Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காட்டில் ஈழத் தமிழர்களுக்காக பொது மக்கள் போராட்டம்.

 

314937_596513350377164_696846545_n.jpg

 

(முகநூல்)

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் மாணவர்கள் போராட்டம்

 

இன்று மீண்டும் மாணவர்கள் போராட்டம் .கலெக்டர் அலுவலகம் முன்

 

 

Loyolahungerstrike

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழக மாணவர்களின் எழுச்சியைப் பார்த்து தமிழகம் நோக்கி பறக்கத் துடிக்கும் ஈழத்தமிழன் ஒருவனின் குரல் கவிதை வடிவில்

 

 

Loyolahungerstrike

தமிழக மாணவர் எழுச்சிக்குக் கவிஞர் சேரன் வாழ்த்து:
தமிழக மாணவர் எழுச்சிக்குக் கவிஞர் சேரன் வாழ்த்து: அறிவின் சுடரும் உணர்வின் தோழமையும் எழுக!!

 

https://www.facebook.com/photo.php?v=547897741899017&set=vb.156857431011847&type=2&theaterℑ=/preview.jpg" /> https://www.facebook.com/photo.php?v=547897741899017&set=vb.156857431011847&type=2&theaterℑ=/preview.jpg" />

Get Flash to see this player.

 

Edited by சகானா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவருக்கு சந்தை விரிக்கும் சரவணா ஸ்டோர்ஸ் ! இனத் துரோகத்தின் உச்சகட்டம் !

இனத் துரோகத்தின் உச்சகட்டம் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் தான் என்று சொல்ல வேண்டும். தமிழ் நாடே சிங்களவர்களுக்கு எதிராக அணிதிரண்டு நிற்கிறது . ஆனால் சரவணா அங்காடியோ சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறது . இந்தக் கடையில் பலவகையான சிங்கள பொருட்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது சரவணா நிர்வாகம். இந்த கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருட்களை வாங்க வருகிறார்கள் . அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்கள் வசதிக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது . தமிழில் கொடுத்தது போய் இப்போது சிங்களத்தில் கொடுப்பது தமிழர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது . கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் எந்த தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களை சிங்கள மொழியிலேயே அச்சடித்து சிங்கள மக்களை கவர்ந்து வருகிறது சரவணா நிர்வாகம் .

இதை பார்த்த ஒரு உணர்வாளர் , கடை நிர்வாகத்திடம் இது பற்றி கேட்டுள்ளார் . கடை நிர்வாகம், ஆமாம் ! சிங்களவர்கள் வசதிக்காக நாங்கள் இதை செய்துள்ளோம் . அவர்கள் நிறைய பேர் இங்கு வந்து போகிறார்கள் . வாடிக்கையாளர் சேவை தான் எங்களுக்கு முக்கியம் என்று வெட்கம் இல்லாமல் கூறியுள்ளனர் . தமிழர் கடையாக இருந்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை பொறுத்த மட்டில் பணம் ஒன்று தான் அவர்கள் குறிக்கோள் என்பது இப்போது தெளிவாகி உள்ளது .

வடநாட்டு ஏர்டெல் நிறுவனத்தை புறக்கணிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டின் நிறுவனமான சரவணா கடையை நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும் .

1. சரவணா நிறுவனம் சிங்கள உற்பத்தி பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் .

2. சிங்களவர்களிடம் சந்தை விரிப்பதை நிறுத்த வேண்டும் .

இதை சரவணா ஸ்டோர்ஸ் செய்ய மறுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான பரப்புரையில் நாம் ஈடு பட வேண்டும் . தேவைப்பட்டால் , அவர்கள் கடையை முற்றுகையிட வேண்டும் . அதற்கும் அவர்கள் செவி சாய்க்க வில்லை என்றால் அவர்கள் கடையை புறக்கணிப்போம் , தமிழன் திருந்தாமல் நாம் வேறு யாரையும் திருத்த முடியாது . உடனே சரவணா ஸ்டோர்ஸ் நிர்வாகத்தை கண்டிப்போம் . சிங்கள பொருட்களை அவர்கள் கடையில் இருந்து அப்புறப் படுத்துவோம். சிங்கள நுகர்வோரை இங்கு வந்து பொருட்களை வாங்குவதை தடுப்போம் . தமிழர் கடையை சிங்கள மயமாவதை நிறுத்துவோம் ! இந்த செய்தியை அத்தனை தமிழ் அமைப்புகள் , கட்சிகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்போம்

சரவணா அங்காடி புரசைவாக்கம் 044 26603777 044 26613777

 
 

299199_598168840195145_1885652709_n.jpg

 

Loyolahungerstrike

போர்

துவங்கி கடந்த ஐந்து வருடங்களாக எந்த அரசியல் கட்சியாலும் அவலங்களை தடுக்க

முடியாத சூழல். நீதி பெற்று தரமுடியாத நிலை. இதை மாற்ற நினைத்து மாணவர்கள்

தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை துவக்கியுள்ளளோம். இங்கும் வந்து

தங்களுடைய சுயைலாபத்திற்காக மாணவர்களை அரசியல் கட்சிகள் ரீதியாக பிரித்து

மீண்டும் களத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட வேண்டாம். தொலைவில்

இருந்து மாணவர்கள் கவனித்தால்தான் எல்லா கட்சிகளின் கருத்துகளையும்

உள்வாங்கி ஒரு முடிவுக்கு வர இயலும்.

--------------------------

மனிதநேயம்

உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்து ஈழத்தில் பொது

வாக்கெடுப்பு வேண்டி இந்தியாவை நிர்பந்திக்கும் வகையில் அமையும். அதற்கான

ஆதரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் அனைத்து மாநிலங்களில்

உள்ள மாணவர்களையும் அனுகி நம் தரப்பு நியாயங்களை எடுத்துரைப்போம்.

