Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் தலித்களின் நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தலித்களின் நிலை

 

“நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம்” என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நட்வடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. இந்தியாவில் இனக்குழுக்களுக்குள் அகமண முறைகள் நீடித்த்தன் தொடர்ச்சியாக சாதி ஒரு தனி வர்க்கமாக நிறுவப்பட்டது, சமூக உற்பத்தி உறவுகளிலும், நிலவுடைமைகளில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கில் வர்க்கங்கள் ஏற்பட்டதன் பின்னணியில் வர்க்கத்திற்குள் சாதி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அன்றிலிருந்து ஏற்பட்ட வேலைப்பிரிவினைகள் சாதியின் கட்டுமானத்தை உறுதி செய்தன. குறிப்பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவில் ஆளும் வர்க்கமாக திகழ்ந்த நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மன்னர்கள் சாதிய பாகுபாட்டை உறுதிப் படுத்தி கட்டிக்காத்தனர்.

ஆரியர்களின் வருகைக்கு பின் வர்க்கத்திற்குள் இருந்தஏற்றத்தாழ்வு சாதியாக கெட்டிப்பட ஆரம்பித்த்து, பிராமணியம்ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக இருந்த்து. அதுபுறமண முறை தடை செய்த்து. இன்று புறமண முறைக்கு ஆதரவானசட்டங்கள் இருந்தாலும், அகமண முறையே சாதியை நிலைத்திருக்கவைக்கும் காரணியாக இருப்பதால் அதனை பிராமணியம்வளர்த்தெடுக்க அனைத்து வித சதிகளையும் செய்த்து. அகமணமுறை நீடிக்க வேண்டுமாயின் ஆண், பெண் எண்ணிக்கையில்சமத்துவத்தை பேண வேண்டி வந்த்து. ஆண் எண்ணிக்கைகுறைந்தாலோ, பெண் எண்ணிக்கை குறைந்தாலோஇயற்கையாகவே புறம்ணத்தை நோக்கி தள்ளிவிடப்படுவார்கள்.இதை தடை செய்ய குறுக்கு வழிகளை பல நியதியின் பெயரில்கடைபிடிக்க ஆரம்பித்தார்கள்.

 

 1. விதவையை கணவன் உடலோடுஎரித்து விடுவது ( உடன்கட்டை ஏறுவது) 2. கணவனை இழந்தவரைமொட்டையடித்து, கட்டுப்பாடுகளை விதித்து விதவைக் கோலம்பூண வைப்பது 3. மனைவியை இழந்தவன் மீது பிரம்மச்சரியத்தைவிதிப்பது 4. பருவமெய்தாத சிறுமியை மணம் முடிப்பது (பால்யவிவாகம்). போன்ற நியதிகளின் அடிப்படையிலும்,தெய்வத்தின் பெயராலும் அகமண முறையை தக்க வைத்து ஒருஇனத்திற்குள்ளேயே சாதிய கட்டுமானத்தை கடந்த 3000ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்தனர். இந்த மோசடிப்பேர்வழிகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து சித்தர்கள் மற்றும்லோகாய வாதிகளால் நடத்தப்பட்டு வந்துள்ளது. மேற்படிகட்டமைப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மன்னர்கள்அரசாணைகள் மூலமும் இந்து மத்த்தின் தோற்றுவாயான சைவ,வைணவ மதங்களின் பெயராலும் நடைபெற்றது.

 

நில உடைமை சமூக அமைப்பிலிருந்து நவீன கருவிகளின்மூலம் சமூக உற்பத்தியை நோக்கி மாற்றங்கள் உருவாகிவரக்கூடிய காலத்திலும் தமிழகத்தில் சாதிய படிநிலைகளைபாதுகாக்கும் ஏற்பாடுகள் தொடர்கின்றன, இன்றும்கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், திருமணமண்ட்பங்கள்,வர்த்தக நிறுவனங்கள், ஊர்கள், சாலைகளின் பெயராலும், அகமண முறைகளின் உள்ளார்ந்த விசயங்களாலும்கட்டமைக்கப்படுகின்றன.

