Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம்: 10ல் 7 பெண்கள் ஆண்களிடம் ஏதோ ஒரு வகையில் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள்

Featured Replies

கணவனின்றி ஒரு தமிழ்ப் பெண் வாழ்வதே சிரமான புலம் பெயர் தமிழர் நிலை..

இன்று மார்ச் 8ம் திகதி உலகப் பெண்கள் தினம் என்று அனுட்டிக்கப்படுவது வழமை, ஐ.நா முதற் கொண்டு அரசியற் கட்சிகள் வரை மாரித் தவளைகள் போல கத்திவிட்டு உறங்கும் தினமாகும்.
 
உலகப் பெண்கள் தினம் வந்தும் உலகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உலகப் பெண்கள் தொடர்பாக இன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.
 
உலகம் முழுவதும் 10 பெண்களை எடுத்துக் கொண்டால் 7 பெண்கள் ஆண்களிடம் ஏதோ ஒரு வகையில் அடி, உதை, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.
 
இதுமட்டுமல்லாமல் பெண்கள் ஆண்களுக்கு இணையான சம்பளம் பெறுவதுகூட இன்னமும் உலகளாவிய ரீதியில் ஊர்ஜிதமாகவில்லை.

இந்தியாவில் 30 வீதமாகவது பெண்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் வரும்படியாக தேர்தல் முறையில் மாற்றம் வரவேண்டும் என்று கூறியும், தாத்தாக்களாகவிட்ட ஆண் தலைவர்களுக்கு இன்னமும் பதவி மோகம் இறங்கவில்லை.
 
சவுதியில் வயது குறைந்த இலங்கை யுவதி ரிசானா கழுத்தறுத்து கொல்லப்பட்டதும், அந்த நாட்டில் நிலவும் மோசமான சாரியார் சட்டங்கள் பெண்குலத்திற்கே சாபக்கேடாக இருந்து வருவதும் தலைகுனிவு தருவது.
 
பாகிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகம் போகக்கூடாது என்று தலபான்கள் சன்னதமாடி, இப்போது உயர்கல்வி கற்கும் பெண்களை சுட்டுக்கொல்லும் அவல நிலைக்கு வந்துள்ளார்கள்.
பாகிஸ்தானில் 15 வயது மலலா யூசுப்ஸாயை படிக்கும் உரிமை கேட்டதற்காக தலையில் வெடி வைத்துள்ளார்கள்.
 
சிறீலங்காவில் சிங்கள இனவாத அரசு ஒரு தேசத்து மக்களையே ஒட்டுமொத்தமாக கைது செய்து எண்ணற்ற பெண்களை ஐ.நாவின் அனுமதியுடன் வன்புணர்ச்சி செய்துள்ளது.
 
இசைப்பிரியா மரணம், சனல் 4 காணொளியில் கண்ணீருடன் போகும் சிலுப்பா வெட்டியதால் அகப்பட்ட தமிழ் சிறுமி வல்லுறவுக்கு கொண்டு செல்லப்படும் காட்சி, இவரை சிரித்தபடி கொண்டு செல்லும் சிப்பாய் இவைகள் பெண்ணியத்திற்கு பெரும் சாபக் கேடாகும்.


இந்தக் கொடுமையை செய்த சிங்கள இனவாதத்தை உதாரணம் காட்டாமல் வெளியான ஐ.நா அறிக்கை வெட்கக் கேடான அறிக்கை.
 
டெல்கியில் 23 வயது மருத்துவத்துறை மாணவியை ஓடும் பேருந்தில் கொடியவர்கள் கதறக்கதற பலாத்காரம் செய்து கொன்றார்கள்.
 
இந்தியாவில் பெண்கள் படும் கொடுமை உலகத்தையே அவமானப்பட வைக்கிறது.
 
முஸ்லீம்களின் பலதார மணம் செய்யும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்படவில்லை, இஸ்லாம் உட்பட உலகின் அனைத்து மத நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் பெண் விடுதலைக்கு சாபக்கேடாகவே இருக்கின்றன.
 
காவி உடை தரித்த புத்தபிக்குகள், நித்தியானந்த சாமிகள், வெள்ளையுடை பாதிரிகள், சீருடைத் தலபான்கள் என்று இது மாளாத சுமையாக இருக்கிறது.
 
