Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை : ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் ' செல்போன் ' வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது

Featured Replies

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு செல்போன் வழியாக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

 

092121-98181 என்ற எண்ணுக்கு இலங்கை மனித உரிமை மீறல்கள் மீது சர்வதேச விசாரணை தேவை என்றால், ஆம் என்றும், தேவையில்லை என்றால் இல்லை என்றும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ் மூலம் கருத்தை தெரிவிப்போருக்கு வாக்கெடுப்பு குறித்த விவரங்கள் அடங்கிய எஸ்.எம்.எஸை ஆம்னெஸ்டி அமைப்பு அனுப்பி வைக்க இருக்கிறது.

 

இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இணையம் வழியாகவும் கருத்தை பதிவு செய்யலாம். இதற்காக http://act.amnesty.org.in/demand_justice_in_sri_lanka என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

 

 

541013_10200620388450417_813541712_n.jpg


மேலும் ஆம்னெஸ்டியுடன் சேர்ந்து இலங்கையில் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணைக்கு பிரதமரை வலியுறுத்துங்கள் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் கண்காணிக்க பிரதமர் குரல் கொடுக்க வேண்டும். அதற்கு ஆம்னெஸ்டியின் இயக்கத்தில் சேர 086880-01010 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள் என்றும் ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை பதிவு செய்தால், பிரதமருக்கு அனுப்பப்படவுள்ள மனுவில் அவர்கள் கையெழுத்திடப்பட்டதாக கருதப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


=====


Sri Lanka Petition

Dear Prime Minister,

 

 

We are writing to urge you to stand up for justice in Sri Lanka, and act to end the climate of impunity perpetuated by its government.


Since 2009, the Government of Sri Lanka has refused to meaningfully investigate allegations of serious rights abuses from (((war crimes committed by armed forces and the LTTE))) in 2009, to torture, illegal arrests, and killings by security forces that are carried out even today. The UN Human Rights Office recently said that the Government of Sri Lanka may be unwilling to do what it takes to secure (((justice and reconciliation))).

 

Faced with criticism, the Government of Sri Lanka has lashed out against those who demand accountability at home, and made empty promises about protecting the rule of law internationally.


It is time to hold the Rajapaksa government accountable.

 

In March, Sri Lanka will face questions at the UN Human Rights Council about its progress on improving its human rights record and addressing allegations of crimes under international law.


As a country with close ties to Sri Lanka, India is in a unique position to influence Sri Lanka to respect and protect the rights of its citizens. We ask you to use this opportunity wisely.
 

Specifically, we recommend that the Government of India:

  • Support an independent international investigation into allegations of crimes under international law committed by the (((Government of Sri Lanka and the LTTE)));
     
  • Call for a UN-led mechanism to monitor the current (((human rights))) situation in Sri Lanka;
     
  • Urge the Government of Sri Lanka to repeal the Prevention of Terrorism Act, and stop attacks and intimidation against its critics.
     
  • India owes a duty to the people of Sri Lanka. We urge you to not let them down.

Sincerely,
Amnesty International India



-முகநூல்



-முகநூல்

  • தொடங்கியவர்

559833_525302414189309_788076929_n.jpg

  • தொடங்கியவர்

sonia-killed-bala-2.jpg

இலங்கையில் ராஜபக்‌ஷ அரசின் இன அழித்தொழித்தலுக்கு நிறையக் கொடூரமான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் அம்னெஸ்டி இன்டர்நேசனல் எடுக்கும் முயற்சிகளை விவரிக்க முடியுமா?