 

இந்திய விடுதலைப்போராட்ட காலத்திலும் சாதியபாகுபாட்டிற்கு எதிராகவும், சாதியின் பெயரால் நிகழும்தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் வலுவான கலக குரல்கள்எழுப்ப்ப்பட்ட போதும் பிராமணியம் அதை அடக்கி ஒடுக்கஅனைத்துவிதமான நடவடிக்கையிலும் ஈடுபட்டது, இதற்கிடையில்இடை நிலை சாதிகளும் பிராமணியத்தின் உட்கூறுகளைஉள்வாங்கி கொண்டு தங்களையும் அதே போல் காட்டிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டன. அது குறிப்பிட்ட காலத்தில்பிராமணரல்லாத சாதிகள் என்ற நிலையை நோக்கியும்,பிற்படுத்தப்பட்ட சாதிகளில் தொழில் அடிப்படையில் உயர் சாதி,தாழ்ந்த சாதி என்ற பாகுப்பாட்டை வலுப்படுத்தும் ஏற்பாடும்நடந்த்து. தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்த தந்தை பெரியார் பலகட்ட போராட்டங்களை நடத்தினார்,நீதி கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இதில் முன்னின்றது.இதன் பின் தோன்றிய திராவிடர் கழகம் இதை உரக்க பேசியது.ஆனால் அதிலிருந்து உருவான திமுக, அதிமுக, மதிமுக போன்றஅமைப்புகள் எல்லாம் இது குறித்து எந்த சிந்தனையையும்செலுத்தியதாக தெரியவில்லை. 1967ல் ஆட்சிக்கு வந்த திமுகவும்அதன் பின் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. பிராமணியத்திற்கு எதிரான போராட்டத்தைநடத்தியவர்கள் இதர சாதியினருக்குள் இருந்த உள்முரண்பாடுகளையும், பகைமைகளையும் களைய எந்த விதநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அதை தங்களுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

இன்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 129 அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் ஒருவர் கூட பயிலவில்லை. மேலும் 30 பள்ளிகளில் 5 சத தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். இதர பள்ளிகளில் 20 சத்த்திற்கும் குறைவான தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். பள்ளிகளில் இன்றும் பல இடங்களில் தலித் மாணவர்களை கடைசி இருக்கையில் உட்கார வைப்பது. பாகுபாடு கடைபிடிப்பது போன்ற தீண்டாமையின் வடிவங்களும் இருந்து கொண்டு தான் வருகின்றன.

தலித் பகுதி மக்களின் மிக மோசமாக சந்திந்தித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று கல்வி நிலையங்களில் படிப்பை பாதியில் நிறுத்துவது ஆகும்,. அருந்ததியர் சமூகத்தில் இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என அன்னை தெரசா கிராமப்புற வளர்ச்சிக்கட்டளையின் ஆய்வு கூறுகிறது, 5 ம் வகுப்பில் 60 சதவீதமும், 8ம் வகுப்பில் 45 சதவீதமும், 10ம் வகுப்பில் 20 சதம் என்ற அடிப்படையிலே செல்கின்றனர் என்ற வேதனையான விபரம் மனித மனங்களை உறைய வைக்கிறது,

 

ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளின் நிலைமையோ இன்னும் கொடுமையாக உள்ளது, 1565 விடுதிகள் சேரிகளைப் போலவே காட்சியளிக்கிறது, தமிழக அரசு சிறைகைதிகளுக்கு கூட ஒரு நாள் உணவிற்கு ரூ 25 முதல் 30ம்., போலீஸ் நாய்க்கு 65 ரூபாயும் ஒதுக்குகிறது, ஆனால் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவனுக்கு 18 ரூபாய் ஒதுக்கிறது, இது உழைக்கும் மக்களாகிய தலித் மக்கள் குறித்த ஆட்சியாளர்களின் அக்கறை புரிய வைக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் 19 சதம் தலித் மக்கள் உள்ளனர். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் தலித் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, நகர மேம்பாடு என்ற பெயரால் தலித் மக்கள் சேரிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்., அடையாறு போன்றவற்றின் கரைகளில் பெரும் பகுதி தலித் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கென்று குடிநீர், சாக்கடை, கழிப்பறை, சுகாதார வளாகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியாத்தால் கட்டித் தரப்பட்டுள்ளது, குடிசையில்லா நகரம் என அறிவித்து அங்கிருந்த தலித் மக்களையெல்லாம் நகரை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையையே அரசு செய்தது, பாதுகாப்பின்மை காரணமாக தலித்துகள் தங்கள் சொந்த சமூக மக்களின் அருகாமையிலேயே வசிக்க விரும்புகின்றனர். இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியான ரூ 3821 கோடியை கடந்த திமுக அரசு வேறுபணிகளுக்கு திருப்பி விட்டது,

 

இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதே பட்டியல் சாதியினரின் நலனை பாதுகாக்க பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன, அதன்படி 1979ல் சிறப்பு உட்கூறுதிட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பின்னர் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் சப் பிளான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இதன்படி ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமை சார்ந்த மற்றும் உரிமையை பெறுவதற்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது, தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் (1995.-2010) 14298 கோடி ரூபாய்கள் மறுக்கப்பட்டுள்ளது என ஒரு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தலித் மக்களுக்காக நில விநியோகத்திற்கு பயன்படுத்தியிருந்தால் ஓர் ஆண்டிற்குள் அனைவருக்கும் நிலத்தை வழங்கியிருக்க முடியும்.

தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்கள் 78,98,932 பேர், இதில் 9,03,548 பேரிடம். அதாவது 11 சதமான தலித்களிடம் மட்டுமே நிலம் உள்ளது, ஆனால் உண்மையில் 4 லட்சம் பேரிடம் வெறும் 2 ஏக்கர் நிலம் அளவு மட்டுமே உள்ளது, இது மொத்தநிலப்பரப்பில் 7 சதம் மட்டுமே ஆகும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மிகக்குறைவான அளவே தலித்களிடம் நிலம் உள்ளது, ஈரோட்டில் 17 சதம் தலித் மக்கள் தொகைக்கு 2 சதம் நிலமும், கோவையில் 16 சதம் தலித் மக்கள் தொகைக்கு 1.38 சதமும், நீலகிரியில் 30 சதத்திற்கு 0.90 சதம் நிலமும் என உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் 4 இலட்சம் ஏக்கர் உயர் சாதியினரிடமும், மீதி 1 லட்சம் ஏக்கர் நிலமே இதர சாதியினருக்கு ஏலம் விடப்படுகிறது.

 

ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் சாதிய ஒடுக்குமுறையும், வன்முறைகளும் ஏராளமாக நிகழ்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் மேற்கு வங்க நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தின் இடதுசாரி அரசாங்கம் காரணமாகும். ஏனென்றால் 13 லட்சம் ஏக்கர் நிலத்தில் 7 லட்சம் ஏக்கர் நிலம் (54சதம்) தலித் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ள அவர்கள் கௌரவத்துடனும், மரியாதையுடனும் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை கவனிக்க வேண்டியுள்ளது, இது அந்த மாநிலத்தில் சமூக ஒடுக்குமுறை என்பதற்கு பதில் சமூக ஒற்றுமையை பேணி காத்தது. இதனால் தான் அங்கே தலித் பஞ்சாய்த்து தலைவர் மீதான வன்முறைகளோ, படுகொலைகளோ நடைபெறவில்லை.

