Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும்; மன்மோகன் சிங் வலியுறுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

49481d74d6ac7831c3b4446033557df2.jpg

இலங்கைத் தமிழர்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பதில் அளித்து பேசியபோதே மன்மோகன்சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரம் குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம். தமிழ் மக்கள் சுயமரியாதை, கௌரவத்துடன் வாழ்வதை அரசு உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர்

இலங்கையில் தேசிய நல்லிணக்கம் ஏற்டாமல் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை. தமிழ் மக்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.onlineuthayan.com/News_More.php?id=521811885308296960

இவர் இலங்கை இந்தியா சொல்வதை கேட்குதில்லை என்று 2011லே பேசியவர்.

 

கூட்டமைப்பை இனி பேச்சுவார்த்தௌ அழைத்தால் போர்குற்ற விராணை ஒரு பாகமாக  பேசி தீர்க்க வேண்டும். அதை சேர்க்காத எந்த தீர்வையும் ஏற்க கூடாது.

 

கூட்டமைப்பு விசாரணை பிறகு தீர்வு முதல் என்று சொல்வதாக பிளெக் தான் பதவி விட்டு போக முதல் கூறியவர். ஆனல் யாழில் பதிந்திருக்கும் சுரேசின் பேச்சின் படி கூட்டமைப்பு விசாரணையை வலியுறுத்தியது; வலியுறுத்தும் என்று கூறியிருக்கிறார். எனவே தீர்வில் விசாரணை ஒரு பாகமாக வலியுறுத்தப்படவேண்டும்.

அத்துடன் தமிழ்த் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கூட்டமைப்பிற்கு முதலில் டெல்லி உரிய மதிப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கவேண்டும். வழங்கினால்.... சிங்களம் கதைக்கும்.

cartoon_09_03_2013.jpg

தமிழர் விவகாரம் ; சந்தியில் நிற்பது கொழும்பு அல்ல, டில்லியே

 

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாட்டை வலியுறுத்தி ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள தீர்மானம் தொடர்பான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம்  உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்ற அதேசமயம், தெற்காசியாவில் பலம் பொருந்திய பெரியநாடும் உலகிலேயே பாரிய ஜனநாயக தேசமாக கருதப்படுவதுமான இந்தியா தனது தென்கோடிப் புறத்திலுள்ள இலங்கைத் தீவு தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

 

இலங்கைத் தமிழர்களை மையப்படுத்திய ஜெனீவா விவகாரத்தினால் இந்தியாவின் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திற்குள்ளேயும் அரசுக்கு வெளியே இருந்து ஆதரிக்கும் கட்சிகளுக்கும் இடையில் கடும் பிளவு ஏற்பட்டிருப்பதாகத் தென்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நீண்ட காலத் துன்பங்களுக்கு நிரந்தர தீர்வொன்றைக் காணவேண்டும் என வலியுறுத்தி வரும் தமிழக அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி, பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா , வட இந்தியாவில் செல்வாக்கு மிக்கதும் அரசுக்கு ஆதரவு வழங்கும் கட்சியுமான சமாஜ்வாதி போன்றவையும் அமெரிக்காவின் உத்தேசத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றன. 

 

ஆனால், பூகோள  அரசியல் நலன்சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை கொடுப்பதற்கான உள்மன விருப்பத்துடனேயே  இந்திய அரசாங்கம் இருந்து வருவது பாராளுமன்றத்தின்  மேல் சபையான ராஜ்ய  சபையிலும் நேற்று முன்தினம் கீழ் சபையான லோக சபையிலும் வெளிவிவகார அமைச்சர் சல்மான்  குர்ஷிட்  அளித்த பதில்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கடந்த வருட மார்ச்சில் அமெரிக்க அனுசரணையுடனான தீர்மானத்தின் கனதியைக் குறைத்து நீர்த்துப் போக வைத்த பின் இந்தியா ஆதரவளித்தது என்பது இரகசியமல்ல. ஆனால், இந்த வருடமும் அதே விடயத்தை மேற்கொள்வது உள்நாட்டு அரசியலில் குறிப்பாக தமிழகத்தில்  மோசமான எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அமெரிக்காவுடன் நேரடியாக பேசுமாறு இலங்கையை இந்தியா  தூண்டுகிறது.

