Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டிணைவு: அபத்தங்களும் ஆபத்துகளும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டிணைவு: அபத்தங்களும் ஆபத்துகளும்

யதீந்திரா

 

சில தினங்களுக்கு முன்னர், பொதுவேலைத்திட்டத்தின் கீழ் பத்து அரசியல் கட்சிகள் இணைவது தொடர்பான கூட்டமென்று இடம்பெற்றிருந்தது. இதில் பங்குகொண்ட கட்சிகளில், வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திவரும் பிரதான அரசியல் அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றாகும். இது தொடர்பில் உடன்படிக்கை ஒன்றும் ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்குகொண்டிருந்தார். அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவை ஆதரித்து பேசியிருந்த போதும், உடன்பாட்டில் யையெழுத்திடவில்லை. கிடைக்கும் தகவல்களின்படி, கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இவ்வுடன்பாட்டில் கையெழுத்திடுவார் என்றே அறிய முடிகிறது. இது தொடர்பில் ஏலவே ரணிலுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தவல் உண்டு. தற்போது சுமந்திரன் இது தொடர்பில் மேலும் ஒரு புதிய தகவலை பகிர்ந்து கொண்டிருக்கிறார் - அதாவது ரணில் விக்கிரமசிங்கவால்தான் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியுமென்று குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம், ஏலவே ஒரு இரகசிய உடன்பாடு ஏற்பட்டுவிட்டதென்பது தெளிவாகிறது.

 

சிறிது கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்போமானால் ஒரு விடயம் தெளிவாகும். வரலாற்றுரீதியாக பார்ப்போமானால், தமிழ் மிதவாத தலைமையானது ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே அந்நியோன்யமான உறவைப் பேணி வந்திருப்பதை காணலாம். சந்திரிக்கா குமாரதுங்கவின் காலம் ஒரு விதிவிலக்கு. இன்று ரணில் மீது ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையையும் இதன் தொடர்சியான ஒன்றே. இதற்கு பின்னால் அமெரிக்க அழுத்தங்களால் வரக்கூடிய நன்மைகளை பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் இருக்கக்கூடும். அல்லது சமீபகாலமாக, கூட்டமைப்பிற்கு திரைமறைவு ஆலோசனைகளை வழங்கிவரும் ஒரு சில அரசுசாரா நிறுவன புத்திஜீவிகள் எவரேனும் சொல்லியிருக்கவும் கூடும். ஆனால் இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டியிருக்கிறது - அது என்னவென்றால், அரசியல் என்பது ஒன்று அல்லது சில நபர்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. எனவே ரணில் கெட்டவரா அல்லது நல்லவரா என்பது இங்கு ஒரு விடயமேயல்ல.

 

இதில் ஒரு சுவாரஸ்சியமான விடயமும் உண்டு. இன்று தமிழ் தரப்பு (எல்லோரும் அல்ல) தமிழ் மக்களின் பிர்ச்சனையை தீர்க்கக்கூடிய ஒருவராக ரணில் விக்கிரமசிங்கவை கருதுகிறது. ஆனால் ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாரமற்று, அலைந்து திரிவதற்கும் கூட தமிழர் தரப்புத்தான் காரணம். அன்று பிரபாகரன் தமிழ் மக்களது வாக்குகளின் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தினார். உண்மையில் ரணிலை கொல்வதற்குப் பதிலாக, பிரபாகரன் ரணிலின் அதிகார விருப்பின் மீது ஒரு தற்கொலை தாக்குதலை மேற்கொண்டிருந்தார் என்றே இதனைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எரிக் சொல்கெயிமிடம் பிரபாகரனுக்கு நன்றி தெரிவிக்கும்படி குறிப்பிட்டிருந்தார். நோர்வே வெளியிட்ட அறிக்கையில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 

பிரபாகரன், சர்வதேச பொறியிலிருந்து தப்பும் நோக்கிலேயே ரணிலை அதிகார அரசியலிலிருந்து அப்புறப்படுத்தினார். ஆனால் ரணிலின் வெளியேற்றத்திற்கு பின்னர், பிரபாகரன் ஒரு போதுமே வெளியில் வர முடியாதளவிற்கு, அந்த சர்வதேச பொறி விடுதலைப் புலிகளை கவ்விப் பிடித்துக் கொண்டது. பின்னர் நடந்ததெல்லாம், பொறியில் அகப்பட்டுக் கிடந்த புலிகளின் படைபலத்தை அரச படைகள் அழித்தொழித்த கதை மட்டுமே.

