Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினுள் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இருவர் பலி

Featured Replies

ja_acc1.jpg

யாழ்.ஆடியபாதம் வீதி செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  யாழ்.ஆனைக்கோட்டை வடக்கினைச் சேர்ந்த க.பிரதீபன் (வயது 23), நெடுந்தீவுப் பகுதியினைச் சேர்ந்த தி.மோகனதீபன் (வயது 18) என்பவர்கள் மேற்படி விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர்.

 

 

இந்த வீதியில் உள்ள செம்மணி சுடலைக்கு அருகில் கடந்த 2 வருடங்களாக புனரமைக்கப்பட்டு வரும் பாலத்திற்குள் தவறுதலாக விழுந்ததாலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

புனரமைக்கப்படும் பாலத்திற்கு அருகில் எந்தவிதமான எச்சரிக்கைப் பலகையோ, வேகக்கட்டுப்பாட்டுத் தடையோ

அமைக்கப்படாமையே இவ் விபத்துச் சம்பவத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

 

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது.

 

இளைஞர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் யாழ்.கல்வியங்காட்டுப் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.இதன் போது எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் அற்ற முறையில் புனரமைக்கப்பட்டுவரும் செம்மணிப் பாலத்திற்குள் விழுந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் விழுந்த வேகத்தில் பாலத்தின் அத்திவாரத்தில் மோதியுள்ளது. இதனால் தலையில் அடிபட்ட இருவரும் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

 

 

ja_acc2.jpg

நேற்று அதிகாலை அப்பகுதியால் சென்றவர்கள் பாலத்திற்குள் மோட்டார் சைக்கிள் வீழ்ந்து கிடப்பதையும் அதன் அருகில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதையும் அவதானித்துள்ளனர்.

இதன் பின்னர் யாழ்.பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

 

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளையும், சடலத்தையும் மீட்டுள்ளனர். இதன் போது குறித்த பாலத்திற்குள் தேங்கி நின்ற தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இருந்து மற்று மொரு சடலத்தினையும் மீட்டுள்ளனர்.மீட்கப்பட்ட இரு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

 

http://www.thinakkural.com/index.php?option=com_content&view=article&id=3447:2013-03-14-19-13-36&catid=55:jaffna&Itemid=459

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.