 

ஆனால், வெளிப்படையாக இலங்கை அதனை நிராகரித்து விட்டதை அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவாவில் தீர்மானத்தை முன்னின்று சமர்ப்பிக்க வேண்டிய விதத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அமைய வேண்டுமென இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் சம உரிமை பெற்று கௌரவமாக வாழ்வதை உறுதிப்படுத்த உழவு இயந்திரங்கள் வழங்குவது மட்டும் போதாது என்று இடித்துரைத்திருக்கிறார்.


இந்திய அரசின் முக்கிய பங்காளியான தி.மு.க. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கடுமையான ஆதரவு நிலைப்பாட்டை  எடுத்திருக்கிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்கப்படும் என்று சல்மான் குர்ஷிட் கூறியிருக்கின்ற போதிலும்  பதிலளிக்கும் கடப்பாடு  இலங்கையின் உள் விவகாரம் என்றும் தீர்வு இலங்கையிடமிருந்தே வர வேண்டும் எனவும் இந்தியா பிராந்தியத்தில்  பெரியண்ணனாகவோ அல்லது உலக பொலிஸ்காரனாகவோ இருக்க முடியாது என்றும் இதனை உணர்ந்து கொள்ளுமாறும் அழுத்தி உரைத்திருக்கிறார். அதேசமயம் இலங்கையில் யுத்தத்தால் சாதிக்க முடியாததை இராஜதந்திரத்தால் நிறைவேற்ற முடியுமென்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தையும் அதனைத் தாண்டிச் செல்லும் தீர்வுமே அவசியமெனவும் 13 இற்கும் குறைவானதாக தீர்வு இருக்க முடியாது என்றும் அழுத்தி உரைத்திருக்கிறார்.  13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையையே  இல்லாதொழிப்பதற்கான விருப்பத்தை அரச உயர் மட்டத் தலைவர்கள் விடுத்து வரும் நிலையில்,  இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு  செவிசாய்க்கப்படுமா? என்பது கேள்வி.

 

ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தின் இறுதி நகல் வரையை யாதர்த்த பின்பே இந்தியா இறுதி முடிவை எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட்டும் அறிவித்திருக்கின்றனர்.

 

ஜெனீவாவில் எத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டாலும் நீண்ட காலமாக துன்பப்படும் தமிழ் மக்களின்

அபிலாஷைகளுக்கு நிரந்தர தீர்வொன்று எட்டுவதற்கு அத்திபாரமிடுவதற்கான செயற்பாடே அவசியம். அதே சமயம் அடுத்த வருடம் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறவிருப்பதால் அதற்கான அரசியல் இலாப நட்டக்கணக்கை கூட்டிக் கழித்துப் பார்ப்பதாக தமிழ் மக்களின் பிரச்சினை பந்தாடப்படக் கூடாது. ஆனால் , சர்வதேச பிராந்திய பூகோள நலன்சார்ந்த அரசியலுக்குள் இலங்கைத் தமிழர் விவகாரம் முன்னொரு போதுமில்லாத வகையில் இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவே தென்படுகிறது. நடைமுறையில் அந்த மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர தீர்வென்பது தொடர்ந்தும் கானல் நீர் தான்.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3282:2013-03-08-17-40-51&catid=294:editorial&Itemid=543

ஜெனீவாவில் அமெரிக்காவின் தீர்மானத்தின் இறுதி நகல் வரையை யாதர்த்த பின்பே இந்தியா இறுதி முடிவை எடுக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட்டும் அறிவித்திருக்கின்றனர்.