------------------------

பின்வரக்கூடிய

நாட்களில் எங்களுடைய மாணவர்கள் போராட்டம் படிப்பிற்கும் பொது அமைதிக்கும்

பங்கம் விலைவிக்காத வகையில் அதே சமயம் உறுதியான நம்பிக்கையுடன் அனைத்து

மனிதநேயம் உள்ளவர்களையும் திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அறவழியில்

தொடர்வோம்.

---------------------------

அரசியல் வாதிகளே !

மாணவர்கள் இணைந்து எல்லா பொதுப் பிரச்சனைகளுக்கும் பொது மேடை அமைத்து

தருகிறோம். அதில் வந்து உங்களுடைய வாதங்களையும் எதிர் வாதங்களை

முன்வையுங்கள். அதில் எங்களுக்கு எது சிறந்ததென்று படுகிறதோ அதை நாங்கள்

பொதுமக்களிடம் கொண்டு சேர்கிறோம். மாணவர்களை மாணவர்களாகவே இயங்க

விடுங்கள்..

 

-முகநூல்-

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சுப்பிரமணியசுவாமி உருவ பொம்மையை எரித்தனர்!!! 25/03/2013

57805359819868352549482.jpg

 

Edited by சகானா

தமிழக மாணவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. இதனை வடமாநில நண்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்... ஈழத்தின் மேல் பற்றுகொண்டு நமக்கு மொழிப்பெயர்த்து உதவிய நமது பீகார் நண்பர் திரு. ரஞ்சித் ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நன்றி!!!

 

तमिलनाडु के सभी कालेजों के छात्रों के संघ की मांग 9 बिंदुतमिल ईलम के लिबरेशन के लिए
छात्रों की द्वारा आगे रखा मांग

1.हम दृढ़ता से अमेरिका मसौदा संकल्प की निंदा करते हैं. संयुक्त राष्ट्र मानवाधिकार आयोग (UNHRC) में इसे पारित न करें

2.क्या इलान्गाई [श्रीलंका] में हुई केवल युद्ध अपराध या का उल्लंघन नहीं है मानव अधिकार, लेकिन सुनियोजित नरसंहार

3.अंतरराष्ट्रीय जांच और जनमत संग्रह केवल समाधान के तमिलों के लिए कर रहे हैं। भारत सरकार के इंटरनेशनल में लाने के लिए एक संकल्प का प्रस्ताव करना चाहिए जांच और स्वतंत्र तमिल ईलम बनाने पर एक जनमत संग्रह का संचालन करने के लिए

4.एक प्रस्ताव के उप उच्चायोग सिंगला अंधराष्ट्रीवादी को निकालने के लिए बनाया जाना चाहिए तमिल मिट्टी से भारत गंभीर होना चाहिए इलान्गाई [श्रीलंका] के साथ सभी राजनयिक संबंधों के लिए.

5.भारत सरकार, तमिलनाडु राज्य सरकार के अनुरोध को स्वीकार करके, Ilankai [श्रीलंका] पर आर्थिक प्रतिबंध लागू करना चाहिए.

6.तमिलनाडु राज्य सरकार की ओर से, एक विदेशी संबंधों विभाग वैश्विक तमिलों की सुरक्षा सुनिश्चित करने के लिए बनाया जाना चाहिए।

7.कोई भी एशियाई देश में एक भी सदस्य [अंतरराष्ट्रीय] जांच में सामील नहीं होना चाहिए

8.तमिलनाडु मछुआरों की हत्या तत्काल रोका जाना चाहिए।

9.यदि भारत सरकार समाधान तमिल ईलम के सवाल करने के लिए नहीं मिल रहा है तोतमिलों, हम किसी भी तरह की करों टैक्स तमिलनाडु से नहीं चुकाएगे. हम समस्त छात्र सक्रिय होगा इस अभियान में संलग्न हौने के लिए .

धन्यवाद.

 

(முகநூல்)
 

பி.கு: ஹிந்தி தெரிந்தவர்கள் யாராவது இது சரியாக இருக்கிறதா என்று வாசித்து சொல்லுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.. இதனை வடமாநில நண்பர்களிடம் கொண்டு செல்ல வேண்டுகிறோம்... ஈழத்தின் மேல் பற்றுகொண்டு நமக்கு மொழிப்பெயர்த்து உதவிய நமது பீகார் நண்பர் திரு. ரஞ்சித் ஸ்ரீவத்சவா அவர்களுக்கு நன்றி!!!

 

तमिलनाडु के सभी कालेजों के छात्रों के संघ की मांग 9 बिंदुतमिल ईलम के लिबरेशन के लिए

छात्रों की द्वारा आगे रखा मांग

1.हम दृढ़ता से अमेरिका मसौदा संकल्प की निंदा करते हैं. संयुक्त राष्ट्र मानवाधिकार आयोग (UNHRC) में इसे पारित न करें

2.क्या इलान्गाई [श्रीलंका] में हुई केवल युद्ध अपराध या का उल्लंघन नहीं है मानव अधिकार, लेकिन सुनियोजित नरसंहार

3.अंतरराष्ट्रीय जांच और जनमत संग्रह केवल समाधान के तमिलों के लिए कर रहे हैं। भारत सरकार के इंटरनेशनल में लाने के लिए एक संकल्प का प्रस्ताव करना चाहिए जांच और स्वतंत्र तमिल ईलम बनाने पर एक जनमत संग्रह का संचालन करने के लिए

4.एक प्रस्ताव के उप उच्चायोग सिंगला अंधराष्ट्रीवादी को निकालने के लिए बनाया जाना चाहिए तमिल मिट्टी से भारत गंभीर होना चाहिए इलान्गाई [श्रीलंका] के साथ सभी राजनयिक संबंधों के लिए.

5.भारत सरकार, तमिलनाडु राज्य सरकार के अनुरोध को स्वीकार करके, Ilankai [श्रीलंका] पर आर्थिक प्रतिबंध लागू करना चाहिए.

