Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொது நலவாய நாடுகள் சிந்திக்க வேண்டும் - த கார்டியன்

Featured Replies

இலங்கையில் தமது மாநாட்டை நடத்துவது குறித்து, பொதுநலவாய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, த கார்டியன் ஊடகம் தெரிவித்துள்ளது.


அந்த பத்திரிகை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

பெதுநலவாய நாடுகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்த அதன் சிறப்பான செயற்பாடுகளுக்கான நன்மதிப்பை பெற்றுள்ளது.

 

குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை, நைஜீரியாவில் இடம்பெற்ற நீதிக் கொலைகள், சிம்பாப்வேயின் சர்வாதிகாரம் போன்ற விடயங்களில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு சிறப்பாக செயற்பட்டது.

 

இந்த நிலையில் தற்போது கொழும்பில் அதன் மாநாட்டை நடத்த உத்தேசித்துள்ளமை, அதன் நற்பெயரை கலங்கப்படுத்துவதாக அமையும் என்று த கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த நிலையில் அது தொடர்பில் பொது நலவாய நாடுகள் அமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

 

http://www.hirunews.lk/tamil/54818



It is not only the conduct of the war that is at issue. The conduct of the peace that has followed the end of the conflict is just as problematic. Instead of devolving power, the Sri Lankan government has relentlessly centralised. It has dropped restrictions on presidential terms and recently rid itself of a chief justice who had upheld provincial rights. Instead of demilitarising the north, the army is still dominant there. And instead of accepting criticism and dissent, it has suppressed both. The conclusion must be that it is a nonsense to hand the country starry international roles, such as the hosting of the Commonwealth heads of government meeting later this year.

 

http://www.guardian.co.uk/commentisfree/2013/mar/01/sri-lanka-un-human-rights

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: கொலைக் களத்திலிருந்து எழும் வினாக்கள் இது guardianனின் ஆசிரியர் தலையங்கத்தின் தமிழாக்கம்


09 மார்ச் 2013


 
No%20fire%20zone_CI.jpg


இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கடுமையான கண்ணோட்டம் செலுத்தவேண்டும்(லண்டன் கார்டியன் பத்திரிகையில் மார்ச் 1 ம் திகதி வெளிவந்த ஆசிரியர் தலையங்கம்)


நேற்றையதினம் “யுத்த சூனியப் பிரதேசம்” (நோ பயர் ஸோன்) என்ற ஆவணப்படம் ஜெனீவாவில் காண்பிக்கப்பட்டதன் பின்னர் கருத்துவெளியிட்ட இலங்கைக்கான தூதுவர், அதனை முற்றாக நிராகரித்திருப்பது மட்டுமல்லாது அந்த நிகழ்வை ஐ.நா வின் கட்டிடத்தொகுதியில் நடாத்த அனுமதித்தமைக்காக, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலையும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.


தற்போது ஜெனீவாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைக் கடப்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்படவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அங்கு கூடியிருக்கும் பன்நாட்டு இராஜதந்திரிகள் அடங்கலாகப், பலர் அமர்ந்திருந்த அந்த மன்றத்தில் ஆற்றப்பட்ட இவரின் உரையை அனைவரும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த அமைதி, இலங்கையின் விமர்சகர்கள் கருத்துப்படி, வெளிப்படையானதாக இருந்தது.


ஆனால் இந்த அமைதி ஒன்றை மட்டும் உறுதிப்படுத்துகிறது. அதாவது, 2009 இல் முடிவடைந்த சிவில் யுத்தத்தின் இறுதிப்பகுதியில் அரச தரப்பினரால் குறிப்பிடத்தக்க அளவில் யுத்தக் குற்றங்கள் ஏதும் இழைக்கப்படவில்லை என்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடு பரந்தளவில் சந்தேகிக்கப்படுகிறது என்பதையே கோடுகாட்டுகிறது. சானல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால்  இலங்கை யுத்தத்தின் இறுதிவாரங்களின்போது மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் கொடுமைகள், அநீதியான படுகொலைகள் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த மூன்றாவது ஆவணப்படம் இவ்வாண்டின் பிற்பகுதியில் இங்கு லண்டனில் காண்பிக்கப்படவிருக்கிறது.