 

இந்தியா இந்த முறை  இதுவரை தான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்கவில்லை என்பத்தால்தான் இலங்கையை பேச சொல்கிறது. நல்லா நிலையில் ஒரு விடையத்தில்  பேச்சு வார்த்தைகளில் இறங்கி சமநிலைபடுத்தாமல்  மேற்கூறிய விதத்தில் ஒரு அறிக்கை விடுவது இந்தியா அமெரிக்காவுடன் பந்தயத்திற்கு இறங்குவத்தாகத்தான் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியா அமெரிக்காவுடன் போனமுறை இணக்க பாடுகளை காட்டியத்தால் இந்த முறை எதிர்த்து போகிறது என்று எடுக்க முடியாது. எனவே இந்தியா உண்மையாகத்தான் இந்த முறை 'Hands off" நிலையில் இருக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும். அதாவது தான் இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் வராமல்,  தனது எண்ணத்தில் 1.நல்லதற்கு வாக்களிக்கும். 2. தனது கொள்கைகளுடன் ஒத்துப் போகாததை எதிர்க்கும். 3. நல்லது ஆனால் கடுமையானதாக இருந்தால் வாக்களிக்காது வெளியேறும். 

 

ஆனால் போன முறை முயன்றது போல நீர்க்கப் பண்ண பிரேரணையை முடக்க முயலும் சந்தர்ப்பம் குறவு என்றுதான் கொள்ள வேண்டும்

கெஞ்சலும் கொஞ்சலும்

 

 

rajapakse_indianDiplomat.jpg



ஐயா ராஜ ராஜ... எங்க பட்சம் கொஞ்சம் பார்வையைத் திருப்புங்கய்யா..! உலகத்துல இப்போதைக்கு பெரிய மிருகம்னு யானையைச் சொல்லுவாங்க... அந்த மாதிரி உலக நாடுகள்லாம் எங்க நாட்டையும் பெரிசா நெனச்சி சொல்லுறாங்கய்யா... தயவு செய்து எங்க மானத்தைக் காப்பாத்துங்கய்யா... அது உங்க கைலதான் இருக்கு! இப்படி சிரிச்சி சிரிச்சி மழுப்பாதீங்கய்யா...

 

 

ஐயா மகராசா... எங்க நாட்டு மீனவர்கள்லாம் ஏதோ பாவம் கடல்ல ச்சும்மா மீன்பிடிக்கத்தான வந்துட்டுப் போறாங்க..? அவங்களை விட்டுடுங்கய்யா..! எங்க மானம் போவுது! இந்தப் பிராந்தியத்துல பெரிய கப்பல் படைன்னு பேரு எடுத்திருக்கற எங்க படைகளோட பேரைக் காப்பத்தற மாதிரி கொஞ்சம் நடந்துக்கங்கய்யா.. ப்ளீஸ்... ப்ளீஸ்...

உங்களுக்கு என்ன வேணாலும் செய்து தாரோம்... எந்த வெத்துப் பேப்பர்லன்னாலும் கையெழுத்து போட்டுத் தாரோம்...

 

எங்க நாட்டு அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தில இருக்கற பேரைக் காப்பத்தறதுக்காக அதிகார மட்டத்துல இருக்கற நாங்க கெஞ்சி கேட்டுக்குறோம்... இந்த அய்.நா.வுலயும், உரிமை மனிதர்கள் சபைலயும் இதே மாதிரி உங்க ஆளுங்களை சிரிச்சிக்கிட்டே போச்சொல்லுங்க அய்யா... எங்க மேல உள்ளூர்ல கொடுக்கற அடியைப் பொறுத்துகிட்டு.. எவ்ளோ நேரம்தான் வலிக்காத மாதிரியே அழுவுறது..? அய்யா... ப்ளீஸ்அய்யா ப்ளீஸ்... வலிமையான நாடுன்னு எங்களுக்கு இருக்குற பேரைக் காப்பாத்துங்கய்யா காப்பாத்துங்க!!!

 

http://dinamani.com/photoon/article1493484.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.