Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகள் நினைவை போற்ற தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தம்மையே உயிராயுதங்களாக்கிய கரும்புலிகள் நினைவை போற்ற தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம் தமிழீழ தாயக விடுதலைக்காக உயிராயுதங்களாக தம்மை அர்ப்பணித்து வீரகாவியங்களான கரும்புலிமாவீரர்களை போற்றுகின்ற கரும்புலிகள் நாளுக்காக தாயக தேசம் உணர்வெழுச்சியுடன் தயாராகிறது.

கரும்புலி மாவீரர்கள் அனைவரையும் ஒன்று சேரப்போற்றுகின்ற நாள் யூலை 5.

தாயகம் எங்கணும் கரும்புலி மாவீர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய ஊர்திகளின் பவனிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தாயகம் எங்கணும் மஞ்சள் சிவப்புக்கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது.

கரும்புலிகளின் திருவுருவப்படங்கள் சுமந்த நினைவுப் பந்தல்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

கரும்புலி மாவீரர்களின் பெற்றோரை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகின்றன.

கிளிநொச்சி புதுமுறிப்புக் கிராமத்தில் கரும்புலி மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

புதுமுறிப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இன்று முற்பகல் 11.45 மணிக்கு நடைபெற்ற கடற்கரும்புலி கப்டன் பாமினியின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்விற்கு தியாகு தலைமை தாங்கினார்.

பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனை நிர்வாகப் பொறுப்பாளர் இனியவன் ஏற்ற, தமிழீழத் தேசியக் கொடியினை கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் அருள் ஏற்றினார்.

மாவீரரின் திருவுருவப்படத்திற்கு பாமினியின் தந்தையார் பரராஜசிங்கம் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார்.

அருள், இனியவன், புதுமுறிப்பு பாடசாலை முதல்வர் மற்றும் இளையோர் மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் நரேன் ஆகியோர் கருத்துரைகளை நிகழ்த்தினர்.

மாவீரரின் பெற்றோருக்கு கிராம பயிற்சி ஆசிரியர் இளமாறன் மாலை அணிவிக்க, கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லப் பொறுப்பாளர் தவம் பரிசுப் பொதியினைக் கையளித்து மதிப்பளித்தார்.

இந்நிகழ்வில் கிராம மக்கள் பெருமளவில் பங்குகொண்டு சிறப்பித்தனர்

-புதிஅன்ம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka steps up alert as Tigers honours suicide bombers by Amal Jayasinghe

Tue Jul 4, 9:13 AM ET

COLOMBO (AFP) - Sri Lanka stepped up already tight security as Tamil Tiger rebels prepared to celebrate "Black Tiger Day" honouring the 261 men and women who have staged suicide bombings.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) arranged Hindu religious services across the territory under their control to mark Wednesday's 19th anniversary of their first suicide bombing.

"Security is already tight, but we take note of such anniversaries because there could be an escalation (of violence) at this time," a senior police officer said Tuesday, a day after eight people were killed and dozens wounded in three mine blasts in the north.

An upsurge of bloodletting since December between the majority Sinhalese and minority Tamil population has killed more than 830 people and strained a shaky truce brokered by Norway in 2002.

"There's a bigger security deployment on the ground," the officer said.

The pro-rebel Nitharsanam.com website said the Tigers will pay homage to the bombers from their suicide squad on Wednesday.

"Events to observe the Black Tigers' day at government and public institutions in the (rebel-held) Wanni (area) have also been organised," the website said.

A man known as Captain Miller drove a truck packed with explosives into an army camp in the Jaffna peninsula 19 years ago, killing 40 soldiers and starting the cult of suicide bombings which emerged a trademark of the Tigers.

Two days after the 2004 Black Tiger anniversary, a woman suicide bomber blew herself up and killed four policemen who were about to search her at a Colombo police station.

For LTTE chief Velupillai Prabhakaran, 51, the suicide bombers are the "protective armour" of his separatist movement which started in 1972 as a rag-tag band but is now regarded as a ruthlessly efficient killing machine.

The Tigers have been blamed for a number of high-profile victims, including former Indian premier Rajiv Gandhi and Sri Lankan President Ranasinghe Premadasa.

A former US deputy secretary of State, Richard Armitage, described the LTTE as an outfit "best known for pioneering the practice of turning its sons and daughters into human bombs."

Military officials here said troops across the island's embattled areas as well as the capital were also placed on high alert amid fears there could be more violence as the guerrillas mark the anniversary.

Last month, a suicide bomber used an explosives-laden motorcycle to kill the army's deputy chief of staff, two months after a failed bid to assassinate the army chief carried out by a woman pretending to be pregnant.