6.तमिलनाडु राज्य सरकार की ओर से, एक विदेशी संबंधों विभाग वैश्विक तमिलों की सुरक्षा सुनिश्चित करने के लिए बनाया जाना चाहिए।

7.कोई भी एशियाई देश में एक भी सदस्य [अंतरराष्ट्रीय] जांच में सामील नहीं होना चाहिए

8.तमिलनाडु मछुआरों की हत्या तत्काल रोका जाना चाहिए।

9.यदि भारत सरकार समाधान तमिल ईलम के सवाल करने के लिए नहीं मिल रहा है तोतमिलों, हम किसी भी तरह की करों टैक्स तमिलनाडु से नहीं चुकाएगे. हम समस्त छात्र सक्रिय होगा इस अभियान में संलग्न हौने के लिए .

धन्यवाद.

 

(முகநூல்)

 

பி.கு: ஹிந்தி தெரிந்தவர்கள் யாராவது இது சரியாக இருக்கிறதா என்று வாசித்து சொல்லுங்கள். :D

 

தொழிற்சங்க கோரிக்கைகளை தமிழீழ விடுதலை Bindutmil 9 அனைத்து கல்லூரி மாணவர்கள்
மாணவர்கள் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
 
1. நாம் கடுமையாக அமெரிக்க தீர்மானத்தை கண்டனம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் (UNHRC) அதை கடக்க வேண்டாம்
 
2. Ilangai [இலங்கை] என்பது ஒரு போர் குற்றம் அல்லது மனித உரிமைகள் மீறல், ஆனால் திட்டமிட்ட இனப்படுகொலை மட்டும் தான்
 
3. சர்வதேச மீளாய்வு மற்றும் வாக்கெடுப்பு தமிழர்களுக்கு ஒரே தீர்வு இருக்கும். அரசாங்கத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த சர்வதேச மீளாய்வு மற்றும் சுதந்திர தமிழீழ கொண்டு ஒரு தீர்மானம் முன்மொழிய வேண்டும்
 
4. ஒரு திட்டம் பேரினவாத Singla பிரதி உயர் இந்தியா தமிழ் மண்ணின் ஆணையம் இருக்க வேண்டும் தீவிர Ilangai [இலங்கை] அனைத்து இராஜதந்திர உறவுகளையும் உடன். நீக்க வேண்டும்
 
5. இந்தியா, தமிழ்நாடு மாநில அரசு கோரிக்கை இணைவதற்கு, Ilankai [இலங்கை] பொருளாதார தடைகளை விண்ணப்பிக்க வேண்டும்.
 
6. தமிழ்நாடு மாநில அரசாங்கம், வெளிநாட்டு உறவுகள் துறை உலக தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
 
7. கூட இல்லை மற்ற ஆசிய நாடு, [சர்வதேச] உறுப்பினராக விசாரணை சேர்ந்து கூடாது
 
8. கொல்லும் தமிழ்நாடு மீனவர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
 
9. இந்திய அரசாங்கம் தமிழீழ Totmilon என்ற கேள்விக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை எனில், நாம், வரி எந்த விதமான வரி Chukaage தமிழ்நாடு இல்லை. இந்த பிரச்சாரத்தில் நாம் தீவிரமாக அனைத்து மாணவர்கள் Hune செய்ய ஈடுபட வேண்டும்.
 
நன்றி.
 

தமிழக மாணவர்களின் கோரிக்கை தெலுங்கில்...  இதை உங்கள் தெலுங்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

తామిలనాడు మద్డదు ప్రకటిస్తుంది తమిళుల స్వతత్త్రం కొరకు
తమిళనాడు విద్యార్ధుల తొమ్మిది డిమాండ్లు
విద్యార్థుల డిమాండ్లు
౧) అమెరికా ప్రతిపాదించిన స్పష్టత డ్రాఫ్ట్ ని తీవ్రంగా కండ్డిస్తున్నాం. దాన్న సంయుక్త రాజ్య మానవ హక్కుల కమిటీ లో పాస్ చేయకూడదు.
౨) శ్రీలంక లో జరిగినది యుద్ధం లో బాగామో లేక మానవ హక్కుల ఉల్లనగానో కాదు ప్రణాళిక బాద్దమయిన ప్రజల ముక్కుమడి వధ.
౩) ప్రపంచ దేశాలు అన్వేషణ చేసి శాసనము ప్రవేశపెట్టాలి. భారత ప్రబుత్వం కూడా అన్వేషణ జరిపీ తమిళుల స్వతంత్రం కోరకు ఒక శాసనము ప్రవేశపెట్టాలి.
౪) భారత ప్రబుత్వం ఒక శాసనం ప్రవేశపెట్టి రాష్ట్ర సింహళ చువినిస్టిక్ డిప్యూటీ హై కమిషన్ ని వెంటనే తమిళనాడు నుండి తీసివేయాలి. తమిళనాడు ప్రబుత్వం తమిళుల తో సత్సమబందాలు కొనసాగించాలి
౪) భారత ప్రబుత్వం, తమిళనాడు ప్రబుత్వం యొక్క మర్యాదని మన్నించి లంకేయులతో ఆర్ధిక సత్సమబంధాలని కొనసగించాలి
౬)తమిళనాడు ప్రబుత్వం యొక్క మర్యాదని మన్నించి విదేశీ వ్యవహారల శాకని పెట్టి ప్రపంచ తమిళులకి రక్షనని కల్పించాలి
౭)ఏ ఒక్క ఆసియా దేశము ఈ అన్వేషణ కమిటీ లో బాగము కాకూడదు
౮)తమిళనాడు మత్స్యకారుల ఊచకొథని వెంటనే ఆపివేయాలి
౧౦) భారత ప్రబుత్వం ఈజహం తమిళుల ప్రశ్నకి పరిష్కారం చెప్పని యెడల, తమిళనాడు నుండి పన్ను నిరాకరణ జరపబడుతుంది, మా విద్యార్థులంత ఈ ఉద్యమంలో బాగామవుతము. దన్యవాదములు.

