Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தைக் கைவிடக் கோரும் கலைஞர் : எழுச்சியை தடுக்க முனைவதாக மாணவர்கள் குற்றச்சாட்டு

Featured Replies

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். இக்கோரிக்கையானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்கள் தங்கள் அரசியல் நலனுக்காக ஈழமக்கள் விடயத்தைக் கையெலெடுத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள சூழ்நிலையில் அரசியல் சாராமல் ஈழத் தமிழ் மக்கள்பால் உண்மையான அக்கறையுடன் லயோலாக் கல்லூரி மாணவர்கள் தொடங்கியுள்ள போராட்டமானது அரசியல் இலாபத்துக்காக ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கும் சில அரசியல் தலைவர்களை கிலிகொள்ள வைத்துள்ளது.
 
மாணவர்களின் போராட்டமானது தங்களது அரசியல் இலாப நட்டக் கணக்குடன் முன்னெடுத்துச் செல்லும் போராட்டத்தை மழுங்கடித்து தமிழகத்தில் ஒரு நிஜ எழுச்சியை ஏற்படுத்திவிடும் என்று பயப்படும் ஒரு அரசியல் தலைவரின் அறிக்கையாகவே கலைஞரின் அறிக்கை அமைந்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அதே நேரம் கலைஞரின் அரசியல் உள்நோக்கம் கொண்ட இக்கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துள்ளனர். 2009-ம் ஆண்டு இதேபோல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் கொந்தளித்து கிளர்ந்த போது அதை அடக்கி ஒடுக்கியவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எங்களது போராட்டத்தை இப்போதும் அப்படி ஒடுக்கிவிடாதீர்கள் என்று கொந்தளித்தார் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களில் ஒருவர்.
 
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த்தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூலபிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.அந்த வரிசையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், கறுப்புச்சட்டை அணிந்து 8.3.2013 காலை 10.30 மணி அளவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒன்று திரண்டு கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையிலே ஏந்தி, ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
 
அவர்கள் அங்கே பேசும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ, அதே தீவிரத்தை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காட்டுவதாக இருக்கிறோம் என்றும், மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து 7.3.2013 காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.
 
ஈழத் தமிழர்களைக் காக்க தாய்த்தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு இளைஞர்களுடைய உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் என்பதை மாற்றிக் கொண்டு வேறு வகை அறப்போராட்டங்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பிரச்சினைக்கு மேலும் ஆக்கத்தைத் தரும் என்பதால், உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

Edited by ஊர்பூராயம்

  • தொடங்கியவர்

layolastudentshungerstrike.jpgkarunanithiyinnaadagam.jpg

  • தொடங்கியவர்
எழுச்சி கொண்ட மாணவர் சக்திக்கு ஆதிக்க சக்திகள் பதில் சொல்ல வேண்டும்!
 
மிகப் பெரிய மனிதப் பேரவலம் நிகழ்ந்தமை தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையை நோக்கி கேள்வி எழுப்பத்தயாராகியிருக்கின்ற போதிலும் சம்பவங்கள் தொடர்பிலான நேரடிச் சாட்சியங்களாக வாழும் இலட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் வாய் திறக்க முடியாத துப்பாக்கி முனைக்குள் முடங்கியுள்ளனர். ஆற்றாமை, பரிதவிப்பு, வேதனை அனைத்தையும் சுமந்து வாழும் ஈழத் தமிழ் சமூகம் தனக்கான நியாயத்தினைப் பெறுவதற்காக வாய் கூடத் திறக்க முடியாத நிலையில் ஏங்கியே வாழ்கிறது.
ஆனாலும் கூட ஈழத்தமிழனின் கண்ணீருக்காக இரத்திற்காக உலகத் தமிழினம் எழுச்சி கொண்டிருப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்திருக்கிறது. பல்லாயிரம் உயிர்க் கொடைகளுடன் முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதாகத் தெரிவித்து அப்பாவித்தமிழர்களின் உயிர்கள் இலட்சக்கணக்கில் அதிகார வர்க்கங்களால் பறித்தெடுக்கப்பட்டன. தமிழின அழிப்பின் சூத்திரதாரிகளாக இலங்கையுடன் கைகோர்த்து நின்ற பல்வேறு நாடுகளின் முகத்திரைகள் கிழிந்துவிடும் என்ற அச்ச நிலையை தற்போதையை ஜெனீவாக்களம் ஏற்படுத்தியிருக்கின்றது.
 
ஈழப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட மிக மோசனமான இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆதாரங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. குறித்த ஆதாரங்கள் தமிழ் மக்களையும் மனித உரிமையை மதிக்கின்ற மனிதாபிமானம் கொண்டவர்களையும் தட்டி எழுப்பியிருக்கின்றன. குறிப்பாக தாய் தமிழகத்தின் உணர்வின் எல்லையை போர்க்குற்ற ஆதாரங்கள் தட்டியிருக்கின்றன. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் தனி ஈழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உயிர் துறக்கவும் தமிழக உணர்வாளர்கள் தயாராகியிருக்கின்றனர்.
 
இலங்கைக்கான நெருக்கடி நேரங்களில் எல்லாம் இலங்கையைக் காப்பாற்றத் தயங்காத இந்திய மத்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தவல்ல மிகப்பெரிய சக்தியாகிய மாணவர் சக்தி களத்தில் குதித்திருக்கின்றமை ஈழத்தமிழ் மக்களுக்கு சற்று ஆறுதலையும் ஆதிக்க சக்திகளுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
 
எந்தப் பலத்தையும் தட்டிப்பார்க்கும் வல்லமை மாணவர் சக்திக்கு உள்ளது. சென்னை லயோலாக் கல்லூரி மாணவர்கள்  தொடங்கியிருக்கின்ற உண்ணாநிலைப் போராட்டத்தின் அனல், வீச்சுப்பெற்று தமிழகம் எங்கும் பரவி இந்திய மத்திய அரசினை உலுப்பிப்பார்க்கவேண்டும். இடையறாது தொடரும் தாய்த் தமிழகத்தின் மன உணர்வுகளை இனியும் அசண்டை செய்ய முடியாது என்கின்ற நிலையினை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
 
போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும். மீண்டும் மீண்டும் ஒலிக்கும் கோரிக்கைக் குரலுக்கு என்றோ ஒரு நாள் உலகம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
 
-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Edited by ஊர்பூராயம்

விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் தீவிரவாதியாகவே பார்க்கிறோம். தமிழராகப் பார்க்கவில்லை -காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி

 

 

 

# நாங்க காங்கிரஸ் காரங்களை மனுசனாகவே பார்க்கவில்லை.

 

- முகநூல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.