Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு இந்தியா செய்த பழி தீர ஐ.நாவில் தோஷ நிவாரணம் செய்ய வேண்டும்

Featured Replies

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை படையினர் தடுத்து வைத்திருந்த பின்னர் சுட்டுக் கொன்றனர் என்பது தொடர்பான ஆதாரங் களை சனல் 4 வெளியிட்டதை அடுத்து இந்திய நாடாளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
 
சிறுவன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான காட்சிகளை சனல் 4 தொலைக் காட்சி வெளியிட்டதும் அதன் தாக்கம் இந்திய தேசத்திலேயே அதிகமாக பிரதிபலிப்பதைக் காணமுடியும். பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சி மட்டு மன்றி வன்னிப் போர் நிலைமைகளை சனல் 4 வெளியிட்ட போதெல்லாம் இந்திய தேசத்தில், இலங்கை அரசுக்கு எதிரான கோ­ங்கள் எழுந்ததை மறுக்க முடியாது.
 
இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு இலங்கையில் அல்லவா எதிர்ப்பு ஏற்பட வேண்டும்? ஆனால் இந்தியாவில் அல்லவா குழப்பம் ஏற் படுகின்றது. இதுபற்றி யாரேனும் சிந்தித்தால் இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியாவின் வகி பாகம் எத்தன்மையது என்பது உணரப்படும்.
 
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விடயங்களை சனல் 4 வெளியிட்டதை அடுத்து இந்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரைக் கூட்ட முடியவில்லை எனில் இதனை யாரும் சாதாரண விடயமாகக் கருதிவிடக் கூடாது. ஆம்! வன்னிப் போரில் இலங்கை அரசுக்கு உதவி வழங்கிய இந்திய மத்திய அரசு, தான் செய்தது பெரும் பிழை என்பதை உணரவைக்கின்ற சம்பவங்கள் இப்போது ஆரம்பமாகிவிட்டது.
 
இதற்கு முடிபு கட்டவேண்டுமாயின், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதே இந்தியாவுக்கான ஒரே வழியாக இருக்கும்.
 
எனினும் இந்தியா உத்தரவிட்டால் இலங்கை செய்யும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை என்றாகிவிட்டது. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு என்பது ஈழத் தமிழர்களுக்காக இந்தியா கதைப்பதை தடுப்பதற்காக இலங்கை அரசு கையாளும் மாற்றுவழியாகும். எனவே தமிழர்களுக்கு தீர்வைக் கொடு என்று சொல்லக் கூடிய வல்லமையைப் பறிகொடுத்த இந்தியா தனது நாட்டில் குழப்பம் ஏற்படுவதற்கும் வழியமைத்துவிட்டது.
 
ஆக; வன்னிப் போருக்கான உதவியை இந்தியா செய்ததன் காரணமாக தனது பகை நாடான சீனாவுடன் இலங்கை உறவு கொள்வதற்கும் கூடவே இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இந்தியா நடந்து கொண்டது. இத் தீவினைப் பயன் கங்கையிலோ காசியிலோ நீராடித் தீரப்போவதில்லை. மாறாக ஐ.நாவில் வைத்து மகாதோ­ நிவாரணம் செய்வதே இந்தியாவுக்கான ஒரே வழி.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=600:2013-02-23-05-49-59&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.