Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரியில் குடும்பஸ்தரை சிறிலங்கா படையினர் தண்ணீர் பவுஸரால் நசித்துக் கொன்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பூநகரியில் குடும்பஸ்தரை சிறிலங்கா படையினர் தண்ணீர் பவுஸரால் நசித்துக் கொன்றனர்
பிப் 20, 2013
     
பூநகரியிலுள்ள வயலில் நெல் அறுவடையை மேற்கொண்டுவிட்டு களைப்பால் வீதியில் வந்து படுத்துறங்கிய குடும்பஸ்தரை சிறிலங்கா படையினர் தண்ணீர் பவுஸரால் நசித்துக் கொன்றுள்ளனர். இரண்டு குடும்பஸ்தர்கள் படுத்துறங்கிய போது ஒருவரை பலமாக நசித்ததால் அவர் அந்த இடத்திலேயே பலியானார். மற்றைய குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்தச் சம்பவத்தில் பூநகரி செட்டியார் குறிச்சியைச் சேர்ந்த த.இரத்தினசிங்கம் என்ற 32 வயதுக் குடும்பஸ்தரே பலியானவராவார். இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் குடும்பம் மிகுந்த கஷ்டத்தில் வாடியதால் வயலில் கூலிக்கு வேலைசெய்யச் சென்றுள்ளார். இதன்போதே சிறிலங்காப் படையினர் நசித்துக் கொன்றுள்ளனர். இவருடன் படுத்துறங்கிய கு.குணசீலன் என்ற 51 வயதுக் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
 
மேற்படி இருவரும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு பூநகரி செல்லையாத் தீவிலுள்ள வயலில் நெல் அறுவடையில் ஈடுபட்டனர். நேரம் நள்ளிரவானதால் தூக்கம் வரவே வீதியில் வந்து படுத்தனர். அங்கு நுளம்புகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் நெல் மூடைகளைக் கட்டுவதற்கு கொண்டு சென்ற சாக்குகளால் மூடிக்கொண்டு படுத்தனர். இதன்போது அந்த வீதியால் வந்த படையினரின் தண்ணீர் பவுஷர் இவர்களின் மேலால் ஏறி இவர்களை நசித்துக்கொண்டு சென்றது. இதன்போது இரத்தினசிங்கம் என்பவர் உடல் முழுவதும் நசியுண்ட நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தனர்.
 
இச்சம்பவத்தைக் கேள்வியுற்று அங்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர் மேற்படி தண்ணீர் பவுஷரின் சாரதியைக் கைது செய்துகொண்டு சென்றனர்.
 
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்களப் படையினர் தற்போதும் அதே கொலை வெறியுடன் அலைவதையே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பூநகரி மக்கள் தெரிவித்துள்ளனர். 

இரத்தினசிங்கம் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.

 

தாயக மக்களின் அடிப்படை வசதி அவர்களின் நல்வாழ்வு என்பன சிங்கள இராணுவத்தை அகற்றினாலே சாத்தியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.