The Black Sea Tigers, the seagoing arm of the suicide bombers, boasted in 2002 that the Islamic militants who bombed the USS Cole in October 2000 in the Yemeni port of Aden, killing 17 US sailors, may have been inspired by them.

Tamil rebel sources said that of the 261 suicide bombers who perished until the end of last month, 184 were from the Black Sea Tiger unit.

The Tigers say they have lost nearly 18,000 men and women since the first Tiger fatality in November 1982. Some 60,000 people have been killed in the three decades of ethnic conflict.

The European Union said around 50,000 people had been displaced as a result of the latest wave of violence and raised to 400,000 the number of people made refugees by the island's separatist conflict.

It announced Tuesday seven million euros (8.9 million dollars) in aid for the internally displaced, mainly within the island's north and east, parts of which are held by Tamil Tiger rebels.

"The money will be spent to help about 400,000 internally displaced people," said Julian Wilson, the head of the EU mission here.

He said the EU ban on the Tigers in May would not affect their humanitarian assistance to people in the embattled regions plagued by suicide bombings and other attacks.

http://news.yahoo.com/s/afp/20060704/wl_af...rs_060704131353

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் தினத்தையொட்டி இன்று

பளை, ஆழியவளையில் நிகழ்வுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கரும்புலிகளின் நினைவு தினம் இன்றாகும்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தில் பல வெற்றிகளுக்கு வித்திட்ட கரும்புலி மாவீரர் களைநினைவு கூரும் வகையில் இந்தத் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை அரச படைகள் மீது முதன்முதலாக கப்டன் மில்லர் என்ற கரும்புலி வீரர் தற்கொலைத் தாக்குதல் நடத் தினார்.

அதற்குப் பின்னர் மில்லர் உயிர் நீத்த ஜூலை மாதம் 5 ஆம் திகதியை கரும்புலிகள் தின மாக விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத் தினர்.

தரையிலும், கடலிலுமாக இதுவரை நூற் றுக் கணக்கான கரும் புலிகள் மாவீரர்களாகி யிருக்கின்றனர்.

இவர்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் தமிழர் தாயகப் பகுதிகளில் கரும் புலிகள் தினம் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்ற வெளிநாடுகளிலும் கரும்புலிகள் நினைவாக நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இம்முறையும் வன்னிப் பெரு நிலப் பரப்பு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டுப் பகுதிகள் எங்கும் கரும் புலிகள் தினத்தை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பதற்கு ஏற் பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

யாழ்.மாவட்டத்தில் கரும்புலிகள் தின விசேட நிகழ்வுகள் பளை மற்றும் ஆழிய வளையில் இன்று இடம்பெறவுள்ளன.

பளை மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவால யத்திலும் அழியவளை மகா வித்தியாலயத் திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினை வாலயத்திலும் நேற்றுக் காலை 9மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்ப மாகின. பெருமளவிலான மக்கள் எழுச்சியுடன் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இன்று காலை 9மணிக்கும் இரு நினைவால யங்களிலும் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு கள் இடம்பெறவுள்ளன.

மாலை 5மணிக்கு பளை மகாவித்தியால யம், ஆழியவளை மகாவித்தியாலயம் ஆகிய வற்றின் மைதானங்களில் கரும்புலிகளின் மாவீரர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற வுள்ளன.

சிறப்புக் காலை நிகழ்ச்சிகளுடன் இந்நிகழ்வு கள் இடம்பெறும். இரு இடங்களிலும் நடை பெறும் நிகழ்வுகளில் மக்கள் எழுச்சியுடன் பங்கேற்குமாறு அந்த அந்தப் பிரதேச ஏற் பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் நினைவுநாள்: தமிழீழத் தேசியத் தலைவர் அகவணக்கம்

தமிழீழத்தின் விடுதலைக்காக உயிராயுதங்களாக தற்கொடையாக்கிக் கொண்ட கரும்புலிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அகவணக்கம் செலுத்தினார்.

ஈகச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து தேசியத் தலைவர் அகவணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள்,தளபதிகள், போராளிகள் கலந்து கொண்டனர்

படங்களினைப்பார்க்க http://www.eelampage.com/?cn=27340

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிராயுதங்களாம் கரும்புலிகளை நெஞ்சிலேந்திய தமிழர் தாயக நிகழ்வுகள்.