 

 

- துரை தமிழ்ச்செல்வன் -

 

(முகநூல்)
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள், ஐயா சாமி நீங்க யாரும் எமக்காக எம்முடன் சேர்ந்து போராடவோ புரட்சிசெய்யவோ வேண்டாம், நீங்கள் உங்கள் நலனை மட்டும் பார்த்து ஒதுங்கியே இருங்கள், அது உங்கள் தனி மனித சுதந்திரம், உங்களை போராடச்சொல்லி கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை, உங்கள் படங்களில் என்ன கருமத்தயாவது நடித்துவிட்டு போங்கள், எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்கள் எமக்காக போராடாததால் உங்கள் படம் ஒன்றும் ஓடாமல் முடங்கிப்போகாது, படம் நன்றாயிருந்தால் பழகிப்போன பொழுதுபோக்காய் நாம்கூட பார்க்கத்தான் போகிறோம், தொடர்ந்தும் உங்களை கோடீஸ்வரராய் வாழவைப்போம், ஆனால் ஒன்றுமட்டும் சொல்கிறேன் இனிமேல் உங்கள் படங்களில் ஏழைக்கிழவியையும் ஏதுமற்ற சிறுவர்களையும் அணைத்து காக்க வந்த கடவுள் ஆவது, உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையென்று கூச்சலிடுவது, நாலுபேரை சுத்தி நிற்கவைத்து சுண்டங்காய் பயல்கலான உங்களைப்போய் தமிழர்க்கு சுபீட்சம் தரவந்த வீர தீர சூரர்களாய் நாக்கூசாமல் பாராடுவது, 26 மணி நேரமும் [நேரம் போதாமல் அடுத்த நாளில் 2 மணித்தியாலம் கடன் வாங்கி] மக்கள் மக்கள் மக்கள் என்று மக்களுக்காக வியர்வையும் ரத்தமும் சிந்துவது, பச்சைத்தமிழன் சிவப்புத்தமிழன் என்று நீட்டி முழக்கி வசனம் பேசுவது, என்றெல்லாம் இனிமேல் எவனாவது இந்த மாதிரி மாதிரி தமிழருக்காக ம........ புடுங்குற மகாஉத்தமன் வேடம்போட்டால் திரை கிழியும் சொல்லிவிட்டேன். பாலாபிஷேகமும் பூமாலை தீப ஆராதனை மட்டும் கண்ட உங்கள் வானுயர்ந்த வண்ணப்படங்களுக்கு செருப்பே மாலையாகும், சேற்று எருமைச்சாணியும் சிலவேளை உதவக்கூடும், பார்த்து பக்குவமாய் நடந்து கொள்ளுங்கள், இந்த மாணவர் போராட்டம் தமிழனின் உரிமைக்குரலாய் மட்டுமல்ல இவ்வளவு காலமும் தமிழனை எழவிடாமல் கட்டிவைத்திருந்த பல மாயை விலங்குகளை தகர்த்தெறியத்தொடங்கியிருக்கிறது, இன்னும் உடைத்தெறியும் பல இழிவுகளை..............



Loyolahungerstrike

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு
ஊடகவியலாளர் சந்திப்பு - அறிக்கை

சென்னை,
25-03-2013

... அன்புடைய ஊடக நண்பர்களுக்கு,


2009ல் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழீழத்தில் நடத்திய
இனப்படுகொலையின் கோரக்காட்சிகளைக் கண்டு உலக மக்கள் அனைவரும் மௌனம் காக்க
தாய்த் தமிழகத்தில் இருக்குக்கூடிய மாணவர்களாகிய நாங்கள் தமிழினத்திற்கு
கிடைக்க வேண்டிய நீதியைத் தேடி இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க எங்களை
நா...ங்களே வருத்திக்கொண்டு அறவழியில் உண்ணாநிலை போராட்டத்தை துவங்கினோம்.


குறிப்பாக நாங்கள் வைத்த கோரிக்கைகள் 8. அதில் முக்கியமானதும்
முதன்மையானதுமான அமெரிக்கா கொண்டு வரும் அயோக்கியத் தீர்மானத்தை
புறக்கணித்து இந்தியாவே தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க அங்கு பொது
வாக்கெடுப்பு என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழீழ விடுதலைக்கான
மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் போராட்டத்தை துவக்கினோம்.


ஆனால் ஐந்தாவது நாள் முதல் சில கல்லூரி மாணவர்கள் இதே பெயரை பயன்படுத்தி
ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி உண்ணாநிலை போராட்டத்தை
தொடங்கியது வருந்தத்தக்க செயல். நாங்கள் யாரொருவரின் தலைமையில் இயங்காமல்
இந்த 8 கோரிக்கைகளையே மையமாக வைத்து போராட்டத்தை துவங்கினோம். கிட்டத்தட்ட
15 நாட்களுக்கு மேல் மாணாவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கின்றனர்.

பொதுவில் பகிர்ந்துகொள்ளமுடியாத சில
காரணங்களால் எங்கள் போராட்டம் 4வது நாளிலேயே முடிவுக்கு வந்தது.
இருப்பினும் தமிழகத்தில் உள்ள மற்ற மாணவர்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து
நடத்தி தமிழகம் முழுக்க விழிப்புணர்வும், தமிழர்களுக்கு உணர்வையும்
ஊட்டியுள்ளனர்.

சென்னையில் எங்கள் உண்ணாநிலை போராட்டத்தை
முடித்துக்கொண்டு மாணவர்களாகிய நாங்கள் தமிழகம் முழுக்க பயனித்து
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்து போராட்ட களத்தில் உடனிருந்து
அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டோம். இதுவரையில் 21 மாவட்டங்களில்
உள்ள போராட்ட குழுவை சந்தித்துள்ளோம். எங்களில் சிலர் இன்னும் பல்வேறு
மாவட்டங்களுக்கு பயனித்து கல்லூரி ஒருங்கினைப்பளர்களை சந்தித்து
வருகின்றனர்.