 

இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நடந்துள்ள போர்க்குற்றங்களுக்கு நிறைய ஆதாரங்களும் சாட்சிகளும் இருக்கின்றன. போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வலிமையானது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்தான் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும். அதனால் சர்வதேச அளவில் அதனை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. அதனை நிரூபிக்க வேண்டுமாயின் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அந்த விசாரணைக்காகத்தான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு. குறிப்பாக, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் 35 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. உறுப்பினர்களாக இருக்கும் அந்த 35 நாடுகளிலும் உள்ள அம்னெஸ்டி அமைப்பினர் அந்தந்த நாட்டு அரசாங்கத்துடன் பேசி, விவாதித்து இலங்கையின் மீதான போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

 

 

 

இந்திய அரசை வலியுறுத்துவதற்கு அல்லது இலங்கை தொடர்பான அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதற்கு என்ன மாதிரி முயற்சிகளை எடுத்திருக்கிறீர்கள்?

இந்தியாவின் பார்வை மாற வேண்டும் என்பதற்காக இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான ஆதார ஆவணப் படத்தை டெல்லியில் திரையிட்டு காட்சிப்படுத்த வேண்டும் என முயற்சி எடுத்தோம். அதனடிப்படையில் அம்னெஸ்டியும் சனல்- 4 நிறுவனமும் இணைந்து அந்த ஆவணப்படத்தை டெல்லியில் திரையிட்டிருக்கிறோம். இதனையடுத்து, இந்திய அரசின் குடியரசு தலைவர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பலரையும் சந்தித்து விவாதிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைச் சேராத எம்.பி.க்கள் 200-லிருந்து 300 வரை இப்பிரச்சினையில் கவனம் செலுத்த வைத்து போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மை களை அவர்களிடம் நிரூபித்து அவர்கள் வழியாக பிரதமரிடம் மனு கொடுக்க வைப்பது எங்களின் நோக்கம்.

 

 

 

 

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர் பான ஆவணப்படம் டெல்லியில் எத்தகைய தாக் கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கருதுகிறீர்கள்?

டெல்லியில் இந்த ஆவணப்படத்தை தேசிய அளவிலான பத்திரிகையாளர்கள், சில எம்.பி.க்கள், கொள்கை வகுப்பாளர்கள், மனித உரிமை அமைப்பினர் மற்றும் பல தரப்பட்ட மக்கள் பார்த்தனர். படத்தின் முடிவில் எல்லோர் முகத்திலும் அதிர்ச்சிதான். இப்படிப்பட்ட கொடூரங்கள் இலங்கையில் நடந்துள்ளதா? என்று முதன் முதலாக கேள்விகள் அவர்களிடத்தில் எழுந்துள்ளன. அதுவும், பிரபாகரனின் இளைய மகனான சிறுவன் பாலச்சந்திரன் உயிருடன் பிடிக்கப்பட்டும் பிறகு படுகொலை செய்யப்பட்டதுமான புகைப்படங்களைக் கண்டு அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. பச்சை பாலகன் செய்த தவறென்ன? என்கிற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

 

 

 

 

டெல்லியில் வெளியிடப்பட்ட ஆவணப் படத்தை அடுத்து வேறு சில ஆதாரங்களும் இருப்பதாக சொல்லி வருகிறார்கள். அதில் என்ன இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

போர்க்குற்றங்கள் தொடர்பாக, தற்போது தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தின் மொத்த நீளம் 83 நிமிடங்கள். அதில் 22 நிமிட காட்சிகள் மட்டுமே டெல்லியில் திரையிடப்பட்டிருக்கிறது. மார்ச்சில் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகளின் முன்பு முழு ஆவணப்படத்தினையும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், முழு படத்தையும் நாங்கள் இன்னும் பார்க்கவில்லை.

 

 

 

 

இலங்கையின் போர்க்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு ராஜபக்சேவிற்கு தண்டனை கிடைக்கும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

-நிச்சயமாக. ஆனால், நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரி நாளைக்கோ அடுத்த மாதமோ அடுத்த வருடமோ இது நடக்கும் என்று நான் சொல்ல மாட்டேன். இலங்கைக்கு எதிராக கடந்த வருடம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது சில பரிந்துரைகள் சொல்லப்பட்டன. இத னை இலங்கை அரசும் ஏற்றுக்கொண் டது. ஆனால், இது வரை அதன்படி ஒரு ஸ்டெப்பையும் ராஜபக்சே அரசு எடுக்கவில்லை. இதனை ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கவனத்தில் கொள்ளும். ஒரு நாட்டின் மீது படிப்படியான நடவடிக்கைகளை தான் ஐ.நா.சபை எடுக்கும்.முதல் நடவடிக்கையாக மனித உரிமை கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன்படி நடக்க வலியுறுத்தியது. அதனை ராஜ பக்சே மதிக்கவில்லை.

