Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவுக்கு தகவல் வழங்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பது ஐ.நாவின் கடமை! நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவுக்கு தகவல் வழங்கும் இலங்கையர்களைப் பாதுகாப்பது ஐ.நாவின் கடமை! நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டு

VaakaiTV 14.03.2013 http://www.livestream.com/vaakai

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தகவல்களை வழங்கும் மக்களின் பாதுகாப்பை இலங்கையில் உறுதிப்படுத்துவது ஐக்கிய நாடுகளின் சபையினது தலையாய கடமையாக இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தெரிவித்துள்ளார்.

அரச சர்வதேச ரீதியில் உள்ள அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை நேற்று பிற்பகல் மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத்தின் 19 ஆம் இலக்க குழு அறையில் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த போதே ஆணையாளர் நவநீதம் பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தொண்டர்களுக்கும் மனித உரிமைகள் தொடர்பான சாட்சியாளர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன் போது வலியுறுத்தினர்.

பல்வேறு அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் இலங்கை தொடர்பில் பல விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய ஆணையாளர் நவநீதம்பிள்ளை ,மனித உரிமைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசு அமுலாக்கம்,மக்கள் பாதுகாப்பு,கருத்து சுதந்திரம் குறிப்பாக சாட்சிகளின் பாதுகாப்பு விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட ஆணையாளர்,இவற்றினை அடிப்படையாகக் கொண்டே தனது இலங்கை விஜயமும் தீர்மானிக்கப்படுமென்று குறிப்பிட்டார்.

இலங்கையானது ,ஏற்கனவே வழங்கிய உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்றி பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென்றும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

ஜெனீவாவிலிருந்து சிவராஜ்

முள்ளிவாய்க்காலில் கைவிட்ட நம்பியார் - மூன் போன்ற கூட்டங்கள் இந்த முறையும் கைவிட கூடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.