சென்னையில் போராட்டங்கள் சிறப்பாக நடந்தேரியது.
அதைவிட திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, கோவை
மாவட்டங்களில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக நடந்த
போராட்டங்கள் நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்த மாணவர் போராட்டம் ஏதோ
லயோலா கல்லூரி மாணவர்கள் துவங்கியதால் அவர்களுக்கே சொந்தமானது அல்ல. மாறாக
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணாவர்களும் இந்த போராட்டத்தை வழிநடத்தி
செல்ல உரிமை உண்டு. ஆனால் தயவு செய்து தனிப்பட்ட கட்சியின் கொள்கைகளுள்
நாட்டம் உடையவர்கள் இந்த மாணவர்களின் போராட்டத்தை விட்டுவிடுங்கள்.
மாணவர்கள் போராட்டத்தை இவர்களைப் போன்றவர்கள் வழிநடத்தினால் அவர்களின்
சொந்த கட்சியின் சித்தாந்தத்தை மற்ற மாணவர்களிடம் மறைமுகமாக
திணிக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

போர் துவங்கி
கடந்த ஐந்து வருடங்களாக எந்த அரசியல் கட்சியாலும் அவலங்களை தடுக்க முடியாத
சூழல். நீதி பெற்று தரமுடியாத நிலை. இதை மாற்ற நினைத்து மாணவர்கள்
தன்னெழுச்சியாக இந்த போராட்டத்தை துவக்கியுள்ளளோம். இங்கும் வந்து
தங்களுடைய சுயைலாபத்திற்காக மாணவர்களை அரசியல் கட்சிகள் ரீதியாக பிரித்து
மீண்டும் களத்தை பழைய நிலைக்கு கொண்டு சென்றுவிட வேண்டாம். தொலைவில்
இருந்து மாணவர்கள் கவனித்தால்தான் எல்லா கட்சிகளின் கருத்துகளையும்
உள்வாங்கி ஒரு முடிவுக்கு வர இயலும்.

மாணவர்கள் இணைந்து எல்லா
பொதுப் பிரச்சனைகளுக்கும் பொது மேடை அமைத்து தருகிறோம். அதில் வந்து
உங்களுடைய வாதங்களையும் எதிர் வாதங்களை முன்வையுங்கள். அதில் எங்களுக்கு
எது சிறந்ததென்று படுகிறதோ அதை நாங்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்கிறோம்.
மாணவர்களை மாணவர்களாகவே இயங்க விடுங்கள்..

அய்நாவில் இந்த முறை
தமிழர்களுக்கு பயனளிக்காத, எதிர்மறையான தீர்மானத்தை கொண்டுவந்த நாடு
அமெரிக்கா என்ற வகையில்தான் அமெரிக்காவை எதிர்த்தோம். எங்களது அடுத்தக்கட்ட
போராட்டம் என்பது மனிதநேயம் உள்ள தமிழர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ்
இணைத்து ஈழத்தில் பொது வாக்கெடுப்பு வேண்டி இந்தியாவை நிர்பந்திக்கும்
வகையில் அமையும். அதற்கான ஆதரவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில
கட்சிகளையும் அனைத்து மாநிலங்களில் உள்ள மாணவர்களையும் அனுகி நம் தரப்பு
நியாயங்களை எடுத்துரைப்போம்.

தமிழர்களாகிய நம் நியாயமான
கோரிக்கைகளை இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி அதில்
நிறைவேற்ற வேண்டிய வகையில் போராட்டம் அமையும்.

போராட்டக்களத்தில்
எங்களுக்கு ஆதரவாக இருந்த சில அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும்
மற்றும் தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உறுதியான
முறையில் அறவழியில் தொடர்ந்த இந்த மாணவர் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு
கொடுத்த காவல் துறையை இவ்வேளையில் நினைத்து பார்க்கின்றோம். எங்களுடைய
மாணாவர் போராட்டம் பெரும் எழுச்சி பெற உறுதுணையாக இருந்த ஜனநாயகத்தின்
நான்காம் தூணான ஊடகங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். இனி வரும்
நாட்களிலும் இது தொடரும் என்று நம்பிக்கை கொள்கிறோம். சமூக அவசியத்துக்காக
துவங்கப்பட்டுள்ள இந்த மாணவர்களின் இயக்கத்துக்கு கல்லூரிகள் ஒத்துழைப்பு
நல்க வேண்டும் என்று பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


பின்வரக்கூடிய நாட்களில் எங்களுடைய மாணவர்கள் போராட்டம் படிப்பிற்கும் பொது
அமைதிக்கும் பங்கம் விலைவிக்காத வகையில் அதே சமயம் உறுதியான
நம்பிக்கையுடன் அனைத்து மனிதநேயம் உள்ளவர்களையும்
திரும்பிப்பார்க்கவைக்கும் வகையில் அறவழியில் தொடர்வோம்.

இதற்காக தமிழகம் முழுக்க பயணித்து வரும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மாணவர்கள் கட்டமைப்பு ஒரு இறுதியான வடிவம் பெறும்.


ஈழத்தமிழர்களுக்காக இன்னுயிர் ஈந்த விக்ரம் மற்றும் கெளதமி அவர்களின்
குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த
மாணவர்களின் போராட்டமானது வெற்றிகரமாக பயணித்துக்கொண்டுள்ளது. நாம் நமது
இலக்கை நிச்சயமாக சென்றடைவோம். யாரும் இது போன்ற உயிர் மாய்த்துக் கொள்ளும்
காரியங்களில் ஈடுபடவேண்டாம் என மாணவர் கூட்டமைப்பு சார்பாக வேண்டிக்
கொள்கிறோம்.

அரசியலில் அனுபவமுள்ள நடுநிலையான பொதுவாழ்வில்
எளிமையாக வாழும் தோழர் நல்லக்கண்ணு ஐயா மற்றும் நெடுமாறன் ஐயா போன்றவர்களை
மாணாவர்களாகிய எங்களுக்கு ஆலோசனை வழங்க அழைப்புவிடுக்கப்போகிறோம்.