பாரதியும், பாவேந்தனும், வள்ளலாரும், பெரியாரும் பிறந்த தமிழக கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இன்றளவிலும் நீடித்து வருகின்றன. எவிடன்ஸ் அமைப்பு 12 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி விபரங்களை வெளியிட்டு உள்ளது, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 213 கிராமங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 70கிராமங்களில் ரேசன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது. 23 கடைகளில் தலித்கள் பிறருடன் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 2 சத கடைகளே தலித் மக்களின் வசிப்பிடங்களில் உள்ளது. 2009ம் ஆண்டு கள்ளகுறிச்சி அருகில் தச்சூரில் காசியம்மாள் என்ற தலித் பெண்ணின் கை வரிசையில் நின்ற ஆதிக்க சாதி பெண் மீது பட்டுவிட்டது என கூறி பொது இடத்தில் அவர் மானபங்கப்படுத்தப்பட்டார்.

 

67 சத கிராமங்களில் சலூன் கடைகளில் முடிவெட்ட முடியாது. 68 சத கிராமங்களில் பொது குழாயில் நீர் எடுக்க தடையும் , 131 கிராமங்களில் தனித்தனி நீர் நிலைகளும் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொடடு பார்ப்பதில்லை. மதுரை கீரிப்பட்டியில் வசந்தாமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலித் பெண் சேர்க்கப்பட்ட போது அங்கிருந்த ஊழியர் கொண்டை ஊசியால் பெண்ணின் பனிக்குடத்தை குத்தி சேதப்படுத்தியுள்ளார், தீண்டாமை ஒரு பாவச் செயல் என பாடப்புத்தங்களில் அச்சடித்து கொடுத்து விட்டு 29 கிராமங்களில் பள்ளிகளில் பாகுபாடும் காட்டப்படுகிறது. தலித் மாணவர்கள் துப்புறவு பணியில் ஈடுபடுத்தப்படுவதும், பயணங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது. அதே போல் பேருந்துநிறுத்தங்களில் அமருவதில், டீக்கடைகள், ஓட்டல்களில் தனி பெஞ்ச், டம்ளர்கள் எனவும் பாகுபாடு காட்டப்படுகிறது. தபால்நிலையங்களில் தலித்கள் நுழையக்கூடாது என்பதும், ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்களை இருக்கைகளில் அமரவிடாமல் தடுப்பதும் தொடர் கதையாக உள்ளது. மலம் அள்ளும் தொழிலில் இன்றும் தமிழகத்தில் 50000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதாக விபரங்கள் கூறுகிறது.

 

திண்டுக்கல் மாவட்டம் ஒடைப்பட்டியில் கலையரங்கத்தில் தலித்கள் நுழைய தடையுள்ளது. பொது சுடுகாடுகளில் புதைக்க அனுமதிக்காத நிலையும் உள்ளது, பெரும் பகுதி தலித் மக்களுக்கான சுடுகாடுகள் ஓடைகளில் உள்ளன, மழைக்காலங்களில் அவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் எந்த வழியும் இல்லாது சாலை ஒரங்களில் புதைக்கும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது, அதே போல் தலித் மக்களின் பிணங்களை ஆதிக்க சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழலும் உள்ளது, தேனி மாவட்டம் கூழையனுர்ரில் எதிர்த்து கேட்ட சின்னாயி என்ற தலித் மூதாட்டி மீது இந்தாண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் குண்டு வீசி அவர் கொல்லப்பட்டார். கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலித் மக்கள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்கிற கட்டுபாட்டோடு பொது இடத்தில் செல்போன் பேசக்கூடாது, பைக் ஒட்டக் கூடாது என நவீன வடிவ தீண்டாமைகளும் நிகழ்ந்து வருகிறது.