விபரங்களும் படங்களும் http://www.eelampage.com/?cn=27331

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை வேள்வியில் உயிரா யுதமாகித் தம் இன்னுயிர்களை ஆகுதியாக் கிய கரும்புலிகள் தின நிகழ்வுகள் தமிழர் தாய கம் எங்கும் நேற்று உணர்வு பூர்வமாகவும் எழுச்சி பூர்வமாகவும் நடைபெற்றன.

பொதுமக்கள், விடுதலைப்புலிகளின் முக் கிய பிரமுகர்கள், போராளிகள், மாணவர்கள் எனப்பெரும் எண்ணிக்கையானோர் இந்த எழுச்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டனர் எனச் செய்திகள் தெரிவித்தன.

முதலாவது கரும்புலி மில்லர் தன்னை ஆகுதியாக்கிய நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள மில்லரின் உருவச் சிலைக்கு, கரும்புலி மில்லர் காவிய மான நேரத்தில் நேற்று மாலை மாலை அணிவிக்கப்பட்டது.

யாழ்.பல்கலையில்

கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்றுக்காலை தேசிய கொடியேற்றல், பொதுச்சுடர், நினைவுச்சுடர் ஏற்றல் மற்றும் கரும்புலிகளின் உருவப்படத் திற்கு மலர் மாலை அணிவித்தல், நினைவுரை என்பன நடைபெற்றன. போராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர் கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்.இந்துக்கல்லூரியிலும் நேற்றுக்காலை கரும்புலிகள் தினநிகழ்வுகள் உணர்வுபூர்வ மாக இடம்பெற்றன. இந்துகல்லூரியின் தமிழ் மாணவர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்தி ருந்தது.

பளையில்

பளை அரசியல் துறையினரும், யாழ்.மாவட்ட அரசியல் துறையினரும் இணைந்து செய்த கரும்புலிகள் தினநிகழ்வு நேற்று பளையில் உள்ள யாழ்.மாவட்ட அரசியல் துறை அலு வலகத்தில் நடைபெற்றது. வடமராட்சி பொது அமைப்புக்களின் ஒன்றியத்தலைவர் செவ் வந்திநாதன் தலைமையில் நடைபெற்றது. தேசியக் கொடியை கொடிகாமம் பிரதேச அரசியற்துறைப் பொறுப்பாளர் இரத்தினம் ஏற்றி வைக்க ஈகச்சுடரை அச்சுவேலி தேசிய எழுச்சிப் பேரவைச் செயலாளர் பொ.அரு ளானந்தம் ஏற்றினார் தொடர்ந்து பொதுப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றுதல், மாலை அணிவித்தல் என்பன இடம்பெற்றன.

கரும்புலி மில்லரின் உருவப்படத்திற்கான மாலையை பகீரதனும், கரும்புலி அங்கையற்கண்ணியின் உருவப்படத்திற்கு கிரியனும் மாலை அணிவித்தனர்.

மாலை நிகழ்வுகள் மாலை 5 மணி முதல் பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றன. பான்ட் வாத்தியம், அணிவகுப்பு என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதில் பொதுச் சுடரை செவ்வந்திநாதன், இரண்டு மாவீரர்களின் போராளி விடுதலை, பளைக் கோட்ட அரசியற்துறை பொறுப்பாளர் மேனன் எனப்பலரும் பொதுச்சுடர்ஏற்றினர். தேசியக் கொடியை வட போர்முனைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் அக்பர், பொதுப்படத்திற்கான ஈகச்சுடரை தென்மராட்சி அரசியற்துறைப் பொறுப்பாளர் ஈஸ்வரன் ஏற்றி மாலை அணிவித்தார்.

கரும்புலி மாவீரர்களின் பெற்றோர்கள், போராளிகள் எனப் பலரும் இவற்றில் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி

கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு, கிளி நொச்சியில் காலை நிகழ்வுகள் நேற்றுக் காலை உணர்வுபூர்வமாக நடைபெற்றன. மாலை நிகழ்வுகள் மாலை 4.30 மணியளவில் கிளி நொச்சி கந்தசாமி கோவில் ஆலய முன்றிலி லிருந்து புறப்பட்ட பிரமாண்டமான ஊர்வலத் துடன் ஆரம்பமாகின. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தை ஊர்வலம் வந்த டைந்ததும் அங்கு மண்டப நிகழ்வுகள் நடை பெற்றன.

மண்டப நிகழ்வில் பொதுச்சுடரினை அர சியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்து கரும்புலி களின் பொதுப் படத்திற்கான ஈகச்சுடரினை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநா யகம் ஏற்றிவைத்தார். மலர் மாலையை கிளி நொச்சி மாவட்ட அரசியல் துறைப்பொறுப் பாளர் கலைவாணன் அணிவித்தார். தொடர்ந்து கரும்புலி மாவீரர்களின் திருவுருவப்படங் களுக்கு பொறுப்பாளர்கள், போராளிகள், கரும் புலி மாவீரர்களின் உறவினர்கள், பெற்றோர் கள் ஈகச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தனர்.