நன்றி

மாநில வழிநடத்தும் குழு சார்பாக
ஜோ பிரிட்டோ 86789 62611
579121_598141920197837_1984693543_n.jpg
 
-------முகநூலிலிருந்து---------------------

 

தமிழக போராட்ட தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள loyolahungerstrike இன் இந்த இணைப்பை அனைவரும் like செய்யுங்கள். 

http://www.facebook.com/tamilnaduhungerstrike

 

இப்பொழுது 28,007 likes ஐ பெற்றுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

579891_433742246712362_1354993371_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களை அனுமதிக்கக் கூடாது: சென்னை போலீசாரிடம் மாணவர்கள் மனு

தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை எப்போதும் சேர்க்கக் கூடாது. இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இருக்கும் இலங்கை வீரர்களை நீக்க வேண்டும். மும்பையில் குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தான் அணியை எப்படி ஐபிஎல் அணியில் இருந்து நீக்கினார்களோ, அதுபோல் இலங்கையையும் ஐபிஎல் அணியில் இருந்து நீக்க வேண்டும். இதுசம்மந்தமாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் இலங்கை அணியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1823_551908108164741_2136725776_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம்;

மத்திய இந்திய என்ற பெயர்களை அழிப்போம்: 

மாணவர் போராட்டக்குழு 

 

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு சார்பில் மாணவி திவ்யா, இளையராஜா ஆகியோர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். 

 

அப்போது அவர்கள்,  ‘’எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக நாளை முதல் மத்திய அரசின் செயல்பாட்டை முடக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு பூட்டு போடுவோம். அதே நேரத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். 

 

வருகிற 31-ந்தேதி போராட்ட விளக்க கருத்தரங்கம் நடைபெற உள்ளது. எங்களை பொறுத்தவரை அமெரிக்காவோ, ஐ.நா.வோ முதன்மை இல்லை. இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. 

இலங்கையில் தமிழீழம் அமைவதற்கும், அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கும் இந்தியா தீர்மானத்தை முன் எடுத்து சென்று வலியுறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினை மட்டுமல்லாமல் முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பிரச்சினைகளில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. 

தமிழர்களின் பிரச்சினை தனித்த பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இதே போக்கு தொடர்ந்தால் தனி தமிழ்நாடு என்ற கோரிக்கையும் எழலாம். அதை தவிர்க்க முடியாது. எங்கள் போராட்ட அமைப்பில் 38 கல்லூரிகளைச் சேர்ந்த 66 பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அவர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஈழத்துக்காக ஒரே அடையாளத்துடன் திரண்டுள்ளோம். 

 

எங்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்காக கல்லூரிகளை மூடியதை கண்டிக்கிறோம். கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும். படிப்புக்கும், கல்லூரிக்கும் இடையூறு இல்லாத வகையில் எங்கள் போராட்டத்தை தொடருவோம். 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் விளையாட்டு மைதானத்தை முற்றுகை யிடுவோம். மத்திய அரசு அலுவலக பெயர் பலகைகளில் மத்திய மற்றும் இந்திய என்ற எழுத்துக்களை தார்பூசி  அழிப்போம். வருகிற பாராளுமுன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேசிய கட்சிகளை ஆதரிக்க மாட்டோம்’’ என்று கூறினார்கள்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95311

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

541327_426838490739246_804206803_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களே ,தமிழர்களின் முகநூல் கணக்குகளை முடக்க சதி ,,

முகநூல் பதிவுகளில் இருந்து நேரடியாக எந்த இணைய பக்கத்திற்கும் web link செல்ல வேண்டாம்

உடனடியாக உங்கள் கணக்கு வைரசால் தாக்கப்படும்,

அப்படி அந்த லிங்க் வேறு எதாவது நமது செய்திகளாக இருக்குமோ என்று அறிந்தால் அந்த லிங்கில் மவுசை வைத்து வலது பக்க மெனுவில் இருக்கும் copy link கொடுத்து இன்னொரு browser engine திறந்து அதில் அந்த லிங்கை paste செய்து திறந்து பார்க்கவும்

browser engine என்பது வேறு browser அதாவது முகநூல் கணக்கு mozilla ல் இருந்தால் chrome or other browser ல் copy paste link ஐ திறக்க வேண்டும்  

Loyolahungerstrike

******************************************************************************

மாணவர்களே, குஜராத்திலிருந்து இன்னொரு பாடம்

சுப. உதயகுமாரன்

அசாம் போல குஜராத்திலும் ஒரு மாணவர் அற்புதம் நிகழ்ந்தது. 1973-ம் ஆண்டு யூலை மாதம் சிமன்பாய் பட்டேல் அங்கே முதல்வரானார். ஊழல் குற்றச்சாட்டுக்களும், விலைவாசி உயர்வும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கின. டிசம்பர் மாதம் அகமதாபாத் நகரிலுள்ள ஒரு பொறியியற் கல்லூரி மாணவர்கள் விடுதி உணவுக் கட்டண உயர்வை எதிர்த்து வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். இதேப் பிரச்சினைக்காக இன்னொரு கல்லூரி மானவர்களும் 1974 சனவரி மாதம் போராட்டத்தில் குதிக்கவே, காவல்துறையோடு மோதல் ஏற்பட்டது. இதனால் குஜராத் கல்லூரி மாணவர்கள் அனைவரும் களத்தில் குதித்தனர். உணவு, கல்வி சம்பந்தமான இந்தப் போராட்டத்துக்கு மத்திய தரக் குடும்பங்களும், தொழிலாளர்களும், வழக்கறிஞர்களும், ஆசிரியர்களும் ஆதரவு அளித்தனர். “நவ் நிர்மாண் யுவக் சமிதி” எனும் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