21 ம் நூற்றாண்டிலும் 10:7 பெண்கள் அடி, உதை, பாலியல் பலாத்காரம், சிறுமிகள் வன்புணர்வு என்று அவல வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அரசியல் தாபனங்கள், மத தாபனங்கள், தத்துவங்கள் எல்லாம் எதற்காக இங்கு குப்பை கொட்டுகின்றன, அனைத்தும் தோல்வியடைந்துள்ளன என்பதே உலகப் பெண்கள் தினத்தின் யதார்த்தமாக இருக்கிறது.


மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் என்றான் பாரதி.. அதே பாரதி இறந்ததும் அவன் மனைவி செல்லம்மாவிற்கே மொட்டை போட்டு வெள்ளை உடை அணிவித்தது இந்திய பிராமணியம்.
 
இப்படி பிணக்குழியை கிண்டும்போது எடுக்கும் முடை நாற்றமே இந்த விவகாரத்தில் கிளம்பியபடி இருக்கிறது.
 
இந்த வகையில் ஈழத் தமிழன் உயர்ந்தவனா.. இல்லை அவனும் இந்த உலக ஒழுங்கில் இருந்து புதுமை எதையும் செய்தமைக்கான சான்றுகள் அதிகம் இல்லை.
 
இன்றும் யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளும், கழுத்து முறித்து கிணற்றில் வீசப்படும் பெண்களின் சடலங்களும் அவனையும் உயர்ந்தவனாகக் காட்டவில்லை.
 
வன்னியில் அகப்பட்ட பெண்களை பாலியல் வக்கிரம் செய்ததில் சிங்களவனோடு தமிழ் ஒட்டுக்குழு காடையரும் இருந்தார்கள் என்பதை நினைத்தால் நாம் அடைந்துள்ள கீழ் நிலையை உணர முடியும்.
 
இன்றும் கணவனின்றி ஒரு தமிழ்ப் பெண் புலம் பெயர் நாட்டில் வாழ முடியாதளவுக்கு தமிழின தராதரம் இருக்கிறதற்கு பல சான்றுகள் தரமுடியும்.
 
ஒரு தமிழ்ப் பெண் விவாகரத்து செய்துவிட்டால் நான் தனியே இருக்கிறேன் உனக்கு புருசனாக வரவா என்று கேட்டு போன் செய்யும் முகம் தெரியாத தமிழர் பட்டியல் நீண்டு செல்வதாக தொலைபேசி ஒற்றுக்கேட்டல் கணிப்பு கூறுகிறது.
 
ஆபிரிக்க நாடுகளை எடுத்துக் கொண்டால் வேதனை சொல்லி மாளாது, இப்போதைய தென்னாபிரிக்க அதிபருடைய மனைவிகள் பட்டியலே அதற்கு சான்று..


இப்படியுள்ளது உலகப் பெண்கள் தினம்..

 

இன்னமும் பல உள்ளது..

 

http://www.alaikal.com/news/?p=123893

Edited by akootha

  • தொடங்கியவர்

While world celebrates Women’s day – 90,000 Tamil war widows face sexual abuse by Sri Lankan security forces

 

While the world celebrates the International Women’s Day; 90,000 Tamil war widows and their daughters are facing sexual abuse by the Sri Lankan Security forces, said Mrs. Balambihai Murugadas, Minister for Women, Children & Elderly for the Transnational Government of Tamil Eelam (TGTE).

 

According to a report by the British Foreign and Commonwealth Office on Human Rights and Democracy (May, 2012); there are up to 90,000 Tamil war widows in the North & East of Sri Lanka.


“United Nations Secretary General should take urgent steps to protect these vulnerable Tamil war widows and their daughters from facing sexual violence and rape at the hands of the Sri Lankan security forces. It is time to set up International Protection Mechanism to defend these vulnerable women. As a first step UN should send human rights monitors to be stationed in the North & East of the Island, where these widows live” said Mrs. Murugadas.

 

http://climate-connections.org/2013/03/08/while-world-celebrates-womens-day-90000-tamil-war-widows-face-sexual-abuse-by-sri-lankan-security-forces/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.