Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

இங்க பாருங்கோ அவாக்கும் இவருக்கும் அதுவாம்


Recommended Posts

பதியப்பட்டது

வதந்தி நாயர்!

வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள்.

navyacheran07045501mw.jpg

மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த உடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார்.

பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக் கிடைத்து விடவில்லை.

தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்து மளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியான நிடிகையாகி விட்டார் நவ்யா.

இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யா சேரனுடன் நெருங்கிப் பழகுவதாக கோடம்பாக்கத்தில் சூடான வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன.

முதலில் சேரனுடன் நவ்யா நாயர் ஒப்பந்தமான படம் ஆடும் கூத்து. இப்படத்தை முடித்து இப்போது மாயக்கண்ணாடி என்ற படத்தில் இருவரும் ஜோடி போட்டு வருகிறார்கள்.

ஆடும் கூத்தில் நவ்யாவின் திறமையைப் பார்த்து வியந்து போன சேரன், மாயக்கண்ணாடியிலும் அவரையே ஜோடியாகப் போட்டு விட்டார். அத்தோடு யாரைப் பார்த்தாலும் நவ்யா புராணம் பாட ஆரம்பித்தார்.

இதே நிலையில் தான் நவ்யாவும் உள்ளார். சேரனை போல யாரும் உண்டோ என்று உருகி வழிகிறார்.

இவர்களின் உருகலுக்குப் பின்னால் பெரிய மறுகல் புராணம் இருப்பதாக கோலிவுட்டில் குசுகுசுக்கிறார்கள். இருவருக்கும் இடையே பெரிய நட்பு ஏற்பட்டு விட்டதாகவும், இது இரண்டு படங்களோடு நிற்கப் போவதில்லை, தொட்டுத் தொடரப் போகிறது என்கிறார்கள்.

navya0704550a6wj.jpg

முதலில் மலையாள ஹீரோ பிருத்விராஜுடன் தான் நவ்யா கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் கல்யாணம் பண்ணிக் கொள்வார்கள் என்று கூட மலையாள பத்திரிக்கைகளில் எழுதினார்கள். ஆனால் இருவரும் பிரிந்தார்கள்.

நவ்யாவை விட்டு விலகிய பின்னர் மீரா ஜாஸ்மின் பக்கம் போனார் பிருத்விராஜ். அப்புறம் காவ்யா மாதவனுடன் கோர்த்து விட்டார்கள். இப்போது காதல் நாயகி சந்தியாவுடன் சேர்த்து பேசுகிறார்கள்.

இப்போது நவ்யாவுக்கும் சேரனுக்கும் பாலம் போட்டு பலமான கிசுகிசு கோடம்பாக்கத்தில் பரப்பப்பட்டு வருகிறது.

பிருத்விராஜுடன் கிசுகிசு வந்தபோதும் அதை பெரிதாக கண்டுகொள்ளாதவர் நவ்யா. இப்போதும் கிசுகிசுக்கள் உலா வரும் நிலையில் அதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்.

http://thatstamil.oneindia.in/specials/cin...ip/navya_1.html

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
    • மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.   உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
    • கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.