Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் உண்மையான சிவில் நிர்வாகம் துரித கதியில் இடம்பெறவில்லை: பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் உண்மையான சிவில் நிர்வாகம் துரித கதியில் இடம்பெறவில்லை: பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார்

இலங்கையில் மோதலுக்கான விடயங்கள் மங்கிச் சென்றாலும் அதற்கான அடிப்படைக் காரணங்கள் அழிந்துவிடவில்லையெனவும் வடக்கில் இராணுவத்தின் கடுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும் பிரிட்டனின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயார் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் ஒரு சில படையினரே வீதிகளில் காணப்படுகின்றனர். ஆனால், பொதுமக்களின் வாழ்வில் பல விடயங்களில் இராணுவத்தின் பிரசன்னம் இப்போதும் காணப்படுகிறது. அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் பேசுவோரை இராணுவப் புலனாய்வு இப்போதும் விசாரணை செய்கின்றது என்று அலிஸ்ரெயார் பேர்ட் கருத்துத் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான தமது அபிப்பிராய பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

யுத்தத்திற்கு முன்னர் வட, கிழக்கில் உள்ள தமிழர்கள் புலிகளின் ஆட்சிக்குள் இருந்த போது இரும்புப் பிடிக்குள் இருந்தனர். எண்ணிக்கையற்ற பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். சுதந்திரத்திற்கான அவர்களின் போராட்டத்தில் அவர்கள் பயங்கரவாதத்தை புதிய வடிவத்தில் வரித்துக்கொண்டார்கள். தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் முன்னணியில் திகழ்ந்தார்கள். மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அவர்களைத் தோற்கடித்த போது பொதுமக்கள் இழப்புகள் தொடர்பான சரியான எண்ணிக்கை தொடர்பாக சர்சை காணப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு தெரிவித்திருந்தது. இந்த குற்றச் சாட்டுகளுக்கான பதிலளிக்கும் கடப்பாடு அவசியம் என்பதே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அரசாங்கமோ அல்லது புலிகளோ, இதற்கான பொறுப்பாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு விட்டு இப்போது நான் திரும்பி வந்துள்ளேன். யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களின் பின்னர் நான் வட பகுதிக்கு சென்றேன். தலைநகரில் அமைச்சர்களை அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களைச் சந்தித்தேன். வடக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் தமிழ் மக்களைச் சந்தித்தேன். தமிழர்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முயற்சிக்கின்றார்கள். அதிகளவு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது. புதிய வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள், மீனவர்களுக்கு சந்தை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மோதலுக்கான விடயங்கள் குறைந்து கொண்டு செல்லும் அதேவேளை அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு காணப்படவில்லை.

வடக்கில் இராணுவம் கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. உண்மையான சிவில் நிர்வாகம் துரிதமாக இடம்பெறவில்லை. அதேபோன்று அரசியல் தீர்வு தொடர்பாகவும் போதியளவு முன்னேற்றம் எட்டப்படவில்லை. சுபிட்சமானதும் சமாதானம் நிறைந்ததுமான எதிர்காலத்திற்கு சகல இலங்கையர்களும் உரித்துடையவர்கள். புதிய வீதிகள் இதற்குப் பதிலீடாக அமையாது.

சுயாதீனமான நீதித்துறை ஜனநாயகம் தொடர்பான பெருமை கொள்ளும் பாரம்பரியம் சிறப்பான இதழியல்துறை, பாதிக்கப்பட்டிருப்பதாக பலர் அஞ்சுகின்றனர். நல்லிணக்க நடவடிக்கைகளை தனது சொந்த விதிமுறையின் அடிப்படையிலேயே அரசு நியாயப்படுத்தி வருவதாக சிலர் கூறுகின்றனர். அரசியல் தீர்வு தொடர்பாக அதிகளவு செய்ய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டுகின்றன. அதேவேளை, புலிகள் தோற்கடிக்கப்பட்டதை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலுள்ள சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லையென சிலர் கூறுகின்றனர். 30 வருட யுத்தத்தில் இருந்தும் பெற்ற கசப்பான அனுபவங்களை கைவிட்டு நல்லிணக்கத்திற்கு பலர் இன்னரும் தயாராகவில்லையென சிலர் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், அரசாங்கம் அதிகளவு செய்வதற்கான ஒரு முக்கிய காரணம் உள்ளது. அந்தக் காரணம் நாம் யாவருமே நன்கு அறிந்ததாகும். வட அயர்லாந்தில் நாங்கள் பெற்ற அனுபவமாக அது விளங்குகிறது. அரசியலில் மக்களுக்கு உரியதை வழங்குவதற்கான சகல முயற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளாவிடின் கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை பதிலளிக்கும் கடப்பாடு கொண்டவர்களாக்குவதில் நீங்கள் தோல்வியடைந்துவிடுவீர்கள். எதிர்கால மோதலுக்கான விதைகளை நீங்கள் விதைப்பவர்களாக இருப்பீர்கள். இந்த செய்தியையே நான் கடந்த வாரம் பெற்றுக்கொள்ள விரும்பியிருந்தேன். நாம் இழைத்த தவறுகளை எமது நட்பு நாடான இலங்கையும் இழைப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை.

