Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1223621201bbb.jpg

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் எஸ்.ஸ்ராலின் என்பவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

கொக்குவில் உள்ள தனது வீட்டுக்கு மதிய உணவுக்காக சென்று அலுவலகம் நோக்கி துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த போது, மோட்டர் சைக்கிளில் வந்த நபர்கள் இவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

தாக்குதலில் காயமடைந்த செய்தியாளரை வீதியில் சென்றவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

எனினும் இது குறித்து முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என யாழ். பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று (08) காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தி சேகரிக்கச் சென்ற எஸ்.ஸ்ராலின் பல கேள்விகளை எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
யாழில் வலம்புரி செய்தியாளர் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் தாக்குதல்!   
[Friday, 2013-03-08 18:16:37]
 
யாழ்.குடாநாட்டில் ஊடகங்கள் மீது தொடரப்பட்டு வரும் வன்முறைகளில் ஒரு பகுதியாக இன்று யாழிலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் இராணுவப் புலனாய்வாளர்களால் வழிமறித்து தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் உ.சாளின் (வயது22) என்ற இளம் பத்திரிகையாளரே தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது குறித்த பத்திரிகையாளர் யாழ்.நீராவியடி வீதி வழியாக அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்துள்ளார். இதன்போது வீதியில் நின்று வழிமறித்த 6 பேர் கொண்ட குழு கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் அருகில் கட்டிடவேலையில் நின்றிருந்தவர்களிடமிருந்து மண்வெட்டியொன்றையும் எடுத்து மண்வெட்டியாலும் தாக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த பத்திரிகையாளர் யாழ்.பல்கலைக்கழத்தில் அசம்பாவிதம் இடம்பெறும் போதும் இராணுவத்தினரால் சுற்றிவளைத்து தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று இவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடுமையான உள்காயங்களுக்குள்ளாகி, மூச்சுத்திறணல் ஏற்பட்டு வீதியில் கிடந்த நிலையில் வீதியால் வந்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இவரைத் தாக்கியவர்களிடம் தன்னுடைய பத்திரிகையாளர் அடையாள அட்டையினை காண்பித்திருக்கின்றார். அதற்கு தாங்கள் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக் கொண்டே தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
valampuri_journalist-seithy-20130308-450

535414_10152039474994057_940765256_n.jpg

வைகை நதியில் விழுந்த அடி போல வலம்புரிக்கு விழுந்த அடி

 

வைகை நதி பெருக்கெடுத்து ஓடுகின்றது. நதியின் பெருக்கைக் கட்டுப்படுத்த அணை கட்டும் படி பாண்டிய மன்னன் உத்தரவிடுகின்றான். மன்னனின் உத்தரவிற்குப் பணிந்து அணை கட்டும் பணியில் பாண்டிய நாட்டு மக்கள் ஈடு படுகின்றனர். அந்த நாட்டில் பிட்டு அவித்து விற்கும் செம் மனச்செல்வி என்ற மூதாட்டி உடல் வலியும் துணை வலியும் இன்றி சொக்கநாதப் பெருமானைத் தொழுகின்றார். சிவபிரான் தானே கூலியாளாகச் சென்று செம்மனச்செல்விக்காக அணை கட்ட முன் வருகின்றார். தான் அணை கட்டுவதற்கு அவிக்கின்ற பிட்டை கூலியாகக் கேட்கின்ற நிபந்தனையும் நடந்தேறு கின்றது. ஆனாலும், கூலியாளாக வந்த சிவன் அணை கட்டுவதில் ஆர்வமற்றவராக குந்தியிருக்கிறார்.

 

 

நிலைமையைச் சகிக்க முடியாத சேவகர்கள் சம்பவத்தை மன்னனிடம் முறையிட, கசையடி கொடுக்கும்படி உத்தரவிடுகின்றான் பாண்டியன். அந்தோ செம்மனச்செல்விக்காக அணை கட்ட வந்த கூலியாளின் முதுகில் மன்னனின் சேவகன் ஒருவன் ஓங்கி அடிக்கின்றான். என்னே! அதிசயம். அத்தனை உயிர்கள் மீதும் அந்த அடி விழுகிறது. ஆ...! ஊ என்ற ரண ஓசைகள். ஆம், உலகாளும் பரம்பொருளுக்கு விழுந்த அடி உலகுக்கு விழுந்த அடியாகி விடுகின்றது. அப்பளுக்கற்ற பரம்பொருளுக்கு விழுந்த அடி அனைவருக்குமானது போன்றதுதான் வலம்புரியின் செய்தியாளருக்கு நேற்று முன் தினம் விழுந்த அடியும். வலம்புரி நாளிதழ் நேர்மையுடனும் உண்மை யாகவும் நடுவு நிலைமையுடன் செய்திகளை வெளியிடுவதில் ஒருபோதும் பின்நின்றதில்லை. அத்தçகைய ஒரு நாளிதழுக்கு அடி விழுந்த தெனில் அது அத்தனை ஊடகவியலாளர்களு க்கும் விழுந்த அடி என்பது உணரப்பட வேண்டும்.


அடி விழுந்தாலும் என்னுடைய ஆளுக்குத் தான் அடி விழவேண்டும். அதுவே என் பிழைப் புக்கு ஆதாரம் என்ற சின்னத்தனங்கள் இருக் கின்ற இந்த மண்ணில், வலம்புரிச் செய்தியாளர் தாக்கப்பட்டதை வைத்து சுயலாபம் தேடவோ, வீடுவீடாகச் சென்று கண்டனக் கடிதம் வேண்டிப் பிரசுரிக்கவோ வலம்புரி ஒருபோதும் தயார் இல்லை. ஆனாலும் எங்களில் ஒருவன் அடிபட்டு விட் டான். அவனில் ஏற்பட்ட உடல் காயங்கள்; அதனால் அவனின் குடும்பம் கொண்ட வேதனைகள் தொடர்பில் எங்கள் இதயம் நெக்குருகின்றன. என்ன செய்வது ஊடகத் துறையிலும் விலை போனவர்கள் இருப்பதால் இத்தனை துன்பங்கள்.  பரவாயில்லை; உள்ளூர் ஊடகவியலாளர் என்று உவமை இட்டவர்கள் எங்கள் முதுகில் குத்தி ஏற்படுத்திய வலியைச் சுமக்கும் நாம் இந்த வேளையில் நடுவுநிலை தவறாத நன்னெறி காப்போம் என்று மீண்டும் சபதம் செய்கிறோம்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=686:2013-03-10-07-27-52&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.