட், ஹார்டியின் படைப்புகளைப் படித்து உள்ளம் கவர்ந்திழுக்கப்பட்டார். இந்தக் காலகட்டத்தில்தான் கலாமுக்கு இயற்பியல் மீது ஈடுபாடு வளர்ந்தது.

கடின உழைப்பு! இன்டர்மீடியட் முடித்து, எம்.ஐ.டி. (Madras Institute of Technology)யில் விண்ணப்பித்தார்; தேர்வானார். ஆனால், அதைப் படிக்க அந்தக் காலத்தில் ஆயிரம் ரூபாயாவது தேவை. அவ்வளவு பணத்தைக் கலாமின் அப்பாவால் தயார் செய்யமுடியாது. கலாமின் சகோதரி ஜோஹரா கைகொடுத்தார். தனது தங்கநகைகளை அடமானம் வைத்துப் பணம் கொடுத்தார். எம்.ஐ.டி.யில் விமானப் பொறியியல் படிப்பின்போது, தாழ்வாகப் பறந்து தாக்கும் ஒரு போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டப் பணியை கலாமுடன் இன்னும் நான்கு சகமாணவர்கள் கூட்டாக முடிக்கவேண்டும் என்று பொறுப்பு கொடுத்தார்கள். ஏரோ டைனமிக் டிஸைன் வரையும் பொறுப்பு கலாமுக்கு. டிஸைன் தயாராவது தாமதமானது. அதற்குப் பல்வேறு காரணங்கள். ஒருநாள் எம்.ஐ.டி. இயக்குநர் ஸ்ரீசீனிவாசன் மூன்றே நாட்களுக்குள் வரைபடம் தயாராக வேண்டும். இல்லாவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும் என்று எச்சரித்து விட்டுச் சென்றார். கலாம் திகைத்தார். அவர் படிப்பின் உயிரோட்டமே அந்த உதவித் தொகைதானே! அன்று இரவு.... வரைபலகை முன் உட்கார்ந்தவர்தான். ஊண், உறக்கம் மறந்த கடின உழைப்பு அது. வரை படத்தைத் தயாரித்து முடித்துதான் வெளியே வந்தார் கலாம். சாத்தியமில்லாத கெடுவுக்குள் இவ்வளவு கச்சிதமாக முடிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை! என்று புகழ்ந்தார் ஸ்ரீனிவாசன்.

எம்.ஐ.டி.யில் வெற்றிகரமாகப் படிப்பை முடித்து விமானப் பொறியியல் பட்டதாரியாக வெளியே வந்தார் கலாம்.

தனது கனவான விமானப் படையில் வேலைக்கு விண்ணப்பித்தார். அங்கு வேலை கிடைக்காத நிலையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் உற்பத்தி (விமானம்) இயக்குநரகத்தில் முதுநிலை விஞ்ஞானி உதவியாளராக வேலையில் சேர்ந்தார். அதன்பிறகு, கலாமின் கேரியர் டேக்_ஆஃப் ஆனது. பிறகு, ISRO, DRDL, DRDO என்று பல்வேறு அமைப்புகளில் பணிகள்; பல்வேறு பொறுப்புகள்; அனுபவங்கள்! கலாம் அனைத்திலும் தனது முழு ஆர்வத்தைக் காட்டினார்.

நன்றியுள்ள குழந்தை!

கலாமின் சாதனைகளில் முக்கியமானது, அசெம்பிளிங் டெக்னாலஜியாக இருந்த இந்திய ராக்கெட் தொழில் நுட்பத்தை புரொடக்ஷன் டெக்னாலஜியாக மாற்றியமைத்ததுதான்.

வெளிநாடுகளிடம் உதிரிபாகங்களை வாங்கி அசெம்பிள் செய்வது சாதனையல்ல; நாம் வடிவமைக்கும் ஒவ்வொன்றிலும் நூறு சதம் நம் தயாரிப்பிலான பொருட்களே இடம்பெறவேண்டும். சின்ன சின்ன விஷயங்களில் கூட அடுத்தவர்களைச் சார்ந்திருக்காமல், தொழில்நுட்பத் தன்னிறைவு காணவேண்டும் என்பதே கலாமின் வேட்கையாக இருந்தது.

வல்லரசு தொழில்நுட்பத் தாங்குக் கட்டைகளை வீசியெறிந்துவிட்டு, நம் சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே இந்த ராமேஸ்வர மனிதனின் ஜெபமாய் இருந்திருக்கிறது. இந்த வேட்கை ஒரு சாதாரண தொழில்நுட்ப அறிஞருக்கு வந்துவிடாது. உண்மையான தேசப்பற்றும் தேசத் தொண்டும் நிறைந்த உள்ளத்தில்தான் அத்தகைய எண்ணம் உருவாக முடியும். கலாம் இந்தியாவின் காதலன்; இந்தியத் தாயிடம் நன்றியுள்ள குழந்தை!