தனது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஒழித்துள்ளார். இப்போது சுபிட்சத்திற்கான புதிய காலம் உதயமாகியுள்ளது. இந்நிலையில் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான தேவைப்பாட்டை அரசியல் தலைமைத்துவம் முன்னெடுப்பதற்கு வேண்டிய தருணமாக இது விளங்குகிளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியமாகும்.

2013 இலங்கைக்கு முக்கியமான வருடமாகும். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு இலங்கை திட்டமிடுகிறது. அந்த மாநாட்டில் சமுகமளிப்பது தொடர்பான தீர்மானத்தை பிரிட்டன் எடுக்கவில்லை. பொதுநலவாயத்தை அதன் பெறுமானங்களை ஒன்றுபடுத்துவதற்கான அழைப்பை அந்த அமைப்பு விடுப்பதற்கான தருணமாக இது அமைந்துள்ளது. சர்வதேசத்தின் வெளிச்சம் தங்கள் மீது விழும் போது என்ன விடயங்கள் பார்க்கப்படும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவான முறையில் சிந்திப்பது அவசியம்.

உச்சிமாநாட்டை நடத்தும் விடயத்தில் அவர்கள் பொதுநலவாயத்தின் பெறுமானங்களான நல்லாட்சி, சட்ட ஆட்சி மனித உரிமைகள் என்பவற்றுக்கு அமைவாக செயற்படுகிறார்களா என்பதை மட்டும் பார்ப்பதில்லை. அவற்றில் முன்னணியில் திகழவேண்டும் என்பவற்றையே பார்க்கின்றோம். தனது சகல பிரஜைகளினதும் சுபிட்சமான எதிர்காலம் மற்றும் உண்மையான சமாதானம் என்பதே இலங்கைக்கான ஒரேயொரு மார்க்கமாக உள்ளது. இதனையே பிரிட்டனும் விரும்புகிறது.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=2647:2013-02-15-18-42-19&catid=293:article&Itemid=542

  • கருத்துக்கள உறவுகள்

2002 இல போர் நிறுத்த உடன்படிக்கை வந்து 4 வருசத்தில புலிகளுக்கு முடிவு கட்ட எல்லாரும் நீயா நானான்னு உதவினீங்க.. இப்ப மட்டும் எதுக்கு வெளில நின்று கொக்கரிக்கிறீங்க. உள்ள போய் உங்க இஸ்டம் போல.. சிவில்நிர்வாகத்தை கட்டி எழுப்புறது பற்றி பாடம் எடுக்கலாமே. உங்க கிட்ட தான் வட அயர்லாந்தில் பயங்கரவாதத்தை எதிர்கொண்ட நீண்ட அனுபவம் இருக்கே..???!

 

எத்தினை நாளைக்குத் தான் நீங்களும் நல்லவன் போல.. நடிக்கிறீங்கன்னு பார்க்கலாம்...??! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

UK sells arms to Sri Lanka's brutal regime

http://www.independent.co.uk/news/world/politics/revealed-uk-sells-arms-to-sri-lankas-brutal-regime-8498768.html

come from the Government’s own Export Controls Organisation, which releases quarterly figures. They reveal that in the three months between July and September last year, the UK approved export licences worth £3.741m, of which just over £3m were military items

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.