 

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக அழித்தொழித்ததன் மூலம், ஆளும் மகிந்த அரசாங்கம் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துக் கொண்டது. இந்தப் பின்புலத்தில் பார்த்தால், ரணில் தோற்கடிக்கப்பட்ட காலத்தில் இருந்த மகிந்த அரசாங்கமல்ல தற்போது இருக்கும் அரசாங்கம். இந்த பின்னணியில்தான் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மூலம் ஆளும் அரசை விழுத்துவதற்கு உடன்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவால் ஆளும் மகிந்த ராஜபக்சவை தேர்தல் மூலம் எதிர்கொள்ள முடியாமைதான் சரத் பொன்சேகாவின் வருகையாகும். சரத் பொன்சேகாவை அனைவரும் ஆதரிக்க உடன்பட்டதன் பின்னணியும் இதுவே! உண்மையில் ரணில் விக்கிரமசிங்க அப்போதே ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்குரிய தகுதியை முழுமையாகவே இழந்துவிட்டார். இன்றைய நிலையில் ரணில் விக்கிரமசிங்க மக்கள் செல்வாக்கில் மிகவும் கீழ் நிலையில் இருக்கின்றார் என்பதை விளங்கிக் கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

 

இத்தகைய ரணில் விக்கிரமசிங்கவால் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியும்? முன்னர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்த ஒரு விடயத்தையும் இந்த இடத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது - சிங்கள மக்களின் கணிசமான பிரிவினரின் ஆதரவைப் பெறாது, ஒரு தீர்வை நாம் காண முடியாது. இது உண்மையாயின், இங்கு பிறிதொரு கேள்வி தேவைப்படுகிறது - பெரும்பான்மையான சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் ஒரு தீர்வை காண முடியுமா? இதற்கான பதிலையும் சுமந்திரனே சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் ஆளும் மகிந்த அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர்.

 

உண்மை கசப்பானதென்று சொல்வதுண்டு. இன்றைய இலங்கையின் அரசியல் யதார்த்தத்தை பொறுத்தவரையில் அந்த கசப்பான உண்மை என்னவென்றால், இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனமுரண்பாட்டுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கான ஆற்றல், ஆளும் மகிந்த அரசாங்கத்திடம் மட்டுமே உண்டு. மேற்படி கணிப்பை ஒருவர், இப்பத்தி ஆளும் மகிந்த அரசாங்கத்தை புகழ்வதாகவும் மொழிபெயர்க்கக் கூடும். ஆனால் விடயம் அதுவல்ல. ஆளும் மகிந்த அரசாங்கம் ஒரு நியாயமான தீர்வுக்கு இணங்கும் நிலையில், தெற்கில் அதற்கு பெரியளவில் எதிர்ப்பு இருக்கப் போவதில்லை. அந்தவொரு அடிப்படையில்தான், இப்பத்தி மேற்படி கருத்தை வலியுறுத்துகின்றது. ஆனால் அரசாங்கம் அதற்கான நல்லெண்ண வெளிப்பாட்டை இதுவரை காண்பிக்கவில்லையென்னும் விமர்சனத்தை இப்பத்தி நிராகரிக்கவில்லை. ஆனால் நிலைமைகள் மேலும் மோசமாகாதவாறு திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது ஒரு மக்கள் தலைமையின் கடமையாகும். சரத் பொன்சேகா விடயத்தில் கூட்டமைப்பு ஒரு தவறைச் செய்ததையும் இப்பத்தி முன்னர் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த விடயத்திலும் கூட்டமைப்பு அத்தகையதொரு தவறைச் செய்ய முற்படுவதாகவே தெரிகிறது.

