Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கின்றார்: கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MDK-Karunanidhi-60(3).jpg

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி அவர் தனது பேச்சின் மூலம் இந்தியாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் டக்ளஸ் தேவானந்தா, 1986 ஆம் ஆண்டு ஒன்பது நபர்களுடன் இணைந்து, சென்னை சூளைமேடு பகுதியில் வாழும் மக்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், ஒருவரைக் கொன்று விட்டதாகவும் குற்றம் சாற்றப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றம் செய்ததற்கான குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டு வழக்கு விசாரணை சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

பல்வேறு முனைகளில் இயற்கையாகவே பீறிட்டுக் கிளம்பிய எதிர்ப்புக்கிடையே, சில நாட்களுக்கு முன் அழையா விருந்தாளியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு வருகை தந்ததார்.

அவரது அமைச்சரவையிலே உள்ள  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் கச்சத் தீவில் நடைபெற்ற திருவிழாவில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

 'இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் வந்து, தடை செய்யப்பட்ட 'ரோலர் மடி வலை'களை வைத்து மீன் பிடித்துச் செல்வதால், இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இலங்கை மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால் இலங்கை கடற்பகுதியிலே உள்ள மீன்வளம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 'ரோலர் மடி வலை'களை வைத்து, இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிப்பதைக் கண்டித்து, இன்னும் ஒரு மாதத்திற்குப் பிறகு இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்' என்று ஆத்திரத்தோடும், ஆணவத்தோடும் பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

உலகின் எந்த நாடுகளிலும் கடல்களின் நடுவே நடைபெறாத அளவிற்கு இலங்கைக் கடல் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாகத் தாக்கப்பட்டு வருவதும், தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்பட்டு வலைகள் அறுக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறித்துக் கொண்டு செல்வதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையிலே அடைப்பதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசை இதற்காகத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் சார்பில் முறையிடுவதும தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைக் கண்டிப்பதும் முடிவில்லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும். இந்தச் செய்தி உலக நாடுகளுக்கும், உலக அமைப்புகள் பலவற்றுக்கும் தெரிந்த ஒன்றேயாகும்.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழகத்திற்கே வருகை தந்து இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் இனவெறிக் கொடுங்கோன்மைச் செயல்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியாகத் தெரிகிறது. 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருப்பதை இந்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

இலங்கை அமைச்சர் மீனவர்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசியிருப்பது சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததும், கடும் கண்டனத்திற்கு உரியதும் ஆகும். இலங்கை அமைச்சரின் இந்த ஆணவப் பேச்சைக் கருத்திலே கொண்டு, உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59547-2013-02-25-09-22-59.html

இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைக் கண்டிப்பதும் முடிவில்லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும். இந்தச் செய்தி உலக நாடுகளுக்கும், உலக அமைப்புகள் பலவற்றுக்கும் தெரிந்த ஒன்றேயாகும்.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் ஒருவர் தமிழகத்திற்கே வருகை தந்து இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் இனவெறிக் கொடுங்கோன்மைச் செயல்கள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியாகத் தெரிகிறது. 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருப்பதை இந்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

 

"அடேயப்பா உலகம் முழுவதும் தெரிந்த செய்தியை இந்திய மத்திய அரசிடமிருந்து மட்டுமேன் கருணாநிதி ஒழித்துவைத்திருக்கிறாரோ.

இல்லை மத்திய அரசுக்கும் அது தெரிந்து விட்டதென்றால், அந்த அபலைக்கு இலங்கை என்ற அடாவடி குண்டகளிடமிருந்துதன் குழந்தைகளை காப்பற்ற முடியாமல் அவஸ்தை படுகிறது என்று நாடகம் நடிக்கிறாரா நாடகமேதை கலைஞர்? என்ன ஒரு அப்பாவி இந்த மத்திய அரசு டக்கிளஸ் அதை வம்புக்கிழுக்க.  டகிளசின் அரசுடன் சேர்ந்து போர்குற்றம் சட்டப்பட்ட அரசுதான் காங்கிரஸ் அரசு.

 

"ஆகா என பொருத்தம் நம்குள்ளே என்ன பொருத்தம். ஊடல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுகமே. :lol: "

 

ஒரு தடவை இரண்டு பிச்சை காரணுகள் ஒருவனை ஒருவன் கட்டிபுரண்டு அட்டிக்கொண்டானுகளாம். அவர்களை விலத்தி வைத்த வழிப்போக்கர்கள் "அட வயித்துக்கு இல்லாவிட்டால் இப்படி ஒருவனிதை ஒருவன் பறிச்சுக்கொள்ள இந்த மாதிரி அடிச்சுகொண்டால் எப்படி" என்றார்களாம்.

அதற்கு முதலாம்வன் " இந்த பிச்சைகாரன் நம்ம பிர்லாவை விட டாடாதான் பணக்காரன் என்கிறான். விடுவேனா சும்மா அவனை" என்று கூறி குதிச்சானாம்.

அதை கேட்டு கோபத்தால் பொங்கி எழுந்த இரண்டாம்வன். "இந்த பொறுக்கிக்கு என்ன தைரியம் இருந்தால் நேற்று வந்த பொறுக்கி பிர்லா டாடாவைவிட உசத்தி என்ன முடியும்" என்று கூறி குத்திச்சானாம்.

 

காங்கிரசின் சுதர்சன நாச்சியப்பனால் ஈழத்து எம்.ஜி.ராக வர்ணிக்க பட்ட டக்கிளசை "காங்கிரஸ் இந்தியாவை வம்புக்கு இழுக்கிறார்" என்று தாக்குகிறார் கருணாநிதி. "போரில் நமக்கு நண்பனாக இருந்தது இரசாயன ஆயுதம் தந்தது  காங்கிரஸ் இந்தியா" என்று கூறிக்கொண்டு தமிழ் நாட்டு மீனவரை கொலை செய்யும் இலங்கை அரசை காப்பாற்ற சிறை போவேன் என்கிறார் குத்தி.  இந்த இரண்டு அடிமைகளும் தங்கள் எஜமானர்களைக்காப்பற்ற அடித்துகொள்ளும் பொது இடையில் நம்மக்கேது இடம். <_<

 

 

Edited by மல்லையூரான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117826

 

கருணாநிதிக்கு இந்த செய்தி இதுவரையில் கிடைக்காவிட்டால் அதை ஒருதடவை படிக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.