கூட்டு முயற்சி!

கலாம் பணியாற்றிய நிறுவனங்களிªல்லாம் நல்ல திறமையான விஞ்ஞானிகள் இருந்தனர். ஆனால், அவர்கள் நம்மால் முடியும் என்பதை மறந்து, தன்னால் மட்டுமே எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கையோடு இறுமாந்திருந்தனர். கூட்டு முயற்சியின் மேன்மை அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. கூட்டு முயற்சியின் மேன்மையை அவர்களுக்குப் புரியவைத்தார் கலாம்.

இயல்பான, நட்புரீதியான கலாமின் அணுகுமுறை கடின இதயங்களையும் வெற்றி கண்டது.

திறமையான சகாக்கள்; கலாமைப் புரிந்துகொண்டு சுதந்திரமளித்த டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் பிரம்மபிரகாஷ் போன்ற உயரதிகாரிகள்; பாதுகாப்புத்துறை அமைச்சராய் இருந்த ஆர்.வெங்கட்ராமன் போன்றோரின் ஒத்துழைப்பு; பிரதமர்களாய் இருந்த இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்றோரின் ஊக்குவிப்பு... விளைவு... எஸ்.எல்.வி, பிருத்வி, ஆகாஷ், அக்னி என்று கலாம் தொட்டதெல்லாம் துலங்கியது.

ராஜபாட்டை!

ராக்கெட் தொழில்நுட்பத்தில், கலாமின் செயல்திட்டங்களும் அணுகுமுறைகளும் மற்ற இந்தியத் தொழில்நுட்பங்களிலும் பரவலாக்கப்படவேண்டும். கம்ப்யூட்டரிலிருந்து கட்டுமானத் தொழில்நுட்பம் வரை _ அதில் இடம்பெறும் ஒவ்வொரு உதிரிப் பாகத்திலும் Made in India என்று பொறிக்கப்பட வேண்டுமானால் ஒவ்வொரு இந்தியனும் கலாமாக மாறவேண்டும்.

கலாமின் வாழ்வை ஆராயும் போது, அதிலே ததும்பி நிற்பவையெல்லாம் ஆன்மீகத் தத்துவங்களும், துடிப்பான எண்ணங்களும், வண்ண மயமான கனவுகளும்தான்! அவை வல்லரசு என்ற நிலையை இந்தியா அடைவதற்கான ராஜபாட்டை. அதில் பயணிப்போம்; சாதிப்போம்.

இந்தியா _ 2020

2020_ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளம் படைத்த வல்லரசாக மாற்ற வேண்டும். என்று கூறும் கலாமின் 2020 லட்சியங்களில் சில. உலகின் ஐந்து பொருளாதார வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ வேண்டும். தேசப் பாதுகாப்பில் தன்னிறைவு. வேளாண் உற்பத்தியில் அதிவேக முன்னேற்றம் கண்டு வேளாண் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக உயரவேண்டும். நம் கனிம வளங்களை மூலதனமாக்கி தொழில்துறை வல்லரசாக வேண்டும். கடல் வளங்களைப் பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும். மென்பொருள் தயாரிப்புத்துறையில் முதன்மையான பங்களிப்பு, விண்வெளி, அணுசக்தி, தேசப்பாதுகாப்பு போன்ற துறைகளில் நிபுணத்துவம். அடிப்படைத் தேவைகளில் அதிவிரைவான வளர்ச்சி. கலாமின் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கின்றன.

நன்றி குமுதம்

ஒரு உன்னதமான மனிதனின் வரலாற்றை இணைத்தை வசம்புக்கு நன்றிகள். :D

¯ñ¨Á¾¡ý, ¸Ä¡Á¢ý Å¡ú쨸 ±ø§Ä¡ÕìÌõ

¿øÄ ´Õ ±ÎòÐ측ðÎ. ¿¡ðÎôÀüÚûÇ ´ù¦Å¡ÕÅÕõ

¸Ä¡¨ÁÔõ §¿º¢ôÀ¡÷¸û ±ýÀ¾¢ø ºó§¾¸Á¢ø¨Ä.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி.

தாயகத்தையும், தாய்மொழியையும் நேசிக்கப்பழகும் பண்பு தானாகவே வரவேண்டும். வராவிட்டால் நாமெல்லோரும் நேசிக்கப்பழகவேண்டும். இளையோருக்கும் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

தாய்மொழிப்பற்றும் தாயகப் பற்றும் சொல்லிக் கொடுத்து வருவதல்ல. தாமாக வருபவை..

சுயதம்பட்டங்கள் பற்றென்றும் சும்மாயிருப்பவர்கள் பற்றாளர்கள் இல்லையென்றும் ஆகிவிடாது.

அப்துல்கலாம் போன்றவர்கள் தாம் வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர்கள். அதனால்த்தான் பல இளைஞர்கள் அவரைத் தம் வழிகாட்டியாக்கி வாழத் தலைப்பட்டுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.