 

ரணில் தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒருவரா இல்லையா என்பது, ஒரு ஆட்சி மாற்றத்தின் பின்னர் கவனிக்க வேண்டிய விடயமாகும். ஆனால் அத்தகைய ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியப்பாடுகள் சமீப காலத்தில் இல்லை. சர்வதேச சக்திகளும், ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களை அதிகம் புறம்தள்ளாதவாறே செயலாற்றும். அரசாங்கங்களாலும் சர்வதேச சக்திகளின் விரும்பங்களை நிறைவு செய்யக்கூடிய வகையில் நடந்து கொள்ளவும் முடியும். இதில் தாராளமாக நடப்பதா அல்லது இல்லையா - அவ்வாறு தாராளமாக நடப்பதாயின் எந்தெந்த நாடுகளுடன் நடப்பது - இப்படியான விடயங்களில்தான், ஒரு அரசுக்கும் பிற வல்லரசுகளுக்கும் இடையில் உறவுகளும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றன. சர்வதேச உறவுகளின் அடிப்படையும் இதுவே! எனவே சர்வதேச அழுத்தங்களின் விளைவாக வரக்கூடிய வாய்ப்புக்களை தமிழர் தரப்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், அந்த வாய்ப்புக்களுக்கான கதவுகளை திறக்கும் பிரதான தரப்பு அரசாங்கமே தவிர, எதிர்க்கட்சியல்ல. தற்போது, ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டமைப்பும் ஓரணியில் நிற்பதானது, சிங்கள இனவாத தரப்பினரது வாயில் மெல்லுவதற்கு கிடைத்த நல்ல சுவையான அவலாகும்.

 

வரலாற்று ரீதியாக, தமிழர் தரப்பு ஒரு பிரதான கட்சியுடன் கைகுலுக்கும் போது, ஏனைய பிரதான கட்சி அதனை சிங்கள மக்கள் மத்தியில் தனது வாக்கு பலத்தை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றது. தற்போது, ஐக்கிய தேசியக் கட்சியும் - கூட்டமைப்பும் இணையுமாயின், அத்தகையதொரு நிலைமையே தெற்கில் தோன்றும். இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், தமிழர் தரப்பு இறுதியில் அனைத்து தரப்பினராலும் பயன்படுத்தப்பட்ட கருவேப்பிலையாகும்.

 

இந்த எதிரணி கூட்டு குறித்து, கலாநிதி தயான் ஜெயதிலக பதிவு செய்திருக்கும் ஒரு விடயம் கவனிக்கத்தக்கது. இதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் (deleterious for both) கொள்கின்றனர். இது ஒரு சரியான கணிப்புத்தான். கூட்டமைப்பு சரத் பொன்சேகாவுடன் கைகுலுக்கிக் கொண்டபோது என்ன நடந்தது? புலிகளை அழித்தொழித்ததில் முன்னணி வகித்த சரத் பொன்சேகா எல்லாவற்றையும் இழந்து நடுவீதிக்கு வந்தார். மறுபுறமாக, கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நட்பு ரீதியாக பிரச்சனைகளை பேசுவதற்கான வாய்ப்பை இழந்து போனது. தற்போது கூட்டமைப்பின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகுலுக்குவதான முடிவும் இறுதியில் தலைகீழான விளைவுகளையே தோற்றுவிக்கக்கூடும். கூட்டமைப்புக்கு இதனால் தீங்கு வருமா அல்லது வராதா என்பதல்ல இங்கு பிரச்சனை. இங்கு பிரச்சனை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றியதாகும்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=10&contentid=3b7daf83-3377-4ae5-bf1c-b2d984fbf8bd

In the history of Sri Lanka, there has been only one person born with leadership qualities. That person is Prabhakaran.

 

In the current Sri Lanka, the crisis is leadership. The nation needs young, fresh, innovative leadership.

 

The president Mahinda Rajapakse has demonstrated to the entire world that he does not have any leadership qualities. President Mahinda Rajapakse is not a big challenge. It is not difficult for an effective leader to challenge the president and remove Mahinda Rajapakse from power. But the truth is, no effective leader is currently available.

 

All those current politicians - sum of all cannot become a whole. They are ineffective. All those ineffective politicians, even with all their collective strength, cannot challenge the most ineffective President Mahinda Rajapakse. In fact, the president Mahinda Rajapakse needs these politicians for his survival. Those clowns make Mahinda as a hero.

 

When people of Sir Lanka realize the truth, they will discard all politicians and give up hope on those hopeless politicians. Along with these current politicians, the current president Mahinda Rajapakse will also be gone.

 

A new, fresh, young, creative, innovative leader will rise out of the current crisis. Just like Tsunami. Tsunami forms in far off location. But turns Sri Lanka upside down. All that happens in a fraction of a second. Till then, just enjoy the show of those clowns.

 

இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். புதுப்புனல் அனைத்து குட்டைகளையும் புரட்டிப் போடும். புதுப்புனல், குருதிப்புனலாக இருக்கத் தேவையில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.