போராளிகள் சிமன்பாய் பட்டேல் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர். 1974 சனவரி 10 அன்று அகமதாபாத், வதோதரா போன்ற இடங்களில் வன்முறை வெடித்தது. சனவரி 25 அன்று நடந்த மாநில அளவிலான ஒரு போராட்டத்தில் மக்களும், காவல்துறையும் 33 இடங்களில் மோதிக் கொண்டனர்; அரசு 44 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. 1974 சனவரி 28 அன்று இராணுவம் வரவழைக்கப்பட்டது. அரசியல் அழுத்தங்களால் பிரதமர் இந்திரா காந்தி சிமன்பாய் பட்டேலை ராஜினாமா செய்யச் சொன்னார். பிப்ரவரி 9 அன்று அவர் ராஜினாமா செய்ய, சட்டமன்றம் தற்காலிகமாக முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் நிர்வாகத்துக்குள் குஜராத் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் 167 சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேரை ராஜினாமா செய்ய வைத்தார்கள். மார்ச் மாதம் 12 அன்று காங்கிரசு (ஓ) கட்சி தலைவர் மொரார்ஜி தேசாய் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்க, நான்கே நாட்களில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய் மீண்டும் 1975 ஏப்ரல் மாதம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கி மறு தேர்தல் நடத்தக் கோரினார். 1975 யூன் 10 அன்று தேர்தல் நடத்தப்பட்டு, 12 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வரலாற்று சிறப்பு வாய்ந்த அந்த நாளில்தான் இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தியாவில் சனநாயகம் முடக்கப்பட, நெருக்கடிநிலை (Emergency) கொண்டுவரப்படக் காரணமாய் அமைந்தது இந்தத் தீர்ப்பு.

குஜராத் தேர்தலில் காங்கிரசு தோற்றது; காங்கிரசு (ஓ), ஜன்சங்க், லோக் தள் போன்ற கட்சிகள் சேர்ந்து “ஜனதா மோர்ச்சா” எனும் ஒரு கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் முழுப் புரட்சிக்கு பலம் சேர்த்த இந்த “நவ் நிர்மாண்” போராட்டமும், அதனால் வந்த “ஜனதா மோர்ச்சா” அரசும் 1977-ஆம் ஆண்டு இந்தியாவில் ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவும் முன்னுதாரணமாய் அமைந்தன.

“நவ் நிர்மாண்” போராட்டத்திலிருந்து நீங்கள் படிக்க வேண்டிய பாடங்கள்: வன்முறையைத் தவிர்க்க வேண்டும்; உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்; மாநிலத்தின் அரசியல் சூழலை உள்வாங்கி, அனுசரணையானக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும்; மக்கள் உணர்வுகளைப் புரிந்து, அவர்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை உங்களோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

 

Loyolahungerstrike

******************************************************************************************************************************************************************

Suthan Arya//

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் ஆட அனுமதி மறுப்பு, வட இந்திய ஊடகங்களிலும் வட இந்தியர்களின் பேஸ்புக் டிவிட்டர் பக்கங்களில் விமர்சனத்துக்குள்ளாகிய தமிழர்கள்.

சென்னை கிங்ஸ் அணி இலங்கை வீரர்களை வைத்து ஆடப்போவதில்லை என்றும் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் இலங்கை வீரர்கள் சென்னயில் ஆடுவதற்கு தெரிவித்த எதிர்ப்பையும் தொடர்ந்து வட இந்திய ஊடகங்களும், வட இந்திய ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் களில் தமிழர்கள் மேல் கடும் வெறுப்பை உமிழ்ந்துள்ளார்கள்.

தமிழர்களின் இந்த எதிர்ப்பை பொலிட்டிக்கல் ரேசிசம் என்றும் ரீஜினல் சாவனிசம் என்றும் விமர்சிக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமாம், விளையாட்டில் அரசியலை கலக்க கூடாதாம் என்றெல்லாம் இலங்கைக்கு வக்காலத்து வாங்கி வேதம் ஓதும் இவர்கள் தான் பாக்கிஸ்தான் வீரர்களை ஐபிஎல் லில் சேர்க்காமலும் பாக்கிஸ்தானோடு பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமலும் தேசபக்தியை காண்பிப்பவர்கள்.

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

 

Loyolahungerstrike

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு உதவி செய்த ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் 29 மாணவர்கள் கைது.

சட்டக்கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 29 பேர், ஏர்டெல் நிறுவன பேனர்களை கல்வீசி கிழித்து பின்னர் அந்நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் உள்ளே நுழைந்து, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஆறுபடை வீடு மாணவர்கள் மற்றும் கட்சி சாரா உள்ளூர் மக்களுக்கு:
(Hindi friends also should read this, so English translation will be in below )


தங்களின் விருப்பத்திற்கும்,ஆதரவிற்கும் இணங்க,.. நாளை, புதன் கிழமை,(27/3/13) நம் அருமை "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்ட நிகழ்வு,
ஆறுபடை வீடு கல்லூரி மாணவர்களின் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப மாமல்லபுரம் தபால் நிலையத்தை முற்றுகையிடும்படி முடிவு செய்யப்பட்டுள்ளது,

 

எனவே மாணவர்கள் அனைவரும் காலை 9மணிக்கு நம் கல்லூரி வாசலில் ஒன்று கூடும்படி பெருமையுடன் கூறிகொள்கிறேன், அங்கு சில வழிமுறைகள் வழங்கப்பட்டு நாம் மாமல்லபுரம் செல்ல நேரிடும்… இந்த அறவழி போராட்ட்த்திற்கு நம் நண்பர்கள் அனைவரையும் அழைக்கும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,,,

குறிப்பு:
அன்று கல்லூரி விடுமுறைதான்,
மேலும் கட்சிகளின் குறுக்கீடு அறவே இருக்கக் கூடாது,,
மேலும் விவரங்களுக்கு என் தொலைபேசி எண்-9500551181

To my hindi friends:

My dear friends pls participate in the blocking of central govt office (mamallapurm post office) on tmrw , to support tamil eezham, and to support Students Federation for Free Tamil Eelam , Pls assemble in our college at 9am., then we ll do it in a best and silent ways, frnds pls support for us, hope u all will have a heart.

for furthur details pls contact-9500551181

 

(முகநூல்: loyolahungerstrike)

மதுரையில் இன்று அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு கருத்தரங்கு நடைபெற்றது ,

கருத்தரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இரு நிமிடங்கள் இனபடுகொலைக்கு இறந்த நம் ஈழ உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .

