Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலமா சபையின் கபட நாடகத்திற்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதயகார்த்திக்:தேசிய பாவனைக்காக நுகரப்படும் பொருட்களில் ஹலால் இலட்சினையை நீக்கி ஜெம்இய்யத்துல் உலமா சபை சிறப்பான தொரு நாடகமொன்றை நாட்டில் அரங்கேற்றியுள்ளது. அத்துடன், சில பௌத்த மதகுருமார்களின் பின்னால் நின்று கொண்டு நாட்டின் மரபினை சிதைக்க முற்படும் ஜெம்இய்யத்துல் உலமா சபை தொடர்ந்தும் ஷரியா சட்டத்தினை நாட்டில் ஸ்தாபித்து நாட்டில் பிரிவினை வாதத்தினை ஏற்படுத்துகின்றது.

ஆதலால் சிங்கள பௌத்த நாடான இலங்கையின் மரபுகளையும் கலாசாரத்தினையும் பாதுகாக்கும் வகையில் ஹலால் முற்று முழுதாக நாட்டிலிருந்து விலக்கப்படவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பிரதான செயலாளர் கலபொட ஹத்தே ஞான சாரதேரர் தெரிவித்தார்.

கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜெயந்தி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ; கடந்த திங்கட்கிழமை சினமன் கிராண் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமாக நாட்டில் சிறப்பானதொரு நாடகத்தினை அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபை முன்னெடுத்திருந்தது. நாட்டின் அனைத்து மக்களையும் ஏமாற்றும் வகையில், தேசிய பாவனைக்காக பயன்படுத்தும் பொருட்களிற்கு ஹலால் சான்றிதல் வழங்கும் நடவடிக்கையினை நிறுத்துவதாக அவ் ஊடகவியலாளர் சந்திப்பில் உலமா சபை தெரிவித்திருந்தது.

அத்துடன், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களிற்கும் உள்நாட்டில் வெளிநாட்டவர்களால் நுகரப்படும் பொருட்களிற்கும் ஹலால் சான்றிதழை இலவசமாக வழங்குவதற்கு உலமாக்கள் சபை தீர்மானித்திருந்தது. அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபையின் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அவ்வமைப்பின் சில கொள்கைகளின் கீழேயே வழங்கப்பட்டுவருகிறது.

உதாரணமாக ஹலால் சான்றிதழ் வழங்கல் சட்டத்தின் 3:1:6 என்ற பிரிவில் குறித்த உற்பத்திப் பொருள் சுகாதாரத்தன்மை ஷரியா நீதியின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே ஹலால் சான்றிதழ் வழங்கப்படும். இலவசமாக ஹலால் சான்றிதழை வழங்குவதன் மூலம் நாட்டின் சட்டத்தில் ஷரியா சட்டத்தை புகுத்தும் நடவடிக்கையினை அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா சபை மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால், ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை நாட்டிலிருந்து முற்று முழுதாக நீக்கப்படவேண்டும்.

அகில இலங்கை ஜெம்இய்யத்துல் உலமா ஹலால் சான்றிதழ் மூலமாக நாட்டில் பிரிவினை வாதத்தினை ஏற்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாது தனது தவறை மறைக்க இன்று சில காவியுடையின் பின்னால் மறைந்து தமது செயற்பாடுகளை செய்ய முற்படுகிறது. இதனாலேயே அண்மையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் சில பிக்குமார்களை உலமா சபை அழைத்திருந்தது.

சிங்களவர்கள் புத்தியற்றவர்கள் என்று ஒரு போதும் உலமாக்கள் சபை நினைத்து விடக்கூடாது. தொடர்ந்தும் உலமா சபையின் கபட நாடகத்துக்கு அனுமதியளிக்கமாட்டோம்.

சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மிகுந்த கவலைக்கு உள்ளாக்கிய உலமாசபையின் இந்த நாடகத்துக்கு நாம் உடனடியாக முற்றுப்புள்ளி வைப்போம். அரசாங்கம் உடனடியாக ஹலால் சான்றிதழ் முறையை முற்றாக நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

கடந்த 5 6 வருடங்களாக நாட்டிற்கு ஒரு புற்று நோயாக காணப்பட்ட ஹலால் சான்றிதழைப் பற்றி பௌத்த மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தி அதனை நீக்குவதற்கு பொதுபலசேனா பாரிய செயற்பாட்டினை கடந்த 10 மாதங்களில் முன்னெடுத்துவந்தது. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியையேனும் நிறுத்தப்பட்டதென்றால் அந்த வெற்றி பொதுபலசேனா உட்பட பௌத்த மக்களுக்கு உரித்துடையதாகும்.

ஆனால், ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினை அகற்றும் செயற்பாட்டில் சிறிதளவேனும் பங்கு கொள்ளாத சில மத அமைப்புகளும் சில தனியார் அமைப்புகளும் இந்த வெற்றிக்கு தாமும் ஒரு காரணம் என மார்த்தட்டி கூறிக்கொள்கின்றது.

இன்னும் பொதுபலசேனா தனது வெற்றியை அடையவில்லை. நாட்டிலிருந்து வேற்று மத சட்டங்களும் வெளிநாட்டு ஆதிக்கமும் என்று விலக்கிக் கொள்கிறதோ அன்றுதான் நாம் எமது வெற்றி இலக்கை அடைந்ததாகக் கருதப்படும் எனத் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3402:2013-03-13-05-35-19&catid=54:local&Itemid=458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.