 

அதனால் இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளை சர்வதேச விதிகளுக்கேற்ப அவ்வவ்போது முடிவு எடுக்கும். போர்க்குற்றங் கள் மனித உரிமை மீறல்கள் என்கிற வகையில் சுருங்கி விடாமல் அந்த குற்றங்கள் ஒரு இன அழிப்பு என்பதை நிரூபிக்க எல்லாவித முயற்சி களையும் அம்னெஸ்டி இன்டர்நேசனல் எடுத்து வருகிறது. போர்க்குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.

 

தினகரன் – தமிழ்நாடு

  • தொடங்கியவர்

மன்மோகனுக்கு அம்னெஸ்டி கடிதம்

 

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு நடத்த குரல் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய கிளை அனுப்பி உள்ள கடிதம்: இலங்கையில், கடந்த 2009ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது நடந்த சித்திரவதைகள், சட்டவிரோத கைதுகள், பாதுகாப்பு படையினர் செய்த கொலைகள் உள்ளிட்ட போர் குற்றங்களை பற்றி விசாரிக்க  அந்த நாட்டு அரசு இன்றும் கூட மறுத்து வருகிறது. நீதி நிலை நாட்டப்படவும், சமரச இணக்கம் ஏற்படவும் விசாரணை தேவை. ஆனால், அதை நடத்த இலங்கை அரசு மறுக்கிறது. கடுமையான விமர்சனங்களை சந்தித்த இலங்கை அரசு, நியாயம் கேட்கும் தங்கள் நாட்டினரை கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறது. அதே நேரத்தில், சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படும் என்று வெற்று வாக்குறுதிகளை சர்வதேச அளவில் அள்ளி வீசுகிறது. நடந்த போர் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ராஜபக்ஷே அரசை பொறுப்பேற்கச் செய்ய இதுவே சரியான நேரம். போர் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச சட்டங்களின் கீழ் கூறப்பட்டுள்ள புகார்களுக்கும், மனித உரிமை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மார்ச் மாதம் பல கேள்விகளை இலங்கை சந்திக்க  உள்ளது.


இலங்கை குடிமக்களின் உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும் அந்நாட்டு அரசை நடவடிக்கை எடுக்க செய்யும் நிலையில் இந்தியா உள்ளது. இந்த வாய்ப்பை இந்தியா புத்திசாலிதனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக இந்திய அரசுக்கு அம்னெஸ்டி இன்டர்நேஷனல் 3 பரிந்துரைகளை முன்வைக்கிறது. அவை:

 

1 இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகள் செய்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி சுயேச்சையான சர்வதேச விசாரணைக்கு ஆதரவு.

 

2இலங்கையில் மனித உரிமைகள் இப்போது எந்த அளவுக்கு உள்ளது என்பதை கண்காணிக்க ஐ.நா தலைமையிலான குழு அமைக்க கோரிக்கை.

 

3 தீவிரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், விமர்சிப்பவர்களை தாக்குவது, மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என இலங்கை அரசை கேட்டுக்கொள்ளுதல்.இலங்கையில் நீதியை நிலைநாட்டவும், அந்த நாட்டு அரசால் உருவான மோசமான நிலையை முடிவுக்கு கொண்டு வரவும் நீங்கள் குரல் கொடுக்க வேண்டும். இலங்கை மக்களுக்கு இந்தியா கடமைப்பட்டுள்ளது. அவர்களை கைவிட்டுவிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

 

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=42359

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.