 

நவீன காலத்தின் அறிவியல் வளர்ச்சிப் போக்கில் தீண்டாமை மாறும், மறைந்து போகும் என கருதப்பட்டு வந்தாலும், உண்மையில் தீண்டாமையும், சாதிய படிநிலைகளும் நவீன வளர்ச்சிக்கேற்ப தங்களது வடிவங்களை மாற்றிக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. முதலாளித்துவம் தன்னுடைய நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள அடையாளங்களின் பின்னால் ஒழிந்து கொள்ள முயற்சி செய்கிறது, அதன் பகுதியாக இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை தேவையான அளவு ஊதி பெருக்கி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

 

தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தலித் கட்சிகள் எல்லாம் இன்று தேர்தல் அரசியல், தமிழ் தேசியம், இன உணர்வு என பிரச்சனைகளை திசைத்திருப்புகின்றன. ஒரு பகுதி அரசியல் கட்சிகள் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை நம்பி தலித்களை கைவிடும் போக்கையே மேற்கொள்கின்றன. நாம் தற்போதைய நிகழ்வுகளை பார்த்தோமானால் தெளிவாக தெரியும், நாலுமூலைகிணறு, கொடியங்குளம், வாசர்த்தி, கோட்டைப்பட்டி, தாமிரபரணி, பரமக்குடி துப்பாக்கி சூடுகளும், காவல்துறை தாக்குதல்களும், திண்ணியம், காங்கேயனுர், மேலவளவு, உத்தபுரம், பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சினேந்தல், சிதம்பரம் நடராஜர் கோவில் என நூற்றுக்கணக்கான இடங்களின் பெயரை சொல்ல முடியும், தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று....

 

ஆரோக்கியமின்மை, தரமற்ற வாழ்க்கை, குடிநீர் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை போன்றவையும் தலித் மக்களுக்கு மிகுந்த நெருக்கடிக்களை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தான் சமத்துவபுரங்களை உருவாக்குகிறோம் என கடந்த திமுக அரசு பம்மாத்து செய்தது. ஊருக்கு வெளியே கட்டப்படும் சமத்துவபுரங்களால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது.. ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவபுரங்கள் மலர வேண்டும், அதற்கு இன்றைய உத்தபுரம் எப்படிஉத்தமபுரமர்க மாறும் என அதிகார வர்க்கத்தின் ஒரு சிறுபகுதி மேற்கொண்ட முயற்சியால் சமூக ஒருபாட்டை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் உருவாக்கினார்களோ.. அதே போல் தமிழக ஆட்சியார்களும், காவல்துறையும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

தலித் மக்களுக்கு வழங்கபடும் திட்டங்கள் யாவும் சலுகைகளோ, இலவசங்ளோ அல்ல மாறாக அவை அவர்களின் உரிமை என்கிற கோணத்திலிருந்து ஆதிக்க சாதியினரும் பார்க்க வேண்டிய அணுகுமுறை தேவைப்படுகிறது, அதை நோக்கிய போராட்டத்தை தொடர்ந்து தமிழக மண்ணில் நடத்த வேண்டியுள்ளது. கால சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த தடையாக இருக்கும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமூறைகளை முற்றாக ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.. ஆனால் கல்விநிலையம் முதல் அரசு அலுவலகங்கள் வரை இன்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆண்டுக்காண்டு நடைபெற்றாலும், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றது என பாடப்புத்தகங்களில் அச்சடித்து விநியோகம் செய்தாலும், ஆளும் வர்க்கத்தின் உறுதியான நடவடிக்கையிலேயே தீண்டாமை ஒழிப்பை சாத்தியபடுத்த முடியும். தலித் மக்களின் மேம்பாடு என்பது ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் மேம்பாட்டோடு இணைந்தது என்கிற அடிப்படையில் சாதிய பாகுபாடுகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வேகப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல் இளைய தலைமுறையும் அகமண முறையில் இருந்து புறமண முறைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும். அது தான் சாதிய கட்டமைப்பை ஒரு பகுதி உடைத்தெறிய பயன்படும். சமூகத்தின் பொதுபுத்தியிலும் மாற்றம் வரவேண்டும்.

 

http://aravinthanmr.blogspot.in/2011/12/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.