நினைவுரைகளை புலிகளின் குரல் நிறு வனப் பொறுப்பாளர் தமிழன்பன், சிறப்புரை யினை கடற் புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் நிகழ்த்தினார். தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஊர்வலத்தில் பாண்ட் வாத்திய இசை அணி வகுப்பு மரியாதையுடன் 273 கரும்புலி மாவீ ரர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி நகர்ந்துவர மக்கள் கட்டுமானப் படையணி யினர் அணிவகுத்துவர இதனைத்தொடர்து துவிச்சக்கர வண்டி ஊர்வலம் சென்றது.

----------------------------

கரும்புலிகள் தின நிகழ்வு இடம்பெற்ற சில நிமிட நேரத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் யாழ்.இந்துவில் நேற்றுத் தேடுதல் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

மோப்ப நாய்கள் சகிதம் யாழ்.இந்துக் கல்லூரி வளாகத்தினுள் புகுந்த படையினர், தேடுதல் நடத்தியதுடன் அதிபர், ஆசிரியர் கள், மாணவர்களை அச்சுறுத்தி புகைப்படமும் எடுத்துச் சென்றுள்ளனர் என்று யாழ்.இந்துக் கல்லூரியின் தமிழ் மாணவர் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, மேற்படி ஒன்றியம் நேற்றுமாலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த பத்திரிகை அறிக்கையில்:

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் களாகிய நாங்கள் இன்று காலை கரும்புலிகள் நாள் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த வேளை கறுப்புத் துணியால் முகத்தை மூடி கட்டிய படி பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் பாடசாலை சுற்றாடலை சூழக் காணப்பட்டனர். ஆயினும் மாணவர்கள் உணர்வு பூர்வமாக விழாவை நடத்தி முடித்திருந்தனர்.

அண்ணளவாக முற்பகல் 11.30மணியள வில் கனரக வாகனங்களில் மோப்ப நாய்கள் சகிதம் வந்திறங்கிய படையினர் எமது கல் லூரி முகப்பினருகே குவிந்து காணப்பட்ட னர். விடயம் அறியாத கல்லூரி அதிபர், ஆசி ரியர்கள், மாணவர்களும் பயத்தின் காரணமாக வகுப்பறைக்குள் முடங்கிக் காணப்பட்டனர்.

திடீரென மோப்ப நாய்களுடன் உள்நுழைந்த ஆயுதம் தாங்கிய படையினர், பாடசாலை கட்டடம் எங்கும் சல்லடை போட்டு தேடுதல் நடத்தியதுடன் அதிபர், ஆசிரியர்கள், மாண வர்களை அச்சுறுத்தி புகைப்படம் எடுத்தனர். பின்னர் பாடசாலைக்கு அருகே குண்டு ஒன் றினையும் வெடிக்க வைத்தனர்.

படையினரின் இத்தகைய செயற்பாட்டி னால் கல்லூரி அல்லோல கல்லோலப்பட் டது. படையினர், மாணவர்களின் உடைமை களை சோதனையிட்டதுடன், மாணவர்க ளுக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவ் வாறான சம்பவங்களைப் படையினர் மேற் கொண்டிருந்தனர். எமது கல்லூரி தினமும் இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக் கின்றது. இடையிடையே இவ்வாறான அத்து மீறிய செயற்பாடுகளை படையினர் மேற் கொண்டு வருகின்றனர்.

படையினர் தொடர்ச்சியாக எம்மீது பிர யோகிக்கும் மிலேச்சத்தனமான செயற்பாடு களால் நாம் பாரிய பின்னடைவுகளை எதிர் நோக்கி வருகின்றோம். அத்தோடு எமது கல் லூரி அதிபர், ஆசிரியர்களும் மிகுந்த அச்சத் துடனேயே தமது பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

எனவே, சர்வதேச சமூகத்தினர், மனித உரிமைகளை கண்காணிப்பவர்கள், தொண்டு நிறுவனத்தினர் அரசினால் ஏவிவிடப்பட்டி ருக்கும் படையினரின் இவ்வாறான செயற்பாடு களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து எமது சுதந்திரமான கற்றல் செயற்பாட்டிற்கு உறுதிப் படுத்தல் வேண்டும். என்று அதில் உள்ளது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.