பிறகு தமிழ் ஈழ வரலாறு ,, தற்போது வரை நடந்து வரும் தமிழ் இனபடுகொலைகள் , தனி தமிழ் ஈழம் ஏன் வேண்டும் ? பொது வாக்கெடுப்பின் அவசியம் குறித்து விளக்கவுரை தோழர் .தளபதி , தோழர் .தங்கபாண்டியன் , தோழர் .பிரபாகர் மற்றும் தோழர்.சாதிக் அவர்களால் வழங்கப்பட்டது

மேலும் போராடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகமோ காவல்துறையோ ஒடுக்க நினைத்தால் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், உடனடியாக அவர்கள் செய்ய வேண்டியவை குறித்து வழக்கறிஞர்கள் ஆலோசனை வழங்கினார்கள் .

இறுதி யுத்தம் , சேனல் 4 ஆவணம் தமிழில் ஒளிபரப்பப்பட்டது.

தோழர்.சுப.உதயகுமார் அவர்களின் சிறப்புரையுடன் ,தனி தமிழ் ஈழம் அடையும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது ,மேலும் தமிழ் மண்ணின் எந்த பிரச்சனைக்கும் தொடர்ந்து போராடுவோம் என்ற மாணவர்களின் உறுதிமொழியுடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது

 

484274_444146172338212_666077310_n.jpg

 

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறைக்​கான போராட்டமல்​ல விடுதலைக்கா​ன போராட்டம்!

 

 

 தமிழகம் முழுக்க ஈழ தமிழர்களுக்காக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது ஐ.நா தீர்மானத்திற்கு பின்னும் போராட்டங்கள் தொடர்கின்றன மாணவர்களின் எழுச்சிகரமான போராட்டத்தின் அடுத்தபடியாக சேலம் மாணவர்கள் புதிய மாணவர்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர்...சேலம் லட்சுமி அரங்கத்தில் திரண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்தாலோசனையில் ஈடுப்பட்டனர்..அடுத்தகட்ட போராட்டங்களை பற்றி மாணவர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்தனர்..

 

இறுதியாக 'தமிழ் இன சுதந்திர செங்குருதி மாணவர் அமைப்பு' அல்லது 'தமிழ் இன சுதந்திர சுவாசம் மாணவர் அமைப்பு'  என எதாவது ஒரு பெயரில் இயங்க வேண்டும் என முடிவெடுத்தனர்....அதன் ஒருங்கிணைப்பாளர் ஜகதீஷ்,கிருஷ்ணகுமார்,ரியாஸ் அகமத்,மனோஜ்,மணி  ஆகியோர் நம்மிடம் பேசியபோது 

 

"மாணவர்கள் நாங்கள் தொடர்ந்து இங்கு சேலத்தில் போராடி வருகிறோம் பல்வேறு மாணவர்களும் தனித்தும், சேர்ந்தும் பல அமைப்புகளாக பிரிந்தும் போராடி வருகின்றனர் இப்படி இருந்தால் எதிரிக்கு தான் நன்மை என்பதால் பல்வேறு மாணவ அமைப்புகளிடமும் பேசியுள்ளோம் சேலம் நாமக்கல் கல்லூரி மாணவர்களிடம் பேசியுள்ளோம் அனைவரும் தற்போது ஒரு கூட்டமைப்பாக செயல்படலாம் என முடிவெடுத்துள்ளோம் அதன் தொடக்கம் தான் இந்த புதிய மாணவர் அமைப்பு இது அமைப்பு அல்ல புதிய மாணவர் படை...

 

இது விடுமுறைக்கான போராட்டமல்ல விடுதலைக்கான போராட்டம் எங்கள் லட்சியம் தனி தமிழ் ஈழம் தான்...

 

ஐ.நா கொண்டு வந்த தீர்மானம் இலங்கைக்கு தான் சாதகமானது இந்தியாவும் இலங்கையும் சேர்ந்துதான் ஈழ தமிழர்களை கொன்றது....அமெரிக்கா இலங்கையை தன் கட்டுக்குள் கொண்டு வர தான் ஈழ  விசயத்தை பேசுகிறதே தவிர உண்மையான அக்கறையில் இல்லை..

 

இவர்கள் ஈழ தமிழர்களுக்கு எதிராக தான் உள்ளனர் எனவே இவர்களை நாங்கள் நிராகரிக்க முடிவெடுத்துள்ளோம் முதல் கட்டமாக அமெரிக்காவின் கொக்க கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை நாங்கள் குடிக்காமல் நிராகரிக்க போகிறோம் அமெரிக்கா பொருட்களை புறக்கணிப்போம் 

 

கோக் பெப்சி எங்கள் கல்லூரிகளில் விற்க விட மாட்டோம் பொது வாக்கெடுப்பு எடுக்கும் வரை இந்திய தேர்தல்களில் எங்கள் முதல் வாக்கை பதிவு செய்ய மாட்டோம்

கருப்பு பட்ஜ் அணிந்து தொடர் போராட்டம் செய்வோம் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் 

1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் வெற்றி பெற்றது போல ஈழ சுதந்திரம் பெரும் வரை சேலம் மாணவர் கூட்டமைப்பின் போராட்டங்கள் தொடரும்...

மேலும் போராடும் மாணவர்களிடம் தரக்குறைவாக நடக்கும் காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் 

எங்கள் வீடுகளுக்கு சென்று பயமுறுத்தும் காவல்துறை, கல்லூரி நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

 

மேற்கண்டு போராட்டங்கள் பற்றி நாங்கள் பேசி முடிவெடுப்போம் அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் அகிம்சை வழியில் நடக்கும்  "

என்றனர் 

 புதிய பரிமாணம் எடுத்துள்ளது மாணவர்கள் போராட்டம்....

- இளங்கோவன்

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95337

553200_438776179532913_1808552856_n.jpg

 

(முகநூல்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.