தொலைக்காட்சி ஆவணப்படங்கள் அறுதியான சாட்சியங்களாகக் கருதப்படுவதில்லை. ஆனால், அனைத்துலக அபய ஸ்தாபனம், சர்வதேச நெருக்கடி அமைப்பு, மற்றும் ஐ.நா அமைப்புக்கள் போன்றவற்றில் இருந்து வெளியாகும் அறிக்கைகள் போன்று, இந்த ஆவணப்படங்களும் பதிலிறுக்கப்படவேண்டிய காரசாரமான கேள்விகளைக் கேட்டு நிற்கின்றன.


இதுவரையில் வழங்கப்பட்டுள்ள பதில்கள் அறவே நம்பிக்கைத் தன்மை வாய்ந்தவையாக இல்லை. சிவிலியன்களையும், போராளிகளையும் வெளிப்படையாகவே வேறுபடுத்தத் தவறிய தாக்குதல்களின்போது மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள காணொளிகள், முழுமையாகப் பொய்யானவை என்று நிராகரிக்கப்பட்டாலேயொழிய, சிறுவர்கள் உள்ளிட்ட ஏனையோர் வேண்டுமேன்றே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.


ஆனால் “காணாமற்போனோர், பாரிய யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமைகள் மீறல்கள் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பிக்கைத் தன்மைவாய்ந்த நீதி விசாரணைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை” என்று சர்வதேச நெருக்கடி அமைப்பு கூறுகிறது.


இங்கு யுத்தம் எவ்வாறு நடாத்தப்பட்டது என்பது மட்டுமல்ல, யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சமாதான நடவடிக்கைகளும் சரிக்குச் சரி சர்ச்சைக்குரிய விடயமாக இருக்கிறது. அதிகாரப் பகிர்விற்குப் பதிலாக, இலங்கை அரசு அதிகாரங்களை சளைக்காது மேலும் மேலும் மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் மீதிருந்த கட்டுப்பாட்டை அது நீக்கியிருப்பது மட்டுமன்றி, அண்மையில் மாகாணங்களுக்குரிய ஆட்சியுரிமைகளை உறுதிப்படுத்திய நாட்டின் பிரதம நீதியரசரையும் வெளியேற்றியிருக்கிறது. வடக்கில் இராணுவத்தை விலக்கிக் கொள்வதற்குப் பதிலாக, அங்கு இராணுவத்தின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அதுமட்டுமல்ல, விமர்சனங்களையும், எதிர்க் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அரசு இரண்டையுமே நசுக்குகிறது.


ஆகவே, இவ்வாறானதொரு நாட்டிற்குப் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டினை நடாத்துவது போன்ற பிரசித்திபெற்ற சர்வதேச கடமைகளைப் பொறுப்புக்கொடுப்பது மிகவும் முட்டாள் தனமானது என்பதுதான் முடிவுரையாக இருக்கவேண்டும்.


அடுத்த சில வாரங்களில், எதிர்பார்ப்பதைவிட மிகவும் இறுக்கமான தீர்மானமொன்று ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்படவேண்டும். அதனைத் தொடர்ந்து பொதுநலவாய நாடுகளும் அடுத்து அதனது தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறுவதை மீள்பரிசீலனை செய்யவேண்டும்.


இலங்கை அரசு மிகச் சாதுரியமாக வாக்குறுதிகளை அள்ளிவீசி தனக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விமர்சனங்களைச் சமாளித்திருந்த அதேவேளை, நடைமுறையில் அது வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இலங்கை தொடர்ந்தும் இவ்வாறு தப்பிக்க இனியும் அனுமதிக்கப்படக்கூடாது.  


 


Source: http://m.guardian.co.uk/commentisfree/2013/mar/01/sri-lanka-un-human-rights


 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89427/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.